அடுத்த படத்தின் ஹீரோ அஜீத் (அ) விக்ரம் : ஷங்கர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நண்பன்' படம் வெற்றி பிறகு ஓய்வில் இருக்கும் ஷங்கர், இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு முன் ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜீத் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.


 

லாரன்ஸ் வேடத்தில் உபேந்திரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லாரன்ஸ் நடித்த வேடத்தில் கன்னட ஹீரோ உபேந்திரா நடிக்கிறார்.  தமிழில் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை ராம நாராயணன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: இது நான் இயக்கும் 125வது படம். கன்னடத்திலும் நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன். தமிழில் வெளியான 'காஞ்சனா', கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் உருவாகிறது. காஞ்சனா பிரபல நடிகையின் பெயர். அதேபோல் கல்பனாவும் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடித்த பிரபல நடிகை. இதில் உபேந்திரா ஹீரோ. சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ருதி உள்பட பலர் நடிக்கின்றனர். கன்னடத்தில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம் இது. வெவ்வேறு மொழிப் படங்களில் பணியாற்றுவது நல்ல அனுபவம். பல ஆங்கில படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மன் பற்றி 7ம் அறிவு படம் உருவானது. அவரது சீடர்கள் பலர் சீனாவில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களின் கதையை மையமாக வைத்து படங்கள் வந்திருக்கின்றன. அதில் ஒரு படம்தான் ஜெட்லி நடித்து தற்போது தமிழில் வெளியாகி இருக்கும் போதி தர்மன். அதிகபட்ச கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழில் தொய்வு இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு காட்சிகளை எடிட்டிங் செய்தேன். முதலில் 100 பிரின்ட் வெளியானது. அது இப்போது 120 ஆக அதிகரித்திருக்கிறது.


 

இளையராஜா இசையில் "நீ தானே என் பொன்வசந்தம்"?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' முதல் 'வாரணம் ஆயிரம்' படம் வரை கௌதம்-ஹாரிஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்தது. இதனிடையே திடீரென இவர்கள் கூட்டணி பிரிந்தது. இனி கௌதம் மேனனுடன் இணையப் போவதில்லை என்று ஹாரிஸ் கூறியதாக தெரிகிறது. அதன் பின், இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானுடன் கூட்டணி வைத்தார் கௌதம் மேனன். இந்த கூட்டணியும் வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதனையடுத்து, தான் இயக்கும் அடுத்து படமான 'நீ தானே என் பொன்வசந்தம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார் கௌதம். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

வேறு வழியில்லாமல் தனது முன்னாள் சகா ஹா‌ரிஸையே கௌதம் நாடியதாக தெரிகிறது. இதனிடையே இசைஞானி இளையராஜா, படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனன் இளையராஜாவை சந்தித்து பேசியதாகவும், அவரும் இசையமைக்க ஒப்புக்கொண்டார் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த புது கூட்டணி மட்டும் அமைந்து விட்டால், ரசிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் காத்திருக்கிறது. ரொம்ப நாட்கள் கழித்து இசைஞானி இளையராஜா ஒரு முழு காதல் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, காதல் படத்துக்கு இசைஞானியின் இசை சொல்லவா வேண்டும்... நிச்சயம் மிகப்பெரிய ஹிட் தான்...


 

நீங்காத எண்ணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷஞ்சனா சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.ஷஞ்சய் பிரகாஷ் தயாரிக்கும் படம், 'நீங்காத எண்ணம்'. பானுசந்தர் மகன் ஜெயந்த் ஹீரோ. அங்கீதா ஹீரோயின். ஒளிப்பதிவு, மோகனராமன். இசை, இமானுவேல் சதீஷ். பாடல்கள், நா.முத்துக்குமார். எழுதி, இயக்கும் எம்.எஸ்.எஸ் கூறும்போது, ''இளமைப்பருவத்தில் என்ன விதைக்கிறோமோ அதுதான் முதுமை வரை நிலைத்து நிற்கும். விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை. காதல் புனிதமானது, ஜாலியானது அல்ல என்பது போன்ற கருத்துகளை இப்படம் சொல்கிறது. புதுக்கோட்டையில் ஷூட்டிங் நடக்கிறது'' என்றார்.


 

ஒரே படத்தில் 5 வகையான இசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்துக்கு 5 வகையான இசை அமைத்திருக்கிறார் தாஜ் நூர். இதுகுறித்து அவர் கூறியதாவது: இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து இசை அமைக்கிறேன். எனது முதல் படமாக 'வம்சம்' வெளிவந்தாலும் என்னை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியது, 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படம்தான். அதனால் எனது முழு திறமையையும் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். படத்தின் கதை தமிழகத்தின் புவியியல் அமைப்பான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை 5 நிலங்களில் நடக்கிறது. எனவே இந்த நிலங்களுக்கே உரித்தான தனித்தனி பின்னணி இசையை கொடுத்திருக்கிறேன். அந்ததந்த பகுதியில் பயன்படுத்தும் இசைக் கருவிகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அதோடு மேற்கத்திய இசையை கொண்டு தமிழ் கலாசாரத்தை சொல்ல முயற்சித்திருக்கிறேன்.


 

நீலாம்பரியாக கஞ்சா கருப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏஞ்சல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அம்பிகா சிவா தயாரிக்கும் படம், 'கீரிப்புள்ள'. யுவன் ஹீரோ. திஷா பாண்டே, ஹாசிகா ஹீரோயின்கள். ஒளிப்பதிவு, மோகனராமன். இசை, ஜப்ரி. பாடல்கள்: யுகபாரதி, ருசினா, தென்றல் செந்தில். பெரோஸ்கான் இயக்குகிறார். இதில் பெண் வேடத்தில் நடிக்கும் கஞ்சா கருப்பு கூறும்போது, ''படையப்பா'வில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி வேடம் எப்படி பரபரப்பாகப் பேசப்பட்டதோ அதுபோல், 'கீரிப்புள்ள'யில் நான் ஏற்றுள்ள நீலாம்பரி வேடம் பேசப்படும். இதன் கதையும், என் வேடமும் பிடித்து இருந்ததால் நீலாம்பரியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.


 

தர்மேந்திராவுக்கு பத்மபூஷண்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
தர்மேந்திரா, ஷபனா ஆஸ்மிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: பத்ம விருது பெற்றவர்களில் சிலர் என்னைவிட மூத்தவர்கள். அவர்கள் எல்லோரும் நான் நேசிப்பவர்கள். மற்றவர்கள் எனது நண்பர்கள். அவர்களை பற்றி நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. எனது அன்புக்குரியவர்களில் தர்மேந்திராவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவர் உள்பட விருது பெறும் சினிமா நண்பர்கள் அனைவருமே தங்களது தொழிலை மிக நேர்த்தியாக செய்தவர்கள். அதை ஏற்கும் விதமாக அரசு அவர்களுக்கு விருதுகள் அறிவித்திருப்பது சந்தோஷம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.



 

இசையை உருவாக்குவது கதை களம்தான்: இளையராஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டூயட் மூவீஸ் சார்பில் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கும் படம், 'டோனி'. இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதன் முறையாக இளையராஜா படத்தின் பாடல்களை மேடையில் பாடினார். பின்னர் நிருபர்களிடம் இளையராஜா கூறும்போது, ''ஒரு படத்தின் இசையை உருவாக்குவது கதை களம்தான். 'டோனி' படம் நடுத்தர இந்திய குடிமகனின் வாழ்க்கை. இந்த நாட்டில் நாம் இப்போது கடைப்பிடித்து வரும் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை முறை பற்றி நிறைய கேள்விகளை படம் எழுப்புகிறது. அந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை படம் ஏற்படுத்தும்'' என்றார்.
பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''இது கல்வி தொடர்பான படம். தேசம் முழுமைக்குமான படம். தந்தை மகன் உறவைச் சொல்லும் படம். பிரபல எழுத்தாளர் ஹயாஸ் மஞ்ரேக்கரின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதற்கான உரிமையை வாங்கி அதில் நான் சொல்ல வேண்டியதையும் சேர்த்து இதை இயக்கி உள்ளேன். இளையராஜா இதில் லைவ் மியூசிக் கொடுத்திருக்கிறார். என் பங்கு 20 சதவிகிதம்தான். அவரது பங்கு 80 சதவிகிதம். பிப்ரவரி 10ம் தேதி படம் வெளிவருகிறது'' என்றார்.


 

முயல் படத்துக்கு ஐயாயிரம் தயாரிப்பாளர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் இணைந்து பி அண்ட் வி  என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி, 'முயல்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். முரளி, சரண்யா நாக் நடிக்கிறார்கள். ஜே.வி இசை. எம்.ஆர்.சரவணகுமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.எஸ்.குகன் கூறியதாவது: சுமார் 5 ஆயிரம் பேர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தியாவிலேயே இது முதல் முயற்சியாகும். வாழ்க்கையில் எந்த துன்பத்தையும் சந்திக்காத மூன்று இளைஞர்கள் திடீரென்று ஒரு கொடூரத்தை சந்திக்க நேரிடுகிறது. அதனால் பாதிக்கப்படும் அவர்கள், இனி அந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக என்ன செய்கிறார்கள் என்பது கதை. 'முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்பதுதான் படத்தின் கரு. 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' என்ற படத்தை ஸ்டில் கேமராவிலேயே படமாக்கினேன். இந்தப் படத்தையும் அதுபோலவே உருவாக்குகிறேன். டெக்னீஷியன்கள் தயாரிக்கும் படம் என்பதால் டெக்னிக்கலாக பல விஷயங்கள் இருக்கும். மெசேஜும் இருக்கும்.


 

ஒரு நடிகையின் வாக்குமூலத்துக்கு எதிர்ப்பா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சோனியா அகர்வால் நடித்துள்ள படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'. இதை எஸ்.ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், புன்னகைப்பூ கீதா தயாரித்து, நடித்துள்ளார். எவ்வளவு சோதனைகளைக் கடந்து, ஒரு பெண் ஹீரோயினாக மாறுகிறாள் என்பது கதை. படத்தைப் பார்த்த சென்சார் குழு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. சோனியா அகர்வால் கேரக்டர் பரபரப்பாக விவாதிக்கப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், திரையுலகினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் வரும் என்று தெரிகிறது. இதுகுறித்து கீதா கூறியதாவது: எந்தவொரு தொழி லிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அதுபோலத்தான் சினிமா உலகிலும் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே இருக்கும். இப்படத்தில் அதைத்தான் பதிவு செய்திருக்கிறோம். இதற்குமுன் எனது தயாரிப்பில் வந்த 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'குண்டக்க மண்டக்க', 'நர்த்தகி' படங்களில், தவறான கருத்துகளைப் பதிவு செய்யவில்லை. நானும் பெண் என்பதால், கவர்ச்சியின் எல்லை எது? ஆபாசம் எது என்று தெரியும். அதைமீறி படம் தயாரிக்க மாட்டேன். இந்த வருடத்தில் மேலும் 3 படங்கள் தயாரிக்க உள்ளேன்.


 

புயல் பாதித்த பகுதியில் கம்பன் கழகம் ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதுமுகங்கள் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி, கிருத்திகா, ஸ்வப்னா நடிக்கும் படம், 'கம்பன் கழகம்'. படத்தை தயாரித்து, இயக்கும் அசோகன் கூறியதாவது: ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவன் என்பதால், படத்தை அவருக்கு திரையிட்டேன்.  ஒவ்வொரு காட்சியும் உருக்கமாக இருப்பதாகப் பாராட்டினார். இதன் கதைக்களம் முழுவதும் பாண்டிச்சேரி. ஷூட்டிங் முடிந்த சில நாட்களில், தானே புயல் பாண்டிச்சேரியை புரட்டிப் போட்டு விட்டது. படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது, பாண்டிச்சேரியின் தற்போதைய நிலை பரிதாபமாக இருந்தது. படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள். இதில் ஷாம் கனடாவிலும், பிரவீன் அமெரிக்காவிலும் வசிப்பதால், பாடல்கள் கலிபோர்னியா ஸ்டுடியோ வெஸ்ட் சான்டிகோவில் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது.


 

பிரபுதேவாவை பிரிந்தார் நயன்தாரா : மீண்டும் நடிக்க வருகிறார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்க நயன்தாரா சம்மதித்துள்ளார். இதனால் பிரபுதேவாவிடம் இருந்து அவர் பிரிந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்காக நடிப்புக்கு முழுக்குப் போட்டார் நயன்தாரா. அவர் கடைசியாக 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்த கடைசி நாளில் எல்லோரிடமும் கண்ணீர் விட்டு அழுதபடி விடை பெற்றார். திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்று பிரபுதேவா அப்போது கூறி வந்தார். இதற்கிடையே பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

இந்நிலையில், 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' படம் தெலுங்கில் ஹிட்டானதை அடுத்து, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ரவிதேஜா உள்ளிட்ட ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள், அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், நயன்தாரா பதிலேதும் சொல்லாமல் இருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் மற்றும் ஹீரோக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, நயன்தாரா தெலுங்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படத்தை தசரத் இயக்குகிறார். இதுபற்றி தசரத் கூறும்போது, ''நயன்தாரா நடிப்பது உண்மைதான். நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது'' என்றார். இப்போது நயன்தாரா நடிக்க உள்ள படத்துக்கு சம்பளமாக, ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக, பட யூனிட் தெரிவித்துள்ளது.

நயன்தாராவும் பிரபுதேவாவும் சேர்ந்து வாழ, சென்னை போட் கிளப் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தனர். இப்போது அந்த வீட்டில் இருவரும் இல்லை என்று கூறப்படுகிறது. பிரபுதேவாவிடம் இருந்து சுமூகமாக பிரிந்துவிட்டதால்தான் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்றும் தமிழ், தெலுங்கில் அவர் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

சூர்யா ஜோடியானார் ஹன்சிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்த படம், 'சிங்கம்'. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோயின் தேடி வந்தனர். இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் ஹரி கூறும்போது, ''ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசைஅமைக்கிறார். 'சிங்கம்' படத்தை விட இரண்டு மடங்கு விறுவிறுப்பாக இதன் திரைக்கதை இருக்கும். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை' என்றார்.


 

படத்தில் ஜோடியாக நடித்தவர்கள், நிஜவாழ்வில் ரகசிய திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சேலம் நியூ மாடர்ன் பிலிம் மேக்கர்ஸ் சார்பில், 10 பேர் இணைந்து தயாரிக்கும் படம், 'நீ எனக்காக மட்டும்'. புதுமுகம் தமிழ், ஸ்ரீலட்சுமி ஜோடி. கே.பி.சக்திவேல் இயக்குகிறார். கதைப்படி தமிழ், ஸ்ரீலட்சுமி காதலிக்கின்றனர். எதிர்ப்பை மீறி, திருமணம் செய்கின்றனர். பிறகு பெண்ணின் பெற்றோர், தமிழிடம் இருந்து ஸ்ரீலட்சுமியைப் பிரிக்கின்றனர். அவரை காணாத நிலையில் தமிழ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது ஸ்ரீலட்சுமி திரும்பி வர, தமிழ் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். ஆனால், ஷூட்டிங்கில் காதல் ஜோடி நிஜமாகவே காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இருவரது வீட்டிலும் எதிர்ப்பு. இதையடுத்து இந்த ஜோடி, சேலம் ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு திருமணம் செய்துகொண்டது. இதுபற்றி தமிழிடம் கேட்டபோது, ''சம்பவம் உண்மைதான். எங்கள் வீட்டில் ஆதரவு கிடைத்துள்ளது. விரைவில் ஸ்ரீலட்சுமியின் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.


 

ரஜினி, அமிதாப் பச்சன் இணைகிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினிகாந்தும் அமிதாப்பச்சனும் இணையும் படத்தை இயக்க இருப்பதாக, தெலுங்குப் பட இயக்குனர் பூரி ஜெகநாத் தெரிவித்துள்ளார். ரஜினியும் அமிதாப்பச்சனும் கடைசியாக, 'அந்தா கானூன்' என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. இதையடுத்து இப்போது மீண்டும் இணைய இருக்கின்றனர். அமிதாப் நடித்த, 'புட்டா ஹோகா தேரா பாப்' படத்தை இயக்கிய புரி ஜெகநாத் இதை இயக்குகிறார். இதுபற்றி பூரி ஜெகநாத் கூறும்போது, ''சென்னையில் ரஜினியை சந்தித்து இந்த ஐடியாவை சொன்னேன். ரஜினி உற்சாகமாகிவிட்டார். இதில் நடிக்க அவருக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டேன். ரஜினியையும் அமிதாப்பையும் இயக்குவது எனது வாழ்நாள் கனவு. இப்போதுதான் அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இருவரையும் இயக்குவது சாவாலான விஷயம்தான்'' என்றார்.


 

பாடல்களில் ஆங்கிலம் தவிர்க்க முடியாது: விவேகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாடலாசிரியர் விவேகா, நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வருடம் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் எழுதிய 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' பாடல் ஹிட்டாகியுள்ளது. தற்போது 'மாற்றான்', 'சிங்கம் 2', 'சகுனி', 'கரிகாலன்', 'அரவான்', 'வல்லினம்', 'இஷ்டம்' உட்பட 80 படங்களுக்கு பாடல் எழுதுகிறேன். ஒவ்வொரு பாடலையும் முதல் பாடலாக நினைத்தே எழுதுகிறேன். தமிழ்ப் பாடல்களில் ஆங்கில வார்த்தை கலப்பது பற்றி கேட்கிறார்கள். சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இந்த விவாதம் தொடர்கிறது. ஒரு படத்தின் கதாபாத்திரம் ஸ்டைலாக இருக்கும்போது, பாடல் காட்சி மட்டும் தூயதமிழில் படமாக்கப்பட்டால் பொருத்தமாக இருக்காது என்று இயக்குனர்கள் நினைக்கிறார்கள். இது சரியான கருத்துதான். எனவே, தமிழ்ப் பாடல்களில் ஆங்கில வார்த்தை கலந்துவிடுகிறது. இதை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.


 

கைதியின் வாழ்க்கை கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.வி ஸ்கிரீன்ஸ் சார்பில் எக்ஸ்.பி.ராஜன் தயாரிக்கும் படம், 'சூரிய நகரம்'. ராகுல் ரவீந்திரன், மீரா நந்தன், கஞ்சா கருப்பு, சூரி ஆகியோருடன் ஆர்.வி.உதயகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு, ஜே.கே.வெங்கி. இசை, ஃபென் வியாலி. பாடல்கள், வைரமுத்து. எழுதி இயக்கும் மா.செல்லமுத்து, படம் பற்றி கூறியதாவது: மனித வாழ்க்கையில் கோபம் ஏற்படுத்துகின்ற தாக்கம், பல விபரீதங்களை உண்டாக்குகிறது. கோபத்தைத் தூண்டுவதில் சூழ்நிலையின் பங்கு அதிகமாக இருக்கும். அப்படி கோபப்படுகிறவனின் வாழ்க்கைப் பதிவாக இந்தப் படம் உருவாகிறது. மதுரை மக்களின் வீரம், கோபம், அவர்களின் ஈரமனம் குறித்து படம் சொல்லும். சில வருடங்களுக்கு முன் தமிழக அரசால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு, 120 கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களில், கொலைக்குற்றம் செய்தவரும் ஒருவர். விடுதலையாகி வெளியே வந்த அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், செய்திகளாக வந்தன. அதை கருவாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கினேன். தயாரிப்பாளர் ராஜனின் மகன் ஃபென் வியாலி இசை அமைக்கிறார். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.


 

புயல் நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் உதவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, புயல் நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் வழங்கினர். நிதி உதவியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கினார்.


 

கிசு கிசு - புருடா நடிகை, நடிகரின் கஷ்டம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது..
நல்ல காலம் பொறக்குது..

சித்தார்த்தமான ஹீரோ பட புரமோஷன், மீடியா முன் நடந்தப்போ அமலமான ஹீரோயின் வராம எஸ் ஆயிட்டாராம்... எஸ் ஆயிட்டாராம்... சில நாளுக்கு முன் மீடியாக்காரங்களோடு ஏற்பட்ட மோதலாலதான் ஹீரோயின் வரலைன்னு பேசப்பட்டதாம். ஆனா அவரோ, தனக்கு எக்ஸாம் இருந்ததால வர முடியாம போச்சு. சித்தார்த்த ஹீரோ பட புரமோஷனுக்கு இன்னொரு நாள் டேட் கொடுத்திருக்கேன். தயாரிப்பும் சமாதானமாயிட்டாருன்னு புருடா விடுறாராம்... விடுறாராம்...

கோலிவுட் புளித்துப்போய் டோலிவுட்டுக்கு
அ ஆ பிரகாச ஹீரோ தாவினாரு. அங்கு இயக்குன படம் கைகொடுக்காததால சோகத்துல இருந்தாரு. இப்போ மியூசிக்குன்னு ஒரு படத்தை இயக்கி நடிக்க பிளான் போட்டிருக்காரு. ஆனா அதுக்கு பைனான்ஸ் பிடிக்கிறதுதான் நடிகருக்கு கஷ்டமா இருக்காம்... இருக்காம்... நடிகரை பார்த்தாலே பைனான்சியருங்க ஜகா வாங்குறாங்களாம்... வாங்குறாங்களாம்...

நம்பர் ஒன் ரேஸ்ல ஓடி ஓடி அலுத்துபோச்சுன்னு ஜெனி நடிகை சொல்றாராம். மேரேஜுக்கு பிறகும் நடிக்க¤றதுக்கு லவ்வரு கிரீன் சிக்னல் கொடுத்திருக்காராம். ஆனா, ஹீரோயினோ, 'இனிமே ரேஸ்ல ஓட நான் தயாரில்லை. ஒண்ணோ ரெண்டோ நல்ல சப்ஜெக்டா வந்தா நடிப்பேன். இல்லாட்டி வீட்ல சும்மா இருப்பேன்Õனு சொல்றாராம்...சொல்றாராம்...


 

ஒரே பாணி வேடங்களை உதறுவேன் : ஆண்டிரியா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒரே பாணி வேடங்கள் வாய்ப்பு வந்தால் உதறிவிடுவேன்' என்றார் ஆண்டிரியா. 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் நடித்தவர் ஆண்டிரியா. அவர் கூறியதாவது: கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்கிறேன். நடிகர், இயக்குனர், கதாசிரியர் என்ற முப்பரிமாணங்களில் அவர் இதில் பொறுப்பு ஏற்றிருக்கிறார். அவருடன் நடிப்பது எனக்கு கிடைத்த 3 போனஸ். ஷூட்டிங் நேரத்தில் எதற்கும் டென்ஷன் ஆகாமல் அடிக்கடி கதைகள் சொல்லி பட குழுவினரை ஜாலியாக வைத்திருக்கும் அவரது போக்கு எனக்கு பிடிக்கும். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை' படத்தில் நடிக்க உள்ளேன். 'அதிக படங்களில் நடிக்கவில்லையே?' என்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஒரே பாணியிலான வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் உதறிவிடுவேன். ஆனால், கமர்ஷியல் படங்களை நான் தவிர்த்துவிடுவதாக சிலர் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள்.


 

கிசு கிசு - சீனியர் ஹீரோயின்கள் புது திட்டம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது..
நல்ல காலம் பொறக்குது..

டோலிவுட்டில் டாப்பாக இருந்த இலி நடிகை கோலிவுட், பாலிவுட்னு ரூட் மாறினாரு. இதுக்கிடையில டோலிவுட்ல மத்த ஹீரோயின்கள் கை ஓங்கியது. இப்போ திரும்ப இலி நடிகை டோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறாரு. ஆனா எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லையாம். ரொம்பவே போராடி 2 படங்கள் கிடைச்சிருக்காம்.. கிடைச்சிருக்காம்.. அதுல ஒரு படம் ஹிட்டானா பழைய மவுசு வரலாம்னு சொல்றாங்களாம்.. சொல்றாங்களாம்..

சீனியர் நடிகைங்க இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க பிரியப்படுறாங்களாம்.. பிரியப்படுறாங்களாம்..  ஒரு எழுத்து பட ஜி ஹீரோவோடு ஜோடி சேர மூணுஷாவுக்கு வாய்ப்பு வந்துச்சாம். உடனே ஓ.கே. சொல்லிட்டாராம்.. சொல்லிட்டாராம்.. இந்த மாதிரி இளம் ஹீரோவோடு ஜோடி சேர தூது விட்டாவது சான்ஸ் பிடிக்க சீனியர் ஹீரோயினுங்க முடிவு பண்ணிட்டாங்களாம்.. பண்ணிட்டாங்களாம்.. கோலிவுட்லேருந்து சாண்டல்வுட்ல செட்டிலான ரமேஷரவிந்தான ஹீரோவுக்கு போராட்ட காலமாம்.. காலமாம்.. நீண்ட காலமா எந்த படமும் ரிலீஸாகாத நிலையில புதுபட ரிலீஸுக்கு தயாராகிட்டிருக்காராம். வழக்கமா பட புரமோஷனுக்கு சிட்டியில சுத்திவருவாங்க. இவரு கிராமங்களுக்கு போய் புரமோட் பண்ண முடிவு பண்ணியிருக்காராம். இந்த படம் கைகொடுத்தா சான்டல்வுட். கைவிட்டா கோலிவுட்னு தாவுற திட்டத்துல இருக்காராம்.. இருக்காராம்..


 

கார்த்தி படத்தில் இருந்து வெளியேறினார் மேக்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து வெளியேறினார் மேக்னா. சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, நிகிதா, மேக்னா, சனுஷா என 4 ஹீரோயின்கள் ஜோடி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த மேக்னா திடீரென்று நடிக்க மறுத்து விலகினார்.  இது பற்றி அவர் கூறியது: சுராஜ் இயக்கும் படத்திலிருந்து விலகியது உண்மைதான். இப்படத்தில் எனக்கு தரப்பட்ட வேடம் திருப்தியாக இல்லை. இயக்குனர் எனக்கு நல்ல நண்பர். என் கருத்தை சொல்ல வாய்ப்பு தந்தார். விலக விரும்புவதாக தெரிவித்தபோது அந்த முடிவை ஏற்றுக்கொண்டார். எனது உணர்வை புரிந்துகொண்டார். மற்றொரு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்றார். இப்போதைக்கு மலையாள படங்களில் நடிக்கிறேன். தமிழில் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன். சில இயக்குனர்களுடன் பேச்சு நடக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் ஒப்புக்கொள்வேன். இவ்வாறு மேக்னா கூறினார்.


 

வெளியாட்களை வேலைக்கு வைத்தால் படப்பிடிப்புகள் முடங்கும் : பெப்சி எச்சரிக்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளியாட்களை வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தினால் படப்பிடிப்புகள் முடங்கும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) எச்சரித்துள்ளது. தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே புதிய சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. 3 ஆண்டுக்கு ஒருமுறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம். இம்முறை அதுபற்றி முடிவு செய்யவில்லை. இதையடுத்து பெப்சி தாங்களாகவே புதிய சம்பளம் நிர்ணயித்து அதன்படி வேலை செய்ய முடிவெடுத்தது. அதை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. இதுபற்றி ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 'பெப்சி தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. வழக்கமாக இரு சங்கமும் பேசி உடன்பாட்டு செய்த பிறகுதான் அது அமலுக்கு வரும். தன்னிச்சையாக நடந்துகொண்டது ஒப்பந்தம் மீறிய செயல். இனி எங்கள் சங்கத்துக்கும், பெப்சிக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்க தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம். இதற்கு உடன்பட்டு வருபவர்களுக்கு எங்கள் குழு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும். இதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் ஒத்துழைப்பு தராதுÕ என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து பெப்சி அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனி நூறு அடி சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் எம்.ஏ.ராமதுரை தலைமை தாங்கினார். செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியது: புதிய சம்பள ஒப்பந்தத்தை நிர்ணயிக்காமல் தயாரிப்பாளர் சங்கம் காலதாமதம் செய்ததால் பெப்சியே புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்தது. அதை ஏற்று பல தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள். நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வேலை செய்கிறோம். இந்நிலையில் வெளியாட்களை வைத்து வேலை செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. வெளியாட்கள் வேலை செய்ய வந்தால் எங்கள் சங்கத்தை சேர்ந்த யாரும் வேலை செய்ய மாட்டார்கள். இதுதவிர பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களில் ஒரு சங்கத்தை ஒதுக்கினால் கூட படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். ஆந்திரா, கர்நாடகா உள்பட எல்லா மாநிலங்களிலும் உள்ள பெப்சி அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், தமிழ் பட ஷூட்டிங்கிற்கு பணியாற்ற அழைத்தால் வேலை செய்யக்கூடாது என்று கூறியுள்ளோம். இந்த நிலை நீடித்தால் படப்பிடிப்புகள் முடங்கும். இவ¢வாறு அவர்கள் கூறினர். திரைப்பட்ட தொழிலாளர்கள்-தயாரிப்பாளர்கள் மோதலால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 

காதல் சொதப்பல் கைவந்த கலை : சித்தார்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சிறுவயது முதல் இன்றுவரை கணக்கில்லா காதலிகளிடம் சொதப்பி இருக்கிறேன்' என்றார் சித்தார்த். சித்தார்த், அமலா பால் நடிக்கும் படம் 'காதலில் சொதப்புவது எப்படி?' இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந் தது. அப்போது சித்தார்த் கூறியதாவது:  யூ டியூபில் குறும்படங்களை பார்த்தபோது பாலாஜி மோகன் இயக்கிய படம் என்னை கவர்ந்தது. அவரை தொடர்பு கொண்டு இந்த கதையில் நான்தான் நடிப்பேன். வேறு ஹீரோவிடம் இக்கதையை கொண்டு சென்றால் கொன்றுவிடுவேன் என்று உரிமையோடு சொன்னேன். 10 நிமிட படம் 2 மணி நேர கதையாக்க முடியும் என்பது இதில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதுதான் இதன் கதை.

காதலர் தினத்தில் படம் ரிலீஸ். நிஜவாழ்க்கையில் என்னைப்போல் காதலில் சொதப்பியது இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. பள்ளி பருவத்தில் இருந்தே இந்த சொதப்பலை தொடங்கிவிட்டேன். சமீபத்தில்கூட இப்படியொரு சொதப்பல் நடந்தது. ஷூட்டிங்கில் பங்கேற்றதால் கடந்த 4 மாதமாக 'சொதப்பலுக்கு' இடைவெளி விட்டிருக்கிறேன். எவ்வளவு முறை காதலில் சொதப்பினேன் என்பதை விரல்விட்டு எண்ண முடியாது. கணக்கில்லாமல் சொதப்பி இருக்கிறேன். 'தமிழில் அதிகம் நடிப்பதில்லையே?' என்கிறார்கள். தமிழில் யாரும் எனக்கு வாய்ப்பு தருவதில்லை. நான் நன்றாக தமிழ் பேசுவேன். எப்போதும் தெலுங்கு, இந்தியில்தான் பேசிக்கொண்டிருப்பேன். தமிழில் பேசவோ, நடிக்கவோ வாய்ப்பு கிடைத்தால் உடனே ஓடிவந்துவிடுவேன்.  இவ்வாறு சித்தார்த் கூறினார்.  பேட்டியின்போது தயாரிப்பாளர் சசிகாந்த், இயக்குனர் பாலாஜி மோகன் உடனிருந்தனர்.


 

கவுதம் மேனன் படத்தில் வாய்ப்பை தவறவிட்டதால் சிம்பு ஹீரோ ஆனார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம்மேனன் படத்தில் வாய்ப்பை தவறவிட்டதால் சிம்பு ஹீரோவானார் என்றார் ஜெய். இதுபற்றி அவர் கூறியதாவது: வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பது என் ஆசை. சவாலான கதைகள் வைத்திருக்கும் உதவி இயக்குனர்கள், ஹீரோக்கள் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். என்னுடைய ஹிட் படங்கள் பெரும்பாலும் புது இயக்குனர்கள் படங்கள்தான். இனிவரும் படங்களிலும் அதுபோன்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவேன். உதவி இயக்குனர்களின் விருப்பமான ஹீரோவாக நான் இருப்பதில் மகிழ்ச்சி. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்குனர் கவுதம் மேனன் பார்த்து என்னை பாராட்டினார். இருவரும் விரைவில் இணைந்து படம் செய்வோம் என்றார். அதன்படி அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். பிரபுதேவா உதவியாளர் இயக்குகிறார். அதேநேரம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதற்காக எனது உடல்கட்டை ஏற்ற ஜிம் செல்கிறேன். இதுவொரு ஆக்ஷன் படம்.

திருநெல்வேலியில் ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்தபோது கவுதம் மேனன் என்னை அழைத்தார். நேராக தனது அலுவலகத்துக்கு சென்று தான் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறு கூறினார். வெளியூரில் இருந்ததால் செல்லவில்லை. அது 'விண்ணை தாண்டி வருவாயா' படம் என்பது பின்னர்தான் தெரிந்தது. வாய்ப்பை தவறவிட்டதால் அதில் சிம்பு நடித்தார். அஞ்சலியுடன் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நான் அவரை தவிர்க்கவில்லை. தயாரிப்பாளர்களே வதந்திகளுக்கு பயந்து அவரை என் படத்திலிருந்து தவிர்க்கிறார்கள். மேலும் அஞ்சலி பிஸியாக இருக்கிறார். என் படங்களில் நடிக்க அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை.


 

ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். 'விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஒரு கதை எழுதினேன். அதை படமாக உருவாக்க அறிவுஜீவித்தனமும், அதிக பணமும் தேவைப்பட்டது. அப்போது அதற்கு நான் தயாராக இல்லை. இப்போது இரண்டும் பொருந்தி வந்திருக்கிறது. இதையடுத்து இக்கதையை இயக்கி நடிக்க தீர்மானித்திருக்கிறேன். இந்தி, தமிழில் ஒரே நேரத்தில் இப்படம் வெளிவருகிறது. இந்தி படத்துக்கு 'அமர் ஹைன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. அதில் நிறைய பணம் விளையாடுகிறது. சாதாரண மனிதன்கூட அரசியல் என்றால் பணம் சம்பாதிக்கும் தொழில் என்றுதான் பார்க்கிறான். இப்படத்தில் அதை பற்றியும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் கூற உள்ளேன்.


 

தொழிலதிபரை மணக்கிறார் அனன்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் சசிகுமார் ஜோடியாக, 'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனன்யா. 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்துள்ளார். 'இரவும் பகலும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் திருச்சூரை சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரில் உள்ள அனன்யாவின் வீட்டில், பிப்ரவரி 2ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. நடிகை அனன்யா கூறும்போது, 'பெற்றோர் பார்த்த மணமகனைத்தான் திருமணம் செய்ய தீர்மானித்திருந்தேன். ஆஞ்சநேயன் குடும்பத்தினர் கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் பார்க்க வந்தனர். எங்கள் குடும்பத்துக்கு அவர்களைப் பிடித்திருந்தது. எனவே திருமணத்துக்கு சம்மதித்தோம். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதா, வேண்டாமா என்பதை ஆஞ்சநேயன் முடிவு செய்வார்'' என்றார்.


 

மூன்று வேடங்களில் நடிக்கும் விஷால்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனராக இருந்த சுந்தர்.சி சிறிது காலம் இயக்குனர் பணி ஒதுககிவிட்டு ஹீரோவாக களமிறங்கினார். இதனையடுத்து மீண்டும் தன் இயக்குனர் பணியை தொடர விரும்புகிறாராம் சுந்தர்.சி. தற்போது விமல், சிவா, சந்தானம் நடிக்கும் 'மசாலா கஃபே' என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர். இந்த படம் முடிந்த பிறகு விஷாலை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தில் விஷாலுக்கு மூன்று வேடங்களாம். இதுதான் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்.


 

இன்று பெப்சி பொதுக்குழு கூட்டம் : மீண்டும் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்குமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பெப்சிக்கும் எங்கள் சங்கத்துக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம்Õ என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து பெப்சி சங்கம் சார்பில் அவரச பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இன்று எடுக்கப்படும் முடிவை பொறுத்தே மீண்டும் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்குமா என்பது தெரிய வரும். முன்னதாக, இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று ஒரு நாள் முழுவதும், தமிழ் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று நடந்தது. 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மூன்று நாட்களுக்கு முன் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சார்ந்த சங்கங்கள், தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து, பத்திரிகைகள் வாயிலாக அறிவித்து விட்டார்கள். வழக்கமாக, தயாரிப்பாளர்கள் சங்கமும் தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்துபேசி அனைத்துப் பிரிவுகளுக்கான கையொப்பம் ஆனபிறகுதான் அது ஒப்பந்தம் எனப்படுகிறது.

அதை மீறி அவர்கள் தன்னிச்சையாக ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது அந்த நடைமுறை வழக்கத்தை மீறிய செயலாகும். ஆகவே, இனி எங்கள் சங்கத்துக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்கத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம். இதற்கு உடன்பட்டு தொழில் செய்ய வரும் தொழிலாளர்களுக்கு எங்கள் சங்கம், குழு அமைத்து அவர்களது ஊதியத்தை நிர்ணயம் செய்து அதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்து கண்டிப்பாக அதை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும். அதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு எங்கள் சங்கம் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள 'நண்பன்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்துக்கு பிறகு, சிறிது காலம் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ள ஷங்கர், கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி தர ஒப்புக்கொண்டுள்ளார். படத்திற்கு யார் ஹீரோ என்பது குறித்து எந்த ஒரு தகவலையும், தயாரிப்பு நிறுவனமோ (அ) ஷங்கரோ சொல்லவில்லை. தற்போது இந்த தகவல் கசிய தொடங்கியுள்ளது. ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பெயர், இசையமைப்பாளர், ஹீரோயின் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



 

மினிமம் கியாரண்டி முக்கியம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் தயாரிப்பாளர் போடும் பணத்துக்கு மினிமம் கியாரண்டி முக்கியம் என்று விஜய் கூறினார். சென்னையில் நிருபர்களை சந்தித்த விஜய் கூறியதாவது: ஒரே மாதிரியான ஆக்ஷன் படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில படங்கள் ஓவர் ஆக்ஷன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். என்னை வித்தியாசமான கதையில் பார்க்க வேண்டும் என்று நானே விரும்பினேன். புதிய முயற்சியில் நடித்தாலும் படத்தின் வருமானத்துக்கு மினிமம் கியாரண்டி வேண்டும் என்று நினைத்தேன். இந்தியில் வெற்றி பெற்ற கதை, பெரிய இயக்குனர், ஷங்கர் கூட்டணி அமைந்ததால் மினிமம் கியாரண்டிக்கு நம்பிக்கை வந்தது. 'நண்பன்' படத்தில் நடித்தேன். பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் பணம் போடும் தயாரிப்பாளருக்கு மனிமம் கியாரண்டி கட்டாயம் வேண்டும் என்பது என் கருத்து.
நல்ல கதைகள் அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். வித்தியாசமான கதைகளில் புதுமையான கேரக்டர்களில் நடிக்க, நல்ல இயக்குனர்கள் முக்கியம். இவை இரண்டும் அமைந்தால் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பேன். 'நண்பன்' தெலுங்கில் வெளிவந்தாலும் பிறமொழி படங்களில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை. தமிழ்ப் படங்களில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. 'நண்பன்' ஷங்கர் படம் என்பதை போல எனது அடுத்த படமான 'துப்பாக்கி' ஏ.ஆர்.முருகதாஸ் படமாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.


 

மருத்துவமனையில்சாயா சிங் அனுமதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சாயா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்தார் சாயா சிங். பின்னர் பெங்களூர் திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் 'புட் பாய்சன்' ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து பெங்களூர் கிறிஸ்டல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலையில் முன்றேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாயாசிங்கிடம் கேட்டபோது, ''சாதாரண காய்ச்சலாக நினைத்து சிகிச்சை எடுத்தேன். திடீரென நடக்க முடியாமல் போனபோதுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தீவிர சிகிச்சைப் பிரியில் மூன்று நாள் சிகிச்சை எடுத்தேன். இப்போது உடல் தேறிவருகிறது. இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு திரும்புவேன்'' என்றார்.


 

இரண்டு தம்பதிகளின் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சரவணராஜ் மூவி கம்பைன்ஸ் சார்பில் எத்திராஜ், டாக்டர் சரவணன் தயாரிக்கும் படம், 'சட்டென்று மாறுது வானிலை'. சஞ்ஜெய், அமீத் ஹீரோக்கள். ரோஸ் மிண்டா ஹீரோயின். நாசர், ஷியாம், எத்திராஜ், பூந்தமிழ், ரமணி, சவுதாமினி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, ஷியாம் மோகன். பாடல்கள்: ஏகாதசி, வினுப்பிரியா, துரைபாரதி. எழுதி இயக்கி, இணைந்து தயாரிக்கும் சி.எஸ்.ரவி பெருமாள் கூறியதாவது: தனது காதலி மனைவியாகும்போது, காதலிக்கத் தயங்குகிறான் ஆண். காதலன் கணவனாக வரும்போது, அதே காதலுடன் வாழ்வது இல்லை பெண். இப்படி மாறுபட்ட மனநிலையுடன் வாழும் தம்பதிகளைப் பற்றிய கதையாக படம் உருவாகிறது. மலேசியா, சிங்கப்பூர், மும்பை, ஐதராபாத், கோவா பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்தது.


 

இந்தி ரீமேக்கில் மன்சூர் அலிகான்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
புவியரசி சினி பிளானர் சார்பில் ரவி சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்து தயாரிக்கும் படம், 'லொள்ளு தாதா பராக் பராக்'. மன்சூர் அலிகான் தாதாவாக நடிக்கிறார். அவரே பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். ஜோடியாக புதுமுகம் ஷில்பா நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் வியாசன் கூறியதாவது: இந்தியில் வெளிவந்த பிரபல காமெடி படமான 'குல்லுதாதா ரிட்டன்ஸ்' என்ற படத்தின் ரீமேக் இது. கடனை கொடுத்து விட்டு அதைத் திருப்பி வாங்க படாதபாடுபடும் காமெடி தாதாவின் கதை. அந்த வேடத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார். அவர் தவிர, இளம் ஹீரோ, ஹீரோயினும் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள் ஊட்டியிலும் மற்ற காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பாடல் காட்சியில் நடித்தபோது மன்சூர் அலிகான் கையெலும்பு உடைந்து சிகிச்சை பெற்று வருவதால், அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறோம். படத்தில் பத்துக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.


 

சினேகாவுடன் திருமணம் எப்போது?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினேகா-பிரசன்னா திருமணம் ஜூன் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி பிரசன்னாவிடம் கேட்டபோது கூறியதாவது: திருமண விஷயம் பற்றி ஆளாளுக்கு ஏதோ சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. எல்லா மீடியாவையும் முறைப்படி அழைத்து திருமண தேதி பற்றி அறிவிப்பேன். பிப்ரவரி முதல் வாரத்தில் நானும், சினேகாவும் இணைந்து அறிவிக்க இருக்கிறோம். தற்போது ரஜினியுடன் 'கோச்சடையான்', சரத்குமாருடன் 'விடியல்' படங்களில் நடிக்கும் சினேகா, விரைவில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். திறமையான நடிகைகளில் சினேகாவும் ஒருவர். வித்தியாசமான கேரக்டரில் மட்டுமே நடிக்க விரும்புகிறார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், நடிப்புக்கு முழுக்கு போட நான் சொல்லவில்லை. இவ்வாறு பிரசன்னா கூறினார்.


 

அம்புலி படத்துக்கு 10 லட்சம் 3டி கண்ணாடிகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கே.வி.டி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் சார்பில் லோகநாதன் தயாரிக்கும் 3டி படம் 'அம்புலி'. பார்த்திபன், அஜெய், ஸ்ரீஜித், சனம் உட்பட பலர் நடிக்கிறார்கள். 3டி படம் என்பதால் அதற்கான கண்ணாடி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர்கள் ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயணன் கூறியதாவது: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தமிழில் வரும் முதல் 3டி படம் இதுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவ ரையும் கவரும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சில மர்மமான நிகழ்வுகளை அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நினைத்து நடுங்குகிறா£ர்கள். அவற்றில் உள்ள உண்மை என்ன என்று நாயகனும் நாயகியும் கண்டுபிடிப்பது கதை. தமிழ் நாட்டின் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 3டிக்கென்று தனியாக உள்ள தியேட்டர்களில் கண்ணாடி அவர்களே வைத்திருப்பார்கள். பொதுவான தியேட்டர்களுக்காக முதல் கட்டமாக 10 லட்சம் கண்ணாடிகள் தயாரித்து வருகிறோம். படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து 50 லட்சம் கண்ணாடிகள் வரை தயாரிக்க தயார் நிலையில் இருக்கிறோம்.


 

சிம்ரன், ஜோதிகா மாதிரி ஆக சமீரா ரெட்டி ஆசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கிளாமரைத் தாண்டி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சமீரா ரெட்டி கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் நடித்துள்ள 'தேஜ்' படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அனில்கபூர், அஜய்தேவ்கனுடன் நடித்துள்ளேன். இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் 'வேட்டை' படத்திலும் மாறி மாறி நடித்தேன். முதல் நாள் மாடர்ன் டிரெஸ் என்றால் மறுநாள் 'வேட்டை'க்காக பாவாடை, தாவணியில் நடித்தது வித்தியாசமாக இருந்தது. இந்தியை விட தென்னிந்திய படங்களில் நடிப்பதை முக்கியமாக கருதுகிறேன். தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டேன். கன்னடப் படங்களில் நடிக்கவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சிம்ரன், ஜோதிகா பெயர்கள் கிளாமரைத் தாண்டி நடிப்புக்காகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களைப் போல ஆகவேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.


 

மலையாளத்தில் கிஷோர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாளத்தில் அறிமுகமாக இருக்கும் கிஷோர் கூறியதாவது: தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளேன். ஏற்கனவே மலையாளத்தில் நிறைய அழைப்பு வந்தது. மொழி தெரியாததால் மறுத்தேன். ஆனால், ஜெயராம் நடிக்கும் 'திருவம்பாடி தம்புரான்' கதையைக் கேட்டபோது, நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது எனக்கு முதல் மலையாளப் படம். ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனங்களை மலையாளத்தில் சொல்வதைக் கேட்டு நடித்து வருகிறேன். ஜி.என்.ஆர்.குமரவேலன் தமிழில் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். எனக்கும், ஒரு குழந்தைக்கும் இடையேயான பாசத்தை, சொல்லும் படம். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது.


 

பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் மினிமம் கியாரண்டி முக்கியம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் தயாரிப்பாளர் போடும் பணத்துக்கு மினிமம் கியாரண்டி முக்கியம் என்று விஜய் கூறினார். சென்னையில் நிருபர்களை சந்தித்த விஜய் கூறியதாவது: ஒரே மாதிரியான ஆக்ஷன் படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில படங்கள் ஓவர் ஆக்ஷன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். என்னை வித்தியாசமான கதையில் பார்க்க வேண்டும் என்று நானே விரும்பினேன். புதிய முயற்சியில் நடித்தாலும் படத்தின் வருமானத்துக்கு மினிமம் கியாரண்டி வேண்டும் என்று நினைத்தேன். இந்தியில் வெற்றி பெற்ற கதை, பெரிய இயக்குனர், ஷங்கர் கூட்டணி அமைந்ததால் மினிமம் கியாரண்டிக்கு நம்பிக்கை வந்தது. 'நண்பன்' படத்தில் நடித்தேன். பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் பணம் போடும் தயாரிப்பாளருக்கு மனிமம் கியாரண்டி கட்டாயம் வேண்டும் என்பது என் கருத்து.
நல்ல கதைகள் அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். வித்தியாசமான கதைகளில் புதுமையான கேரக்டர்களில் நடிக்க, நல்ல இயக்குனர்கள் முக்கியம். இவை இரண்டும் அமைந்தால் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பேன். 'நண்பன்' தெலுங்கில் வெளிவந்தாலும் பிறமொழி படங்களில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை. தமிழ்ப் படங்களில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. 'நண்பன்' ஷங்கர் படம் என்பதை போல எனது அடுத்த படமான 'துப்பாக்கி' ஏ.ஆர்.முருகதாஸ் படமாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.


 

லாரா தத்தா, மகேஷ் பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
லாரா தத்தா மற்றும மகேஷ் பூபதி தம்பதியருக்கு ஓர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.மிஸ் யூனிவர்ஸ் லாரா தத்தாவும், பிரபல டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியும் பல மாதங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் எளிமையாக நடைபெற்றது. இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஓர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இருவரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



 

இப்போதைக்கு ‘நோ’ திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை' என்றார், காஜல் அகர்வால். மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நான் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது. சில படங்கள் தோல்வி அடைந்தது. நான் நடிக்கும் எல்லா படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். இக்காட்சியை ஆபாசம் இல்லாமல் பூரி ஜெகன்நாத் இயக்கினார். ரசிகர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். முத்தக்காட்சியை தவிர எத்தனையோ காட்சிகள் படத்தில் இருக்கிறது. அதுபற்றிக் கேட்காமல், முத்தம் பற்றியே கேட்பது ஏன்? கதைக்கு அவசியம் என்பதால்தான் அப்படி நடித்தேன். நான் 'நிர்வாண போஸ்' கொடுத்ததாக வந்த செய்திக்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்கிறார்கள். இதை நான் பலமாக மறுத்திருக்கிறேன். பொய்யான அச்செய்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து, விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை. அதனால் அமைதியாகி விட்டேன். இந்தியில் 'சிங்கம்Õ ரிலீசுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருவதால் ஏற்க முடியவில்லை. தெலுங்கு ஹீரோ பிரபாசுடன் எனக்கு காதல் என்று எழுதுகிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர் பழகினால், உடனே அவர்கள் காதலிக்கிறார்கள் என்று அர்த்தமா? அவர் எனக்கு நல்ல நண்பர், அவ்வளவுதான். தற்போது திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை. அதற்கான நேரம் வரும். அப்போது திருமணம் செய்வேன்.


 

பிப்ரவரி 3ல் ஜெனிலியா திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா. இவரும், ரிதேஷ் தேஷ்முக்கும் இந்தியில் நடித்தபோது காதலித்தனர். இதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில், இருவீட்டு சம்மதம் கிடைத்தது. இப்போது தன் காதலை வெளிப்படையாக அறிவித்துள்ள ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்கிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வரும் 31ம் தேதியும், பிப்ரவரி 3ம் தேதி திருமணமும், மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் மும்பையில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்புக்கு முழுக்குப் போடுவார் என்று தெரிகிறது.


 

ஆங்கில ஆல்பத்தில் ஆடுகிறார் அக்ஷயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கலாபக் காதலன்', 'உளியின் ஓசை' படங்களில் நடித்துள்ள அக்ஷயா, தற்போது ஆங்கில ஆல்பம் ஒன்றில் ஆடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் 2 படங்களிலும், தெலுங்கில் 'நாக்கண்டு ஒக்கரு' படத்திலும் நடிக்கிறேன். என் நண்பர்கள் தயாரிக்கும் 'ஜி-அருளஸ்' என்ற ஆங்கில ஆல்பத்தில் ஆடியிருக்கிறேன். இது வெற்றிபெற்றால், தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து தமிழிலும் ஆல்பம் தயாரிப்பேன். எனக்கு பாய் பிரண்டுகள் அதிகம். இதனால், நான் யாரையோ காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் அடிக்கடி செய்திகள் வருகிறது. யாரையும் நான் காதலிக்கவில்லை என்பதே உண்மை. காதலையும், கல்யாணத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.


 

பிப்ரவரி 3ல் ஜெனிலியா திருமணம்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா. இவரும், ரிதேஷ் தேஷ்முக்கும் இந்தியில் நடித்தபோது காதலித்தனர். இதை இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில், இருவீட்டு சம்மதம் கிடைத்தது. இப்போது தன் காதலை வெளிப்படையாக அறிவித்துள்ள ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்கிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வரும் 31ம் தேதியும், பிப்ரவரி 3ம் தேதி திருமணமும், மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் மும்பையில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்புக்கு முழுக்குப் போடுவார் என்று தெரிகிறது.


 

சிறந்த சைவ பிரியர் தனுஷ், மல்லிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
உணவுக்காக விலங்குகளை கொல்வதை தடுக்கவும், மாறாக அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாற்றும் நோக்கில் விலங்குகள் பாதுகாப்பு நல அமைப்பான பீட்டா விழிப்புணர்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரபலங்களிடம் கருத்து கேட்டு, ஆண்டுதோறும் சினிமா பிரபலங்களில் சிறந்த சைவை பிரியர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் '3' படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் மூலம் உலக அளவில் பிரபலமான தனுஷ் மற்றும் 'மர்டர்' படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், 2011ன் சிறந்த சைவ பிரியர்களாக தேர்வாகினர். 'சைவ உணவை சாப்பிடுவதால் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வதுடன், சீரான உடற்கட்டுடன் உள்ளேன்' என்று தனுசும், 'சைவ உணவே மிகவும் சிறந்தது' என்று மல்லிகாவும் தெரிவித்தனர்.


 

மல்டி ஸ்டார் படம் தவறு இல்லை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒரே படத்தில், பல ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது தவறு இல்லை' என்றார் ஸ்ரீகாந்த். மேலும் அவர் கூறியதாவது: 'ரோஜாக்கூட்டம்', 'ஏப்ரல் மாதத்தில்', 'பார்த்திபன் கனவு' படங்களில் பார்த்த மென்மையான ஸ்ரீகாந்தை மீண்டும் பார்க்க வைத்த படம், 'நண்பன்'. தெலுங்கிலும் 'டப்' ஆகிறது. தமிழில் இனி நான் நடிக்கும் படத்தை ரொம்ப கவனமாகத் தேர்வு செய்யும்படி ஷங்கர் அறிவுரை சொன்னார். அதை கடைபிடிக்கிறேன். வெற்றிகரமான படத்தில் இருக்கும்போது மட்டுமே அப்படத்தில் நடித்தவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அந்தவகையில், 'நண்பன்' எனக்கு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ஒரே படத்தில் பல ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும்போது, நடிப்பில் ஆரோக்கியமான போட்டி ஏற்படுகிறது. தவிர, மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் படத்தைப் பார்த்து நடிப்பை பாராட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, படத்தில் எனது கேரக்டருக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், எத்தனை ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். இப்படி நடிப்பது ரசிகர்களுக்கும் பரவச அனுபவமாக இருக்கும். மல்டி ஸ்டார் படம் ஒன்றும் தவறு இல்லை. தமிழில் 'பாகன்' படத்தில் ஜனனி அய்யருடன் நடிக்கிறேன். மலையாளத்தில் பிருத்விராஜின் வேண்டுகோளுக்காக, அவர் ஹீரோவாக நடிக்கும் 'ஹீரோ' படத்தில், நடிகர் ஸ்ரீகாந்தாகவே கவுரவ வேடத்தில் வருகிறேன். தெலுங்கில் 'நிப்பு' படத்தில் ரவிதேஜாவுடன் சேர்ந்து நடிக்கிறேன். எனக்கு ஜோடி, பாவனா.


 

அப்பா ஆனார் செல்வராகவன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்', '7 ஜி ரெயின்போ காலனி', 'மயக்கம் என்ன', கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களை இயக்கியவர் செல்வராகவன். தற்போது ஆர்யா நடிக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் மனைவி கீதாஞ்சலிக்கு நேற்று மாலை 5.25 மணியளவில், சென்னை யில் உள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து செல்வராகவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.


 

இந்திக்கு செல்கிறார் லிங்குசாமி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் ரிலீசான 'வேட்டை', இந்தியில் ரீமேக் ஆகிறது. இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது: என்னுடன் இணைந்து 'வேட்டை'யை தயாரித்த யுடிவி நிறுவனம், அதை இந்தியிலும் தயாரிக்கிறது. இந்தி நட்சத்திரங்களுக்கு படம் திரையிடப்பட்டது. நடிகர்கள் முடிவாகவில்லை. 'வேட்டை'யை தொடர்ந்து, எனது இயக்கத்தில் தமிழில் ரிலீசான 'சண்டக்கோழி', 'ரன்' படங் களை யுடிவியுடன் இணைந்து இந்தியில் தயாரிக்கிறேன். மேலும், இந்தியில் விரைவில் படம் இயக்க உள்ளேன்.


 

தங்கம் தொடரில் நடிக்க பெண்கள் தேர்வு

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'தங்கம்' தொடர், சன் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை, போட்டிகள் மூலம் அவர் தேர்வு செய்து வருகிறார். 'சின்த்தால் சரும பாதுகாப்பு சீசன் 2' என்ற பெயரில் 2வது முறையாக இப்போட்டிகள் நடந்தது. கோவை, மதுரை, திருச்சி, சென்னையில் நடந்த முதற்கட்டப் போட்டியில், 15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இறுதிப்போட்டி சென்னையில் நடந்தது. தனி நடிப்பு, இணைந்து நடிப்பு, பொது அறிவு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னையைச் சேர்ந்த பிரவீணா, பிரசாந்தி வெற்றிபெற்றனர். இவர்களுக்கு 'தங்கம்' தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  இப்போட்டிக்கு ரம்யா கிருஷ்ணன், காவேரி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நிதின் சத்யா நடுவர்களாக இருந்தனர். கோத்ரெஜ் பிராண்ட் மேனேஜர் சின்மயி கேன்கர், பி.ஆர்.சுபாஷ், ஸ்ரீனிவாச அய்யர், டாக்டர் முருகுசுந்தரம் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விஷன் புரோ மேனேஜ்மென்ட் செய்திருந்தது.


 

விஜய்க்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மீண்டும் சண்டையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'துப்பாக்கி'. படத்தின் ஷூட்டிங் படுவேகமாக மும்பையில் நடந்து வருகிறது. இதில் இளைய தளபதி விஜய்க்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலுக்கு காரணம் இந்த காட்சியிலே அந்த நடிகர் நடித்திருந்தால் அப்படி நடிச்சிருப்பார் என்று முருகதாஸ் சொல்ல விஜய் கோபித்துக் கொண்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டதாக கிசு..கிசுக்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு நாள் முழுக்க ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரவே இல்லையாம் விஜய்! ஏற்கனவே விஜய்க்கும், முருகதாசுக்கும் சம்பள பிரச்சனையில் சண்டை வந்ததாக கூறப்பட்டது.