அயயோ.. நான் நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.. எஸ்.ஜே.சூர்யா மறுப்பு

|

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணியின் சார்பாக நடிகர் சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டியிடுகிறார்கள் என்று ராதாரவி சொல்லி அரை நாள் கூட ஆகவில்லை.

அதற்குள் நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ராதாரவி கூறியதற்கு மறுப்புத் தெரிவித்து பேட்டி அளித்திருக்கிறார் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா.

'கோவை சினிமா நடன, நாடக, நடிகர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத் தொடக்க நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதை தொடங்கி வைப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி கோவை வந்தார்.

S.J.Surya Says

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் நடிகர் ராதாரவி அளித்த பேட்டியில் "நடிகர்சங்கத் தேர்தலில் எங்கள் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம் எங்கள்அணி சார்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்" என்று கூறினார்.

ராதாரவியின் பேச்சுக்கு எஸ்.ஜே.சூர்யா தற்போது மறுப்புத் தெரிவித்து இருக்கிறார் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து அவர் பின் வருமாறு தனது விளக்கத்தை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார்.

நான் இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள்சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்சங்கம் ஆகியனவற்றில் உறுப்பினராக இருக்கிறேன். எல்லாச் சங்கங்களிலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன்.

எந்தச் சங்கத்திலும் எந்தப்பொறுப்புக்கும் வர நான் விரும்பியதில்லை. இப்போதைய நடிகர்சங்கத் தேர்தலையொட்டி, எங்கள் அணியை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டார்கள், நான் ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னேன்.

தேர்தலில் போட்டியிடுவதாக நான் சொல்லவில்லை, எல்லாச் சங்கங்களையும் போல இந்தச் சங்கத்திலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.

என்று தெளிவாக தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை எஸ்.ஜே.சூர்யா எடுத்துரைத்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் கன்னித்தீவு கணக்கா நீண்டுகிட்டே போகுதே....

 

Post a Comment