பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி,கணவர் மீது ரூ.8லட்சம் மோசடி புகார்

Shilpa Shetty Raj Kundra Accused Fraud

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது ஒருவர் ரூ.8 லட்சம் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியின் புரமோட்டர் ஆனந்த் சிங். அவர் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் இர்பான் கான் ஆகியோர் மீது பொது இடங்களில் புகைப்பிடப்பதாக புகார் கொடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் தொடர்ந்துள்ளார்.

ஷில்பாவும் அவரது கணவரும் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போட்டி தொடர்பாக தன்னிடம் இருந்து ரூ.8 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆனந்த் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

 

புழலில் இருந்து வேலூர் சிறைக்குப் போன பவர் ஸ்டார் சீனிவாசன்

Power Star Srinivasasan Shifted Vellore Prison

வேலூர்: மோசடி வழக்கில் கைதான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னையில் பாபா டிரேடிங் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சீனிவாசனிடம், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதன் (60) தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.20 கோடி கடன் கேட்டார்.

50 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்தால் கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக சீனிவாசன் கூறியுள்ளார். இதை நம்பி சீனிவாசனிடம் ரூ.50 லட்சம் கமிஷன் பணத்தை ரங்கநாதன் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாசன், 20 கோடி ரூபாய் கடன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

எனவே தாங்கள் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பி கொடுக்கும்படி ரங்கநாதனின் மகன் சிவக்குமார் என்பவர் சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க முடியாது என்று சீனிவாசன் கூறி மிரட்டியுள்ளார். இந்த புகாரின் பேரில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூருக்கு மாற்றம்

இதற்கிடையில், சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடந்த 26ம் தேதி நள்ளிரவு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் தற்போது வேலூர் மத்திய சிறையில் எச்.எஸ்,1 என்ற பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.

சாதாரண அறைதான்

பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்க மற்ற கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முதல் வகுப்பு வசதிகள் கொடுக்கப்படவில்லை. சாதாரண வகுப்புக்கான அறையிலே அவர் தங்கியுள்ளார்.

படப்பிடிப்புகளுக்கு பாதிப்பு

பவர் கைதாகி சிறையில் இருப்பதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரை புக் செய்துள்ள தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். சுமார் நான்கு படங்கள் பவருக்காக காத்திருக்கிறதாம்.

ஜாமீன் கிடைக்குமா?

பவர் விரைவில் ஜாமீனில் வெளிவந்தால் மட்டுமே தங்கள் படங்களில் படப்பிடிப்புகளை நடத்த முடியும் என்று நான்கு இயக்குநர்கள் கூறி வருகின்றனராம். பல மோசடி வழக்குகள் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது கிளம்பி வருவதால் அவர் வருவாரா? அல்லது கேஸ் மேல் கேஸ் பாய்ந்து நிரந்தரமாக சிறையிலேயே தங்கிவிடுவாரா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

 

விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் - அமலாபால் கூட்டணியில் தயாராகி வரும் ‘தலைவா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் முடிவடைந்துள்ளதால் மே மாதம் கேசட் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalaivaa release on vijay birthday   

தலைவா படத்தின் ரிலீஸ் எப்போது என்பதுதான் இப்போதைக்கு ரசிகர்களின் கேள்வி. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பட்ட போஸ்ட் புரடெக்சன் வேலைகளை விரைவாக முடித்து, ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜூன் 21ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள் வருகிறது. விஜய் பிறந்தநாள் பரிசாக அந்த படத்தினை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் தனது ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளிக்கவேண்டும் என்பது விஜய் விருப்பமாம்.

 

மரியான் படத்தின் ‘நெஞ்சே எழு’ டீஸர்:ஒரே நாளில் 2.25லட்சம் ஹிட்

‘நெஞ்சே எழு'.... இது மரியான் படத்தில் வரும் ஒரு பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்த பாடலில் 38 செகண்ட் டீஸர் தற்போது யுடியூப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

பரத்பாலா இயக்கத்தில் maryan nenjae ezhu song teaser crossed   நெஞ்சே எழு .... பாடலின் 38 செகண்ட் டீஸரை யு டியூப்பில் ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் கண்டு ரசித்து லைக் கொடுத்திருக்கிறார்களாம்.

இசையோடு, நெஞ்சே எழு பாடல் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக படமாக்கப் பட்டுள்ளதாம். இதனாலேயே ரசிகர்களிடையே பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்கின்றனர். நெஞ்சே எழு பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.

மரியான் படத்தின் இசை பல்வேறு சாதனைகளை படைக்கும் என்கின்றனர் சோனி நிறுவனத்தார்.

மரியான் படத்தின் ‘நெஞ்சே எழு' டீஸர் - வீடியோ

 

ரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்?

Rajini S Next Heroine Vidhya Balan

ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே என கனவுக்கன்னிகளுடன் ஜோடி சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் வித்யா பாலனுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இந்தப் படத்தை ரஜினி முடித்துவிட்டார். கேன்ஸ் படவிழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.

கோச்சடையான் அநேகமாக ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன.

புதிய படத்திற்கான கதை, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என அனைத்தும் முடிவாகி விட்டபோதும், கோச்சடையான் திரைக்கு வரும்வரை அது பற்றிய செய்திகளை வெளியே விடுவது நன்றாக இருக்காது என்று நினைக்கிறார் ரஜினி.

எனினும் இயக்குநர் கே.வி. ஆனந்த் என்பது போல, புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பார் என்று செய்திகள் கசிந்துள்ளன.

கேன்ஸ் பட விழாவில் படங்களை தேர்வு செய்யும் 9 பேர் கொண்ட நடுவர் குழுவில் வித்யாபாலனும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே விழாவுக்கு ரஜினியும் செல்லவிருப்பதால, அப்போது தனது படத்தில் அவரை நடிக்க வைப்பது குறித்து ரஜினி பேசி முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

வேலூர் சிறையில் பவர்ஸ்டார்:அதிர்ச்சியில் பட அதிபர்கள்

Power Star Prison Producers Shock

சென்னை: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்த பட அதிபர்கள் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானதை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் பிக்கப்பாகி விட்டது. காமெடி, குத்தாட்டம் என்று மனிதர் சுமார் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்பொழுது அவரை ஒப்பந்தம் செய்தவர்கள் செய்வது அறியாது குழம்புகின்றனர். பவரை நீக்கிவிடலாமா, இல்லை அவர் ரிலீஸ் ஆன பிறகு ஷூட்டிங்கை தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து அறிந்த பவர் தரப்பு யாரும் அவசரப் படாதீர்கள் எங்கள் தலைவர் விரைவில் விடுதலையாகிவிடுவார். கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று பட அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

 

ஸ்டண்ட் நடிகர்கள் ஸ்டிரைக்:படப்பிடிப்பு நடக்க ஒத்துழையுங்கள்-பாரதிராஜா

Director Bharathiraja Speaks Stunt Directors Union

சென்னை: ஸ்டண்ட் நடிகர்கள் வேலை நிறுத்தத்தால் ஏராளமான படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று இயக்குநர் பாராதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பணி பாதுகாப்பு மற்றும் பணி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டண்ட் நடிகர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல படங்களின் படப்பிடிப்புகள் காலவரையரையின்றி ஒத்திப்போடப்பட்டுள்ளது. இதனால் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாராதிராஜா, இது மிகவும் சிக்கலான பிரச்சினை என்று தெரிவித்தார். சினிமாவில் சண்டைக் கலைஞர்களின் பங்கு முக்கியமானது என்று கூறிய அவர், சண்டை கலைஞர்களுக்கு தெலுங்கு, மற்றும் இந்தி படங்களில் பணியாற்றும்போது உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை, பேசி தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல என்றார்.

இதை விட சிக்கலான பல பிரச்சினைகளுக்கு எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருப்பதை தமிழ் திரையுலகில் உள்ள மூத்த கலைஞர்கள் அனைவரும் அறிவார்கள்.

இந்தி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக, தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை சண்டை கலைஞர்கள் தவிர்ப்பதில் நியாயமிருப்பதாக எந்த நடுநிலையாளரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எனவே சண்டை கலைஞர்கள் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பில் உடனடியாக கலந்து கொண்டு தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்கி, இதனால் ஏற்படக் கூடிய பொருளாதார நஷ்டத்தில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.

பிரச்சினை தீருமா?

இதனிடையே ஸ்டண்ட் நடிகர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு சில தினங்களில் இந்தப் பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு விடும் என்று மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அதன்பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

பட்டத்து யானை படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ஐஸ்வர்யா அர்ஜூன்

Aiswarya Arjun Unconscious Pattathu Yanai Shooting Spot

திருச்சி: கொளுத்தும் வெயிலில் நடித்து, மயங்கி விழுந்த அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா

படப்பிடிப்பின் போது வெப்பம் தாங்காமல் ஐஸ்வர்யா அர்ஜூன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஷால் நடிக்கும் பட்டத்து யானை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்பதால் படப்பிடிப்பில் அதிகம் சிரமப்படுகிறாராம்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்போது திருச்சியில் படமாக்கப்பட்டு வருகின்றன. 7 நாட்களாக கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடைபெறுவதால், கதாநாயகி ஐஸ்வர்யா மிகவும் சிரமப் படுகிறாராம்.

வில்லன்கள் விஷால் - ஐஸ்வர்யாவை துரத்துவது போன்ற காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது கொளுத்தும் வெயிலில் ஓடிய ஐஸ்வர்யா திடீரென்று மயங்கி விழுந்தார். மகள் நடிப்பதைப் பார்ப்பதற்காக திருச்சி சென்றிருந்த அர்ஜூன் பதறியபடி மகளை தூக்கினாராம். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஐஸ்வர்யா தொடர்புடைய காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் பூபதி பாண்டியன் தெரிவித்தார்.

 

மனைவி தேவயானியை மேடம் என்று அழைக்கும் ராஜகுமாரன்

See Who Is Amma Rajakumaran

சென்னை: இயக்குனரும், நடிகருமான ராஜகுமாரன் பொது இடங்களில் தனது மனைவி தேவயாணியை மேடம், அம்மா என்று அழைக்கிறாராம்.

நடிகை தேவயாணி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். தேவயாணி தொலைக்காட்சி சீரியல்களில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் கணவர் ராஜகுமாரனோடு சேர்ந்து திருமதி தமிழ் படத்தில் நடித்தார். இத்தனை நாட்கள் இயக்குனராக இருந்த ராஜகுமாரன் இந்த படம் மூலம் ஹீரோவாகிவிட்டார். மேலும் தனது பெயருக்கு முன்னாள் சோலார் ஸ்டார் என்ற பட்டத்தையும் சேர்த்துக் கொண்டார்.

ராஜகுமாரன் பொது இடங்களில் தனது மனைவி தேவயாணியை அம்மா என்றும், மேடம் என்றும் அழைக்கிறாராம்.

 

'டபுள் மீனிங் டயலாக்' கூடாது... சந்தானத்திற்கு கண்டிஷன் போட்ட கிருத்திகா

Krithiga Control Santhanam Dialogue

வணக்கம் சென்னை படத்தில் நடிக்கும் சந்தானம், முகம் சுளிக்கச் செய்யும் டபுள் மீனிங் டயலாக்குகளைப் பேசக்கூடாது என்று படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி கண்டிசன் போட்டிருக்கிறாராம்.

மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிக்கும் வணக்கம் சென்னை படத்தை இயக்குவது உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா. இந்தப் படத்தை பெண் இயக்குனர்கள் பலரும் கையாள்கிற சமூக அக்கறை, பெண் விடுதலை என்றெல்லாம் போரடிக்கிற கதையோடு வராமல் மிக மிக சுவாரஸ்மயமான வகையில் கமர்ஷியல் படமாக தர நினைக்கிறாராம் கிருத்திகா.

இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடி உள்ளது. அவரை புக் செய்யும் போதே பெண்களை கேவலப்படுத்துற மாதிரியோ, அவங்க முகம் சுளிக்கிற மாதிரியோ ஒரு பிட் வசனம் கூட இருக்கக் கூடாது என்று கூறிவிட்டாராம் கிருத்திகா. அதற்கு ஓகே சொன்ன சந்தானம் வணக்கம் சென்னை படத்தில் சைவ வகை வசனங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

 

சிங்கத்தை அடுத்து சிறுத்தையை இயக்கும் ஹரி

Hari Direct Karthi After Suriya

சென்னை: இயக்குனர் ஹரி சிங்கம் 2 படத்தை முடித்துவிட்டு கார்த்தியை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறாராம்.

ஹரி சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் சிங்கம் 2 படப்பிடிப்பில் ரொம்பவே பிசியாக உள்ளார். சிங்கம் ஹிட்டானதை அடுத்து அவர் சிங்கம் 2 படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் அண்மையில் மாயமாகி திரும்பி வந்த அஞ்சலி ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி யாரை இயக்கப் போகிறாரோ என்று நினைத்தால் கடைசியில் அவர் சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து படம் பண்ணுகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவையில் படமாக்கப்படுகிறதாம்.

வரிசையாக டாடா சுமோ கார்கள், அரிவாள்கள் என ஹரியின் படத்திற்குரிய அனைத்து அம்சங்களும் இதிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைவா முடிஞ்சது இனி ஜில்லா!அதுவரை ஓய்வில் விஜய்...

Vijay Shifts Jilla

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா சூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியா செட்யூல் முடிந்து விட்டது. இனி ஜில்லா படத்திற்காக முழு வீச்சில் ஈடுபட உள்ளார்.

தலைவா படப்பிடிப்பில் பிஸியாக நடித்து முடித்துள்ள விஜய் சென்னை திரும்பிய பின்னர் மே 15ம் தேதி வரை ஓய்வெடுக்கப் போகிறாராம். அதன் பின்னர்தான் ஜில்லா சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

அறிமுக இயக்குநர் நேசன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் படப்பிடிப்பிற்காக மதுரை, பொள்ளாச்சி செல்ல இருக்கிறார். இந்தப் படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் உடன் ஜில்லாவில் மீண்டும் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால். மேலும், மகத், சூரி, தம்பி ராமையா ஆகியோரும் ஜில்லாவில் நடிக்கின்றனர்.

 

யூடியூப்-திரையுலகத்தை காப்பாற்றுங்கள்:இயக்குநர் எஸ்


Movies Through Internet Save The Film Industry
சென்னை: இணைய உலகின் யூடியூப் பில் திரைப் படங்களைப் பார்ப்பது அதிகரித்து வருவதால் திரையுலகத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கவலை தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் படத்தை இயக்கிய நாகராஜ் தற்போது இயக்கியுள்ள படம் மத்தாப்பூ. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், புதிய திரைப்படங்களைக் கூட யூ டியூப்பில் டவுன்லோடு செய்து பார்ப்பது அதிகமாகிவருகிறது. இப்படியிருந்தால் எப்படி தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்கள். தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள்கூட யூ டியூப்பில் முழுமையாகப் பார்க்க முடிகிறது.
விஜய் நடித்த நண்பன் படத்தை யூ டியூப்பில் 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பார்த்திருக்கிறார்கள். அது பெரிய படம் என்பதால் பாதிக்கப்படவில்லை. தடையறத் தாக்க படத்தைகூட 20 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். அந்த படம் தியேட்டரில் சரியாக ஓடவில்லை. இப்படி டவுன்லோடு செய்த 20 லட்சம் ரசிகர்களும் தியேட்டருக்கு வந்து பார்த்திருந்தால் அப்படம் 40 தியேட்டர்களில் 25 நாட்கள் ஓடிய வசூல் அந்த படத்தை வாங்கியவர்களுக்கு கிடைத்திருக்கும். இந்த யூ டியூப் மட்டுமின்றி, திருட்டு விசிடி போன்ற விசயங்களாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம்தான். இதைப்பற்றியெல்லாம் திரையுலகினர் யோசித்துப்பார்த்து, படங்களை ரிலீஸ் செய்வதோடு வேலை முடிந்து விட்டது என்று இருக்காமல் இதுபோன்ற தொழில்நுடப ரீதியாக இலவசமாக டவுன்லோடு செய்து பார்ப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.
 

பாக்யராஜை பார்த்தா மியூசிக் போட வருமா? - இளையராஜா

Tough Compose Music Villans Ilayaraja

சென்னை: ‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார்.

இறைவனுக்கு நன்றி...

பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.

இசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...

நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க.

வில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம்

சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா.

வில்லன் ஹீரோ ஆனால்...

ஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப ‘என்னம்மா கண்ணு...செளக்கியமான்னு ஆரம்பமாச்சி...அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் ‘தாஸ் தாஸ்...சின்னப்ப தாஸ்னு' டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி.

ரொம்பக் கஷ்டம்...

இப்படித்தான் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்' படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு தோணுமான்னு ஓபனா கேக்கறன்.

ரொம்ப தப்புனு புரிஞ்சது...

அதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு. ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அந்த பாராட்டுக்கு அர்த்தம் வருது.

பாரதிராஜா செஞ்சது சரி...

புதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும்.

பாடம் கற்றேன்...

அந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்," என பேசினார்.

 

சைந்தவிக்கு பொம்மையை கொடுத்து காதல் வளர்த்தேன்

சென்னை: இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவியை வரும் ஜூனில் மணக்க உள்ளார். இந்நிலையில், டெடிபியர் பொம்மையை கொடுத்து காதலியை கவர்ந்ததாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
‘வெயில்‘, ‘குசேலன்‘, ‘ஆயிரத்தில் ஒருவன்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ். தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை காதலிப்பதாகத் தான் முதலில் செய்தி பரவியது. ஆனால் 12 வருடமாக இவர்கள் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.
சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது:
அப்போ நா 10வது... சைந்தவி 8வது
நான் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் சைந்தவி 8 வகுப்பு படித்து வந்தார். அப்போதே அவர் மீது எனக்கு காதல் பிறந்துவிட்டது. எனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன்.

toys develop my love g v prakash
காதல் வளர்த்தேன்...
டெடிபியர் கரடிபொம்மை இரண்டை அவருக்கு பரிசளித்தேன். அதை தொட்டால் உடனே ‘ஐ லவ் யூ‘ என்று சொல்லும். இப்படித்தான் எனது காதலை தெரிவித்தேன். அவருக்கும் என்னை பிடித்திருந்தது.
இப்போ, லைப்ல செட்டில் ஆகிட்டோம்...
அடிக்கடி எனக்கு போன் செய்வார். மனம் விட்டு பேசி காதலர்களாக ஆனோம். கடந்த 12 வருடமாக எங்கள் காதல் வளர்ந்துவந்தது. வாழ்க்கையில் நிலையான ஒரு இடத்தை பிடித்தபிறகே திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
வயசாகுதுல...
இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இசை அமைப்பாளராக நான் இருக்கிறேன். சைந்தவி பாடகியாக இருக்கிறார். திருமணத்துகான வயதும் வந்துவிட்டது. எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.
 

ரூ.50லட்சம் மோசடி:பவர் ஸ்டார் சீனிவாசன் கைது,புழல் சிறையில் அடைப்பு

Power Star Srinivasan Arrested

சென்னை: ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் தனக்கு கமிஷனாக ரூ.50 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்திலும் பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்து போட்டுள்ளார்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் பவர் கடன் வாங்கியும் கொடுக்கவில்லை, வாங்கிய கமிஷன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் கடந்த அக்டோபர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் சிவகுமார், உதவி கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார்.

பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி), 120 (பி) (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று அதிகாலை சாலிகிராமம் அருகே கைது செய்தனர். அவரை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு எழும்பூரில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பவர் இதுபோன்று பலரிடம் மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் பவரிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும், கவர்ச்சிகரமான உறுதிமொழியை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

தயாரிப்பாளரை ரகிசயமாக திருமணம் செய்தாரா அஞ்சலி?

சென்னை: நடிகை அஞ்சலி
தயாரிப்பாளர் ஒருவரை
ரகசியமாக திருமணம்
செய்து கொண்டதாக
தெலுங்கு பட உலகில்
பேசப்படுகிறது என்று
இயக்குனர் களஞ்சியம்
தெரிவித்துள்ளார்.

*இது குறித்து இயக்குனர்
களஞ்சியம்
செய்தியாளர்களிடம்
கூறுகையில்,*

ஊர் சுற்றி புராணம்
படத்தில் அஞ்சலி 15 நாட்கள்
மட்டுமே நடித்துக்
கொடுத்தார். அதன் பிறகு
அவர் மாயமானார். இதனால் என்
படம் பாதியில் நிற்கிறது.
அஞ்சலி தற்போது புனேவில்
தெலுங்கு படத்தில்
நடிக்கிறார் என்று
கூறுகிறார்கள். அவருடன்
அவரின் தாயார் பாரதி தேவி,
அண்ணன்கள் ரவிசங்கர், பாபு,
அக்கா யாமினி தேவி ஆகியோர்
இருப்பதாக
கேள்விப்பட்டேன்.

அஞ்சலி தினமும்
ஷூட்டிங்கிற்கு 2
கார்களில் செல்கிறாராம்.
ஒரு காரில் அவரும், மற்றொரு
காரில் அடியாட்களும்
செல்கிறார்களாம். அஞ்சலி
பட அதிபர் ஒருவரை ரகிசயமாக
திருமணம் செய்து கொண்டதாக
தெலுங்கு திரையுலகில்
தகவல் பரவியுள்ளது. இந்த
தகவல் எந்த அளவுக்கு உண்மை
என்று தெரியவில்லை.

ரகிசய திருமண தகவலால்
தெலுங்கு திரையுலகினர்
அஞ்சலியை புதிய படங்களில்
எடுக்கத் தயங்குவதாக
கேள்விப்படுகிறேன்
என்றார்.
 

கத்தியைத் தீட்டாதே,பனிவிழும் மலர்வனம் ஆடியோ-ட்ரைலர் வெளியீடு

கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு,
பனிவிழும் மலர்வனம்,
படங்களில் இசை, ட்ரைலர்
வெளியீட்டு விழா வரும்
ஞாயிறன்று சென்னையில்
நடைபெற உள்ளது.

டி.எஸ்.கே பட நிறுவனம்
தயாரித்துள்ள படம்
கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு. இதில்
கதாநாயகனாக ஆதவாராம்
அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்கியுள்ளார்
ஸ்ரீ கிருஷ்ணா.
இப்படத்திற்கு இசை பிரேம்.
ஒளிப்பதிவு முரேஷ்.
கோவிலம்பாக்கம் டி.
சிங்காரம்
தயாரித்துள்ளார்.

*கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு*

இந்தப் படத்தின் இசை
வெளியீட்டு விழா சென்னை
வடபழனியில் உள்ள ஏ.வி.எம்
ஸ்டுடியோவில் காலையில்
நடைபெற உள்ளது. தமிழ்
தொலைக்காட்சிகள் சங்கத்
தலைவர் டி. தேவநாதன்
தலைமையில் நடைபெறும் இந்த
விழாவில் திரைப்பட
இயக்குநர்கள் அரவிந்த
ராஜ், சீனு ராமசாமி,நடிகர்
விஜய் வசந்த், கார்த்திக்
தங்கபாலு உள்ளிட்ட பலரும்
பங்கேற்கின்றனர்.

*பனிவிழும் மலர் வனம்*

பனிவிழும் மலர்வனம்
படத்தின் பாடல்
வெளியீட்டு விழா ஞாயிறு
மாலை பிரசாத் லேப்பில்
நடைபெற உள்ளது. இந்த
படத்தினை சி.டி.என்
புரடெக்சன் நிறுவனம்
தயாரிக்கிறது. கதாநாயகனாக
அபிலாஷ், கதாநாயகிகளாக
சாய்னா மற்றும் வர்ஷா
ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்கம் ஜேம்ஸ் டேவிட், இசை
ராஜீவ்.
 

ஹோட்டல், ரயில்கள் மாதிரி தியேட்டர்களிலும் 'சாதா, ஸ்பெஷல்' வேண்டும் - டி.ராஜேந்தர்

சென்னை: ஹோட்டல், ரயிலில்
இருப்பது போல் சாதா,
ஸ்பெஷல் என இரண்டு வகை
தியேட்டர்களை உருவாக்கி
குறைந்த முதலீட்டு
படங்களை காப்பாற்ற
வேண்டும் என டி.ஆர்
கருத்து
தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்க
தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
தலைமையில், ஏ. வெங்கடேஷ்
டைரக்ட் செய்யும்
‘சும்மா நச்சுன்னு
இருக்கு' படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழா
சென்னையில் நடந்தது.
படப்பாடல்களை
இசையமைப்பாளர்
ஜி.வி.பிரகாஷ் வெளியிட
தமன், தரண்குமார் ஆகிய
இருவரும் பெற்றுக்
கொண்டார்கள்.

விழாவில் கலந்து கொண்ட
தமிழ்நாடு திரையரங்க
உரிமையாளர்கள் சம்மேளன
தலைவர் ‘அபிராமி'
ராமநாதன்
பேசும்போது,‘‘இப்போதெல்லாம்
வாரந்தோறும்
குறைந்தபட்சம் 6 படங்கள்
திரைக்கு வருகின்றன.
படத்தின் பெயர் என்ன, கதை
என்ன, அதை டைரக்ட் செய்தவர்
யார், நடித்தவர்கள் யார்?
யார்? என்று தெரிந்து
கொள்வதற்குள் படம்
தியேட்டரை விட்டு
போய்விடுகிறது. இப்படி
வாரத்தில் 6, 7 படங்கள்
திரைக்கு வருவதால் ஒரு
படத்திற்கு ஒரு
காட்சிதான் எங்களால்
கொடுக்க முடிகிறது. இதற்கு
ஒரு தீர்வு காண வேண்டும்.

திரையுலகைச் சேர்ந்த
அனைத்து பிரிவினரும்
ஒன்று சேர்ந்து
கட்டுப்பாடு கொண்டு வர
வேண்டும். அப்படி
செய்தால்தான் குறைந்த
முதலீட்டில் தயாராகும்
சின்ன படங்களை காப்பாற்ற
முடியும்'' என பேசினார்.

அவரைத் தொடர்ந்து
டைரக்டர் டி.ராஜேந்தர்
பேசியனார்.
அதில்,‘‘குறைந்த
முதலீட்டில் தயாராகும்
சின்ன படங்களை வாழவைக்க
முதலில் தியேட்டர்
கட்டணத்தை குறைக்க
வேண்டும். அதன்பிறகு
இரண்டு விதமான
தியேட்டர்களை உருவாக்க
வேண்டும்.

ரயிலில் ஏர் கண்டிசன் கோச்,
சாதாரண கோச் என்று
இருப்பதுபோல்,
ஓட்டல்களில் நட்சத்திர
ஒட்டல், சாதாரண ஓட்டல்
என்று இருப்பதுபோல்
தியேட்டர்களிலும் பெரிய
தியேட்டர்கள், சின்ன
தியேட்டர்கள் என்று
இருக்க வேண்டும்.

அதிகபட்சம் 200 பேர்
அமர்ந்து படம்
பார்ப்பதுபோல் ‘மினி'
தியேட்டர்களை உருவாக்க
வேண்டும். இதற்கு அரசு
அனுமதி கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற ‘மினி'
தியேட்டர்களில்
‘பார்க்கிங் கட்டணம்'
வசூலிக்கக்கூடாது.
இதற்காக திரையுலகைச்
சேர்ந்த தயாரிப்பாளர்கள்,
வினியோகஸ்தர்கள்,
டைரக்டர்கள்,
நடிகர்-நடிகைகள் ஆகிய
அனைத்து பிரிவனரும்
சேர்ந்து முதல்-அமைச்சரை
சந்தித்து
சிறுபடங்களுக்கு தனி
தியேட்டர்களை உருவாக்கி
தரவேண்டும் என்று மனு
கொடுக்க வேண்டும்''என
டி.ராஜேந்தர் பேசினார்.

விழாவில் படத்தின்
கதாநாயகன் தமன், கதாநாயகி
விபா, அட்சனா, தம்பி ராமையா,
பவர் ஸ்டார் சீனிவாசன்,
ஈரோடு மகேஷ்,
இசையமைப்பாளர் அச்சு,
டைரக்டர் ஏ.வெங்கடேஷ்,
ஒளிப்பதிவாளர்
ராஜ்குமார், நடிகர்கள்
ஹரிகுமார், நகுல், டைரக்டர்
சினோ பிரிட்டோ, பட அதிபர்
விமலா பிரிட்டோ ஆகியோரும்
கலந்து கொண்டு விழாவில்
பேசினார்கள்.
 

இந்தி பேசும் தனுஷை பிடிச்சிருக்கு:ஐஸ்வர்யா



சென்னை: இந்தி பேசும் தனுஷை மிகவும் நேசிப்பதாக ஐஸ்வர்யா தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் ராஞ்சனா என்ற இந்தி படத்தில் சோனம் கபூர் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு தனுஷே டப்பிங் பேசியுள்ளார். தனுஷ் இந்தியில் டப்பிங் பேசியதை கேட்டு அவரது குடும்பத்தினர் பெருமிதம் அடைந்துள்ளனர். பரவாயில்லையே நம்ம தனுஷுக்கு இவ்வளவு நன்றாக இந்தி பேச வருகிறதே என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஞ்சனா டிரெய்லரைப் பார்த்துவிட்டு தனுஷின் மனைவி ஐஸ்வர்யா டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
ராஞ்சனா டிரெய்லர் வெளிவந்துள்ளது. ஓ மை காட் ஐ லவ் இட்:-):-) நீங்களும் பாருங்கள்.. இந்தி பேசும் தனுஷை நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ராஞ்சனா வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

படப்பிடிப்பில் பரிதாபம்.. 2 துணை நடிகைகள் குளத்தில் மூழ்கி பலி


மன்னார்குடி: மன்னார்குடி அருகே படப்பிடிப்பிற்கு சென்ற இரண்டு துணை நடிகைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
களவாணி படத்தை இயக்கியவர் இயக்குநர் சற்குணம். இவர் வாகை சூடாவா படத்திற்குப் பின் நையாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். வருகிறார். இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கிராம புறங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடைமேலையூர் என்ற கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குநர் சற்குணன் சென்னைக்கு சென்று விட்டதால் இன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில் எடைமேலையூரில் உள்ள கிராமத்தில் உள்ள குளத்திற்கு நையாண்டி படத்தில் துணை நடிகைகளாக நடித்து வந்த சென்னையை சேர்ந்த சரஸ்வதி (24), விஜி (21) மற்றும் சுகன்யா (22) ஆகிய 3 பேரும் குளிக்க சென்றனர். இவர்கள் மூன்று பேருக்குமே நீச்சல் தெரியாது. முன்பகுதியில் குளித்த அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கவே குளத்தில் காட்டா மணக்கு செடிகளில் சிக்கி மூழ்கினர்.
இதில் சரஸ்வதி, விஜி ஆகிய இருவரும் குளத்திலேயே மூழ்கி இறந்தனர். சுகன்யா குளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சுகன்யா தத்தளிப்பதை பார்த்து குளத்தில் இறங்கி சுகன்யாவை காப்பாற்றினர். சரஸ்வதி, விஜி ஆகியோரின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரஸ்வதி, விஜி ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து சென்றனர். சுன்யாவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துணை நடிகைகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவி உள்ளது. மேலும் சினிமா துணை நடிகைகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
 

மீண்டும் டிவி சீரியல் இயக்க வரும் பாரதிராஜா!


அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தை இயக்கி முடித்து ரிலாக்ஸ் ஆக உள்ள பாரதிராஜா, மீண்டும் ஒரு டிவி சீரியலை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைஞர் டி.வியில் தெக்கத்தி பொண்ணு தொடரை இயக்கிய பாரதிராஜா, அத்தொடர் கொடுத்த புத்துணர்ச்சி மீண்டும் அதே சேனலுக்கு வேறொரு புதிய தொடரை இயக்கப் போகிறாராம்.
புதிய தொடருக்கு ஒரு டைட்டில் பாடலை இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் திரைப்பட இசையமைப்பாளர் தாஜ்நூர். இதை கேட்டுவிட்டு பாராட்டிய பாரதிராஜா, நீதான் என் அடுத்த படத்துக்கு மியூசிக்' என்றாராம்.
சின்னத்திரை ரசிகர்களுக்கு விரைவில் ஒரு கிராமத்து விருந்து காத்திருக்கிறது.

directior bharathiraja next tv serial
 

பிக்பாஸ் 7: சல்மான் கானுக்கு பதில் ஷாருக் கான்?

Shah Rukh Khan Set Replace Salman Khan

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7 வது சீசனை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வந்தார்.

இதன் அடுத்த சீசன் தொடங்க உள்ளது. ஆனால் இந்த சீசனை சல்மான்கானுக்கு பதிலாக ஷாருக்கான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய அடுத்த பட சூட்டிங்கில் பிஸியாக உள்ள சல்லு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம்தான் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் ஷாருக்கானை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷாருக் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரசிகர்களை கவர்வாரா? நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதுதான் தெரியவரும்.

 

கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்கள்: கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், விஜய் டிவி மீது போலீசில் புகார்

சென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

complaint against vijay tv kamal gouthami prakashraj

கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்

அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா?

நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோளாக இருந்து வருகின்றன. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

அஞ்சலி மீதான ஹேபியல் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வழக்கறிஞர்

சென்னை: அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை ஆட்கொண்ரவு மனுவை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அஞ்சலி தன்னை தனது சித்தி பாரதிதேவி பணத்திற்காக கொடுமைப்படுத்துவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்றார். அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கடந்த 8ம் தேதி திடீர் என்று மாயமானார். அவரை யாரோ கடத்திவிட்டதாக அவரது சித்தி பாரதிதேவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சென்னை மற்றும் ஹைதராபாத் போலீசார் அஞ்சலியை தேடி வந்தனர். இந்நிலையில் அஞ்சலி ஹைதராபாத் போலீசார் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்தார். அவர் தற்போது புனேவில் தங்கி போல் பச்சன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு இன்றுடன் முடிகிறது.

anjali s aunt not a mood withdraw habeas corpus

இந்நிலையில் பாரதிதேவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் வருவாரா என்று தெரியவில்லை. சென்னை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக அஞ்சலியிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்கிடையே வழக்கை பாரதிதேவி வாபஸ் பெறுகிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து பாரதி தேவியின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், அஞ்சலி வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். போலீசார் அஞ்சலியிடம் விசாரணை நடத்தியதாக எந்த தகவலும் இல்லை. அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை வழக்கை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

 

கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக வித்யா பாலன், ஆங் லீ நியமனம்

Vidya Balan Enters The Cannes Film Festival 2013

டெல்லி: 66வது கேன்ஸ் திரைப்பட விழா நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா வரும் மே மாதம் 15ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாட்டு படங்கள் திரையிடப்படும். விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்வார்கள்.

சிறந்த படத்தை தேர்வு செய்ய 9 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தலைமையிலான நடுவர் குழுவில் லைஃப் ஆஃப் பை இயக்குனர் ஆங் லீ, பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவ்விழாவில் 19 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் அமிதாப் பச்சன் நடித்த முதல் ஹாலிவுட் படமான 'தி கிரேட் கேட்ஸ்பி' திரையிடப்படுகிறது. திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டும் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

 

மம்முட்டியுடன் இணையும் கெளதம் மேனன்... தாய் மொழிக்கு திரும்பினார்!

Gautham Menon Eyes Mammootty The First Time

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கெளதம் மேனன் முதன் முறையாக தனது தாய்மொழியில் படம் இயக்க இருக்கிறார். முதல் படத்திலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் கெளதம் மேனன் தமிழில் மின்னலே தொடங்கி நீதானே என் பொன் வசந்தம் வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தெலுங்கு, இந்தியிலும் அவரது படங்களை ரீமேக் செய்வார் கவுதம் மேனன். ஆனால் மலையாளத் திரை உலகின் பக்கம் திரும்பி கூட பார்த்ததில்லை.

முதன் முறையாக மம்முட்டியை வைத்து படம் இயக்கப் போகிறாராம். அதற்கான கதை, ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி செய்துவிட்டாராம். மம்முட்டி படத்திற்குப் பின்னர் பாசில் மகனை வைத்து மற்றொரு மலையாளப் படம் இயக்கப் போகிறாராம்.

இப்போது சூர்யா உடன் துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக உள்ள கெளதம் மேனன் 2014ம் ஆண்டில் இருந்து மம்முட்டி படத்தை இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

என் படத்தில் நடிக்கவில்லை என்றால், அஞ்சலி மீது புகார் கொடுப்பேன்: இயக்குனர் களஞ்சியம்

Anjali Angers Kalanjiyam

சென்னை: ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்க வரவில்லை என்றால் நடிகை அஞ்சலி மீது நடிகர்கள் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் இருந்து மாயமானார். போல் பச்சன் தெலுங்கு ரீமேக் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் தங்கியவர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஹைதராபாத் செல்லும் முன்பு தன்னை சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் கொடுமைபடுத்துவதாக தெரிவித்தரா்.

ஆனால் தான் அஞ்சலியை கொடுமைப்படுத்தவில்லை என்றும், அவர் ஹைதராபாத் செல்லும் முன்பு தன்னுடன் ஜோடி சேர்ந்துள்ள ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் களஞ்சியம் தெரிவித்தார். அஞ்சலி தனக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு தான் சென்றார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் மாயமான அஞ்சலி 5 நாட்கள் கழித்து ஹைதராபாத் போலீசார் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்றார். தற்போது அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக் பட ஷூட்டிங்கிற்காக புனே சென்றுள்ளார். நேற்றில் இருந்து 5 நாட்கள் களஞ்சியத்திற்கு கால்ஷீட் கொடுத்த அஞ்சலி ஷூட்டிங்கிற்கு வரவில்லை.

இது குறித்து களஞ்சியம் கூறுகையில்,

அஞ்சலி ஊர் சுற்றி புராணம் படத்தில் 10 நாட்கள் நடித்தார். மீண்டும் 23ம் தேதியில் இருந்து 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வரவில்லை. அஞ்சலி ஒப்புக்கொண்டபடி என் படத்தில் நடித்து முடிக்காவிட்டால் அவர் மீது நடிகர்கள் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்றார்.

 

'மண் பானை' படத்திற்காக வாஷிங்டனில் சிறந்த இயக்குநர் விருது பெறும் பாண்டியராஜன்

Director Pandiarajan Wins Best Director Award

சென்னை: வாஷிங்டனில் நடந்த பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டைரக்டரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன், ‘மண் பானை' என்ற குறும்படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். 20 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார். பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பதுடன், தயாரித்தும் இருக்கிறார்.

இந்த படத்தை அவர், வாஷிங்டனில் நடந்த ஹைபல்ப் திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருந்தார். அந்த படவிழாவில், ‘மண் பானை' படம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்காக பாண்டியராஜனுக்கு சிறந்த டைரக்டருக்கான விருது கிடைத்து இருக்கிறது.

 

வெளி மாநிலங்களில் மிரட்டல்: ஸ்டண்ட் நடிகர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக்!

Stunt Union Announces Indefinite Strike

சென்னை: வெளி மாநிலங்களில் மிரட்டப்படுவதால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சினிமா ஸ்டன்ட் நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சங்க தலைவர் ‘பெப்சி' எஸ்.விஜயன், சென்னையில் இதுகுறித்து கூறியதாவது:

"உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் நாங்கள் வெளி மாநிலங்களில் பணிபுரிய செல்லும்போது, அந்தந்த மாநில சங்கத்தினரால் துன்புறுத்தப்படுகிறோம். மிரட்டப்படுகிறோம். எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் தலையிட்டு பிரச்சினைக்கு முடிவெடுக்க வேண்டிய ‘பெப்சி' தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

பிற மொழிகளில்...

பிறமொழி படங்களில் பணிபுரியும்போது, 70-30, 80-20 என்ற அடிப்படையில் பணி வாய்ப்புகளை வழங்குகிறார்கள். இதனால் எங்கள் சங்க உறுப்பினர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.

தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் படங்கள் உள்பட எந்த மொழி படங்களிலும் எங்கள் சங்க உறுப்பினர்கள் இன்று முதல் பணிபுரிய மாட்டார்கள். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

அமீர் விலக வேண்டும்

எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விட்ட பெப்சி தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா ஆகிய இருவரும் அந்த பொறுப்புகளில் இருந்து விலகும் வரை, பெப்சியில் இருந்து விலகியிருப்பது என்றும் முடிவு செய்து இருக்கிறோம்," என்றார்.

 

கௌரவம்- சினிமா விமர்சனம்

Rating:
3.0/5

-எஸ். ஷங்கர்

நடிகர்கள்: சிரீஷ், யாமி கவுதம், பிரகாஷ்ராஜ், குமரவேல்
இசை: எஸ்எஸ் தமன்
ஒளிப்பதிவு: ப்ரீதா
தயாரிப்பு: பிரகாஷ் ராஜ்
இயக்கம்: ராதா மோகன்

படிப்பு, நாகரீகம், விஞ்ஞானம் என அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதிய கட்டமைப்பு, தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை.

இன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்க முடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதீய கட்டுப்பாடுகள், தெருவோர டீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை... இதையெல்லாம் முதல் முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த 'கௌரவ'த்தில்தான்!

gouravam review   
குடும்ப கவுரவம் என்ற பெயரில், தன் சாதி கவுரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.

தன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் உடன்படித்த நண்பனின் கிராமத்தைப் பார்க்கிறார் ஹீரோ சிரீஷ். நண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போதுதான் அவன் உயர்சாதி பெண்ணை காதலித்து, ஊரைவிட்டே ஒடிப்போனதாகவும், அதன் பிறகு அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள். நண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

யாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளை இந்தப் படம் மூலம் சாட முயன்றுள்ள இயக்குநர் ராதாமோகன், அதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார் இந்தப் படத்தில் என்பதையும் சொல்லாமலிருக்க முடியாது.

ஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப் போகிறது. ஊர் பெரிய மனிதர் பிரகாஷ் ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்த குடும்பத்தின் சாதி கவுரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது. அதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ்.

யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில் மனநிலை பிறழ்ந்த சிறுவனைக் காட்டும்போதே, அவன்தான் இந்தக் கதையின் முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.

பாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்த குணம் பொதுவானதுதானே!

Gouravam Review

ஹீரோ சிரீஷுக்கு நடிப்பு, உடல்மொழி என எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தேர்வுமல்ல. தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை. ஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின. நாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே!

நாசரை வீணடித்திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வரும் பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிபவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கம்போல குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் பரவாயில்லை எனும் அளவுக்குதான் உள்ளன. ஆனால் விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் 'நாம அடிச்சா ரத்தம் வராதாடா' என்று குமரவேல் கொந்தளிக்கும் காட்சியில், வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும், அந்த வலியை உணர வைக்கிறது.

ஒரு கிராமம் கிடக்கு.. பச்சையுடுத்திய வயலுக.. அச்சமுடுத்திய பயலுக வாழ... என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன.

தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை. சமூகத்தில் ஒரு பார்வையாளனாக நிற்கும் யாரும் சொல்லலாம். அப்படியொருவர்தான் ராதா மோகன்.

நல்ல முயற்சி.. முழுமையாக இல்லையே என்ற ஆதங்கத்துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது!

 

நார்வே தமிழ் திரைப்பட விழா - இயக்குநர் மணிவண்ணன் பங்கேற்கிறார்!

Director Manivannan Attend Norway Film Festival

நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.

தமிழ் சினிமாவை கவுரவிக்கவென்றே ஆண்டுதோறும் நடக்கும் விழா, நார்வே தமிழ் திரைப்பட விழா.

உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடக்கிறது.

லண்டனில் தமிழ் படத் திரையிடல் மட்டும் நடக்கிறது. இந்த விழாவுக்கு கும்கி, சுந்தரபாண்டியன், சாட்டை, நீர்ப்பறவை, வழக்கு எண் 18/9 உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பொன்விழா காணும் இயக்குநர் - நடிகர் மணிவண்ணன் கலந்து கொள்கிறார். அவருடன் ஏராளமான முன்னணி நடிகர்கள், இயக்குநர்களும் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகள், திரையுலக ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்தல், ரசிகர்களுடன் உரையாடுதல் என சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்த விழாவில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களிலிருந்து தேர்வான படங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உள்பட பல நாடுகளிலிருந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்றனர்.

இந்த விழாவில் 35-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை விஎன் மியூசிக்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வசீகரன் சிவலிங்கம் செய்து வருகிறார்.

 

ஹீரோவாக நடிக்கிறார் யுவன் சங்கர் ராஜா!

Yuvan Becomes Hero Now

தான் இசை அமைக்கும் படங்களில் பாடல் காட்சிகளில் அவ்வப்போது தோன்றி தன் நடிப்பு ஆசையைக் காட்டி வந்த யுவன் சங்கர் ராஜா, இப்போது முதல் முறையாக முழு நீள ஹீரோவாக நடிக்கிறார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிப்பதற்கு வசதியாக, தான் இசையமைக்கும் படங்களுக்கு மூன்று மாதங்கள் தள்ளி கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

மேலும், இந்தப் படம் நன்றாக ஓடினால் மட்டுமே தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன் என்றும் அவர் முன்னெச்சரிக்கையாகக் கூறியுள்ளார்.

இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸின் எஸ் மதன்.

ஏற்கெனவே சில இசை வீடியோக்களிலும் யுவன் நடித்திருக்கிறார். ஹீரோவாக நடிப்பதால் நடனம், உடற்பயிற்சி என மிகத் தீவிரமாக உள்ளாராம்.

 

யுவன் சங்கர் ராஜாவுடன் பாடி ஆடிய எம்எஸ் விஸ்வநாதன்

Msv Dances With Yuvan Thillu Mullu

சென்னை: இளம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் பாடி ஆடி அசத்தினார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.

1981ல் ரஜினி நடிப்பில் வெளியான தில்லு முல்லு திரைப்படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் ரீமேக் ஆகிறது.

இதில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிவாவும், மாதவி வேடத்தில் இஷா தல்வாரும் நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பத்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக முதன் முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தில்லு முல்லு தில்லு முல்லு' எனத் தொடங்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் எம்.எஸ்.வியுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவும் ஆடியிருக்கிறார்.

இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறுகையில், "என் தந்தை இளையராஜாவும் எம்எஸ்வியும் இணைந்து நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளனர். தற்போது ‘தில்லு முல்லு' ரீமேக்கிற்காக நான் எம்எஸ்வியுடன் இணைந்து இசையமைத்துள்ளேன். இதைவிட வேறு பெருமை இல்லை.

பழைய ‘தில்லுமுல்லு' படத்தில் இடம்பெற்ற ‘தில்லு முல்லு தில்லு முல்லு ' என்ற பாடலுக்கு வரிகளை மாற்றாமல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடலுக்கு எம்எஸ்வியுடன் இணைந்து பாடியதோடு, அவருடன் ஆடினேன்" என்றார்.

இதுகுறித்து எம்எஸ் விஸ்வநாதன் கூறுகையில், 'யுவனுடன் பணியாற்றியது ஒரு புதிய அனுபவம். இப்படி ஆடிப் பாடுவது இன்னும் புதிய அனுபவம்," என்றார்.

 

ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் ரஜினி!

Rajinikanth Attends Sridevi Private Party

நேற்று இரவு ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள், விருந்துகளில் ரஜினி பங்கேற்பதில்லை. அதுவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பிறகு வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டார் ரஜினி.

ஆனால் தவிர்க்க முடியாத நண்பர்களின் அழைப்பை கவுரவிக்கும் வகையில் திடீரென வருகை தந்து அசத்துவது ரஜினி வழக்கம்.

நேற்று இரவு சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டல் பால்ரூமில் ஒரு பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் திரையுலக மறுபிரவேசத்தைக் கொண்டாடும் வகையிலும், பத்மஸ்ரீ விருது பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா.

ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

விருந்து நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் மின்னலாய் வந்தார் ரஜினி. விருந்துக்கு வந்திருந்த கேஎஸ் ரவிக்குமார், விவேக், பிரபு, ஜெயம் ரவி, பிசி ஸ்ரீராம், ராதிகா, லிஸி, பூர்ணிமா போன்றவர்களுக்கு ஹாய் சொன்னவர், ஸ்ரீதேவியிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

ரஜினியுடன் அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இருவரும் 25 படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டெல்லி சிறுமி கற்பழிப்பு- ஷில்பா ஷெட்டி கடும் கண்டனம்!

Time Wake Up Shilpa Shetty On Delhi Rape Case   

டெல்லி: ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நடிகை ஷில்பா ஷெட்டி, இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்றார்.

டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

கற்பழிப்பு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் சிறுமி கற்பழிக்கப் பட்டதை கண்டித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இதுபற்றி கூறும்போது, "ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். இந்த கொடுமைகளுக்கு முடிவு எப்போது ஏற்படும் என்று தெரியவில்லை.

இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காலம் கடத்தாமல் உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்றார்.

 

பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

Violin Maestro Lalgudi Jayaraman Is No More

சென்னை: பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார்.

பிரபல வயலின் மேதையும், சிறந்த இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. அவர் பத்ம ஸ்ரீ (1972), பத்ம பூஷன் (2001) ஆகிய விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் என்னும் படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இசைத்துறையில் எட்ட முடியாத சாதனைகளைத் தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இசைக்குடும்பத்தில் பிறந்து, மனதைக் கரைக்கும் உன்னத இசைக்குச் சொந்தக்காரரான லால்குடி ஜெயராமன் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகுக்கு உணர்த்தியவர், இசை மாமேதைகளான ஜி.என்.பி., செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர்.

தன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர். கடினமான ராகங்களான "நீலாம்பரி', "தேவகாந்தாரி' ஆகிய இரண்டு ராகங்களில் வர்ணம் அமைத்து இசை மேதைகளை இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.

சங்கீத நாடக அகாதெமி, சங்கீத சூடாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்பட பல விருதுகளைப் பெற்றவர். இவர் இசையமைத்த "சிருங்காரம்' என்ற திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது. லால்குடி ஜெயராமனின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

லால்குடி ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

லால்குடி ஜெயராமனுக்கு மனைவியும், மகன் கிருஷ்ணன், மகள் விஜயலட்சுமி ஆகியோரும் உள்ளனர். அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரும் பிரபல வயலின் வித்வான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு

Sinhalese Actress Prabhu Deva Movie Hmk Condemns

சென்னை: பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ராமைய்யா வஸ்தாவையா என்ற படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். அவர் சில காட்சிகளில் வருவதோடு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். பிரபுதேவாவின் படத்தில் ஒரு சிங்கள நடிகையை நடிக்க வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதே போன்ற பாலகனான, தன் மகனை இழந்த பிரபு தேவாவுக்கு இந்த வலி நிச்சயம் தெரிந்திருக்கும்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து நடிகையை அழைத்து வந்து தன் படத்தில் பிரபுதேவா நடிக்க வைப்பது மன்னிக்க முடியாதது. இலங்கை நடிகையை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதல்- சல்மான் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம்!

Fefsi Deadlock Salman Khan Film Loses 25 Crore

மும்பை: சல்மான் கானின் மென்டல் படஷூட்டிங்கில் பெப்சி அமைப்பின் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 12 நாட்களாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மென்டல் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் சல்மானின் தம்பி சோஹைல் கான்.

மென்டல் படத்தில் பெப்சி அமைப்பைச் சேர்ந்த 50 சதவீத ஸ்டன்ட் கலைஞர்களை பயன்படுத்தவில்லை, பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டி பெப்சி அமைப்பினர் படப்பிடிப்பைப் புறக்கணித்தனர்.

இதையடுத்து இரு பாலிவுட்டும் கோலிவுட்டும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி பெப்சி நிர்வாகிகள் மும்பை சென்று நடத்திய பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை.

இதுபற்றி மென்டல் தயாரிப்பாளர் சோஹைல் கான் கூறுகையில், "தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்தான் இப்படத்துக்கு நியமிக்கப்பட்டார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கான்பெடரேஷன் விதிப்படி 70 சதவீதம் ஸ்டன்ட் கலைஞர்களை அந்த அமைப்பிலிருந்து பயன்படுத்த வேண்டும், 30 சதவீதம் பிற கலைஞர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பெப்சியோ தங்கள் அமைப்பிலிருந்து 50 சதவீதம் பேரைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, ஷூட்டிங்கைப் புறக்கணித்துவிட்டனர். இதுதான் பிரச்சினை...," என்றார்.

அகில இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் தர்மேஷ் திவாரி கூறுகையில், "மார்ச் 2013 ல் செய்த ஒப்பந்தப் படி நடக்கவில்லை பெப்சி. திரும்ப திரும்ப 50 சதவீத கலைஞர்களை பெப்சியிலிருந்தே எடுக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்," என்றார்.

இந்த நிலையில் சில தயாரிப்பாளர்கள் தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்களை தங்கள் படத்திலிருந்து நீக்கி விட்டு பாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்களை நியமிக்க ஆரம்பித்துள்ளார்களாம்.

 

நடிகை ரேவதி- சுரேஷ் மேனன் விவாகரத்து

Actress Revathi Get Divorce

நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.

ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்ரல் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர்: இயக்குனர் சேரன் வருத்தம்

Actors Keep Me At Bay Cheran

சென்னை: என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர் என்று இயக்குனர் சேரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சேரன் ஜே.ஜே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யா மேனன், காமெடியனாக சந்தானம் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

அப்போது சேரன் பேசியதாவது,

ஆட்டோகிராப் படத்தில் நடிக்குமாறு பலரை அணுகினேன். அவர்கள் மறுத்ததால் கோபத்தில் நானே நடித்துவிட்டேன். அதைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தேன். என்னதான் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்தது. அதனால் தான் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை இயக்குகிறேன்.

நான் பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பு தான் இந்த படம். தற்போதைய இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும். காமெடிக்கு சந்தானம் உள்ளார். இந்த படத்தை துவங்கும்போது பல நடிகர்கள் பிசியாக இருந்தனர். இன்னும் சில நடிகர்களுக்கு இந்த படத்தில் நடிக்க இஷ்டம் இல்லை. அதனால் கதையை கேட்காமலேயே நிராகரித்துவிட்டனர்.

ஆட்டோகிராப் படத்தை ஆரம்பித்தபோது வந்தது போன்று கோபம் வந்தது. இந்நிலையில் சர்வானந்த் கதைக்கு பொறுத்தமாக இருந்ததால் அவரிடம் கதை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். நித்யா மேனனும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். நாயகியை நாயகன் தவறாக பார்க்காத கதை. படத்தை முடித்துவிட்டோம். என் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இது மாடர்னாக இருக்கும் என்றார்.

 

லயோலா கல்லூரி கட்டிட நிதிக்காக சூர்யா, ஜெயம் ரவி பங்கேற்கும் கலை விழா!

Call Alma Mater Loyolites Sing Dance

சென்னை: கல்லூரியின் வணிகவியல், பொருளியல் துறையின் கட்டட நிதிக்காக நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் சூர்யா, ஜெயம் ரவி மற்றும் பல பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில், அன்றும் இன்றும் என்றும் லயோலாவின் கல்லூரிப் பாதை என்ற பெயரில் கலை விழா வரும் 28-ஆம் தேதி லேடி ஆண்டாள் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இது குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இயக்குநர் சேவியர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்லூரியின் வணிகவியல், பொருளியல் துறையின் கட்டட நிதிக்காக இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ஆலப்ராஜ், பின்னணி பாடகி சுசித்ரா, பாடகர் ராகுல் நம்பியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பாடுகின்றனர்.

ஜான் பிரிட்டோ குழுவினருடன், நடிகர்கள் ஜெயம் ரவி, அருண் விஜய், ஆனந்த் பாபு, சாந்தனு பாக்யராஜ் நடனமாடவுள்ளனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன், தம்பி ராமையா, ஈரோடு மகேஷ், அப்புக்குட்டி ஆகியோர் பங்குபெறும் நகைச்சுவை நிகழ்ச்சியை சின்னி ஜெயந்த் தொகுத்து வழங்கவுள்ளார்.

கலைத் துறைகளில், நடிப்பு, தயாரிப்பு, நடனம், இசை, நகைச்சுவை, இயக்கம் என தங்களுக்கென தனித்தன்மையை ஏற்படுத்திக் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்களுக்கு லயோலா அவார்ட்ஸ் ஆஃப் எக்ஸலென்ஸ் ஃபார் மீடியா ஆர்ட்ஸ் என்ற விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நடிகர்கள் ராதாரவி, சரத்குமார், பிரபு, வெங்கடேஷ், விஷால், விக்ரம், சூர்யா, எஸ்.ஜே. சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் ஆண்டனி, சிபிராஜ், சக்தி, பாஸ்கி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் மற்றும் விவரங்களுக்கு 9551815065 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன.

Kamal Join Hands With Lingusamy

கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன.

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒரு படம் செய்து கொடுப்பார் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம், அவரது ஹாலிவுட் பட முயற்சிகளையும் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்வார் என்று கூறி வந்தனர்.

ஆனால் எதுவும் உறுதியான தகவல்களாக இல்லாத நிலையில், இப்போது புது பரபரப்பு கிளம்பியுள்ளது.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, லிங்குசாமி இயக்கும் படத்தில் கமலிடம் பேச்சு நடத்தியுள்ளனர்.

கமலும் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அக்ஷய் குமார் நடித்த ஒரு இந்திப் படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கமல் அதை விரும்பாததால் புதிய கதையை சொன்னாராம் லிங்குசாமி.

கமலுக்கும் கதை பிடித்துப் போனதால், ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

4 கோடிக்கு மேல் கடன் - பிரபல சினிமா எடிட்டர் விஷம் குடித்தார்!

சென்னை: ரூ 4 கோடிக்குமேல் கடன் சுமை ஏறிவிட்டதால், சமாளிக்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார் பிரபல சினிமா படத் தொகுப்பாளர் (எடிட்டர்) ஜெயச்சந்திரன்.

விஜயகாந்த் நடித்த உழவன் மகன் படத்தில் தொடங்கி, ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் ஜெயச்சந்திரன், விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களின் எடிட்டரும் இவர்தான்.

தமிழக அரசிடம் 5 முறை சிறந்த படத் தொகுப்புக்கான விருதினைப் பெற்றவர் ஜெயச்சந்திரன்.

சொந்தமாக விஜயகாந்த் நடித்த மனித தர்மம், இந்தப் படை போதுமா?, தங்கப்பாப்பா போன்ற படங்களைத் தயாரித்தார்.

ஆனால் இதில் ஒருபடம் கூட ஓடவில்லை. இதனால் அவருக்கு கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. கிட்டத்தட்ட ரூ 4 கோடியைத் தாண்டிவிட்டதாம் இந்தக் கடன்.

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி அதிகரித்ததால், தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் ஜெயச்சந்திரன்.

இதைக் கண்டுபிடித்துவிட்ட அவர் மனைவி தேவி, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஜெயச்சந்திரனை சேர்த்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயச்சந்திரன் தந்தை கோவிந்தசாமியும் அக்காலத்தில் பெரிய படத்தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோச்சடையான் ரஜினி புதிய ஸ்டில்... வெளியிட்டார் சௌந்தர்யா!

சென்னை: ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை நேற்று வெளியிட்டார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா.

இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதாவது அவதார் படத்தைப் போல ரஜினியை மோஷன் கேப்சரிங் செய்து அவரது புதிய உருவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

soundarya releases new still rajini from kochadaiyaan   
ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அப்படியெல்லாம் பார்க்க வசதியான தொழில்நுட்பம் இது. கோச்சடையானில் ரஜினியை மிக மிக இளமையாக, 6 பேக் உடல் அமைப்புடன் காட்டியுள்ளனர்.

இதுவரை இந்தப் படத்திலிருந்து இரண்டு ஸ்டில்களை மட்டுமே இயக்குநர் சௌந்தர்யா வெளியிட்டிருந்தார்.

இப்போது மூன்றாவது ஸ்டில்லை நீண்ட இடைவெளிவிட்டு ரிலீஸ் செய்துள்ளார். இந்த புதிய ஸ்டில் வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. சமூக இணையதளங்களில் நேற்றிலிருந்து இந்த ஸ்டில்தான் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

 

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் ஒரே டேக்கில் நடித்து அசத்தும் காஜல்

Kajal Stuns In Azhagu Raja Team

சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம் காஜல் அகர்வால்.

கார்த்திக்கு பொருத்தமான ஜோடி என்று பேசப்படும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். கார்த்தியும், காஜலும் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படம் நான் மகான் அல்ல. அந்த படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. இதையடுத்து அவர்கள் தற்போது ஆல் இன் ஆல் அழகுராஜாவில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா படக்குழுவை காஜல் அசத்தியுள்ளாராம். அம்மணி ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறாராம். நான் மகான் அல்ல படம் தான் சரியாகப் போகவில்லை, இந்த படமாவது இந்த ஜோடிக்கு கை கொடுக்கிறதா என்று பார்ப்போம்.

காஜல் கார்த்தி படம் தவிர விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கட்டினா உள்ளூர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்: த்ரிஷா

Trisha Rejects 2 Grooms   

சென்னை: த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம்.

திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்.

இந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார்.

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப்பது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

த்ரிஷா கல்யாணம் செய்யப்போகும் அந்த சென்னைக்காரர் யாரோ?

 

ஹன்சிகாவுக்கு பிடித்த நம்மூர் இட்லி, சாம்பார்

Hasika Loves Tn Idli Sambar   

சென்னை: ஹன்சிகாவுக்கு பிடித்த உணவு என்றால் அது இட்லி, சாம்பார் தானாம்.

மங்களூரில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர் ஹன்சிகா. சிங்கம் 2, பிரியாணி, வாலு, வேட்டை மன்னன் என்று 4 படங்களில் நடித்து வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த தீயா வேலை செய்யணும் குமாரு பட வேலைகள் முடிந்துவிட்டன. இப்படி ஓவர் பிசியாக இருக்கும் ஹன்சிகா பல தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உள்ளார்.

சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் அவருக்கு பிடித்த உணவு என்றால் அது நம்மூர் இட்லி, சாம்பார் தானாம். என்ன ஹன்சிகா குஷ்பு இட்லி பிடிக்குமா?

கொஞ்சம் பூசினாற் போல இருந்த ஹன்சிகா தற்போது மெலிந்து காணப்படுகிறார். ஒரு வேளை இட்லி டயட்டில் இருக்கிறாரோ?

 

சிலுக்கூர் பாலாஜி கோவிலில் 108 முறை பிரதக்ஷனம் செய்த ஸ்ருதி

Shruti Visits Chilukur Balaji Temple

ஹைதராபாத்: ஸ்ருதி ஹாசன் ஆந்திராவில் உள்ள சிலுக்கூர் பாலாஜி கோவிலில் 108 முறை பிரதக்ஷனம் செய்துள்ளார்.

ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. அவர் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே இருக்கும் சிலுக்கூர் பாலாஜி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர் கோவிலில் 108 முறை பிரதக்ஷனம் செய்துள்ளார்.

ஏதாவது வேண்டுதல் நிறைவேறினால் கடவுளுக்கு நன்றி சொல்லும் வகையில் சிலுக்கூர் பாலாஜி கோவிலில் பிரதக்ஷனம் செய்வார்கள். அப்படி என்றால் ஸ்ருதியுடைய வேண்டுதல் ஏதாவது நிறைவேறி இருக்க வேண்டும்.

ஸ்ருதி தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிசியாக இருப்பதால் அப்பா கமலின் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

வேலூர் பெண்ணை மணக்கும் சிம்பு?

Simbu Marry Vellore Girl

சென்னை: சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்த்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

சிம்பு வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காதல் ஜோடியாக வலம் வந்து பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். சிம்பு அந்த முன்னணி நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகையை காதலிக்கிறார் என்று அவ்வப்போது செய்திகள் வரும்.

இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தர் முடிவு செய்தார். பெண் பார்க்கும் படலமும் வேகமாக நடந்து வருகிறது. சிம்புவுக்கு வேலூரில் ஒரு பெண்ணை பார்த்தார்களாம். பெண் பிடித்துப் போக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெண் ஓகே ஆனால் இந்த ஆண்டே திருமணம் தானாம்.

சிம்பு முகத்தில் இப்பொழுதே புதுமாப்பிள்ளை களை வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

 

கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு ஜெயில் மட்டும் பத்தாது.. கொடிய தண்டனை வேண்டும்! - அமிதாப்

Amitabh Bachchan Numb Over Rape News

மும்பை: 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவன் விலங்கை விட கேவலமானவன் என்று பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறாள். இந்த சம்பவம் பற்றி அமிதாப் பச்சன் இன்று தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது:

மிகக் கொடூரமான சம்பவம் இது. 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் விலங்கை விட கேவலமானவன். இரண்டு நாட்களாக குழந்தையை காணமல் பெற்றோர்கள் தவித்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸ் இருந்துள்ளது.

நமது சமூகத்தில் என்ன நடக்கிறது? ஏன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதி வழங்கவேண்டும். குற்றவாளிகளை ஜெயிலில் போடுவது மட்டும் போதாது. அதைவிட கொடூரமான தண்டனைக்கு ஏற்றவர்கள் இவர்கள்.

பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தீவிரவாதத்தை விட கொடுமையானது என்றும் அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

 

சரஸ்வதி சபதம் படத்துக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ்!

Legal Notice Saraswathy Sabatham

சென்னை: சரஸ்வதி சபதம் தலைப்பை புதிய படத்துக்கு சூட்டுவதை எதிர்த்து சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சிவாஜி கணேசன், சாவித்திரி, பத்மினி நடித்து 1966-ல் வெளியான புராண படம் 'சரஸ்வதி சபதம்'. மிகப் புகழ்பெற்ற இந்தப் படத்தின் தலைப்பை புதிய படம் ஒன்றிற்கு சூட்டியுள்ளனர்.

இதற்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தத் தடை கோரி வந்தனர்.

பட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றுத்தான் தலைப்பை பயன்படுத்துவதாக தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகியோருக்கு சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திர சேகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், "சரஸ்வதி சபதம் பெயரில் படம் எடுப்பது சிவாஜி ரசிகர்களை புண்படுத்துவதாக உள்ளது. இப்படத்துக்கான விளம்பரங்களில் மது அருந்தும் பார் இடம் பெற்றுள்ளது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, கர்ணன் போன்றவை இந்துக்கள் மற்றும் ரசிகர்களின் சென்டிமென்ட் சம்பந்தப்படடவை. அந்த பெயர்களை புதுப்படங்களுக்கு பயன் படுத்த கூடாது. எனவே தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையேல் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.