பரதேசிக்கு 5 லட்சம் ஹிட்ஸ்!

|

இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாகிறதோ இல்லையோ... அந்தப் படத்தின் ட்ரைலர் அல்லது சிங்கிள் பாட்டு யுட்யூபில் ஹிட்டானே பெரிய வெற்றியாகக் கொண்டாடும் போக்கு பிரபலமாகிவிட்டது.

பாலாவின் படம் கூட இதற்குத் தப்பவில்லை. பரதேசி படத்தின் ட்ரைலர் பெரும் வெற்றியடைந்துவிட்டதாக பப்ளிசிட்டி செய்ய வேண்டிய நிலை.

paradesi trailer hit   
அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் யு ட்யூபில் வெளியான 3 நாட்களிலேயே 5 லட்சம் பேர் பார்த்துவிட்டார்களாம். இது படத்தின் பெரிய வெற்றிக்கு முன்னோட்டம் என்று பாலா தரப்பு உற்சாகமடைந்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைச் சொல்லும் படமான பரதேசிக்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல எதிர்ப்பார்ப்பு உருவாகியிருந்தது.

ட்ரைலர் பார்த்தபோது அந்த எதிர்ப்பார்ப்பு இன்னொரு மடங்கு அதிகரித்தாலும், ஜிவி பிரகாஷின் பாடல்களும் ட்ரைலருக்கான இசையும் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்!

 

Post a Comment