விமலின் மாப்ள சிங்கம் "காமெடி" டிரெய்லர்.. இன்று முதல்

|

சென்னை: விமல் - அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் மாப்ள சிங்கம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணியளவில் வெளியாகும், என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது சோனி நிறுவனம்.

காவல் படத்தின் மாபெரும் தோல்விக்குப் பின் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாப்ள சிங்கம், விமலுடன் இணைந்து அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர், விமலுக்கு நல்லதொரு பிரேக்கை கொடுத்த தேசிங்குராஜா படத்தைப் போன்று இந்தப் படமும் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இன்று மாலை சரியாக 7 மணிக்கு மாப்ள சிங்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகின்றது, காமெடி கலந்த மாப்ள சிங்கம் டிரெய்லரை கண்டுகளிக்கத் தயாராகுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது சோனி நிறுவனம்.

டான் அசோக் வசனத்தில் உருவாகியிருக்கும் மாப்ள சிங்கம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இளம் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.

காமெடி + காதல் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நாயகன் விமலும், நாயகி அஞ்சலியும் மிகவும் நம்பியிருக்கின்றனர். இருவரின் நம்பிக்கையையும் மாப்ள சிங்கம் காப்பாற்றுவாரா? பார்க்கலாம்.

 

Post a Comment