துறு துறு பிரியா ஆனந்த்

|

Priya anand in dhanush film

நடிகை பிரியா ஆனந்த் கூறியதாவது: 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்தது எதிர்பாராதது. '180' பட இயக்குனர் ஜெயேந்திராவும் பால்கியும் நண்பர்கள். பால்கி மனைவி கவுரி, அமெரிக்கன் ஸ்டைல்
ஆங்கிலம் பேசி நடிக்கக் கூடிய நடிகையை தேடுவதாகச் சொன்னார். நான் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதால் என்னை சிபாரிசு செய்தார் ஜெயேந்திரா. ஆடிஷனில் ஓ.கே.ஆனபின் ஒப்பந்தம்
செய்யப்பட்டேன். இன்னும் இரண்டு இந்தி படங்களில் நடிக்கிறேன். அதில் ஒன்று 'நாடோடிகள்' படத்தின் ரீமேக். பிரியதர்ஷன் இயக்குகிறார். தற்போது தெலுங்கில் ஷர்வானந்துடன் நடிக்கிறேன். தமிழில்,
'எதிர்நீச்சல்' படம் இருக்கிறது. இதை தனுஷ் தயாரிக்கிறார். இதில் என் வயதுக்கேற்ற துறு துறு கேரக்டரில் நடிக்கிறேன்.
 

Post a Comment