கோடம்பாக்கத்தில் இப்போது பேயாட்சி நடக்கிறது என்று தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறினார்.
புதுமுகங்கள் நடித்து தயாராகியுள்ள படம், ‘உனக்கென்ன வேணும் சொல்லு.' இது ஒரு பேய் படம். படத்தை என் சண்முகசுந்தரம், கே முகமது யாசின் தயாரிக்க, அவுரா சினிமாஸ் மகேஷ் வெளியிடுகிறார். ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ளார்.
இதன் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை பட அதிபர் ஏ.எம்.ரத்னம் வெளியிட, இயக்குநர் வெங்கட்பிரபு பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஏ.எம்.ரத்னம் பேசுகையில், "முன்பு பாம்புகளை வைத்து படம் தயாரித்தால், அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. பாம்புகளை வைத்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின.
இப்போது பேய் கதைகளை படமாக்கினால் நிச்சய வெற்றி என்று சொல்லும் நிலை இருந்து வருகிறது. திகில் படங்கள் வரிசையாக வெற்றி பெற்று வருகின்றன.
தமிழ் பட உலகில் இப்போது பேய் யுகம் நடக்கிறது. பேய் படங்களில் நகைச்சுவையும் கலந்திருப்பதால், குழந்தைகள் ரசிக்கிறார்கள். பேய் இருக்கிறதா, இல்லையா? என்பது தெரியாது. ஆனால், பேய் படங்களின் வெற்றி ஆச்சரியப்பட வைக்கிறது,'' என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Post a Comment