ஓடிப் போய்டுவோம்... பெற்றோரை மிரட்டிய கரீனா-சைப் (இது திருமணத்திற்கு முன்)

|

Kareena Kapoor Saif Ali Khan Threatened

மும்பை: பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவோம் என்று திருமணத்திற்கு முன்பு அவர்களின் பெற்றோரை மிரட்டியுள்ளனர்.

பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து கரீனா பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நானும், சைபும் எங்கள் பிரைவசியை விரும்புகிறவர்கள். திருமணத்தன்று நாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எந்த டிசைனர் உடை அணிகிறோம், யார் யாரை எல்லாம் அழைக்கிறோம் என்பதை அறிய மக்கள் ஆர்வாக இருந்தனர். திருமணம் முடிந்த பிறகு வீட்டு மாடியில் வந்து நின்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றோம்.

எங்கள் திருமணத்தை மீடியாக்கள் முன்பு நடத்தி சர்க்கஸ் ஆக்கினால் நாங்கள் இருவரும் ஓடிப் போய் லண்டனில் திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோரை மிரட்டினோம் என்றார்.

சைபும், கரீனாவும் நீண்டடடட காலமாக காதலர்களாக இருந்து இப்போது திருமணம் அப்போது திருமணம் என்று கூறி ஒரு வழியாக மணந்ததால் தான் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

 

Post a Comment