25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!

மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம்.

25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!

இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன.

ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் வருகிறார் 6.99 சதவீத வாக்குகளுடன். அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், ஏ ஆர் ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13 வது இடமும் கிடைத்துள்ளன.

 

சல்மான்கான் வீட்டுமுன் கோஷமிட்ட 2 பெண்கள் கைது

மும்பை: நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டுக்கு வெளியே நடு ராத்திரியில் வந்து கோஷம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் இரண்டு பெண்கள். அவர்கள் மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர்.

மும்பை பந்த்ராவில் சல்மானின் வீடு உள்ளது. அங்கு நேற்று இரவு ஒரு தாயும், மகளும் காரில் வந்தனர். அங்குள்ள பாதுகாவலர்களிடம் சல்மான் கானைப் பார்க்க வேண்டும் என்று கூறினர். பாதுகாவலர் விட மறுத்தார். இதையடுத்து அத்துமீறி உள்ளே நுழையப் பார்த்தனர்.

சல்மான்கான் வீட்டுமுன் கோஷமிட்ட 2 பெண்கள் கைது

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது. போலீஸார் வருவதைப் பார்த்த தாயும் மகளும் வேகமாக காரில் ஏறிப் பறந்தனர். படு வேகமாக அவர்கள் கார் ஓட்டிச் சென்றபோது, வழியில் ஒரு பைக் மீது இடித்து விட்டனர். பைக்கில் வந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இதையடுத்து கோபத்தில் அந்தப் பெண்கள் இருவரும் சேர்ந்து அந்த ஆணைத் தாக்கி விட்டுப் பறந்தனர்.

இந்த நிலையில் இருவரையும் தேடி வந்த போலீஸார் அவர்கள மறித்து நிறுத்தி அவர்கள் மீது அதி வேகமாக கார் ஓட்டிச் சென்றதாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்களது முகவரி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு விடுவித்தனர்.

நேற்று அவர்களின் வீட்டுக்குப் போலீஸார் போனபோது இருவரும் அங்கு இல்லை. நள்ளிரவில் பெண்களைக் கைது செய்யக் கூடாது என்பதற்காக அவர்களை முதல் நாளே போலீஸார் கைது செய்யவில்லையாம்.

அந்தப் பெண்களின் பெயர் ஜஸ்மித் சேத்தி மற்றும் அம்ரிதா என்று தெரிய வந்துள்ளது.

இருவரும் படத் தயாரிப்பாளர்கள் என்று கூறப்படுகிறது. சல்மானைச் சந்திக்க அவரது செயலாளர் ரேஷ்மா ஷெட்டி ரூ. 10 லடசம் கேட்டதாகவும், இதனால்தான் கோபமடைந்து நேரடியாக சல்மான் வீட்டுக்கே அவர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் புகாரை ரேஷ்மா மறுத்துள்ளார். மேலும் சல்மானின் தந்தை சலீம் கானும் இப்புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து சலீம் கான் கூறுகையில், சில தினங்களாகவே அவர் தொந்தரவு செய்து வருகிறார். காங்கிரஸ் தலைவரைத் தெரியும், பிரச்சினை செய்வேன் எனறும் மிரட்டி வருகிறார் என்றார்.

 

தங்க மீன்களைத் தொடர்ந்து ராம் இயக்கும் 'தரமணி'!

கற்றது தமிழ், தங்க மீன்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம் உருவாக்கும் புதிய படத்துக்கு தரமணி என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்தப் படத்தை ஜேஎஸ்கே பிலிம்ஸஸ் தயாரிக்கிறது.

தங்க மீன்களைத் தொடர்ந்து ராம் இயக்கும் 'தரமணி'!

ராம் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘தங்க மீன்கள்' நேற்று வெளியானது. அதே நாளில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் ராம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய படத்துக்கு ‘தரமணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் வழங்க, கட்டுமரம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

'சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் காதல்' என்ற வாக்கியத்துடன் இப்படம் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. தரமணி என்பது ஐடி நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களின் குறியீடாகிவிட்டதால், இந்தக் கதைக் களம் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

கற்றது தமிழ் மாதிரி, இளையோரின் சமூக அவலங்கள் குறித்த ராமின் அழுத்தமான பார்வை நிச்சயம் இடம்பெரும் என நம்பலாம்!

 

பலாத்கார வழக்கில் தீர்ப்பு.. சிறுவன்னா மறந்துடலாமா? மன்னிச்சுடலாமா?: கொந்தளிக்கும் குஷ்பு!

சென்னை: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனை மன்னித்தோ மறந்தோவிடலாமா? என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிக்கிய சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோரே இந்த தண்டனை போதாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பலாத்கார வழக்கில் தீர்ப்பு.. சிறுவன்னா மறந்துடலாமா? மன்னிச்சுடலாமா?: கொந்தளிக்கும் குஷ்பு!

இந்த நிலையில் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், பலாத்காரத்தில் ஈடுபட்டவன் சிறுவன் என்பதால் மறந்துவிடலாமா? மன்னித்துவிடலாமா? நாம் வேண்டுமானால் மறந்துவிடலாம்? ஆனால் அவனை மனிக்கிற உரிமை நமக்கு கிடையாது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரால் எப்படி மறக்கவோ? மன்னிக்கவோ முடியும்?

இன்னொருபுறம் இளம் பெண்ணை சீரழித்த அசாராம்பாபு இன்னமும் சுதந்திரமாக உலவ முடிகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

 

எல்லோரையும் சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க!- சிவகார்த்திகேயன்

எல்லோரையும் சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க!- சிவகார்த்திகேயன்

கோவை: உலகில் ஒரு சூரியன், ஒரு சந்திரன் மாதிரி, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினிகாந்த். என்னையோ மற்றவர்களையோ அப்படிக் கூப்பிடாதீங்க, கூச்சமா இருக்கு, என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கோவை பாபா காம்ப்ளெக்ஸில் வருத்தப்படாத வாலிபர் சங்க இசை வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர்.

விழாவில் அவரை இளைய சூப்பர் ஸ்டார் என்று கூவி அழைத்தனர் ஆர்வமிகுதியால் ரசிகர்கள்.

அவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் பேசுகையில், "சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது.

இந்த மக்களின் அன்பும், பாசமும் வித்தியாசமாக உள்ளது. இந்த படத்தின் சி.டி. மற்றும் டிரைலர் கோவை, சேலம், திருச்சி, ஆகிய இடங்களில் வெளியிடப்பட இருந்தது. அதன்படி கோவையில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் ஹாலிவுட் படம்போல் இருக்காது. குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம். அடுத்த வாரம் ரிலீசாகிறது. நிச்சயம் 100 நாள் ஓடும்.

என்னை இளைய சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் அழைக்காதீர்கள். என்னை என்றல்ல.. வேறு யாரையுமே கூட அப்படி அழைக்காதீர்கள். உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். அதுபோல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். அவர் தலைவர் ரஜினிகாந்த். எனக்கு கை தட்டி ஆரவாரம் செய்தது உற்சாகமாக உள்ளது. ஒரு நடிகனாக எனக்கு இதுவே போதும்," என்றார்.

 

தன் அறிக்கையை தானே பொய்யாக்கிய மகிழ் திருமேனி... ஆர்யாவை இயக்குவதாக அறிவிப்பு!

அடுத்து ஆர்யைவை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக முன்பு வெளியான செய்திகளை மறுத்து வந்த மகிழ் திருமேனி, இப்போது அதே ஆர்யாவை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

முன்தினம் பார்த்தேனே, அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையற தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை ‘நான் அவன் இல்லை', ‘அஞ்சாதே', ‘மாப்பிள்ளை', ‘போடா போடி' ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்.

தன் அறிக்கையை தானே பொய்யாக்கிய மகிழ் திருமேனி... ஆர்யாவை இயக்குவதாக அறிவிப்பு!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகையரின் தேர்வு நடைபெற்று வருகிறது.

முற்றிலும் மாறுபட்ட, மிக வித்தியாசமான ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, மும்பை மற்றும் லண்டனிலும் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர். அடுத்த வருடம் மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

இதே அறிவிப்பை முன்பு மறுத்தவர்...

இதே போன்ற ஒரு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அப்போது, ஆர்யாவை தான் இயக்கவில்லை என்றும், தேவையில்லாமல் என் பெயரையும் அவர் பெயரையும் சேர்த்து செய்தி வெளியிட வேண்டாம் என்றும் மகிழ்திருமேனி அறிக்கை விட்டது நினைவிருக்கலாம்!

 

தன் சொந்தப் படத்தில் வேறு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த ஜீவி பிரகாஷ்!

சென்னை: தான் சொந்தமாகத் தயாரிக்கும் புதிய படத்துக்கு வேறு இசை அமைப்பாளரை நியமித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் முன்னணி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார்.

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 30 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளவர் ஜீவி பிரகாஷ் குமார். ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகன் இவர்.

தன் சொந்தப் படத்தில் வேறு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த ஜீவி பிரகாஷ்!

பாடகி சைந்தவியை திருமணம் செய்த கையோடு, முதன்முறையாக புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். ‘மதயானைக் கூட்டம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதிர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் வே.வ.ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பாலு மகேந்திராவிடம் இணை இயக்குனராகவும், வெற்றிமாறனுடன் ‘ஆடுகளம்' படத்தில் வசனகர்த்தா மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய விக்ரம் சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள இரு முக்கிய குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் தேனி மற்றும் கேரளாவைச் சுற்றியே நடந்து முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இசையை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். அக்டோபரில் படத்தை வெளியிடவிருக்கின்றனர்.

தான் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும், தனது சொந்தத் தயாரிப்பான இந்தப் படத்துக்கு ரகுநந்தனை இசையைக்க வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஜீவி பிரகாஷ். நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ரகுநந்தன்.

நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. சின்னச் சின்னதா நல்ல, புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதால்தான் தன் சொந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தாராம் ஜீவி.

 

பெண்களுக்கு கவுன்சிலிங் தரும் கேளடி பெண்ணே!

பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கேளடி பெண்ணே' நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

உயிர் யாரிடம்?' என்ற பகுதியில் வாழ்வின் வெற்றிக்கான வழிமுறைகளையும் சொல்லித் தரப்படுகிறது. மேலும், ‘உங்கள் நினைவிற்கு' என்ற பகுதியில் மருத்துவ ஆய்வுகள், வீட்டு மருத்துவம், எளிய முதலுதவி போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்களை டாக்டர் பிரியா கண்ணன் தொகுத்து வழங்குகிறார்.

பெண்களுக்கு கவுன்சிலிங் தரும் கேளடி பெண்ணே!

கல்யாணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். பத்துப் பொருத்தம் பார்த்து மணம் முடிப்பார்கள். ஆணை விட பெண்ணுக்கு ஐந்து வயதாவது குறைவாக இருந்தால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பார்கள். இந்த வரைமுறை எல்லாம் இப்போது மாறிவிட்டது.

பெரும்பாலான துறைகளில் ஆணும், பெண்ணும் இரவு பகல் பாராது வேலை செய்யும் சூழல் வந்து விட்டது. அதனால் ஏற்படும் நெருக்கம் காரணமாக உடன் பணி புரிபவர்களை திருமணம் செய்வதும் அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் சம வயதினராக இருப்பதும், தன்னை விட வயதில் மூத்த பெண்ணை ஆண்கள் திருமணம் முடிப்பதும் தான். இது மருத்துவரீதியிலும், சமுதாய ரீதியிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக விளக்குகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன்.

இந்த நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கேளடி பெண்ணே' நிகழ்ச்சியில் சிறப்புப் பகுதியாக இடம்பெறுகிறது. கேளடி பெண்ணே நிகழ்ச்சியை, ஏ.கே.கம்யூனிகேஷன் சார்பில் அரசு கிருத்திகா தயாரித்து வழங்குகிறார்.

 

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

மும்பை டானைப் பிடிக்கும் போலீசாக நடித்த வேளையோ என்னமோ... நடிகை அமலா பால் பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார். அதுவும் இந்திப் பட உலகில் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில்!

தமிழில் விஜயகாந்த் நடிக்க, முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு கப்பார் என தலைப்பு கூட சூட்டிவிட்டனர்.

வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் கப்பாரில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாஸன் அல்லது இலியானா நடிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இப்போது இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமலா பாலை ஓகே செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.

இந்தப் படத்தின் நாயகி தென்னிந்திய முக சாயல் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும், ஸ்ருதி, இலியானாவை விட அமலா பால்தான் அந்த வகையில் பொருத்தமாக இருப்பார் என்றும் தயாரிப்பாளர் கருதியதால், அமலாவை அறிமுகப்படுத்துகிறார்களாம்!

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட் மற்றும் டிஸ்கஷன்களுக்காக இப்போது அடிக்கடி மும்பை பறந்து கொண்டிருக்கிறார் அமலா.

 

ப்ரோ, காட்டு ராஜா மறைமுகமாக மோதும் தேர்தல்

சென்னை: படத்தை தயாரிக்கிறவங்க கவுன்சில் தேர்தல் ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.

படத்தை தயாரிக்கிறவங்க கவுன்சிலுக்கு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கிறது. கவுன்சில் தேர்தல் தானே என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். பொது தேர்தலை விட பரபரப்பாக வேலைகள் நடக்கிறதாம்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் ஆட்களும் தீயா வேலை செய்கிறார்களாம். இது தவிர ஓட்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கொடுக்கிறார்களாம்(அடடா நம்மால் ஓட்டு போட முடியாதே என்று தானே ஃபீல் பண்ணுகிறீர்கள்).

இந்நிலையில் ஒரு அணி தன் ஆதரவாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் தடபுடல் பார்ட்டி கொடுத்துள்ளது. பார்ட்டிக்கான செலவு மட்டும் ரூ.15 லட்சமாம். இதென்ன பார்ட்டி நாங்கள் கொடுக்கிறோம் பார் என்று எதிர் அணி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறதாம்.

ப்ரோவின் தந்தை தன் பக்கம் வெற்றி பெற பணத்தை தண்ணீராக செலவழிக்கிறாராம். மேலும் எதிர் அணி சார்பாக வைட்டமின் ப. வை வாரி இறைப்பது காட்டு ராஜாவின் சித்தி மகனாம். இது கவுன்சில் தேர்தல் என்றாலும் நிஜத்தில் இது ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.

போட்டியில் ப்ரோ வெற்றி பெறுகிறாரா அல்லது காட்டு ராஜா கையோங்குகிறதா என்பதை அறிய வரும் 9ம் தேதி இரவு வரை காத்திருங்கள்.

 

நானா லூஸு: ஃபேஷன் டிசைனர்கள் மீது பாய்ந்த நடிகை கல்கி கொச்லின்

நானா லூஸு: ஃபேஷன் டிசைனர்கள் மீது பாய்ந்த நடிகை கல்கி கொச்லின்

மும்பை: பேஷன் ஷோவில் கலந்து கொண்ட இந்தி நடிகை கல்கி கொச்லினுக்கும், ஃபேஷன் டிசைனர்கள் ரித்தி, சித்திக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த போஷன் ஷோவில் பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் ரித்தி, சித்தி ஆகிய டிசனைர்கள் வடிவமைத்தவற்றை அணிந்து ராம்ப் வாக் செய்தார். ஷோ ஸ்டாப்பரான அவர் இறுதியில் டிசைனர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு வர மறந்துவிட்டார். இதனால் கடுப்பான டிசைனர்கள் கல்கியை மனநலம் சரியில்லாதவர் என்றார்களாம்.

இது குறித்து அறிந்த கல்கி ட்விட்டரில் கூறுகையில்,

லெஹங்கா மற்றும் நகைகள் அணிந்து 4 மணிநேரம் காத்திருந்ததற்கு என்னை மனநலம் சரியில்லாதவர் என்றுள்ளார்கள். நான் ஒன்றும் ராம்ப்பை விட்டு வெளியே செல்லவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் என்னை அழைத்து மீடியாவுக்கு பேட்டி கொடுக்க சொன்னார்கள். நானும் டிசைனர்களை புகழ்ந்து பேட்டி கொடுத்தேன் என்றார்.

இது குறித்து ரித்தி, சித்தி கூறுகையில்,

கல்கியின் குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் அவரை தவறாக பேசவில்லை. ட்விட்டரில் கருத்து போடும் முன்பு தனது ஏஜெண்ட் மூலம் அது உண்மையா என்று எங்களிடம் கேட்டிருக்கலாம் என்றனர்.

 

சிங்கம் 2: அமெரிக்காவில் முதல் முறையாக 50 வது நாளை கொண்டாடிய சூர்யா படம்!

ஃபிரிமாண்ட்(யு.எஸ்) : அமெரிக்காவில் முதன் முறையாக சூர்யாவின் சிங்கம் 2 ஐம்பதாவது நாளை கொண்டாடியது.

தமிழகத்தில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஜூலை 4ம் தேதி அமெரிக்கா முழுவதும் சிங்கம் 2 வெளியானது.

தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் கலிஃபோர்னியாவின் சிலிக்கான் வேலியில் மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அவற்றும் ஃப்ரிமாண்ட் பிக் சினிமாஸ் திரையரங்கத்தில் தொடர்ச்சியாக ஐம்பது நாள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது.

சிங்கம் 2: அமெரிக்காவில் முதல் முறையாக 50 வது நாளை கொண்டாடிய சூர்யா படம்!

அமெரிக்காவில் ரஜினி - கமல் படங்கள் மட்டுமே இதுவரை ஐம்பது நாட்களை கடந்து வெற்றியடைந்துள்ளன. மற்ற படங்கள் மூன்று வாரங்களைக் கடந்தாலே பெரிய விஷயமாகும். ரஜினி - கமலுக்கு அடுத்து, அஜீத் மற்றும் சூர்யாவுக்கு அமெரிக்கா முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களுக்குப் பிறகுதான் மற நடிகர்கள். தமிழகத்தில் சுமாராக ஓடிய ஏழாம் அறிவு, மாற்றான் படங்கள் கூட அமெரிக்காவில் வெற்றிகரமாக ஓடின.

இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு சிங்கம் 2, அமெரிக்க தமிழ் சிநிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சூர்யாவின் இறால் மீசையை போல் மீசை வளர்த்த ரசிகர்களும் அமெரிக்காவில் உண்டு.

திரைப்படம் தாண்டி, பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தது, அகரம் ஃபவுண்டேஷன் மூலம் உதவி உள்ளிட்டவைகளால் சூர்யா மீது அமெரிக்கத் தமிழர்களிடையே பெரிய நல்லெண்ணம் உருவாகி உள்ளது.

சிங்கம் 2: அமெரிக்காவில் முதல் முறையாக 50 வது நாளை கொண்டாடிய சூர்யா படம்!

எந்த திரைப்படமும் அமெரிக்காவில் பெரும் வெற்றி அடைய வேண்டுமானால், குடும்பத்தோடு பார்க்க வரும் ரசிகர்களால் மட்டுமே சாத்தியமாகும். ரஜினி படங்களை மட்டுமே, எந்த தயக்கமும் இல்லாமல், முதல் நாள் காட்சியிலே குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள் அமெரிக்காவில். மற்ற நடிகர்களில் சூர்யாவுக்குத்தான் இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

ஐம்பதாவது நாள், 175 வது காட்சியுடன் சிலிக்கான் வேலியிலிருந்து விடைபெற்றுள்ளது சிங்கம் 2. எந்தெந்த தியேட்டர்களில், எத்தனை காட்சிகள் விவரங்கள் அனைத்தையும் சூர்யா ரசிகன் இணையத்தளத்தில் விவரமாக வெளியிட்டுள்ளார்கள்.

 

துவங்கிய கையோடு பரண் மேல் போடப்பட்ட ஆமீர், சல்மான் கானின் 3டி அவதார் படம்

துவங்கிய கையோடு பரண் மேல் போடப்பட்ட ஆமீர், சல்மான் கானின் 3டி அவதார் படம்

மும்பை: ஆமீர் கான், சல்மான் கான் இணைந்து நடித்த படத்தை 3டியில் எடுக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த படத்தின் வேலைகளை தற்போது நிறுத்துவிட்டனர்.

1994ம் ஆண்டு வெளியான காமெடி படம் அந்தாஸ் அப்னா அப்னா என்னும் இந்தி படம். ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இப்படத்தில் ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை தற்போது 3டி அனிமேஷன் படமாக எடுக்க முடிவு செய்தனர்.

படத்தை சித்தார்த் ஜெயின் தயாரிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

அனிமேஷனுக்கு இந்தியாவில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது இல்லை. இந்த நிலை மாறினால் நான் மீண்டும் படத்தை எடுப்பேன் என்றார்.

ரூ.15 கோடி செலவில் எடுப்பதாக இருந்த படத்தின் வேலைகள் 35 சதவீதம் முடிந்துவிட்டன. ஆனால் மவுசு இல்லாமை மற்றும் பணப் பிரச்சனையால் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க மறுத்த நயன்தாரா

சென்னை: வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க மறுத்த நயன்தாரா  

இதையடுத்து கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நயன்தாராவிடம் கேட்டுள்ளார் தயாரிப்பாளர். அதற்கு நயனோ, பணம் என்னிடமே இருக்கட்டும். வேண்டும் என்றால் அதே முன்பணத்தில் என்னை வைத்து வேறு ஒரு படம் எடுங்களேன் என்றாராம். அதன் பிறகு தான் தயாரிப்பாளர் புதிய இயக்குனரை பிடித்து வேறு ஒரு கதையை படமாக எடுக்கிறார்.

படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டாலும், ஹீரோ, ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட முன்பணத்திற்கு எந்த பங்கமும் வரவில்லை.

 

தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்!

சென்னை: அரசியல் புள்ளியுடன் காதல், திருமணம், அமெரிக்காவில் செட்டில் போன்ற செய்திகளுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை அஞ்சலிக்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மருமகனுக்கும் ரகசிய திருமணம் என்றும், இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்!

குறிப்பாக தான் நடித்த மதகஜராஜா படத்தின் தெலுங்கு டப்பிங்குக்குக் கூட அவர் வர மறுப்பதாகவும் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷாலே வருத்தப்பட்டிருந்தார்.

இப்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார் அஞ்சலி.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

"கற்றது தமிழ் தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் எனக்கு ஊக்கமளித்து ஆதரித்த அனைத்து ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் நான் நடித்த மதகஜராஜா படத்துக்கு டப்பிங் பேச மறுத்ததாகவும், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இவை அனைத்தும் முற்றிலும் தவறானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவை எனில் newsfromanjali@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்," என்று தெரிவித்துள்ளார்.

 

தனுஷுடன் இணையும் கார்த்திக்!

தனுஷுடன் இணையும் கார்த்திக்!

சென்னை: தனுஷை வைத்து கேவி ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் பிரபல நாயகனாகத் திகழ்ந்தவர் கார்த்திக். இப்போது நாடாளும் மக்கள் கட்சி என அரசியல் கட்சி ஆரம்பித்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டி வருகிறார்.

சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், இப்போது படங்களில் கவுரவ வேடம் அல்லது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

‘மாற்றான்' படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கப்போகும் புதிய படத்தில் கார்த்திக்கும் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் செப்டம் 2-ம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது.

‘அயன்', ‘மாற்றன்' படங்களைப்போல இந்த படத்திற்காகவும் வெளிநாடு செல்லவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை.

 

பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்

பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரஞ்செறிந்த வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ. கெளதமன் தெரிவித்துள்ளார்.

சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ. கெளதமன். தமிழ் உணர்வாளராகிய கெளதம் இயக்கப் போகும் புதிய படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ. கெளதமன் நம்மிடம் கூறுகையில், தலைவர் பிரபாகரனின் வீரம் செறிந்த, உலகை உலுக்கக் கூடிய வீர வரலாற்றை விவரிக்கும் திரைப்படமாக இது இருக்கும். தலைவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

 

தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சர்ச்சை நாயகி

சென்னை: இங்கிருந்து சென்று பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை தயாரிப்பு நிறுவனம் துவங்கவிருக்கிறாராம்.

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அந்த நடிகைக்கு பாலிவுட் ஆசை வந்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். அங்கும் பட வாய்ப்புகள் இன்றி திண்டாடி வருகிறார். அண்மையில் வந்த ஒரு வாய்ப்பும் வேறு நடிகைக்கு சென்றுவிட்டது.

இந்நிலையில் நடிகை விரைவில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்குகிறாராம். அந்த நிறுவனத்திற்கு தனது தந்தையை எம்.டி. ஆக ஆக்கப் போகிறாராம். அந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் நடிகை.

அம்மணி சென்னையில் 4 பங்களாக்கள், நிலம் என்று ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளாராம். அப்படி என்றால் மீண்டும் சென்னையில் வந்து செட்டிலாகிவிடுவாரோ?

 

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 'நலன் காக்கும் அணி' சார்பில் கேயார் போட்டி!

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 'நலன் காக்கும் அணி' சார்பில் கேயார் போட்டி!

சென்னை: அடுத்த வாரம் நடக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் கேயார் தலைமையில் 27 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 824 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்துக்கு 2013-15 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் கேயார் தலைவராகப் போட்டியிடுகிறார். இந்த அணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

நடிகர் சரத்குமார், மூத்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ஆகியோர் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தனர்.

துணைத் தலைவர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் (லிங்குசாமி சகோதரர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் கௌரவச் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, செயற்குழுவுக்கு ஏ.எல்.அழகப்பன், பிரமிட் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோரின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெறுகிறது.

 

தீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்!- திரையரங்குகள்

சென்னை: யு சான்றிதழோடு வரும் படங்களுக்கு மட்டுமே இனி முன்னுரிமை. ஏ மற்றும் யு ஏவுடன் படங்களை தீபாவளிக்கு திரையிட மாட்டோம், என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அல்லது பிரச்சினைக்குரிய படங்களைத் திரையிடுவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

தீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்!- திரையரங்குகள்

அரசியல் ரீதியான அல்லது பாதுகாப்புக் காரணங்களால் உலகெங்கும் ரிலீசாகிற படங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் வெளியாகாமல் போகின்றன.

வருகிற தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் 5 முதல் 7 வரை வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் படங்களுக்கு தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையை இப்போதே ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இப்போது சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே படத்தைத் திரையிட முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

அதில் முதல் நிபந்தனை, படத்தில் எந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் - வசனங்கள் இருக்கக் கூடாது.

இரண்டாவது, இந்த தீபாவளிக்கு வரும் படங்களில் சென்சாரில் யு சான்றுடன் வரும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிப்போம். யுஏ, ஏ சான்றுள்ள படங்களுக்கு தியேட்டர்கள் தர மாட்டோம்.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே படங்களின் சென்சார் சான்றிதழை தயாரிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்கள் தந்தாக வேண்டும்.

-இந்த தீபாவளிக்கு வரும் எல்லாப் படங்களும் யு சான்றிழ் பெற்றுவிடுமா... பார்க்கலாம்!

 

சோறு, கறியை கண்ணால பார்த்தே பல மாசமாச்சே: ஏங்கும் நடிகர்

சென்னை: படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட மெனக்கெடும் நடிகர் தற்போது தான் நடித்து வரும் படத்திற்காக அரிசி சாதம், கறி வகைகளை தவிர்த்துள்ளாராம்.

இந்த நடிகரின் பெரைக் கூறினாலே நம் நினைவுக்கு வருவது அவரது வித்தியாசமான கெட்டப்புகள் தான். மனிதர் இப்படி நினைத்த நேரம் உடம்பை சட்டென ஏத்தி, படால் என்று குறைத்து விடுகிறாரே. இவரால் மட்டும் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது என்று பலர் வியப்பதுண்டு.
அண்மை காலமாக அவர் நடித்த படங்கள் ஓடாத நிலையில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இந்த இயக்குனர் படம் எடுத்தாலே ஹிட் தான் என்ற நிலை உள்ளதால் இப்படம் தனக்கு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று நம்புகிறார் நடிகர்.

படத்தின் ஒருபாதியில் அவர் ஒல்லிக்குச்சியாக
வர வேண்டுமாம். அதற்காக கடும் டயட் செய்து 10 கிலோவுக்கு மேல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளாராம். படம் முடியும் வரை உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதால் அவர் பல மாதங்களாக அரிசி சாதம், அசைவ உணவுகளை தவிர்த்து வெறும் பழம், காய்கறிகளை சாப்பிட்டு வருகிறாராம்.

கால் வயிறும், அரை வயிறுமாய் சாப்பிட்டு உடல் எடையை மெயின்டெய்ன் பண்ணுகிறாராம்.

 

இசையை காப்பியடிப்பதில் கில்லாடி ரங்கனாக இருக்கிறாரே

சென்னை: கோலிவுட்டில் சென்சுரி அடித்துள்ள இசையமைப்பாளர் டியூன்களை சுடுவதில் பலே கில்லாடியாம்.

டியூன்களை பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து நமக்கு பிரஷ்ஷாக கொடுக்கும் ஒரு இசையமைப்பாளரை பற்றி மக்கள் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள தகவலால் அவர் கடுப்பில் உள்ளார் என்று செய்தி வெளியானது. இந்நிலையில் கோலிவுட்டின் மற்றொரு இளம் இசையமைப்பாளர் டியூன்களை சுடுவதில் முன்பு கூறப்பட்ட இசையமைப்பாளரை விட கில்லாடியாம்.

பெரிய இசைக் குடும்பத்தில் இருந்து வந்த இவர் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். அவர் ஆங்கில பட பாடல்கள், பாப் பாடல்கள், இந்தி பாடல்கள் என்று பல்வேறு இடங்களில் இசையை திருடி நமக்கு கொடுத்து அது ஹிட் வேறு ஆகிவிட்டது. அவர் படம், பாப் பாடல்கள் தவிர கனீர் குரலுக்கு சொந்தமான பாடகியின் பிரபல இந்து கடவுளைப் பற்றிய பாடலின் இசையைக் கூட சுட்டு படத்தில் பாட்டு போட்டுள்ளார். அந்த பாடலை விடலைப் பசங்கள் எல்லாம் பல காலம் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.

அவர் எந்தெந்த பாடல்களுக்கு எங்கெங்கிருந்து இசையை திருடினார் என்ற பட்டியல் இணையதளத்தில் உள்ளது. அந்த கில்லாடியின் கில்லாடித்தனத்தை நீங்களும் தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள்.

 

ஸ்வீட் நடிகையின் ‘வெள்ளை’ செண்டிமெண்ட்...

சென்னை: கிராமத்து ராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்ட ஸ்வீட் நடிகைக்கு வெள்ளை உடை செண்டிமெண்ட் உள்ளதாம். குருநாதரின் படத்தில் கட்டாயம் வெள்ளை உடை தேவதைகள் ‘லா...லா..' பாடுவார்களே, அதேபோல தனது படத்திலும் ஒரு காட்சியிலாவது வெள்ளை உடையில் வந்து விட வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் வாழ்கிறாராம்.

அதன் படி, தான் நடித்த 'தீரா' படமொன்றில் அறிமுகக் காட்சீயில் வெள்ளை உடையில் தோன்றியதே படத்தின் வெற்றிக்கு மூலக் காரணம் என நம்புகிறாராம் நடிகை. அந்தப் படம் மூலமாகவே, லட்சத்திலிருந்த நடிகையின் சம்பளம் கோடியில் போய் உச்சத்தைத் தொட்டதாம்.

அதனால், வரும் தற்போது நடித்து வரும் படங்களிலும் கட்டாயம் வெள்ளை உடைக் காட்சியை கட்டாயம் வைக்க வேண்டும் என அடம் பிடிக்கிறாராம் நடிகை.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானு வடிவேல் டயலாக் மாதிரி, வெள்ளை ட்ரஸ் போட்டவங்க பொய் சொல்லமாட்டாங்கனு உங்க படத்துல ஏதாவது டயலாக் வைங்களேன் மேடம்....

 

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!
சென்னை: முத்தக் காட்சி லீக் ஆனதால் முறுக்கிக் கொண்டு பிரிந்த ஆன்ட்ரியாவும் அனிருத்தும் மீண்டும் இணக்கமாகி விட்டனர்.

மூன்று படங்களில் முன்னணி இசையமைப்பாளராகிவிட்ட அனிருத்தும், பிரபல நடிகை ஆன்ட்ரியாவும் நெருக்கமாகப் பழகி வந்தனர். இருவரும் உதட்டோடு உதடு கவ்விக் கொண்ட காட்சி, புகைப்படங்களாக மீடியாவில் வெளியானது.

இதனால் அப்செட்டான ஆன்ட்ரியா, 'அனிருத்தும் நானும் எப்போதோ ஒரு விருந்தில் நெருக்கமாக இருந்த ஒரு தருணத்தில் எடுத்த படம் அது. இதைப் போய் பெரிசுபடுத்தறாங்க. இது கேவலமான செயல். இப்போது அனிருத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் வயதுக்கு ஏற்றவர் அல்ல அவர்,' என்று பேட்டி கொடுத்தார்.

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!

இருவரும் அதன் பிறகு சில மாதங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

இப்போது இருவரும் சமாதானமாகிவிட்டார்கள். அந்த முத்தப் படம் வெளியானதற்கு அனிருத் மன்னிப்புக் கேட்டதால், மீண்டும் நண்பர்களாகிவிட்டார்களாம். அனிருத் தனது வணக்கம் சென்னை படத்தில் பாட ஆன்ட்ரியாவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

தொடர்ந்து தன் படங்களில் பாட ஆன்ட்ரியாவுக்கு வாய்ப்பளிப்பேன் என்றும், நல்ல குரல் வளம் கொண்ட அவரைப் பயன்படுத்துவதில் தவறில்லையே என்றும் அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.

 

பத்தாண்டு நடிப்புக்காக த்ரிஷாவுக்கு சிமா விழாவில் விருது!

சென்னை: பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷாவை கவுரவிக்க, சிமா விருது வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

தென்னிந்திய சர்வதேச சினிமா விருது (சிமா - SIIMA) வழங்கும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடக்கிறது.

பத்தாண்டு நடிப்புக்காக த்ரிஷாவுக்கு சிமா விழாவில் விருது!  

இந்திய சினிமா தனது 100-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த தருணத்தில், சினிமாவில் சிறப்பான பங்காற்றிய கலைஞர்களை கவுரவிக்கிறது இந்த விழா.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக நடித்து வரும் த்ரிஷாவை கவுரவிக்க முடிவு செய்துள்ளது விழாக் குழு.

இந்த விழாவில் நேரில் பங்கேற்று விருதினைப் பெற்றுக் கொள்கிறார் த்ரிஷா.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா கூறுகையில், "இதை மிகவும் உயர்ந்த கவுரவமாக கருதுகிறேன். வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எனக்குத் தரப்படும் விருது இது. நிச்சயம் நேரில் சென்று பெற்றுக் கொள்வோம். இந்த நேரத்தில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

 

தேனிலவு.. வசனத்தில் கலக்குறாங்களேய்யா!

சென்னை: சன் டிவியில் ராத்திரி பத்து மணிக்கு தேனிலவு என்ற செமையான சீரியல் ஒளிபரப்பாகிறது...

திருமுருகன் நடிப்பில் அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சீரியல், ஈர்ப்பதாக உள்ளது. காரணம், அதில் வரும் வசனம். செமையாக இருக்கிறது வசனங்கள் எல்லாம்.

எதிர்பாராத இடத்தில் வரும் காமெடி வசனத்தால் வெடிச் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார் இயக்குநர் விக்கிரமாதித்தன்.

{photo-feature}

 

கலைக்குடும்பம் என்பது பால், சர்க்கரை, காபித்தூள் கலந்த காபி போன்று இருக்க வேண்டும்: சரத்குமார்

சென்னை: கலைக் குடும்பம் என்பது பால், சர்க்கரை மற்றும் காபித்தூள் ஆகியவற்றை கலந்த காபி போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2013-15 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் வேட்பாளர்களை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

கலைக்குடும்பம் என்பது பால், சர்க்கரை, காபித்தூள் கலந்த காபி போன்று இருக்க வேண்டும்: சரத்குமார்

அப்போது அவர் பேசுகையில்,

எந்த ஒரு அமைப்பும் அதன் உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 ஆண்டுகளாக அவ்வாறு இல்லாததால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. நான் இங்கு வந்து உரை நிகழ்த்துவதால் பிறருக்கு எதிரி இல்லை. நாம் எல்லாம் எதற்காக கூடி இருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்.

கலைக் குடும்பம் என்பது பால், சர்க்கரை மற்றும் காபித்தூள் ஆகியவற்றை கலந்த காபி போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும். கேயார் சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்தவர், அனுபவசாலி, தயாரிப்பாளர், இயக்குனராக இருந்தவர். அவர் தலைமையிலான அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

 

பாலுமகேந்திரா - இளையராஜா கூட்டணியின் தலைமுறைகள் படத்துக்கு யு!

சென்னை: ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திரா - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள தலைமுறைகள் படத்துக்கு சென்சார் குழு யு சான்று வழங்கியுள்ளது.

இயக்குனர் சசிகுமார் தயா‌ரிப்பில் ‘தலைமுறைகள்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலுமகேந்திரா. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

2005-ல் தனுஷ் - ப்ரியாமணி நடித்த அது ஒரு கனாக் காலம் படத்துக்குப் பிறகு, ராஜேஷ்வருக்காக ஒரு படம் இயக்கவிருந்தார் பாலு மகேந்திரா. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. உடல் நிலை போன்ற காரணங்களால் அவர் புதுப்படம் இயக்குவதை தள்ளிப் போட்டு வந்தார்.

பாலுமகேந்திரா - இளையராஜா கூட்டணியின் தலைமுறைகள் படத்துக்கு யு!

7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் புதிய படம் இயக்குகிறார் பாலுமகேந்திரா.

இப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கம்போல நிறைய புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தந்துள்ளார் பாலு மகேந்திரா.

படப்பிடிப்பு முடிந்து, சான்றிதழுக்காக சென்சாருக்கு படத்தைப் போட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல் இப்படத்துக்கு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

ஏங்க பவர் ஜாமீனில் வந்து ரவசு பேட்டி கொடுத்தாராமே?

ஏங்க பவர் ஜாமீனில் வந்து ரவசு பேட்டி கொடுத்தாராமே?

சென்னை: மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது.

பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக ஃபேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தொப்பையும், தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம்.

பேட்டியில் அவர் கூறுகையில்,

சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்கு பணிபுரியும் தமிழக போலீசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள். நான் சிறை சென்ற காலத்தில் கோலிவுட் என்னை மிஸ் பண்ணி இருக்கும். என் படமான ஆனந்த தொல்லை தீபாவளிக்கு ரிலீஸாகும். நான் சிறைக்கு சென்றது சிலர் செய்த சதி. இந்த பிரச்சனைகளில் இருந்து நிச்சயம் மீண்டும் வருவேன் என்றாராம்.

 

மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி!

சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்திலும் புதுவையிலும் திரையிடாததால் ரூ 1கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம் அதன் விநியோகஸ்தருக்கு.

ஜான் ஆப்ரஹாம், நர்கிஸ் ஃபக்கிர் ஆகியோர் நடிப்பில் உருவான ‘மெட்ராஸ் கபே' திரைப்படம் கடந்த 23-ந் தேதி தமிழகம் - புதுவையைத் தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார். ஜான் ஆபிரகாமே தயாரித்திருந்தார்.

இந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் தமிழருக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி!

படத்தை தமிழில் வெளியிட நீதிமன்றம் தடை செய்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுத்தனர்.

தமிழகத்தில் இப்படம் வெளியிட முடியாமல் போனதால், தமிழ்நாட்டில் விநியோக உரிமையை வாங்கியவர்கள் சுமார் 1 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிரந்தரமாக வெளியாகாதபட்சத்தில் இந்தப் படத்தின் விநியோகஸ்தருக்கு ஜான் ஆபிரகாம் இந்தத் தொகையைத் தரவேண்டியிருக்கும்.

 

தலைப்பு பெரிய விஷயமே இல்லை... நானே விட்டுக் கொடுக்கிறேன்! - எஸ்பி ஜனநாதன்

தலைப்பு பெரிய விஷயமே இல்லை... நானே விட்டுக் கொடுக்கிறேன்! - எஸ்பி ஜனநாதன்

சென்னை: தலைப்பு ஒரு பிரச்சினையே அல்ல. புறம்போக்கு தலைப்பை நட்ராஜ் வேண்டும் என்று கேட்டால், நானே விட்டுக் கொடுத்து விடுகிறேன். என்னால் இதுபோல ஏராளமான தலைப்புகளைச் சொல்ல முடியும், என்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.

இயற்கை, ஈ, பேராண்மை என வித்தியாசமான படங்கள் தந்த எஸ்பி ஜனநாதன் அடுத்து புறம்போக்கு என்ற தலைப்பில் ஆர்யா - விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தை யுடிவி தயாரிக்கிறது.

அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இந்தத் தலைப்பு தனக்கே சொந்தம் என நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் அறிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் எஸ்பி ஜனநாதனிடம் கருத்து கேட்டபோது, "நட்ராஜ் அப்படிக் கூறியதை மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் இருவரும் போனில் பேசினோம்.

தலைப்பு ஒரு பிரச்சினை இல்லை. எந்தத் தலைப்பாக இருந்தால் என்ன, கதைதான் முக்கியம். புறம்போக்கு தலைப்பை நட்ராஜ் எனக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகச் சொன்னார். எனக்கும் இதில் பெரிய பிரச்சினை இல்லை. அவருக்கு இதே தலைப்பு வேண்டும் என்றால் நானே விட்டுக் கொடுத்துவிடுகிறேன்.

என்னால் இதுபோல பல தலைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் எனும்போது எதற்காக வீண் பிரச்சினை?

இனி இதுபோன்ற தலைப்புப் பிரச்சினையே வராத அளவுக்கு, ஒரு புதிய நடைமுறையை தமிழ் சினிமாவில் உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்றார்.

 

டிவி நடிகையை சரமாரியாக தாக்கிய திருடர்கள்.. வேடிக்கை பார்த்த மக்கள்

மும்பை: மும்பையில் டிவி நடிகை லவ்லீன் கெளர் என்பவரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியது. ஆனால் இதைத் தடுக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை லவ்லீன் கெளர் நேற்று ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பிக்பாக்கெட் திருடன், அவர் வைத்திருந்த பர்ஸைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான்.

இதையடுத்து ஆட்டோவிலிருந்து குதித்த லவ்லீன் அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். அந்த சமயத்தில் திடீரென அந்தத் திருடனுக்கு ஆதரவாக 2 பேர் திரண்டனர். மூன்று பேரும் லவ்லீனை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதை நடிகை எதிர்பார்க்கவில்லை. அங்கு கூட்டமும் கூடியது.

டிவி நடிகையை சரமாரியாக தாக்கிய திருடர்கள்.. வேடிக்கை பார்த்த மக்கள்

ஆனால் தனி ஆளாக திருடர்களுடன் போராடிக் கொண்டிருந்த லவ்லீனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்று பேரும் சேர்ந்து தாக்கியதில் லவ்லீனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அருகில் இருந்த போலீஸ் பூத்தில் இருந்து சில போலீஸார் விரைந்து வந்து நடிகையைக் காப்பாற்றி அந்த மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவன் தப்பி விட்டான். 2 பேர் மட்டும் சிக்கினர்.

மக்களே, இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பீங்க..!

 

கிருஷ்ணஜெயந்தி உரியடி விழாவில் பங்கேற்கும் ஷாருக்கான்

கிருஷ்ணஜெயந்தி உரியடி விழாவில் பங்கேற்கும் ஷாருக்கான்

மும்பை: மும்பையில் நடைபெறும் ஜென்மாஷ்டமி உரியடித் திருவிழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜென்மாஷ்டமி திருவிழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மிகவும் ஆரவாரமாகக் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகின்றது.

இந்த விழாவின் ஒரு அங்கமாக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் உறியடித் திருவிழாவைக் காணக்கூடுவார்கள். இதில் உயரமான மூங்கில் குச்சிகளை இணைத்து தயிர் நிறைந்த பானை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இதனை உடைப்பவருக்கு பரிசு கிடைக்கும்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியினை ஸ்ரீ சங்கல்ப் பிரதிஸ்தான் நன்கொடை அமைப்பைச் சேர்ந்த சச்சின் மற்றும் சங்கீத அஹிர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆண்டுதோறும் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள். இந்த முறை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை அழைக்க என்ற முடிவில் இவர்கள் சென்றபோது, அவர் சம்மதிப்பாரா என்ற சந்தேகத்துடனே சென்றுள்ளனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஷாருக்கான் உடனே சம்மதித்து விட்டாராம்.

ஷாருக்கான் உரியை உடைப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக சங்கீதா கூறினார். மகாராஷ்டிரா பாணியில் ஷாருக்கானுக்கு டர்பன் அணிவித்து போர்வாளுடன், நாதம் முழங்க வரவேற்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்துள்ள ஷாருக்கான், இவர்களின் கோவிந்தாக்களை சந்திக்க வேண்டும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம்.

சமீபத்தில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் ஷாருக்கான் பேசும் சாதாரண மனிதனின் சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற வசனம் மிகவும் பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மெட்ராஸ் கபேயை பாராட்டிய நீத்து சந்திராவுக்கு கண்டனம்!

சென்னை: 'மெட்ராஸ் கபே' படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தி நடிகையான நீத்து சந்திரா, பாலிவுட்டை விட தமிழில்தான் அதிக வாய்ப்புகள் பெற்றார். ‘யாவரும் நலம்' படத்தில் அறிமுகமான இவர், பின்னர் தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்தார்.

மெட்ராஸ் கபேயை பாராட்டிய நீத்து சந்திராவுக்கு கண்டனம்!

தமிழரையும் விடுதலைப் புலிகளையும் இழிவாகச் சித்தரிக்கும் படம் என சர்ச்சைக்குள்ளாகி, தமிழகத்தில் வெளியாகாமல் போன ‘மெட்ராஸ் கபே' படத்தை சமீபத்தில் புகழ்ந்து பேசியுள்ளார் நீத்து சந்திரா.

இதனால் தற்போது கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.

சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் எஸ்.எஸ்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், " மெட்ராஸ் கபே தமிழர்களுக்கு எதிரான படம் இலங்கையில் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு ஆதரவான படமாக எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் இழிவு படுத்தப்பட்டு உள்ளனர். தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழகம் முழுவதும் படம் வெளியிடப் படவில்லை.

இந்த நிலையில் படத்தை புகழ்ந்து பேசி நீது சந்திரா தமிழர்கள் மனதை புண்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

நோ சொன்ன கையோடு பிகினியில் நடிக்கப் போகும் நடிகை

சென்னை: காதலுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கம் நடிகை மீண்டும் பிகினியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அந்த நடிகையின் காதல் இரண்டு முறை தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு கவலையில் இருந்த அவர் தற்போது தான் சற்று தேறி உள்ளார். அம்மணி ஒரு பெரிய நடிகரின் படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார். ஆனால் என்னவோ அதன் பிறகு பிகினியில் நடிக்கவே மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் பிகினியில் எந்த நடிகை நன்றாக இருக்கிறார் என்று இணையதளம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் அம்மணிக்கு தான் முதலிடம். பாலிவுட் நடிகைகள் எல்லாம் அவருக்கு பின்னால் தான். இந்த தகவல் அம்மணிக்கு தெரிந்தவுடன் அடடா நம்மை பிகினியில் ரசிகர்களுக்கு இவ்வளவு பிடித்துள்ளதா என்று ஒரே பெருமையாம்.

இதையடுத்து மீண்டும் பிகினியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

 

அவங்க கெமிஸ்ட்ரியை பாருங்க, நிச்சயமாக லவ் தான்

சென்னை: சித்து நடிகரும், மேனனின் மனம் கவர்ந்த நாயகியும் காதலிப்பது உண்மை தான் என்று டோலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சித்துவும் சரி, அந்த நாயகியும் சரி காதல் விவகாரம் பற்றி கேள்வி கேட்டால் திடீர் திடீர் என்று பல்டி அடித்து விடுகின்றனர். ஒரு சமயம் ஆமாம் காதலிக்கிறோம், திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்கிறார்கள். ஒரு சமயம் நடிப்பில் கவனம் செலுத்துகிறோம் திரைத்துறையைச் சேர்ந்த யாரையும் மணக்க மாட்டோம் என்கின்றனர்.

இதனால் அந்த இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்பதே குழப்பமாக உள்ளது. இந்நிலையில் டோலிவுட் பிரபலம் ஒருவரின் இல்லத் திருமண விழாவுக்கு நாயகனும், நாயகியும் ஜோடி போட்டு சென்றதுடன், முழு நேரமும் ஒட்டி உறவாடி உள்ளனர். இதை பார்த்த டோலிவுட் நடிகர் ஒருவர் அவர்கள் காதலிக்கிறார்கள் போன்று பாருங்கள் அவர்களுக்குள் உள்ள பிசிக்ஸ், கெமிஸ்டிரியை என்றார்.

மேலும் அந்த காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு வதந்தி வேறு கிளம்பி அடங்கியது.

 

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

சென்னை: விஜய் நடித்த தலைவா படத்தின் கதை கற்பனையானது. எந்த நிஜ மனிதர்களையும் குறிப்பிட்டு அந்தப் படம் எடுக்கவில்லை. எனவே படத்துக்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று இயக்குநர் விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர், "தலைவா' படம் மும்பையில் வாழ்ந்த தனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை பற்றியது. தனது தாத்தாவும், தந்தையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. "தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். அதனால் அந்தப் படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர், இயக்குநர் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

"தலைவா' படத்தை தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தவர் குறிப்பிட்டபடி, அந்தப் படம் யாரையும் மையப்படுத்தி எடுக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தின் கதாபாத்திரங்கள் உள்பட அனைத்தும் கற்பனைக் கதைதான்.

படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் எந்த தொழிலும் செய்வதாக காட்டப்படவில்லை. மேலும், அவர் எந்த சங்கத்துக்கும் தலைவராக இருக்கவில்லை. அவர் அங்குள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்வதாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

இது தவிர, அந்த கதாபாத்திரம் குறிப்பிட்ட சாதி, மதம், மொழி மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மகாராஷ்டிரம், பிகார், தமிழகம் மற்றும் இதர மாநில மக்களுக்காக அவர் உதவுவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் குறிப்பிட்டபடி மும்பை தாராவி பகுதியில் எந்த படப்பிடிப்பும் நடத்தவில்லை. மும்பை கடற்கரை ஓரங்களில்தான் நடத்தப்பட்டது. மனுதாரரின் மனுவில் கூறியவாறு படத்தில் யாரையும் குறிப்பிடவில்லை. அதனால் படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என இயக்குநர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்

சென்னை: பிந்து மாதவியை காதலிப்பதாக கிளம்பியுள்ள வதந்திகள் வருத்தம் தருகின்றன. நான் உண்மையில் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன், என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இப்போது சினிமாவில் வேகமாக வளரும் நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன்.

இவருக்குத் திருமணமாகிவிட்டது. ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். நேற்று இருவருக்கும் மூன்றாவது திருமண நாள்.

பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்

இந்த நாளில் சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான வதந்தி கிளம்பியது.

அவருக்கும் பிந்து மாதவிக்கும் காதல் என்றும், இந்தக் காதலால் சிவகார்த்திகேயன் வீட்டில் பெரும் சண்டை என்றும், பிரச்சினையிலிருந்து வெளியில் வர மனைவியை விவாகரத்து செய்ய அவர் யோசிப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் பெற, நடிகர் சிவகார்த்திகேயன், பிந்து மாதவி இருவர் தரப்பையும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் யாருடைய போனையும் எடுக்கவே இல்லை.

எனவே மீடியாவில் இருவரைப் பற்றியும் தீயாய் பரவியது வதந்தி.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த வதந்திகளை மறுத்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "என் திருமண நாளும் அதுவுமாய், இப்படி ஒரு செய்தியைப் பார்த்து வருந்தினேன்.

எனக்கும் அந்த நடிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரும் நானும் ஒரு படத்தில் நடித்தேன், அதுவும் ஜோடியாகக் கூட இல்லை. எங்களுக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்

எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சத்தமாக சண்டை போடவும் இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் கூட கேட்டுப் பாருங்கள்.

நாங்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் திருமண வாழ்க்கைப் பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம். ஷூட்டிங்கில் இருக்கும்போது நான் போன் எடுப்பதில்லை. எனவே என்னிடம் பேச விரும்பும் மீடியா நண்பர்கள் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்," என்றார்.

 

ராஜிவின் மரணத்துக்கு புலிகள் மட்டுமே காரணமா?.. மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள்!

மும்பை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மரணத்துக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்று சொல்லும் மெட்ராஸ் கஃபே திரைப்படம், நிஜங்கள் பலவற்றையும் புதைத்திருக்கிறது என்று மூத்த அரசியல் பார்வையாளர் தவ்லீன்சிங் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக http://www.niticentral.com இணையதளத்தில் தவ்லீன்சிங் எழுதியுள்ளதன் சுருக்கம்:

(Madras Cafe brings back memories)

மெட்ராஸ் கஃபே திரைப்படம் தொடங்கிய உடனேயே ராஜிவ் காந்தி கொலைக்குக் காரணமான நிகழ்வுகளை விவரிக்கும் திரைப்படம் இது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது. இலங்கையில் தனிநாட்டுக்கான தமிழர்களின் போராட்டம், காடுகளில் தமிழ் புலிகளின் தலைமையகத்தின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொல்லுகிறது இத்திரைப்படம். வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடித்திருப்பவர் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் என்னை வருத்தப்படவும் வைத்தது.

ராஜிவின் மரணத்துக்கு புலிகள் மட்டுமே காரணமா?.. மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள்!

மிக முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று சொன்னாலும் உண்மையான வரலாற்றை சொல்லத் தவறிவிட்டது. இலங்கை தொடர்பான தங்களது நிலைப்பாட்டை ராஜிவ் காந்தி பின்பற்றினால் அது அவரது உயிருக்கு மிகவும் ஆபத்து என்று தெரிந்தே இருந்த இந்திய அதிகாரிகள் எப்படியெல்லாம் ராஜிவுக்கு துரோகம் இழைத்தனர் என்பதை லேசாக தொட்டுச் செல்கிறது படம். இன்னும் சற்று கூடுதலாக ஆராய்ந்திருந்தால் எப்படியெல்லாம் இலங்கை விவகாரத்தில் தலையிட்ட இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகள் போன்ற குழுக்களை அரவணைத்துக் கொண்டே ராஜிவுக்கு துரோகம் இழைத்தனர் என்பதை சொல்லியிருக்க முடியும்.

ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் தமிழ் தீவிரவாதிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. ராஜிவ் காந்தியைப் பொறுத்தவரையில் சர்வதேச அரசியலை அவ்வளவாக அறிந்தவர் அல்ல. இதனால் அவர் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் ஆலோசனைகளை எதிர்பார்த்திருந்தார். இந்த ஆலோசனைகளால்தான் தமிழ் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்ற நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க ராணுவத்தை அனுப்பும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்.

அப்படி ராஜிவ்காந்தி அனுப்பிய வீரர்கள், அமைதிப் படை என்ற பெயரில் கைகளை பின்புறமாக கட்டி அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.. இதனாலேயே 1500 இந்திய வீரர்கள் உயிரிழக்க நேரிட்டது. ஏனெனில் அந்த யுத்தமானது படு குழப்பமானது..நிச்சயம் வெற்றிபெற முடியாதது.. அதுதான் ராஜிவ் காந்தியின் வாழ்க்கை முடிந்துபோனதற்கு உண்மையான காரணமும் கூட. ஆனால் மெட்ராஸ் கஃபே திரைப்படம் அதைப் பற்றியெல்லாம் சொல்லவே இல்லை..

இதற்கு மாறாக மேற்கத்திய நாடுகள் தங்களது சொந்த ராணுவ- வணிக நலன்களுக்காக இலங்கையை தங்கள் வசமாக்கிக் கொள்ள முயல்வதாகவும், தங்களது நலன்களுக்காக இந்தியாவை பலவீனப்படுத்தவே தலையிட்டதாகவும் சொல்கிறது மெட்ராஸ் கஃபே.

உண்மை என்னவெனில் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இலங்கையின் விவகாரங்களில் இந்தியா தலையிடத் தொடங்கிவிட்டது. இலங்கையை தெற்காசியாவின் சிங்கப்பூராக மாற்றுவதற்காக தாராளமய பொருளாதார கொள்கைகளை ஜெயவர்த்தனா அறிமுகப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்திரா காந்தி ஏற்கவில்லை. இந்திய மண்ணில் எப்படி பாகிஸ்தானின் ஜிஹாதி அமைப்புகள் தற்போது எப்படி இயங்குகின்றனவோ அதுபோலத்தான் அன்று இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியாவும் தலையிட்டது. இதனது தொடர்ச்சிதான் ராஜிவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. மேலும் டெல்லி செங்கோட்டை சுவர்களுக்குள் புதைக்கப்பட்ட பல கோரமான துரோகங்களும் உண்மை கதைகளும் பாலிவுட் திரைப்படங்களால் சொல்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

ஓ மெட்ராஸ் கஃபே புதைத்த நிஜங்கள் இதுவோ?

 

தீபாவளிக்கு இல்லை, பின்னர் சோலோவாக வரும் விஸ்வரூபம் 2

தீபாவளிக்கு இல்லை, பின்னர் சோலோவாக வரும் விஸ்வரூபம் 2  

சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.

சிக்கல் என்றால் சிக்கல் இடியாப்ப சிக்கலில் சிக்கி ஒரு வழியாக ரிலீஸானது கமல் ஹாஸன் நடித்த விஸ்வரூபம். படம் ஹிட்டானதற்கு சர்ச்சைகளே காரணம் என்று கூட கூறப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளன. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.

அதனால் பாக்ஸ் ஆபீஸில் அஜீத்தின் ஆரம்பமும், விஸ்வரூபமும் வசூல் வேட்டை நடத்துவதில் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று கூறப்படுகிறது.

படம் சோலோவாக ரிலீஸாகுமாம். வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ரிலீஸாகலாம். அதிக ஸ்கிரீன்களில் வெளியிடவே இந்த முடிவாம். டிசம்பர் மாதம் கோச்சடையான் வரலாம் என்கிறார்களே. ஒரு வேளை கமல், ரஜினி படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதுமோ?

 

இளையராஜாவின் மேகா... பரவசத்தில் ரசிகர்கள்!

நீதானே என் பொன்வசந்தத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்துள்ள மேகா படத்தின் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேகா படத்தின் இசை சில தினங்களுக்கு முன் லண்டனில் கமல்ஹாஸனால் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் சிடிக்காக பல ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இளையராஜா கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றனர்.

இந்தப் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இளையராஜாவின் மேகா... பரவசத்தில் ரசிகர்கள்!

முகிலோ மேகமோ பாடலை யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார். மிகச் சிறப்பான மெட்டு, மனதை வருடும் இசைக் கட்டமைப்பு. நா முத்துக்குமார் எழுதிய பாடல் இது.

செல்லம் கொஞ்சும் (பழனி பாரதி) என்ற பாடலையும் யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடலும் மிக இனிமையாக ஒலிக்கிறது.

கார்த்திக், ப்ரியதர்ஷினி இசையில் ஒலிக்கும் 'என்ன வேண்டும்' (நா முத்துக்குமார்) பாடல், ராஜாவின் இசை ஆளுமையை உணர்த்துகிறது.

இளையராஜா குரலில் வரும் ஜீவனே ஜீவனே.. உயிரை உருக்குகிறது.

எண்பதுகளில் வெளியாகி இன்றுவரை கேட்கும்போதெல்லாம் மனதை வருடும் புத்தம் புதுக் காலை பாடலை இந்த ஆல்பத்தில் சேர்த்துள்ளனர். பழைய பாடலை ஜானகி பாடியிருந்தார். இந்தப் புதிய வர்ஷனை அனிதா பாடியுள்ளார். கங்கை அமரன் எழுதிய பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்வனே கள்வனே என்ற பாடல் ஹரிச்சரண், என்எஸ்கே ரம்யா குரல்களில் மனதை மயக்குகிறது (நா முத்துக்குமார்).

முகிலோ மேகமோ பாடல் இளையராஜாவின் குரலிலும் ஒரு முறை ஒலிக்கிறது. சான்சே இல்லை. யுவன் குரலில் கேட்டதைவிட, ராஜா குரலில் தனி பரவசத்தை உணர முடிந்தது.

இப்போது ரசிகர்கள் கவலையெல்லாம் இந்தப் பாடலை படத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டுமே என்பதுதான்.