‘பிக் பாஸ்Õ ஷோவில் சனாகான்

|

Sana khan in Big boss Show

வெளிநபர்கள் தொடர்பில்லாமல் பூட்டிய வீட்டுக்குள் 1 மாதம் தங்கப்போவதாக கூறினார் சனா கான். இது பற்றி அவர் கூறியதாவது: பாலிவுட் ஹீரோ சல்மான் கான் 'பிக் பாஸ்Õ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை வடநாட்டு டி.வி.சேனலில் நடத்தி வருகிறார். இந்த ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. உடனே ஒப்புக்கொண்டேன். இந்த ஷோவில் பங்கேற்கும்போது உடன் தங்கி இருப்பவர்களுடன் கருத்துவேறுபாடு, மோதல், கெட்ட வார்த்தைகள் பிரயோகம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்குமே என்கிறார்கள். இதற்கு முன்வேண்டுமானால் அந்த கசப்பான சம்பவங்கள்
நடந்திருக்கலாம். இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் நல்லமுறையில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். ஒரே விஷயம் என்னவென்றால் 24 மணி நேரமும் என்னை ரசிகர்கள்
கவனித்துக்கொண்டே இருப்பார்கள். எனவே உடை விஷயத்தில் கவனமாக இருப்பேன். ஒரு மாதம் பூட்டிய வீட்டுக்குள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கப்போவதுபற்றி கேட்கிறார்கள். அதற்கு நான் என்னை தயார்படுத்திக்கொண்டேன். சில நேரம் வெளியுலக தொடர்பு இல்லாமல்

இருக்க வேண்டிய காலகட்டங்கள் நமக்கு ஏற்படும்போது செல்போனைகூட அணைத்துவிடுவோம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துவேன். இந்த ஷோ மூலம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு சனாகான் கூறினார்.
 

Post a Comment