மும்பை: பத்மஸ்ரீ விருது தனக்கு கிடைத்த கௌரவம் என்று நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
மும்பையில் செட்டிலான தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பத்ஸ்ரீ விருது எனக்கு கிடைத்த கௌரவம். எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து வரும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கடந்த 1967ம் ஆண்டு கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் பிரபலமான அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் குழந்தை நட்சத்திரமாக சென்ற பாலிவுட்டில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார்.
பின்னர் பாலிவுட் இயக்குனர் போனி கபூரை மணந்து ஜான்வி, குஷி ஆகிய 2 குழந்தைகளுக்கு தாயானார். திருமணம், குழந்தை என்ற ஆன பிறகு பெரிய திரையைவிட்டு ஒதுங்கி இருந்த அவர் 15 ஆண்டுகள் கழித்து இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தின் மூலம் அண்மையில் தான் ரீ என்ட்ரி ஆனார். இந்நிலையில் தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
Post a Comment