கஹானி படத்தில் நடிப்பேன், நடிக்க மாட்டேன், நடிப்பது குறித்து ஆலோசிப்பேன், தெரியாது என்றெல்லாம் தினசரி ஒரு அறிவிப்பை வெளியிட்டு வந்த நயன்தாரா, கடைசியில் அந்தப் படத்தி்ல நடிக்கிறார். அதுவும் கர்ப்பிணி வேடத்தில்.
பிரபு தேவா விவகாரத்துக்குப் பின் நயன்தாரா தொடங்கியுள்ள மூன்றாவது இன்னிங்ஸில் அதிரடி வேடங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சி, பிகினி, லிப் டு லிப் என எந்த வேடத்துக்கும் மறுப்பே சொல்லாமல் தயாரிப்பாளர்களை குளிர்வித்து வரும் நயன்தாரா, இப்போது கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் அவர் நடிக்க மறுத்திருந்தார். ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
தமன்னா, அனுஷ்கா என வேறு நடிகைகள் பெயரும் அடிபட்டது. ஆனால் திடீரென நயன்தாரா நடிக்க சம்மதித்துவிட்டார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில், "ஒரு கர்ப்பிணி மனைவி தனது கணவனை தேடி அலைவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
Post a Comment