கரண் நடிக்கும் சொக்கநாதன்

|

Karan film named as 'Chockanathan'

கரண் நடித்த 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். இவர் தற்போது, 'சிங்கம் சினிமா' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி  படம் தயாரித்து, இயக்குகிறார். 'சொக்கநாதன்' என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தில் கரண் ஹீரோவாக நடிக்கிறார். ''தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது. அந்தந்த மொழி முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய கோணத்தில் சொல்லப்படும் ஆக்ஷன் கதை. தமிழ் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. நான் இயக்கிய 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' தெலுங்கில் 'டான் சுந்தரம்' என்ற பெயரில் அடுத்த மாதம் டப் ஆகிறது'' என்றார் இயக்குனர் வி.சி.வடிவுடையான்.
 

Post a Comment