சென்னை: விஸ்வரூரபம் படத்தின் காட்சி அமைப்புகளுக்கான ஆதார அடிப்படையில்தான் சான்றிதழ் கொடுத்தோம். படத்தில் 14 காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே சான்று அளிக்கப்பட்டது என்று மத்திய தணிக்கை வாரியம் விளக்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விஸ்வரூபம் தடை நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்திய தணிக்கை வாரியமும் தனது தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், மொத்தம் 14 காட்சிகளை படத்திலிருந்து நீக்க உத்தரவிட்டோம். அதன்படி நீக்கப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய 1.8 நிமிட நேர காட்சி ஒன்றும் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
காட்சி அமைப்புகளுக்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் படத்திற்கான சான்றிதழை அளித்தோம். முற்றிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டே சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment