தமிழ்ப் படவுலகின் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த படங்களை இயக்கிய ஏ.ஜெகநாதன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.
மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெகநாதன், சில நாட்களுக்கு முன் திருப்பூரிலுள்ள மகள் உஷாதேவி வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கோவை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் உடல்நிலை கவலைக்கிடமானது. நேற்று காலை மரணம் அடைந்தார். மறைந்த ஜெகநாதனின் உடல் திருப்பூர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. ஜெகநாதனுக்கு மனைவி ராஜாமணி, மகள்கள் உஷாதேவி, பவித்ரா தேவி, மகன் அருண்குமார் உள்ளனர்.
'மணிப்பயல்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஜெகநாதன், எம்.ஜி.ஆர் நடித்த 'இதயக்கனி', சிவாஜி நடித்த 'வெள்ளை ரோஜா', 'முத்துக்கள் மூன்று', ரஜினி நடித்த 'மூன்று முகம்', 'தங்க மகன்', கமல் நடித்த 'காதல் பரிசு' உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். டி.வி தொடர்களையும் இயக்கியுள்ள ஜெகநாதன், தமிழ்த் தாத்தா உ.வே.சா பற்றிய டி.வி தொடரையும் இயக்கினார். தற்போது தமிழக அரசு சினிமா விருது தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். முதல்வர் இரங்கல்: ஏ.ஜெகநாதன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் குறிப்பு:
இயக்குனர் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்திலிருந்து ஜெகநாதனை எனக்கு தெரியும். எம்.ஜி.ஆரும் நானும் இணைந்து நடித்த காவல்காரன், கணவன், என்அண்ணன், கண்ணன் என் காதலன் போன்ற பல படங்களில் உதவி இயக்குனராக திறம்பட பணியாற்றியவர். ஜெகநாதன் மறைவு தமிழ்த் திரைப்படத் துறைக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment