அக்டோபரில் தனியாக வரும் அனுஷ்கா

|

ஹைதராபாத்: அனுஷ்கா (கதையின்) ராணியாக நடித்திருக்கும் ருத்ரமாதேவி படம் அக்டோபர் மாதம் 9 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டோலிவுட் இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் இசைஞானியின் இசையில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, கேத்ரீன் தெரசா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ருத்ரமாதேவி திரைப்படம் அக்டோபர் 9ம் தேதி கண்டிப்பாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Anushka Shetty Returns in October's

செப்டம்பர் 4 ம்தேதி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி வழக்கம் போல தள்ளிப் போனது, மறுபடியும் செப்டம்பர் 17 ம் தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் செப்டம்பர் மாதத்தில் எந்த ஒரு தேதியையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் அக்டோபர் 9 ம் தேதி ருத்ரமாதேவியை கண்டிப்பாக வெளியிட்டு விடுவோம் என்று தற்போது சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்திருக்கின்றனர் படக்குழுவினர்.

எனவே இந்தமுறை ருத்ரமாதேவியை தரிசித்து விடலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இதற்குத் தகுந்தார் போல போட்டிகள் எதுவும் இன்றி அக்டோபர் 9 ல் தனியாகக் களமிறங்குகிறார் அனுஷ்கா.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ருத்ரமாதேவி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment