கன்னடத்தில் ரீமேக்காகும் 'வழக்கு எண் 18/9' மற்றும் 'போராளி' படங்களில் நடிப்பதாக யஷிகா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழில் ரிலீசான 'வாடா போடா நண்பர்கள்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படங்களில் நடித்தேன். பிறகு வாய்ப்புக்கு காத்திருந்தேன். எதுவும் வரவில்லை. கன்னடத்தில், தமிழில் வெளியான 'வழக்கு எண் 18/9' படம், 'கேஸ் 18/9' என்றும் 'போராளி' படம், 'யாரே கூகாடளி' என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இந்தப் படங்களில் நடித்துவருகிறேன். தவிர 'ஜெய்பதுரங்களி', 'டிராமா' படங்களிலும் நடிக்கிறேன். கன்னடத்தில் 'யஷிகா' என்ற பெயரை மாற்றி, 'சிந்து லோக்நாத்' என்ற பெயரில் நடித்து வருகிறேன்.
Post a Comment