தாம்தூம் படத்தை தொடர்ந்து மீடியா ஒன் குளோபல் மற்றும் மெஜஸ்டிக் மல்டிமீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய படம் சிக்கு புக்கு. ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை டைரக்டர் கே.மணிகண்டன் இயக்கியுள்ளார். டிசம்பர் 3ம் தேதி உலகம் முழவதும் 300 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்த்து பாராட்டியுள்ளனர். அதோடு யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது சென்சார்போர்டு. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வெற்றி நாயகனாக உலா வரும் ஆர்யா இப்படத்திலும் சந்தானத்துடன் சேர்ந்து செம கலாட்டா செய்திருக்கிறாராம். எனவே இந்த படமும் பாஸ் போலவே மக்கள் மதிப்பீட்டில் பாஸ் ஆகும் என்கிறார் டைரக்டர் மணிகண்டன்.
சிக்குபுக்கு படத்திற்கு யு சர்டிபிகேட்!
தாம்தூம் படத்தை தொடர்ந்து மீடியா ஒன் குளோபல் மற்றும் மெஜஸ்டிக் மல்டிமீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய படம் சிக்கு புக்கு. ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை டைரக்டர் கே.மணிகண்டன் இயக்கியுள்ளார். டிசம்பர் 3ம் தேதி உலகம் முழவதும் 300 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்த்து பாராட்டியுள்ளனர். அதோடு யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது சென்சார்போர்டு. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வெற்றி நாயகனாக உலா வரும் ஆர்யா இப்படத்திலும் சந்தானத்துடன் சேர்ந்து செம கலாட்டா செய்திருக்கிறாராம். எனவே இந்த படமும் பாஸ் போலவே மக்கள் மதிப்பீட்டில் பாஸ் ஆகும் என்கிறார் டைரக்டர் மணிகண்டன்.
விருதகிரி இசை வெளியீடு! விஜயகாந்த் புது திட்டம்!!
விருதகிரி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த நடிகர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். விஜயகாந்த் முதல் முதலாக தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய படம் விருதகிரி. படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடிக்கிறார். விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கி, விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தோகுதியில் உள்ள விருதகிரீஸ்வரர் கோயில் மூலவரை குறிக்கும் வகையிலும், விருதாச்சலம் மக்களை பெருமைப்படுத்துவதற்காகவும் விருதகிரி என படத்திற்கு பெயர் சூட்டியிருப்பதாக ஏற்கனவே விஜயகாந்த் கூறியிருந்தார்.
படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்ட நிலையில் வருகிற 22ம்தேதி இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். 2011 சட்டமன்ற தேர்தல் பிரசார ஆயுதமாக விருதகிரி படம் இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் பட வெளியீட்டுக்கான ஆயத்த பணிகளில் விஜயகாந்த் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிசு கிசு - டைட்டிலுக்காக புதுமுகத்தை மிரட்டும் பிரபல டைரக்டர்!
தான் விரும்பிய டைட்டிலை வேறொரு புதுமுகம் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதையறிந்த பிரபல டைரக்டர் அந்த புதுமுக டைரக்டரை மிரட்டி வருகிறாராம். ஏற்கனவே 10 படங்களை இயக்கியிருக்கும் அந்த டைரக்டர் தற்போது மருமகன் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்திற்கு முதலில் அருவா என பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் படத்தின் நாயகனுக்கோ வேறொரு தலைப்பின் மேல் ஈர்ப்பு. நாயகன் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அந்த தலைப்பை பதிவு செய்ய முற்பட்டபோதுதான் தெரிந்தது, நாயகனின் விருப்ப தலைப்பு வேறோரு புதுமுக டைரக்டரின் கையில் இருக்கிறது என்று. உடனடியாக அந்த புதுமுகத்திடம் போனில் பேசிய டைரக்டர், தனக்கு அந்த தலைப்பை விட்டுக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் புதுமுகமோ... வாய்ப்பே இல்லை. எனது படத்திற்கு அந்த தலைப்புதான் பொருத்தமாக இருக்கும், என்று கூறி மறுத்து விட்டாராம்.
விட்டாரா டைரக்டர்...? ஆளு தெரியாம மோதாதே... மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என மிரட்டத் தொடங்கி விட்டார். அதேநேரம் புதுமுகமோ, நீங்க எவ்வளவு மிரட்டினாலும் அந்த டைட்டிலை தர முடியாது என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ள நிலையில் இயக்குனர்கள் சங்கத்தில் இப்போது இந்த பிரச்னை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறதாம்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் திருமணம் கோலாகலமாக நடந்தது!
மணமேடையில் திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.10க்கு தொடங்கியது. மண விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 9.47க்கு முதல்வர் கருணாநிதி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, மணமகள் அனுஷா கழுத்தில் அதை மணமகன் துரை தயாநிதி கட்டினார். பின்னர் முதல்வர் மற்றும் தயாளு அம்மாள் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர்.
மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர். மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், வயலார் ரவி, குலாம்நபி ஆசாத், ஜி.கே.வாசன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாழ்த்தினர்.
திருமணத்தையொட்டி, மதுரை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. திமுக கொடி தோரணங்கள், வண்ண விளக்குகளால் மதுரையின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஜொலித்தன. திருமண நிகழ்ச்சிகள் 5 இடங்களில் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருமண பந்தலில் சிறப்பு சைவ விருந்து அளிக்கப்பட்டது. கூட்டத்தினர் அனைவரும் விருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக ராஜாமுத்தையா மன்றம், காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு திருமண மண்டபங்களிலும் விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கள்ளழகர் திருக்கோயில், நரசிங்கப் பெருமாள் கோயில், மதுரை நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர், பார்வையற்றோர் இல்லங்களிலும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா, சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வேலு, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், நேரு, தங்கம் தென்னரசு, தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் ஏராள மானோர் திரண்டு வந்திருந்தனர்.
முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் கமல்ஹாசன், அஜித், பிரபு, மாதவன், சூரியா, கார்த்தி, வடிவேல், விவேக், ஸ்ரீகாந்த், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜேஷ், தியாகு, வாகை சந்திரசேகர், ஏ.எல்.ராகவன், எம்.என்.ராஜம், சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் மற்றும் டிஜிபி லத்திகாசரண் உட்பட அரசு அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிங்கப்பூரில் ‘மன்மதன் அம்பு’-நிருபர்களுக்கு லைவ்!
கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உருவாகியுள்ள படம் மன்மதன் அம்பு.
கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ல இப்படம் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் கமல்ஹாசன் படமாகும்.
Kamal to use technology - 'Manmadhan Ambu' audio launch live through video
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசனே எழுதியுள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். படம் முழுக்க ரோம், வெனிஸ், பாரீஸ், பார்சிலோனாவில் வைத்துப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகளை மெடிட்டரேனியன் க்ரூய்ஸ் எனப்படும் பிரமாண்ட சொகுசுக் கப்பலில் படமாக்கியுள்ளனர்.
படத்தின் இசையை தேவி ஸ்ரீபிரசாத் கவனித்துள்ளார். மொத்தம் 6 பாடல்கள். அதில் 2 பாடல்களை கமல்ஹாசனே பாடியுள்ளார். இப்பாடல்கள் நவம்பர் 20ம் தேதி ரசிகர்களின் காதுகளை வந்தடையவுள்ளது.
இதற்காக சிங்கப்பூரில் பிரமாண்டமான அளவில் இசை வெளியீட்டு விழாவை வைத்துள்ளனர். அதில் கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் மொத்தமாக பங்கேற்கின்றனர்.
இந்த இசை வெளியீட்டு கோலாகலம் நவம்பர் 18ம் தேதியே, அதாவது இன்றே தொடங்கியுள்ளது. இன்று ஒட்டுமொத்த படக்குழுவினரும் சூப்பர்ஸ்டார் விர்கோ என்ற சொகுசுக் கப்பலில் பயணிக்கின்றனர். நாளை பிரேசில் நடனக் கலைஞர்கள், சீன அக்ரோபாட் கலைஞர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மன்மதன் அம்பு படக் குழுவினருடன் 300 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ரசிக்கவுள்ளனர்.
நவம்பர் 20ம் தேதி சிங்கப்பூர் எக்ஸ்போ, மாக்ஸ் பெவிலியன் அரங்கில் இசை வெளியீடு நடைபெறுகிறது. 3 மணி நேரம் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை 7000 பேர் கண்டு களிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன், தேவிஸ்ரீபிரசாத், மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மிஸ் பண்ணி விடக் கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கிண்டி, லீ ராயல் மெரீடியன் ஹோட்டலி்ல நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேதி மாலை 3.30 மணி முதல் இதைக் காணலாம். செய்தியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடு இது.
ஆடியோ வெளியீட்டைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கவுள்ளார்.
ஜெமினி கணேசன்-90:சென்னையில் விழா!
இதுதொடர்பாக ஜெமினி கணேசனின் மகளும், பிரபல மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்கள் அப்பாவின் 90வது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் 21ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு ஜெமினியின் வாழ்க்கை வரலாறு டி.வி.டி.யை வெளியிட்டு பேசுகிறார். டி.வி.டி.யின் முதல் பிரதியை டைரக்டர் கே.பாலச்சந்தர் பெற்றுக்கொள்கிறார்.
Kamal Haasan Launches Gemini Ganesan Biography Stills, Photo Gallery
ஜெயஸ்ரீ விஸ்வநாதனால் ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட எங்கள் தந்தையின் வாழ்க்கை வரலாறு புத்தகமான வாழ்க்கைப் படகு தற்போது ஏராளமான புகைப்படங்கள் சேர்த்து மறுமதிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தையும் முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். முதல் பிரதியை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொள்கிறார்.விழாவில், கணேஷ் பிரபா இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திரைப்பட பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல்.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டு ஜெமினி கணேசனின் பழைய பாடல்களை பாடுகிறார்கள்.
திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த எங்கள் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு, சுயமுயற்சியினால்தான் புகழை அடைந்தார். பொதுவாக அவர் கஞ்சன் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். நாங்கள்கூட அப்படித்தான் நினைத்தோம்.
ஆனால், அவர் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் ஏராளமான தான தர்மங்கள் செய்திருக்கிறார். நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். அவர் மறைந்த பிறகு, மற்றவர்கள் சொல்லித்தான் இது எல்லாம் எங்களுக்கு தெரிய வந்தது. அவர் இல்லாதபோதுதான் அவருடைய பெருமை எங்களுக்கு தெரிகிறது என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
‘டான்’ ஷாருக்கும், நான்கு அழகிகளும்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் புதிய சாதனை படைக்கவுள்ளார். ஒரே நேரத்தில் நான்கு முன்னாள் உலக அழகிகளுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் ஷாருக்.
அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தின் ரீமேக்கில் ஷாருக் கான் நடித்து பெரும் ஓட்டம் ஓடியது அப்படம். இப்போது அதன் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் ஷாருக்.
இப்படத்தில் ஷாருக் கானுக்கு லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஜோடிகளாக நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் உலக அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னும் கெஸ்ட் ரோலில் படத்தில் காட்சி தரப் போகிறார்கள்.
இப்படி ஒரே படத்தில் நான்கு முன்னாள் அழகிகள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். நான்கு உலக அழகிகளுடன் ஜோடி போட்டு நடித்த முதல் நடிகர் என்ற பெயரும் ஷாருக் கானுக்கு வரப் போகிறது.
டான் படத்தை விட மிகப் பிரமாண்டமாக இந்த டான்-2 இருக்கும் என்கிறார்கள்.
டான் படத்தைத்தான் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா என்று மாற்றி எடுத்தனர். சமீபத்தில் அதை அஜீத் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்தார். இப்போது பில்லா 2ம் பாகத்திலும் அஜீத் நடிக்கவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
மாவோயிஸ்டுகளுடன் இணைந்த நேபாள கவர்ச்சி நடிகை ரேகா தாபா
20 வயதுகளில் இருக்கும் ரேகா தாபா, கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்தவர். மிக மிக கவர்ச்சிகரமான உடைகளுடன் படங்களில் தோன்றுபவர். பல்வேறு சூடான சர்ச்சைகளையும் கிளப்பி வருபவர். தற்போது மாவோயிஸ்டுகளின் பிரசார பீரங்கியாக அவர் மாறியுள்ளார்.
முன்பு முழு முதுகும் தெரிய உடை அணிந்து வந்ததால் இந்து அமைப்பு ஒன்றுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோல பாலிவுட் நடிகர் சக்தி கபூருடனும் மோதிய அனுபவம் இவருக்கு உண்டு. இப்போது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார், அவர்களுடன் கரம் கோர்த்துள்ளார்.
கடந்த ஆண்டுதான் இவர் நேபாள மாவோயிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்படத் தொடங்கினார். இவர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பேசும் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் வரத் தொடங்கியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது மாவோயிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் பிரசந்தாவுடன் இணைந்து இவர் டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்தார். இந்தக் காட்சியை மீடியாக்களும், பிரசந்தாவின் மனைவி சீதா தஹாலும் விழிகள் விரிய பார்த்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாவோயிஸ்ட் ஆதரவு இயக்குநர் ஒருவரின் படத்தில் நாயகியாக நடிக்கவும் ரேகா தாபா ஒப்பந்தமானார். ஜெய்லாலா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை இயக்குநர் லமிசானே இயக்கவுள்ளார். கவர்ச்சிகரமான படங்களில் நடித்து வந்த ரேகா தற்போது மாவோயிஸ்ட் ஆதரவு படங்களில் நடிக்க படு தீவிரமாக உள்ளாராம். ஜெய்லாலா படப்பிடிப்பு தொடங்கியபோது அங்கு வந்த மாவோயிஸ்ட் மக்கள் விடுதலைப் படையின் துணைத் தலைவரான நந்த் கிஷோர் புன் பசங், உண்மையான துப்பாக்கியை எப்படி பிடித்து சுட வேண்டும் என்பது குறித்து ரேகாவுக்கு சொல்லிக் கொடுத்தார்.
ரேகாவின் தீவிர மாவோயிஸ்ட் ஆதரவைப் பார்த்து வியந்து போன மாவோயிஸ்ட் அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவரான சந்திர பகதூர் தாபா சாகர், ரேகாவை தனது தங்கையாக தத்தெடுத்துக் கொண்டார். சகோதரர்கள் தினத்தன்று இந்த தத்தெடுப்பு நடந்தது. அப்போது சாகர் தந்த பரிசுப் பணத்தையும் பாசத்தோடு பெற்றுக் கொண்டார் ரேகா.
ரேகாவின் வருகையால் மாவோயிஸ்ட் கட்சியினரும் குஷியடைந்துள்ளனர். ரேகாவின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, மாவோயிஸ்ட் கட்சியின் 2ம் நிலை தலைவரான பாபுராம் பட்டாராய், ரேகாவுடன், காத்மாண்டுவில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்படம் ரேகா நடித்த யார் எனது இதயத்தைக் கவர்ந்தது என்று பொருள் படும் கஸ்லே சோரயோ மேரா மேன் என்ற தலைப்பைக் கொண்டதாகும்.
மாவோயிஸ்டுகளை மட்டுமல்லாமல் நேபாள மக்களிடையேயும் ரேகாவின் இந்த தீவிர மாவோயிஸ்ட் ஆதரவு போக்கு பெரும் வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரியாமணிக்காக வாய்ப்பு தேடும் ஜெகபதிபாபு
ப்ரியாமணி – ஜெகபதி பாபு இடையிலான நெருக்கமான உறவு ஆந்திராவில் அத்தனை பிரசித்தம்.
ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்பில்லாமல் இருந்த ப்ரியாமணிக்காக பல வாய்ப்புகளை தானே போய் பெற்றுத் தந்தவர் ஜெகபதிபாபுதான் என்கிறார்கள்.
ஷாம் ஹீரோவாக நடிக்கும் ஷேத்ரம் படத்தில் ப்ரியாமணிக்கு நாயகி வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததோடு, அந்தப் படத்தி்ல் குறைந்த சம்பளத்தில் ஒரு கவுரவ வேடம் செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளாராம் ஜெகபதிபாபு.
ஏற்கெனவே இருவரும் இணைந்து 4 தெலுங்குப் படங்கள் நடித்துள்ளது. ஜெகபதிபாபுவுடன் உள்ள நெருக்கத்தை ப்ரியாமணியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி
32 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் ரஜினி!
ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில், உணவு உறக்கமின்றி ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தொடர்ந்து நடித்திருக்கிறார். சில நாள்களில் 24 மணிநேரமும் கண்விழித்து ஷூட்டிங்கில் இருந்தாராம். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனநலமும் பாதித்தது.
மதுரையில் படப்பிடிப்புக்கு வந்தபோதுதான் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு மாத ஓய்வுக்குப் பிறகே மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்றார். இதனை அவர் இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராகிவிட்ட பிறகும் மறக்காமல் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் மதுரைக்குச் செல்லவில்லை. இத்தனைக்கும் அவருக்கு மதுரையில்தான் எக்கச்சக்க ரசிகர் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது 32 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக மதுரைக்குச் சென்றுள்ளார் ரஜினி.
அழகிரி மகனை வாழ்த்தி அவர் பேசுகையில், “எனக்கும் இரண்டு பேரன்கள் உள்ளனர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இப்படியொரு சந்தோஷம் இருப்பதை பேரன்கள் பிறந்த பிறகுதான் உணர முடிஞ்சது.
பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேரக் குழந்தைகளைப் பார்ப்பது பெரிய சந்தோஷம்னா, பேரக் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது அதைவிடப் பெரிய சந்தோஷம்.
முதல்வர் கலைஞர் அந்த வகையில் பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த வாழ்க்கை வாழ்கிறார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மதுரைக்கு வருகிறேன்… எனக்கு மிகுந்த உற்சாக வரவேற்பை அளித்தனர். நன்றி.
பொருத்தம், லட்சணம், அழகு மூன்றும் நிறைந்த இந்த தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும்”, என்றார் ரஜினி.
ரகசிய இடத்தில் பிரபுவுடன் நயன் பிறந்தநாள் கொண்டாட்டம்?
சேலை கட்டி வந்த பமீலா
பமீலா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை இன்று கலர்ஸ் டிவி தனது நேயர்களுக்கு ஒளிபரப்பவுள்ளது. பமீலா இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த கெஸ்ட் விசிட்டுக்காக அவருக்கு ரூ. 2.5 கோடி பணம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனது பாடலை கேவலப்படுத்தினால் பாவம் சும்மா விடாது - டி.எம்.செளந்தரராஜன் ஆவேசம்
பழம்பெரும் பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை படைத்த பாடகர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில், ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய பழைய பாடல்களை இக்காலத்துப் பாடகர்கள் இணைந்து பாடினர். மனோ, ஹரிஹரன், உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா உள்ளிட்டோர் இப்பாடல்களைப் பாடினர்.
டி.எம்.எஸ். பாடிய பாடல் வரிகளை சிலர் உச்சரிக்கத் தடுமாறினர். இதைப் பார்த்து கோபமடைந்தார் டிஎம்எஸ்.
மைக்கைப் பிடித்த அவர், அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது என்றார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பி.சுசீலா குறுக்கிட்டு, உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள் என்று டிஎம்எஸ்ஸை சமாதானப்படுத்தினார்.
இதனால் சற்று சாந்தமடைந்த டிஎம்எஸ், புதுப் பாடகர்களிலும் திறமையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களை வாழ்த்துகிறேன் என்று பாராட்டி பிரச்சினைக்கு முடிவு கட்டினார்.
மங்காத்தாவில் நாகார்ஜுனா நீக்கம்: அஜீத்துடன் அர்ஜுன்-சினேகா?
அந்தப் பாத்திரத்தில் இப்போது அர்ஜுன் நடிக்கவிருப்பதாகவும், சினேகாவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தா, பெரும் பொருட் செலவில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகிறது. வெங்கட் பிரபு இயக்குகிறார்.
அஜீத் – த்ரிஷா டூயட் மற்றும் அஜீத் அறிமுக பாடல் காட்சி படமாக்கத்துடன் மங்காத்தா படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில்தான் இதன் பாங்காக் ஷெட்யூல் முடிந்து, படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இன்னொரு நாயகனான நாகார்ஜுனா நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு பதில் அர்ஜுன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சினேகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவாவில் நடித்தவர் சினேகா. அஜீத்துடன் ஆஞ்சநேயா படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
விமலா ராமனுடன் ஒரு பிரச்சினையும் இல்லை - பிரியாமணி
புதுமுக இயக்குநர் விஜய் என்பவரின் இயக்கத்தில் விமலா ராமனும், பிரியா மணியும் இணைந்து புதிய தெலுங்குப் படத்தில் நடிக்கின்றனர். இதில் யாருக்கு முக்கியத்துவம் என்பது தொடர்பாக இரு நடிகைகளுக்கும் இடையே மோதல் மூண்டதாக தகவல்கள் வெளியாகின.
முதலில் விமலா ராமன் இப்படத்தில் இருக்கிறார் என்பது பிரியா மணிக்குத் தெரியாதாம். அது தெரிய வந்தபோதுதான் பிரச்சினை வெடித்ததாம். விமலா ராமனுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது, எனது காட்சிகளை அதிகப்படுத்துங்கள் என்று பிரியா மணி வற்புறுத்தியதாகவும், அதற்கு விமலா ராமன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
நான் ஒருதேசிய விருது பெற்ற நடிகை. என்னை விமலா ராமனுடன் சமமாக நடிக்க வைப்பதா என்று பிரியா மணி ஆவேசப்பட்டதாகவும், அதற்கு விமலா ராமன் பதிலளிக்கையில், மாபெரும் இயக்குநர் அமீர். எனவே பருத்தி வீரன் படத்தில் பிரியா மணி என்றில்லை, எந்த நடிகை நடித்திருந்தாலும் அவருக்கு விருது கிடைத்திருக்கும் என்று நக்கலடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை என்று பிரியா மணி கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரியா மணி கூறுகையில், உண்மையில் நான் இப்படத்தில் 2வதாகத்தான் ஒப்பந்தமானேன். எனவே விமலா ராமனுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்று நான் வற்புறுத்தியதாக கூறுவதில் லாஜிக்கே இல்லை. மேலும் அப்படி நான்கூறவும் இல்லை.
இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது, தகராறு ஏற்பட்டது என்று வெளியான செய்தியெல்லாம் வெறும் வதந்திதான், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றார் பிரியா மணி.
18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கஜோல்,தனுஜா
பழம்பெரும் நடிகையான தனுஜாவின் மகளான கஜோல், கடந்த 1992ம் வெளிவந்த பேகுதி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அதற்குப் பிறகு தற்போது 18 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை தயாரித்து, நடிக்கிறார் கஜாலின் கணவரான அஜய் தேவ்கன். பேகுதி போன்று டூன்புர் கா சூப்பர்ஹீரோ படத்திலும் கஜோலின் தாயாக நடிக்கிறார் தனுஜா.
இதில் அவர் கௌரவ வேடத்தில் வந்தாலும் அது முக்கியமான கதாபாத்திரமாம். இந்த படம் கிறிஸ்துமஸிற்கு வெளியாகும்.
யூ மி அவுர் ஹம் படத்திற்கு பிறகு அஜய் தேவ்கனும், கஜோலும் இதில் ஒன்று சேர்கின்றனர். இருவரும் ஹல்சல், குண்டராஜ், பியார் தோ ஹோனா ஹி தா, தில் கியா கரே, ராஜூ சாசா ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் கூட்டணியில் ஷங்கரின் '3இடியட்ஸ்'! - முதல் பாடல் கம்போஸிங் முடிந்துவிட்டது
ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து ஷங்கர் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் ஷங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார்.
இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஷங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி துவங்குகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விஜய் படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல்முறை.
நாயகியாக இலியானா நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.
அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள் -ரஜினி ஏற்பாடு!

கார்த்திகை தீபத்துக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் பெற வசதியாக இந்த விளக்குகள் பெரும் பொருட்செலவில் பொருத்தப்படுவதாகவும், இச்செலவு முழுவதையும் ரஜினியே ஏற்க முன்வந்துள்ளதாகவும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலையாரின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து ஏராளமான திருப்பணிகளை, பக்தர்கள் வசதிக்காக செய்து வருகிறார்.
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கிரிவலப் பாதையில் இருள் சூழ்ந்திருந்ததால் பக்தர்கள் இரவு நேரங்களில் வலம் வர சிரமப்பட்டனர்.
இந்த விஷயம் ரஜினியிடம் சொல்லப்பட்டதும், பக்தர்கள் நடந்து சென்று மலையைச் சுற்றி வரப் பயன்படும் 14 கிமீ கிரிவலப் பாதைக்கும் தனது சொந்த செலவில் சோடியம் விளக்குகள் பொருத்தினார் ரஜினி. மொத்தம் 148 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கான மொத்த செலவான ரூ 10 லட்சத்தையும் ரஜினியே ஏற்றார். இது நடந்தது 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம். பின்னர் பக்தர்களுக்கு தண்ணீர் வசதியும் செய்து தந்தார்.
இதன்பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. இரவு நேரங்களிலும் தயக்கமின்றி ஏராளமானோர் கிரிவலம் சென்று மலை வடிவில் குடிகொண்டுள்ள அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.
தற்போது மேலும் ஒரு திருப்பணியைச் செய்ய முன்வந்துள்ளார் ரஜினி. அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கும் தனது செலவில் ஒளிரும் விளக்குகள் பொருத்துகிறார் ரஜினி.
அதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் (போக்கஸ் லைட்டுகள்) பொருத்தப்பட உள்ளன.
ஹ்ரித்திக்குடன் கிளுகிளு காட்சிகள்...ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் சிக்கல்?
குஜாரிஷ் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மனநலம் பாதித்தவராகவும் ஐஸ்வர்யாராய் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நர்சாகவும் வருகின்றனர்.
இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்துள்ளனர். இருவரின் படுக்கை அறை காட்சிகளும் இடம்பெற்றுள்ளனவாம். ஐஸ்வர்யாராய் இதுபோல் நடித்ததற்கு அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மனைவி மேல் அபிஷேக்பச்சன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
இதுபற்றி ஐஸ்வர்யாராயிடம் கேட்டபோது, “படங்களில் இரு கேரக்டர்களுக்குள் நடப்பவைகளை நிஜத்தில் ஒப்பிடக் கூடாது. எல்லா படங்களிலுமே நாயகனும் நாயகியும் திரையில்தான் காதல் செய்கிறார்கள்.
இதில் என் குடும்பத்தார் என் மேல் கோபமாக இருப்பதாக வெளியான செய்திகள் உண்மை இல்லாததவை. வெறும் புரளிதான். ஆனால் எப்போதுமே எனக்கு விருப்பமில்லாத காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்….”, என்றார்.
ஏற்கெனவே தூம் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஐஸ்வர்யா ராய் லிப் டு லிப் கிஸ்ஸடித்ததில் பெரும் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.
மன்மதன் அம்பு இசை வெளியீடு...விஜய் டிவிக்கு ஒளிபரப்பு உரிமை!!
படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமாக கலைஞர் டிவி உள்ளிட்ட சேனல்கள் இருக்க, மன்மதன் அம்பு நிகழ்ச்சி உரிமையை விஜய் டிவிக்குக் கொடுத்துள்ளது கோலிவுட்டில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில், மிகப் பெரிய சொகுசு கப்பலில் 2 தினங்கள் நடக்கும் மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி ஒளிபரப்புகிறது.
விழாவில் கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, கேஎஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.
நவம்பர் 20-ம் தேதி இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் விஜய் டிவியோ, 18 மற்றும் 19-ம் தேதிகளில் இதற்கான முன்னோட்டக் காட்சிகளை ஒளிபரப்புகிறது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
7000 பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாஸன் – தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும், ஏராளமான பிரேசில் மற்றும் சீன கலைஞர்களுடன் இணைந்து பாடுகின்றனர்.
கவர்ச்சி தோற்றம்:புது நடிகைக்கு ஆர்யா டிப்ஸ்
மும்பையில் மாடலிங் செய்து வந்த நான், சினிமா இதழ் ஒன்றுக்கு கட்டுரைகள் எழுதி வந்தேன். அதில் என்னுடைய புகைப்படம் இடம்பெற்றது. அதைப்பார்த்த 'சிக்கு புக்கு இயக்குனர் மணிகண்டன் இதழின் ஆசிரியரை அணுகி, என்னுடைய முகவரியை வாங்கினார். பிறகு என்னை நேரில் சந்தித்தவர், 'சிக்கு புக்கு படத்தில் வித்யா பாலன் நடிப்பதாக இருந்த வேடத்தில் நடிக்க கேட்டார். அவரது கால்ஷீட் இல்லாததால் அந்த வாய்ப்பு உங்களுக்கு வந்திருக்கிறது. இது படத்தில் சர்ப்ரைஸ் தரும் கேரக்டர். நடிக்கிறீர்களா எனக் கேட்டார். தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு என்பதாலும் கேரக்டர் பிடித்திருந்ததாலும் ஒப்புக்கொண்டேன். ஊட்டி, மைசூர், காரைக்குடியில் ஷூட்டிங் நடந்தது. ஹீரோ ஆர்யா நட்பாக பழகினார். எனது உடற்கட்டை, கவர்ச்சி தோற்றத்துக்காக எப்படி பராமரிக்க வேண்டும் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது..
டாப்சியால் தயாரிப்பாளர் அப்செட்
கிசு கிசு - நடிகை மீது டைரக்டர்கள் கோபம்
நல்ல காலம் பொறக்குது…
விவாகரத்துக்கு பிறகு மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்தாரு சோனி நடிகை. வாய்ப்புகள் கொட்டும்னு நம்பியிருந்தாரு. ஆனா பெரிசா எதுவும் வாய்ப்பு வராததால மனசு உடைஞ்சிட்டாராம்… உடைஞ்சிட்டாராம்… திரும்ப தெலுங்கு தேசம் பக்கமா சான்ஸ் வேட்டைக்கு போய¤ருக்கிறாராம்… போயிருக்கிறாராம்…
உச்ச நடிகர் பொண்ணு பேர்ல யாரோ போலியா வெப்சைட் தொடங்கி இருக்காங்களாம்… இருக்காங்களாம்… இதனால பொண்ணு அப்செட் ஆயிட்டாராம். போலி பேர்வழிய கண்டுபிடிக்க ரகசிய ஏற்பாடு செஞ்சிருக்க¤றாராம்… செஞ்சிருக்காறாராம்…
ஐதராபாத்துல பேட்டி கொடுத்த சமந்த நடிகை மேல தமிழ் இயக்குனருங்க கடுப்புல இருக்கிறாங்களாம். நடிச்ச சில தமிழ் படங்கள்ல என்னை அழகா காட்டல. தெலுங்குலதான் என்னோட அழகும் திறமையும் ரசிகர்களுக்கு தெரிஞ்சிருக்குன்னு சொன்னாராம்… சொன்னாராம்…சம்பந்தப்பட்ட இயக்குனருங்க நடிகை மேலே கோபமா இருக்கிறாங்களாம்… இருக்கிறாங்களாம்…
மகனின் லவ்வை உளவு பார்க்கும் நாகார்ஜுனா
உத்தமபுத்திரன் - விமர்சனம்
நடிகர் : தனுஷ்
நடிகை : ஜெனிலியா
இயக்குனர் :மித்ரன் ஆர்.ஜவஹர்
குட்டி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட தெலுங்கு ரீ-மேக் படங்களில் இணைந்த தனுஷும், டைரக்டர் மித்ரன் ஆர்.ஜவஹரும் மீண்டும் இணைந்து ரீ-மேக் செய்திருக்கும் ஒரு தெலுங்கு படம்தான் உத்தமபுத்திரன் தமிழ்படம்.
கதைப்படி தனுஷும், ஜெனிலியாவும் காதலர்கள். இந்த காதலுக்கு தனுஷ் குடும்பம் ஏகப்பட்ட உதவிகளை செய்கிறது. ஆனால் இவர்களது காதல் கைகூடக் கூடாது என உபத்திரவம் செய்கின்றனர் வில்லன்கள். அவர்கள் யார்? அவர்களை தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதை காமெடியாகவும், கலக்கலாகவும் சொல்கிறது உத்தமபுத்திரன் படத்தின் மொத்த கதையும்.
தனுஷ் வழக்கம்போலவே அப்பாவி இளைஞராகவும், அடிதடி ஹீரோவாகவும் அசத்தியிருக்கிறார். ஜெனிலியா பொம்மை மாதிரி வந்து போனாலும் தன் பெண்மையால் ரசிகர்களை கவருகிறார். இரண்டு டஜன் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியின் இதமான இசையும், பாலசுப்பிரமணியத்தின் அழகிய ஒளிப்பதிவும் குளுமை. தீபாவளிக்கு வந்த படங்களிலேயே குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம் என்பதால் உத்தமபுத்திரன் ஓ.கே.
உத்தமபுத்திரன் - ஓ.கே. மித்ரன்!
மைனா - விமர்சனம்
நடிகர் : வித்தார்த்
நடிகை : அமலா பால்
இயக்குனர் :பிரபு சாலமன்
மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.
குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ. பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்! இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!
க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.
மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு. அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.
மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல... அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.
விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.
சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ... என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.
மைனா - தரமான தமிழ்ப்படம்தான் நைனா!
'தம்' அடிக்கும் ஐஸ்வர்யா-மகளிர் அமைப்புகள் போர்க்கொடி!
ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ள குஸாரிஷ் படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போல நடித்திருக்கும் காட்சிகளுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரோஷனும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்துள்ள இப்படம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரோஷனுடன் சேர்ந்து ஐஸ்வர்யா புகை பிடிப்பது போல காட்சி வருகிறது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குஸாரிஷ் படத்தில் வரும் காட்சிகள் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என மகளிர் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது.
நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன்.
உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன் என்றார் ஐஸ்வர்யா.
'வேட்டை' ஆர்யாவுக்கு ஜோடி அனுஷ்கா
தெலுங்கில் ‘மன்மதன் அம்பு’ டப் ஆகிறது
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் 'மன்மதன் அம்பு’. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. ‘ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். 'மன்மதன் அம்புÕ படத்தில் பாரிஸ் நடிகை கரோலின் நடிக்கிறார். இதனையடுத்து படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளனர்.
‘பெத்தான் பெத்தான்’ சிம்பு பாடிய பாடல்!
கிசு கிசு - நடிகையை திட்டிய இயக்குனர்
நல்ல காலம் பொறக்குது…
மலையாள காமெடி ஆக்டரு சுராஜு, தினமும் 1 லட்சம் கொடுத்தாதான் ஷூட்டிங் வருவேன்னு அடம் பிடிக்கிறாராம்… பிடிக்கிறாராம்… நம்மூர் காமெடி ஆக்டருங்கதான் மல்லுவுட் காமெடிகளுக்கு ரோல்மாடலாம்… ரோல்மாடலாம்… 'கோலிவுட்ல பல ஹீரோக்களைவிட அதிக சம்பளம் காமெடிக்களுக்குதான் க¤டைக்குது. ஒரு நாளைக்கே 2 லகரம் முதல் 5 லகரம் வரை வாங்குறாங்க. அந்த வழியத்தான் இங்குள்ள காமெடிகளும் கடைப்பிடிக்க ஆரம்பிச்சிருக்காங்கÕன்னு கேரள இயக்குனருங்க புலம்புறாங்க… புலம்புறாங்க…
வினயமான நடிகரை 3 ஹீரோ படத்துல, நடிக்க கேட்டாங்களாம். டக்குனு ஒத்துக்கிட்டராம். ரெண்டு நாள் புரொடக்ஷன் டீமோட டிஸ்கஷன¢ல உட்கார்ந்தாரு. 'இதுல என்னோட வேடத்துக்கு முக்கியத்துவம் இல்ல. அதனால இந்த வேஷம் எனக்கு வேணாம்Õனு எஸ்ஸாயிட்டாராம்… எஸ்ஸாயிட்டாராம்…
ஆரம்பத்துல தன்னோட படத்துக்கு மம்மு நடிகையை பஞ்சுவீர இயக்குனரு நடிக்க கூப்பிட்டிருந்தாரு. நடிகையை ரிஜெக்ட் பண்ணினப்போ இயக்குனரு கோபமா பேசிய விஷயம், இப்போ கசிய ஆரம்பிச்சிருக்காம்… ஆரம்பிச்சிருக்காம்… 'நீ நடிக்க லாயக்கு இல்லÕன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லி திருப்பி அனுப்பிட்டாராம்… அனுப்பிட்டாராம்… நெருக்கமானவங்ககிட்ட சொல்லி, நடிகை வருத்தப்படுறாராம்… வருத்தப்படுறாராம்…
ஒல்லியான உடல்தான் என் இமேஜ் - தனுஷ்
‘உங்களுடன் நடிக்க வந்தவர்கள் உடல் ஷேப் மாற்றி குண்டாகி விட்டார்கள். நீங்கள் ஏன் வெயிட் போடவில்லை. சிக்ஸ் பேக் உடலுக்கு மாறவில்லை’ என்றெல்லாம் கேட்கிறார்கள். தனுஷ் என்றாலே ஒல்லியான தோற்றம்தான் ஞாபகத்துக்கு வரும். என்னதான் நிறைய சாப்பிட்டாலும் எனது தோற்றத்தில் மாற்றம் வராது. சாப்பிடுவதற்கு ஏற்ப உழைத்து விடுவதும் அதற்கு காரணம். இதைத்தான் வரவேற்கிறார்கள். உடலை ஏற்றும் எண்ணம் கிடையாது.
ரஜினி படத்தை 60முறை பார்த்த சிக்கு புக்கு நடிகை!
ஆனால் இன்று நிலைமை தலைகீழ்… நடிக்க வரும் முன்பே தமிழைக் கொஞ்சமாகவேனும் கற்றுக் கொண்டு வரும் அளவுக்கு நடிகைகள் மாறியிருக்கிறார்கள் (இதிலும் விதிவிலக்குகள் உண்டு!).
அந்த மாதிரி நடிகைகளில் ஒருவர் ப்ரீத்திகா. பாலிவுட் நடிகை அம்ரிதா ராவின் தங்கை. பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும் பிறந்து, வளர்ந்தது மும்பையில். ஆனால் தமிழ் அட்சர சுத்தமாகப் பேசுகிறார்.
சிக்கு புக்கு படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமாகும் ப்ரீத்திகா, படத்தில் ஒப்பந்தமான பிறகு, தமிழை தெளிவாகக் கற்றுக் கொண்டுவிட்டாராம்.
பாலிவுட்டிலேயே இன்னிங்ஸை தொடங்கியிருக்கலாமே…? என்றால், ‘வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அப்போதுதான் தமிழில் சிக்குபுக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் அறிமுகமாவது இந்திக்கு நிகரான பெருமைதான்…” என்கிறார்.
ப்ரீத்திகாவின் பேவரிட் நடிகர்? வேறு யாராக இருக்க முடியும்… சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
“ரஜினிதான் என் ஆல்டைம் பேவரிட் ஹீரோ… குழந்தையாக இருந்ததிலிருந்து இன்றுவரை நான் பார்க்கும் படங்கள் அவருடையதுதான். இந்தியில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த சால்பாஸ் படத்தை அறுபது தடவை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவருக்கு நான் எந்த அளவு ரசிகை என்று. இப்போது எந்திரன் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும், இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்… சான்ஸே இல்லை…” என்றார்.
ஐந்தாண்டு கழித்து அரசியல்! - சோனா பகீர்!
தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கிய நாளிலிருந்தே கவர்ச்சி நடிகை சோனா அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தை ‘ஆண்களை நம்பாதே’ என்பதுதான்.
நடிகையாக இருந்து, இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ள சோனா, தனது ஆரம்பகால கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்.
“இப்போது இரு படங்களை தயாரிக்கிறேன். அந்தப் படங்கள் முடிந்ததும் இயக்குநராகப் போகிறேன்.
எனக்கு எப்போது திருமணம் என்று பலர் கேட்கின்றனர். அது பற்றி சிந்திக்கவே இல்லை. ஆண்களை நான் நம்பமாட்டேன். நண்பர்கள் ஓகே… ஆனால் புருஷன்கள் துரோகிகள். அவர்களை நம்பக்கூடாது.
அதற்கு என் வாழ்க்கையே ஒரு உதாரணம். அதைப் படமாக எடுக்கும் திட்டம் உள்ளது.
எனக்கு இப்போதைக்கு அரசியல் வேண்டாம். எந்தக் கட்சியாவது என்னை வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய அழைத்தாலும் போகமாட்டேன். ஆனால் இது நிரந்தர முடிவல்ல… 5 ஆண்டுகள் கழித்து அரசியலில் ஈடுபடுவது பற்றி யோசிப்பேன்…” என்றார் அதிரடியாக.
இது என் படமல்ல,ராம் கோபால் வர்மா படம்-சூர்யா
வடக்கில் ரஜினிக்கு இருக்கும் பெரும் புகழ், செல்வாக்கு, ரசிகர்களிடம் உள்ள நல்ல பெயரை, அங்கே முதல்முறையாக நடிக்கும் சூர்யாவுக்குப் பயன்படுத்துவதா என்று பல ரஜினி ரசிகர்கள் ஆவேசப்பட்டனர்.
ஆனால் முன்னிலும் வேகமாக இந்த விளம்பரங்களைச் செய்ய ஆரம்பித்தனர். விசாரித்ததில், இதைச் செய்பவர் வேறு யாருமில்லை… படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மாதான், எனத் தெரிய வந்தது.
இதனால் ராம் கோபால் வர்மாவுக்கு கண்டனத்தை இமெயில் மற்றும் கடிதங்கள் மூலமாக பல ரசிகர்கள் அனுப்பி வைத்தனர்.
இன்னொன்று, அரசியல் தலைவர்களைப் பற்றி படுமோசமான விமர்சனங்களைத் தாங்கி வரும் ரத்த சரித்திரத்தில் அனாவசியமாக ரஜினி பெயரை இழுக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்திருந்தனர் ரசிகர்கள்.
இந் நிலையில், இந்த விவகாரம் குறித்து சூர்யாவிடன் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், “இப்படத்திற்காக ‘ரோபோ ரஜினிக்கு பிறகு கஜினி சூர்யா’ என்று என்னை ரஜினியுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்தது உண்மைதான்.
இப்போது அதுபோன்ற விளம்பரங்களை நீக்குமாறு கூறிவிட்டேன். ரஜினி பெரிய நடிகர் அவருடன் என்னை ஒப்பிட்டது தவறுதான்.
இந்த படத்தை சிலர் எதிர்க்கின்றனர். இதில் யாரையும் புண்படுத்தவில்லை. இன்னொரு முக்கிய விஷயம், இது சூர்யா படமில்லை. ராம் கோபால் வர்மா படம். எனவே என் படம் என்ற எதிர்ப்பார்ப்பு வேண்டாம்…” என்றார்.
ரிலீஸாகுது ‘மயிலு’!
ரிலீசுக்கு முன்பே இளையராஜாவின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்ட படம் இது. ஒரு பொங்கல் தினத்தில், இந்தப் பாடல்கள் உருவான விதத்தை இசைஞானி லைவ்வாகவே காட்ட, மெய் மறந்துபோனார்கள் ரசிகர்கள்.
ஆனால் தயாரிப்பாளர்களுக்கிடையில் எழுந்த மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்படியே நின்றுவிட்டது மயிலு.
அந்தப் படத்தில் அறிமுகமாகவிருந்த இயக்குநர் ஜீவன், அதற்குப் பிறகு பா விஜய்யை வைத்து ஞாபகங்கள் எடுத்துவெளியிட்டது நினைவிருக்கலாம்.
இப்போது மீண்டும் மயிலை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ். கிறிஸ்துமஸுக்கு இந்தப் படம் வெளியாகிறது.
மதுரையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில் ஷம்முவும் புதுமுகம் ஸ்ரீயும் நடித்துள்ளனர்.
படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், “இந்தப் வெளியாவது நல்ல சினிமாவுக்கு, நல்ல இசைக்குக் கிடைத்த வெற்றி என்பேன். இந்தப் படத்தின் நாயகன் இளையராஜாதான். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படமாக, இசையாக மயிலு அமையும்,” என்றார்.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக காஸ்டிங் இயக்குனர் அறிமுகம்
இப்போது முதன் முறையாக, 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' என்ற படத்தில் காஸ்டிங் இயக்குனராக, 'விருமாண்டி' படத்தில் பேய்காமனாக அறிமுகமான சண்முகராஜன் பணியாற்றுகிறார். டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் படித்த இவர், இந்தப் படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்ததுடன் அவர்களுக்கு ஒரு மாதம் நடிப்பு பயிலரங்கம் நடத்தி இருக்கிறார்.
'காஸ்டிங் இயக்குனர்களை நியமிப்பதன் மூலம் இயக்குனர்களின் பணிச் சுமை குறையும். நடிப்பு பயிற்சியால் படப்பிடிப்பில் டேக்குகள் குறைவதால் நேரமும், பிலிமும் மிச்சமாகும். இதனால் தயாரிப்பாளரின் சுமையும் குறையும். இனி வருங்காலத்தில் காஸ்டிங் இயக்குனர்களின் பணி தவிர்க்க முடியாததாக இருக்கும்' என்றார் சண்முகராஜன்.
கனிமொழி படத்தில் நேரடி ஒலிப்பதிவால் எகிறியது பட்ஜெட்
நாதஸ்வரம் தொடரில் புதிய பாடல்
ஈசன் பாடல் வெளியீட்டில் 5மொழி இயக்குனர்கள்
தமிழ் சினிமா தரத்தை உயர்த்தும் ரஜினி -கமல்! - கவிஞர் வாலி
கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான “வாலி – 1000′ என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வாலி பேசிய ஏற்புரை:
கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்… என்ற எனது பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன்தான் காரணம். என்னைப் பாராட்ட இங்கே பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.
எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. எல்லாம் வல்ல முருகன் அருளால் நீடூழி வாழ்க என்று அந்த மணமக்களை மனதால் வாழ்த்தினேன்.
கமல்ஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். டி.கே. சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர். மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. அந்த அளவுக்கு வரம் – சக்தி அவருக்கு உண்டு.
இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். படகோட்டி படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். இங்குள்ளவர்கள் யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டவர்கள் இல்லை. அதே போல் தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.
ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான்.
எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்துக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட பிச்சையே காரணம்.
20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை.
கமல், ரஜினி ஆகியோர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார்கள். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம்…”, என்றார்.
சோ பேச்சு:
துக்ளக் ஆசிரியர் சோ பேசுகையில், “காலம் கடந்தும் நிற்பவை வாலியின் கவிதைகள். இது அவருக்கு கடவுள் தந்த பரிசு. அதனால்தான் அவரால் ராமாயணத்தைப் பற்றியும் எழுத முடிகிறது. முக்காப்புல்லாவும் எழுத முடிகிறது. வாலியால் ஆன்மிகம் பற்றியும் பேச முடியும். நாத்திகர்களைப் பாராட்டவும் முடியும். அதில் ஒன்றும் தவறு கிடையாது.
கவிதை, பாடல்களை எழுதும் போது அதிலேயே அவர் ஐக்கியமாகி விடுகிறார். தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரிடம் இன்னும் திறமைகள் கொட்டிக் கிடக்கிறது. கண்ணதாசன் காலத்திலும் புகழ் பெற்ற கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன் பாடலுக்கும் இவரின் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது. அனைத்திலும் கவித்துவம் இருக்கும். எல்லோரையும் வாலியால் கவர முடியும்” என்றார்.
ரஜினி, கமலும் வாழ்த்திப் பேசினர்.
Rajini, Kamal, Suriya at Vaali 1000 Book Launch Stills, Event Pictures Photo gallery, Video
உயிரோட ‘சாவடிக்கலாமா’? – ஒரு ‘காமெடி’யின் வேதனை!
சேரனின் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேலுவை கண்டமேனிக்கு திட்டும் காமெடி காரெக்டரில் அறிமுகமானவர் பெஞ்சமின். தொடர்ந்து ஆட்டோகிராபில் சேரனின் நண்பனாகவும், திருப்பாச்சியில் விஜய்யுடன் தனி காமெடியனாகாவும் நடித்தார்.
தமிழ், தெலுங்கு உள்பட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சேலம் நகரைச் சேர்ந்தவர். இப்போதும் சேலம் அஸ்தம்பட்டி பாரதி நகரில் தாயார், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை இவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இதனால் அதிரந்து போன உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலையுடன் இவரது வீட்டுக்கு வந்து விட்டனர்.
அப்போது வீட்டில் நடிகர் பெஞ்சமின் இல்லை. அவரது தாயார் மட்டும் இருந்தார்.
இந்த வதந்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செல்போனில் மகனை தொடர்பு கொண்டார். மறுமுனையில் அவரது மகன் பெஞ்சமின் பேசிய பிறகுதான் அவருக்கு மூச்சே வந்ததாம். வந்த அனைவருக்கும் மகன் நலமுடன் இருப்பதை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வதந்தியை கிளப்பியது யார் என்று தெரியவில்லை.
இது குறித்து நடிகர் பெஞ்சமின் வருத்தத்துடன் இப்படிக் கூறுகிறார்:
அன்றைக்கு நான் எனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்திருந்தேன். நான் இறந்து விட்டதாகக் கூறி பலர் மாலையுடன் வீட்டுக்கு வந்ததாக எனது தாயார் கூறினார். எனக்கும் நேற்று காலை முதல் இன்று வரை இடைவிடாமல் போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன். தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே இருப்பதால் நேற்று இரவு நான் துங்கக் கூட முடியவில்லை.
இந்த வதந்தியை யார் கிளப்பியது என்று தெரியவில்லை. எனது தாயார் சின்னத்தாய் இருதய நோயாளி ஆவார். அவர் இந்த வதந்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல..!”, என்றார் அவர்.
ரமலத்தை திருமணம் செய்தது செல்லாது என மனு செய்கிறார் பிரபுதேவா!
ரம்லத்தை திருமணம் செய்து, அவர் மூலம் மூன்று குழந்தைகளையும் பெற்றுக் கொண்டவர் பிரபு தேவா. ஆனால் நயன்தாராவுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, மனைவியை மறந்து, கள்ளக்காதலி பின்னால் சுற்றத் தொடங்கினார்.
மனைவி இருக்கும்போதே, நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார்.
இதனால் அதிர்ந்துபோன ரம்லத், நீதிமன்றத்தில் பிரபு தேவா, நயன்தாரா இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் பிரபுதேவா, நயன் தாராவை 23-ந்தேதி ஆஜராகும்படி குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் நடப்பது குற்றம் என்ற ரீதியில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ரம்லத்தும், பிரபுதேவாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. எனவே அது சட்டப்படி செல்லாது என்று பிரபு தேவா கருதுகிறார். எனவேதான் நயன்தாராவை திருமணம் செய்வேன் என துணிச்சலாக அவரை பேட்டி அளித்தாராம். ரம்லத்திடம் இருந்து இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு வராது என்றும் அவர் கருதியிருக்கிறார்.
ஆனால் ரம்லத் நீதிமன்றத்துக்குப் போனதால் இப்போது நயன்தாராவுடனான திருமணத்தை தள்ளி வைத்து விட்டார்.
ரம்லத் வழக்கை எவ்வாறு சந்திப்பது என்று வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார் பிரபுதேவா. முதல் சம்மனுக்கு பிரபுதேவாவும் நயன்தாராவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
2-வது சம்மன் தற்போது வந்துள்ளது. இந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகி ரம்லத் திருமணம் செல்லாது என நிரூபிக்க ஆதாரங்களை அவர் தேடுவதாக கூறப்படுகிறது. வக்கீல்களுடனும் இது சம்பந்தமாக விவாதித்து வருகிறார்.
இதை எதிர்ப்பார்த்தே, கணவன்- மனைவியாக சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ரம்லத் தரப்பு தயாராகி வருகிறது.
பிரபுதேவாவை மணந்ததும் ரம்லத் இந்து மதத்துக்கு மாறி பெயரை லதா என மாற்றிக் கொண்டார். அதற்கான அரசு கெஜட்டில் கணவர் பிரபுதேவா என இருக்கிறது. பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவற்றிலும் கணவர் பிரபுதேவா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பிறப்பு சான்றிதழிலும் இருவரும் தாய், தந்தை என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
எனவே நவம்பர் 23-ம் தேதி விசாரணையை இரு தரப்புமே பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.
‘குவார்ட்டரை’க் காணோம்!
முதல்வரின் பேரன் என்ற ஒரே தகுதியால், இந்த மாதிரி விதி மீறல்களைச் செய்கிறார்கள். வ குவாட்டர் கட்டிங் எந்த வகையில் தமிழ் பெயர், அதற்கு ஏன் வரிவிலக்கு? என்று போட்டுத் தாளித்துவிட்டார்கள் பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும்.
இதன் விளைவு, படம் வெளியான சில தினங்களுக்கு ‘வ சரக்கு வச்சிருக்கேன்’ என்று விளம்பரம் வெளியிட்டார்கள். ஆனாலும் விமர்சனம் அடங்கவில்லை. இப்போது எதுவுமே வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களோ என்னமோ… வெறு ‘வ’ என்று மட்டும் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்!
குவாட்டரும் கட்டிங்கும் காணாமல் போயிருப்பதை விட முக்கியமான ஒரு மேட்டரும் உண்டு… அது, வெளியானதில் படம் வெளியான பாதித் தியேட்டர்களில் முதல் வாரம் முடிவதற்குள்ளாகவே படமும் காணாமல் போயிருப்பதுதான்!
லாவாஸாவில் விஜய் -அசின் டூயட்!
லாவாஸா?
பூனா அருகே ஸையாத்ரி மலைத் தொடர்களில் அமைந்துள்ள குளுகுளு பிரதேசம்தான் இந்த லாவாஸா. கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் இருக்கும் எஃபெக்ட் லாவாஸாவிலேயே கிடைக்குமாம்.
திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் இந்திய நகரம் என்ற பெருமையும் லாவாஸாவுக்கே உண்டு.
இயற்கையின் அழகு கெடாமல் பராமரிக்கப்படும் இந்த மலை நகரில் எடுக்கப்படும் முதல் தமிழ்ப் படம் காவலன்தான்.
காவலன் படத்துக்காக வித்யாசாகர் இசையில் உருவான ஒரு அழகான மெலடிப் பாடலை இங்கு வைத்துப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விரும்ப, உடனடியாக லாவாஸா பறந்துவிட்டது காவலன் குழு.
இன்னும் ஒரு வாரத்துக்கு அசின் – விஜய் ஜோடி, லாவாஸாவில் ‘டூயட்’ பாடவிருக்கிறது!
சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிப்பேன் - சிம்ரன்
Simran is back in Chennai
Simran Latest Stills, Simran Latest Pictures, photos, images new stills
சென்னை: சென்னையில் நிரந்தரமாக குடியேறி, சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று நடிகை சிம்ரன் கூறினார். அமரன், இதய தாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் கே.ராஜேஷ்வர். இவர், திடீர்நகரில் ஒரு காதல் கானா என்ற புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில், அவருடைய மகன் ரஞ்சன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.படத்தின் தொடக்க விழாவிற்கு நடிகை சிம்ரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் கே.ராஜேஷ்வர் தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர் மட்டுமல்ல. சிறந்த திரைக்கதை ஆசிரியர். சிறந்த வசனகர்த்தா. அவருடைய டைரக்ஷனில் உருவான கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் நான் நன்றாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் என்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், நான், தமிழில் சொந்தமாக சினிமா மற்றும் டெலிவிஷன் படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன். மும்பையில் இருந்துகொண்டு இந்த வேலைகளை செய்ய முடியாது என்பதால், சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கே நான் நிரந்தரமாக குடியேறப்போகிறேன். இதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொந்தமாக வீடு மற்றும் அலுவலகம் கட்டி வருகிறேன். கட்டுமானப்பணிகள் இப்போது நடைபெறுகின்றன. இன்னும் 2 மாதங்களில் அந்த வேலைகள் முடிவடைந்துவிடும். அடுத்த வருட ஆரம்பத்தில், சினிமா மற்றும் டெலிவிஷன் பட தயாரிப்பு பணிகளை தொடங்கி விடுவேன்.மீண்டும் நடிப்பேன். நல்ல கதையும், கதாபாத்திரங்களும் அமைந்தால் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். கே.ராஜேஷ்வர் டைரக்ட் செய்யும் புதிய படம் ஒன்றில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன். என்றார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் கமல் நடிப்பது உண்மையா?
ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் மும்முரமாக உள்ளார். விஜய் உள்ளிட்ட 3 பேர் நாயகன்களாக நடிக்கின்றனர்.
இந்த படம் முடிந்ததும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை ஷங்கர் துவங்குவார் என்றும் செய்திகள் பரவின. இது கல்கியின் பொன்னியின் செல்வனை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும், ரஜினி வந்தியத் தேவன் பாத்திரத்தில் நடிப்பார் என்றும் செய்தி பரவியது.
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியை சன் நெட்வொர்க் பத்திரிகைகள் மற்றும் இணையதளத்திலும் வெளியிடவே, இதனை உண்மையாக இருக்கும் என்றே நம்பிவிட்டனர் பல ரசிகர்களும்.
ஆனால் சம்பந்தப்பட்ட யாரும் இதுபற்றி வாயே திறக்கவில்லை.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் கமல்ஹாஸனிடம் நிருபர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:
“ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியும், நானும் நடிக்கிறோம் என்றும், அதன் பட்ஜெட் ரூ 500 கோடி என்றும் நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரியும். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை,” என்றார்.
இலங்கையின் 83 ‘பலான’ நடிக -நடிகையருக்கு கிடுக்கிப் பிடி!!
கொழும்பு: இலங்கையில் செக்ஸ் படங்களில் நடிக்கும் 83 நடிகர் நடிகைகளை கைது செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.
செக்ஸ் படங்களில் நடிப்பவர்கள் என அறியப்பட்ட நடிகர் நடிகைகளின் படங்களை பத்திரிகைகளில் விளம்பரங்களாக வெளியிட்டும், பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டியும் அடையாளம் காட்டி கைது செய்யுமாறு கொழும்பு கோர்ட் கடந்த நவம்பர் 4-ம் தேதி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை போலீசார், செக்ஸ் நடிகர் – நடிகைகள் 83 பேரின் புகைப்படங்களை முக்கிய நாளிதழ்களில் விளம்பரங்களாக வெளியிட்டு, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
இவர்களின் படங்கள் முக்கிய இடங்களிலும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டுள்ளன.
இந்தப் புகைப்படங்களை பல்வேறு ஆபாச இணையதளங்களிலிருந்து இலங்கை போலீசார் எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நடிக – நடிகையர் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு ஆபாச தடுப்புச் சட்டப்படி 6 மாதங்கள் தண்டனை கிடைக்கும்.
இதே போல, 100க்கும் மேற்பட்ட இலங்கை ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.