உங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்!

|

Murder Threat Mallika Sherawat

மும்பை: ராஜஸ்தானில் கொல்லப்பட்ட நர்ஸ் பன்வாரி தேவி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிக்கும் நடிகை மல்லிகா ஷெராவத்தின் தம்பிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனராம்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி. நர்ஸான இவர் அரசியல்வாதியுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் விளைவாக பின்னர் உயிரை இழந்தார். இவரது கொலைச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது பன்வாரி தேவி கதையை பாலிவுட்டில் படமாக்குகின்றனர். பன்வாரி தேவி வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறாராம். ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மல்லிகா இந்த வேடத்தில் நடிக்கக் கூடாது என்று சிலர், தொலைபேசி மூலம் மல்லிகாவின் தம்பியைப் பிடித்து மிரட்டினராம்.

இதுகுறித்து மல்லிகா கூறுகையில், எங்களுக்கு மிரட்டல் வந்தது உண்மைதான். சிலர் எனது சகோதரரிடம் போன் மூலம் உனது சகோதரியிடம் சொல்லி இந்தி விவகாரத்தில் இருந்து விலகிட சொல் என கூறி உள்ளனர். என்னை யாரும் இதுவரை நேரடியாக மிரட்டவில்லை.

ஒவ்வொரு நடிகரும் நடிகையும் அரசியலுக்கு பலியாகிறார்கள். ஒவ்வொரு நாளும் அரசியல் செய்தாக வேண்டும். இந்தியாவில் வாழ்வதற்கு கண்டிப்பாக அரசியல் செய்ய வேண்டும். நான் நல்ல அரசியல்வாதியாகவும் கெட்ட அரசியல்வாதியாகவும் நடித்து இருக்கிறேன் என்றார் மல்லிகா.

 

Post a Comment