சென்னை: நடிகர் சூர்யா தனது 40வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. டிவிட்டரில் தேசிய அளவில் சூர்யாவை வாழ்த்திய வாசகம் டிரெண்ட் ஆனது.
இதனிடையே, சவுண்ட்கிளவுட் மூலமாக, சூர்யா தனது ரசிகர்களுக்கு வாய்ஸ் மெசேஜில் நன்றி சொல்லியுள்ளார்.
அதில், "அனைத்து அன்பானவர்களுக்கும் நன்றி. உங்கள் மெசேஜ், பிரார்த்தனைகள், நலத் திட்ட உதவிகள் போன்றவற்றுக்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு வாழ்த்துக்களையும், படங்களையும் அனுப்பி வைத்தீர்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பை" என்று கூறியுள்ளார்.
Post a Comment