நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!

Tags:


உதடு வரை வந்த அஜீத் முத்தமிடாமல் விலகிச் சென்றதால் பெரும் ஏமாற்றமடைந்தாராம் திரிஷா.

இது நிஜத்தில் அல்ல, சினிமாவுக்கா. அஜீத்தும், திரிஷாவும் இணைந்து நடிக்கும் படம் மங்காத்தா. இது திரிஷாவுக்கு 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ள வைத்து வருகிறது. அதேசமயம், படத்தில் இடம் பெறும் ஒரு ரொமான்ஸ் காட்சியும் ரசிகர்களை துடிக்க வைக்குமாம்.

காட்சிப்படி ஒரு சீனில் அஜீத்தும், திரிஷாவும் சற்றே நெருக்கமான முறையில் நடித்துள்ளனர். இதில் அஜீத், திரிஷாவுக்கு உதட்டில் பச்சக்கென ஒரு இச் தருவதாக முதலில் திட்டமிட்டிருந்தனர். இந்தக் காட்சிக்கு திரிஷாவும் ஓ.கே சொல்லியிருந்தார். அஜீத்தும் தயக்கத்திற்குப் பின்னர் சரி என்று கூறியிருந்தார்.

இதையடுத்து காட்சிக்குப் போனார்கள். அஜீத்தும் திட்டமிட்டபடி திரிஷாவின் உதடு வரை வந்தாராம். வந்தவர் உதட்டை டச் பண்ணாமல் அப்படி ஒரு யூ டர்ன் போட்டு விட்டு வந்த வழியே திரும்ப போய் விட்டாராம்.

இதை இயக்குநர், திரிஷா உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்குத் தேவையான எபக்ட் கிடைத்து விட்டதாம். லிப் டூ லிப் கொடுப்பதில் அஜீத்துக்கு நிறைய தயக்கம் இருந்ததால்தான் இந்த அளவோடு நிறுத்திக் கொண்டு விட்டாராம் தல.

உதடு கிடைத்தால் குண்டக்க மண்டக்க விளையாட எத்தனையோ ஹீரோக்கள் காத்திருக்கும் நிலையில் படு டீசன்ட்டாக நடந்து கொண்ட அஜீத்தை பாராட்டலாம்தானே.

ஆனால் திரிஷாவுக்குத்தான் நிறைய ஏமாற்றமாம். அடடா, தலைக்கு வந்தது இப்படி தலைப்பாகையோடு போய் விட்டதே என்று லைட்டாக அப்செட் ஆகி விட்டாராம்.

விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவின் உதடுடன் முத்த மோதல் பூண்ட திரிஷாவுக்கு ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும்!
 

கணவர் நிஷால் சந்திராவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் காவ்யா மாதவன்

Tags:


கொச்சி: பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு விவாகரத்து அளித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபல மலையாள் நடிகை காவ்யா மாதவன். கடந்த 1991-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளத்தில் பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

காவ்யாவுக்கும் கம்யூட்டர் என்ஜினியர் நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. பிப்ரவர் மாதம் காவ்யா கணவருடன் குவைத்தில் செட்டிலானார். ஆனால் சில மாதத்திலேயே பிரச்சனை ஏற்பட்டு காவ்யா ஜூன் மாதம் நாடு திரும்பினார்.

பிறகு அக்டோபர் மாதம் தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தனர். இதற்கிடையே தன்னை தனது கணவரும், அவரது குடும்பத்தாரும் கொடுமைப் படுத்தியதாகவும் காவ்யா புகார் கொடுத்தார்.

இந்த விவகாரத்து வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று காவ்யா மாதவனுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனது கணவர் மீது கொடுத்த புகாரை காவ்யா வாபஸ் பெற்றார்.
 

ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு

Tags:


முதல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.

சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன.

படத்தின் நாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இயக்குநர் வெற்றி மாறனுக்கு 2 விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில் இன்று திடீரென ஆடுகளம் படக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இக்குழுவில் தனுஷ், வெற்றி மாறன், எடிட்டர் கிஷோர், தயாரிப்பாளர் கதிரவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற என்னை முதல்வர் வாழ்த்தினார். மற்றவர்களையும் வாழ்த்தினார். பாராட்டு தெரிவித்தார்.ரஜினிசாரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார் என்றார்.

ஜெயலலிதாவுடன் லண்டன் தொழிலதிபர் சந்திப்பு:

அதே போல முதல்வர் ஜெயலலிதாவை பிரிட்டன் வாழ் தொழிலதிபர் லார்ட் ஸ்வராஜ் பாலும் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வராஜ் பால் கபாரோ குழுமத்தின் தலைவராவார். நேற்று சென்னை வந்த ஸ்வராஜ் பால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கபாரோ குழும தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.
 

மறுபடியும் நடிக்கவே மாட்டேன்-சொல்கிறார் மீனா

Tags:


என்னுடைய செல்லக் குழந்தையுடன் நேரத்தை செலவிடவே எனக்கு சரியாக இருக்கிறது. அவளைப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் இனி என்னுடைய வேலை. எனவே மறுபடியும் நான் நடிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் மீனா.

கண்ணழகியாக, தமிழ் திரையுலகை கலக்கி வந்த மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற பொறியாளருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குட்டிப் பாப்பாவுக்கு நைனிகா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மீனா மீண்டும் நடிக்கப் போவதாகவும், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவுக்கு மாமியார் வேடத்தில் அவர் தெலுங்கில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் மீனா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு நடிக்கும் எண்ணமே இல்லை. இப்போது நான் நிம்மதியாக, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் நைனிகாவை பார்த்துக் கொள்ளவே எனக்கு நேரம் போதவில்லை. எனவே மீண்டும் நடிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை என்றார் மீனா.
 

அக்கா வேடத்தில் நடிப்பது ஏன்?

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அக்கா வேடத்தில் நடிப்பது ஏன்?

5/31/2011 12:19:01 PM

அனுயா கூறியது: 'சிவா மனசுல சக்திÕ படம் என்னை அடையாளம் காட்டியது. 'மதுரை சம்பவம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்தடுத்து வந்த படங்களும் பேசும்படியாகவே அமைந்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஷங்கரின் 'நண்பன்Õல் கிடைத்த வாய்ப்பு. இலியானாவின் அக்காவாக நடிக்கிறேன். இது முக்கியமான வேடம். கிளைமாக்ஸ் என்னை சுற்றித்தான் நடக்கிறது. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.இதற்கு மேல் என் வேடம் பற்றி எதுவும் கூற முடியாது. இதன் ஷூட்டிங்கில் ஆகஸ்ட் வரை கலந்துகொள்கிறேன். அடுத்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் 'நான்Õ படத்தில் நடிக்கிறேன். இப்படத்திலும் சஸ்பென்ஸ் வேடம். எனது வேடம்பற்றி சொன்னால் கதையின் சஸ்பென்ஸையே உடைத்ததுபோலாகி விடும். எனவே இரண்டு படங்களின் வேடத்தின் ரகசியம் காத்து வருகிறேன். நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன்.




 

நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

5/31/2011 12:15:23 PM

இத்தாலியில் உள்ள மிகப் பழமையான மிலன் மக்கள் யுனிவர்சிட்டி, நடிகர் விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் வழங்கியது. பல்கலைக்கழகத்தின், துணைத் தலைவர், சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்னிலையில் பட்டத்தை பல்கலைத் தலைவர் பேராசிரியர் மார்கோ கிராப்ஸியா விக்ரமுக்கு வழங்கினார். சிறந்த நடிப்புக்காக, ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து டாக்டர் பட்டம் பெறும் முதல் இந்தியர் விக்ரம்.




 

உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை

5/31/2011 12:13:39 PM

முன்னாள் கணவர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த நடிகை வனிதா கைதாகி விடுதலை செய்யப்பட்டார். நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தாயுடன் 2 நாட்களும், தந்தை ஆகாஷுடன் 5 நாட்களும் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஸ்ரீஹரியை தன¢னிடம் ஒப்படைக்காததால் நுங்கம்பாக்கம் போலீசில் வனிதா புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணா விரதம் இருப்பேன் என வனிதா கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணி அளவில் வனிதா சாலிகிராமம் லோகையா காலனி 5வது தெருவில் உள்ள முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். பையில் வைத்திருந்த பெட்ஷீட்டை வீட்டு வாசலில் விரித்து உட்கார்ந்தார். "ஸ்ரீஹரியை ஒப்படைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்'' என்று கூச்சல் போட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "7 மாத காலமாக என் மகன் ஸ்ரீஹரியை மீட்க போராட்டம் நடத்தி வருகிறேன். ஒரு தாய் தனது மகனை மீட்க எந்தளவுக்கு போராட வேண்டி இருக்கிறது. கோர்ட் உத்தரவை ஆகாஷ் மதிக்கவில்லை. என் மகனை என்னிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றுகிறார். என் மகன் பிரச்னை இந்தளவுக்கு போவதற்கு காரணம் போலீஸ் தான்'' என்றார்.  வடபழனி உதவி கமிஷனர் நந்தகுமார், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி வனிதாவிடம் வலியுறுத்தினார். ஆனால் மறுத்து விட்டார். இதையடுத்து ஆகாஷ் வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாலை 3 மணி அளவில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததற்காக வனிதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

 

நடிகர் ராஜசேகருக்கு எலும்பு முறிவு!

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் ராஜசேகருக்கு எலும்பு முறிவு!

5/31/2011 12:14:14 PM

இதுதாண்டா போலீஸ் பாகம் 2 படபிடிப்பின்போது நடிகர் ராஜ சேகருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர். இவர் தற்போது, "மஹா காளி" என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தை அவரது மனைவி நடிகை ஜீவிதா இயக்கி வருகிறார். இந்த படம் தமிழில் "இதுதாண்டா போலீஸ் பாகம் 2' என்ற பெயரில் சூட்டிங் நடந்து வருகிறது. இதனையும் நடிகை ஜீவிதாவே இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்திற்கான சூட்டிங் நடந்து வருகிறது.

இதுதாண்டா போலீஸ் பாகம் 2' படத்துக்கான சில காட்சிகள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை படமாக்கப்பட்டது. வில்லன்களுடன் கதாநாயகன் ராஜசேகர்  மோதும் பரபரப்பான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்து கொண்டிருந்தார். 10 அடி உயரத்துக்கு எகிறி குதித்து வில்லனுடன் மோதும் காட்சியில் நடித்த சில துணை ஸ்ட ன்ட் நடிகர்கள் சரியாக நடிக்கவில்லை. எனவே, அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.

வில்லனுடன் மோதியபோது நிலை தடுமாறி 10 அடி உயரத்தில் இருந்து ராஜசேகர் கீழே விழுந்தார். எதிர்பாராத விதமாக அவரது முகமும் தரையில் மோதியது. இதனால் அவரது முகத்தில் தரையில் இருந்த ஜல்லி கற்கள் குத்தின. அத்துடன் அவரது முட்டியிலும் வலது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.  வலி தாங்க முடியாமல் துடித்தார். இந்த சம்பவத்தை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விரைந்து சென்று டாக்டர் ராஜசேகரை மீட்டு ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் உடனடியாக முதல் உதவி அளித்தனர். அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில்  வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் நடிகை ஜீவிதா மற்றும் அவரது தம்பி நடிகர் செல்வா ஆகியோர் உள்ளனர்.

 

நடிகை காவ்யா மாதவனுக்கு விவாகரத்து!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை காவ்யா மாதவனுக்கு விவாகரத்து!

5/31/2011 12:14:37 PM

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு, எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கியது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான காவ்யா மாதவனுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த நிஷால்சந்திரா என்பவருக்கும், கடந்த 2009ம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகா கோயிலில் திருமணம் நடந்தது. நிஷால்சந்திரா, குவைத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பின்னர், காவ்யா மாதவன் கணவருடன் குவைத்திற்கு சென்றார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணம் முடிந்த 5வது மாதத்தில் கணவரை பிரிந்த காவ்யா மாதவன், கேரளாவுக்கு திரும்பினார். அதன் பின்னர், அவர் குவைத் செல்லவில்லை. இதன்பின், காவ்யா மாதவன் கடந்த ஆண்டில் எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் காவ்யா மாதவனுக்கு விவாகரத்து வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.

 

பெ‌ரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெ‌ரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன்!

5/31/2011 11:39:03 AM

பாணா காத்தாடிக்குப் பிறகு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. அதர்வா வளர்ந்து வரும் நடிகர். இந்த நேரத்தில், பெ‌ரிய இயக்குனர், நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என யாரும் தீர்மானம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதர்வா வித்தியாசம். பெ‌ரிய பேனர், பெ‌ரிய இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தீர்மானித்திருக்கிறார். வளர்ந்து வரும் நேரத்தில் ‌ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை... அதனால்தான் இந்த‌த் தீர்மானம் என்கிறார்.




 

மீண்டும் விஜய்-ஆர்யா கூட்டணி

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மீண்டும் விஜய்-ஆர்யா கூட்டணி

5/31/2011 11:39:27 AM

மதராசப்பட்டினத்துக்குப் பிறகு விஜய் இயக்கியிருக்கும் தெய்வத்திருமகள் வெளியாகும் முன்பே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதாதற்கு பாலசந்தர் விஜய்யை மிகச் சிறந்த இயக்குனர் என அடையாளப்படுத்தியிருக்கிறார். தெய்வத்திருமகள் படத்துக்குப் பிறகு விஜய் ஆர்யாவை வைத்து படம் இயக்குகிறார். மதராசப்பட்டினத்துக்குப் பிறகு இந்த‌க் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பது புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் கதை மற்றும் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.




 

படு வேகத்தில் ஷங்கரின் நண்பன்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படு வேகத்தில் ஷங்கரின் நண்பன்!

5/31/2011 11:38:35 AM

பொதுவாக ஷங்கர் பட ஷூட்டிங் என்றால் குறைந்தபட்சம் ஒரு வருஷமாவது நடக்கும். ஆனால் தற்போது ஷங்கர் படமா என்று ஆச்ச‌ரியப்படும் அளவுக்கு இருக்கிறது நண்பன் படத்தின் வேகம். 25ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் நண்பன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து அவசர அவசரமாக கோயம்புத்தூர் வந்தார் நடிகர் ‌ஜீவா. அதேபோல் இலியானா. காய்ச்சலால் கோவாவில் சிகிச்சை பெற்று வந்த இவரும் படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் வந்துள்ளார். நண்பனின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூ‌ரின் வெப்பத்தை தாங்க முடியவில்லை என டுவிட்ட‌ரில் புலம்பியிருக்கிறார் இலியானா.

 

கேங்ஸ்டராக நடிக்கிறார் சிம்பு

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கேங்ஸ்டராக நடிக்கிறார் சிம்பு

5/31/2011 10:59:28 AM

விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் படங்களில் மென்மையான சிம்புவைப் பார்த்த ரசிகர்களுக்கு வேட்டை மன்னன் படத்தில் சிம்பு வித்தியாசமாக‌த் தெ‌ரிவார் என்றார்கள். இதில் வன்மையான கேங்ஸ்டராக நடிக்கிறாராம் சிம்பு. இதுதான் சிம்புவின் கே‌ரிய‌ரில் மிக பிரமாண்டமான படம் என்பது உப‌ரி தகவல். எஸ்.எஸ்.சக்ரவர்த்தி முப்பது கோடி வரை வேட்டை மன்னனுக்காக செலவ‌ழிக்கயிருக்கிறாராம். இசை யுவன் ஷங்கர் ராஜா. ஜெய் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதாவது சிம்புவின் நண்பனாக.

 

இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை : அனுஷ்கா!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை : அனுஷ்கா!

5/31/2011 10:56:36 AM

சிங்கம் படத்தின் இந்தி ‌ரீமேக்கில் காஜல் அகர்வால் ஹீரோயின். சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த அனுஷ்காவிற்கு ஏன் இந்தி ‌‌ரீமேக்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை? என்று அவரிடம்(அனுஷ்காவிடம்) கேட்டோம்… சிங்கத்தின் இந்தி ‌‌ரீமேக்கில் நடிக்க என்னைதான் கேட்டனர். ஆனால் இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை, அதனால் முடியாது என்று கூறிவிட்டேன் எனக் கூறினார் அனுஷ்கா. தமிழும், தெலுங்கும் அனுஷ்காவுக்கு போதுமாம்.

 

சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால்!

Tags:


தம்பி கார்த்திக்குடன் ஜோடி போட்ட காஜல் அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாகிறார்

சூர்யா அடுத்து நடிக்கவுள்ள மாற்றான் படத்தில் அவருக்கு ஜோடி போடுகிறார் காஜல் அகர்வால்.

ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் ஜோடி போட்டு நடித்தவர் காஜல். இந்தப் படத்திற்குப் பிறகு அவருடன் சேர்த்து கிசுகிசுக்கவும் பட்டார்.

இந்த நிலையில் தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் இணைகிறார் காஜல். மாற்றான் படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைகிறார் காஜல்.

படத்தை இயக்கப் போவது கே.வி.ஆனந்த். கோ படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு வருகிறார் ஆனந்த். அதேபோல தற்போது ஏழாம் அறிவு படத்தில்நடித்து வரும் சூர்யா அந்தப் படத்தை முடித்த பின்னர் இப்படத்திற்கு வருகிறார்.

மாற்றான் பட நாயகியாக யாரைப் போடுவது என்பதில் ஆரம்பத்தில் பெரும் குழப்பம் இருந்ததாம். தமன்னா, அனுஷ்கா என பலரையும் பரிசீலித்துள்ளனர். அமலா பாலின் பெயரும் கூட அடிபட்டதாம். தமன்னா வேண்டாம் என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. அனுஷ்காவும் பின்னர் நிராகரிக்கப்பட்டார். அமலா பால் ஸ்டிராங்கான முகமாக இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளார். இறுதியில் காஜல் அகர்வால் தேர்வானார்.

காஜலிடம் ஆனந்த் கதையைச் சொல்லியுள்ளாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

நான் மகான் அல்ல படத்திற்குப் பிறகு காஜலைத் தேடி தமிழ்ப் படங்கள் எதுவும் வரவில்லை. இதனால் தெலுங்குக்குத் திரும்பினார் காஜல். அப்படியே பாலிவுட்டுக்குப் போய் விடலாமா என்ற யோசனையில் இருந்தவரை ஆனந்த் அணுக, இப்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பிகிறார் காஜல்.
 

இயக்குநர் ஜெயம் ராஜா பிறந்த நாள்-கேக் கொடுத்த விஜய்

Tags: lsquo, rdquo


இயக்குநர் ஜெயம் எம்.ராஜா தனது பிறந்த நாளை வேலாயுதம் படப்பிடிப்பில் வைத்துக் கொண்டாடினார்.

இயக்குநர் எம்.ராஜா இன்று தனது பிறந்தநாளை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் ‘வேலாயுதம்” படப்பிடிப்பில் கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கே தெரியாமல் நடிகர் விஜய் 'சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!” என எழுதபட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை வரவழைத்து படப்பிடிப்பின் இடைவேளையில் இயக்குநரை ஆச்சர்யப்படுத்தினார்.

நடிகர் விஜய், கேமராமேன் ப்ரியன் உட்பட படிப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் எம்.ராஜா.

ஏற்கனவே ‘வேலாயுதம்” படபிடிப்பின்போது நடிகை ஹன்சிகா மோத்வானி, கேமராமேன் ப்ரியன், தனக்கு தங்கையாக நடிக்கும் நடிகை சரண்யா மோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவிற்கும் நடிகர் விஜய் தான் கேக் வரவழைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
 

தள்ளிப் போனது சூர்யாவின் 7ஆம் அறிவு!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தள்ளிப் போனது சூர்யாவின் 7ஆம் அறிவு!

5/31/2011 10:50:19 AM

ஜூனில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் 7ஆம் அறிவு படம் போஸ்ட் புரொடக்சன் முடியாததால் ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டு‌ள்ளதாக கூறுப்படுகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை ஜூலையில் திரைக்கு கொண்டுவர முருகதாஸும், தயா‌ரிப்பாளர் உதயநிதியும் திட்டமிட்டனர். ஆனால் போஸ்ட் புரொடக்சன் முடியாததால் 7ஆம் அறிவு படம் ஜூலையில் திரைக்கு வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம் 7ஆம் அறிவு. மார்ஷியல் ஆர்ட்டை மையமாக வைத்து முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியிருப்பதாகவும், சூர்யா சர்க்கஸ் கலைஞராக நடித்திருப்பதாகவும், இன்னொரு வேடம் சீக்ரெட் எனவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார்.




 

ஒரு பாடலுக்கு ஆட சம்மதம்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு பாடலுக்கு ஆட சம்மதம்!

5/31/2011 10:32:30 AM

கிருஷ்ணவம்சி தெலுங்கில் கோபிசந்தை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் தாப்ஸீ ஹீரோயின். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட காஜல் அகர்வாலிடம் கேட்டுள்ளார். காஜலின் சினிமா கே‌ரியர் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு கிருஷ்ணவம்சியும் ஒருவர். அதனால் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். சும்மாயில்லை… ஐந்து நிமிஷ பாடலுக்கு ஆட முப்பது லட்சம் சம்பளம் தரப்பட்டிருக்கிறது காஜலுக்கு.

 

முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைதாகி விடுதலை

Tags:


தனது முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த நடிகை வனிதாவைப் போலீஸார் கைது செய்து, கடும் எச்சரிக்கையுடன் விடுவித்துள்ளனர்.

நடிகர் விஜயக்குமார் மற்றும் அவரது 2வது மனைவி மஞ்சுளாவுக்குப் பிறந்தவர் வனிதா. இவருடைய முதல் கணவர் நடிகர் ஆகாஷ். இவர்களது மகன் விஜய் ஸ்ரீஹரி.

விஜய் ஸ்ரீஹரி தொடர்பாக முதலில் வனிதாவுக்கும், விஜயக்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் இடையிலான தகராறாக மாறியது.

தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகிறார் வனிதா. ஆனால் மகன் வந்தால் தாராளமாக அழைத்துப் போகட்டும் என்கிறார் ஆகாஷ். ஆனால் விஜய் ஸ்ரீஹரியோ தனது தாயுடன் போக மறுத்து வருகிறான்.

இந்த நிலையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை வனிதாவோடு ஸ்ரீஹரி இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் கோர்ட் உத்தரவிட்டும் மகனை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறி வருகிறார் வனிதா.

இதுதொடர்பாக சற்று இடைவெளி விட்டிருந்த வனிதா தற்போது பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

விஜய் ஸ்ரீஹரியிடம் போலீஸ் தரப்பில் பல மணி நேரம் கவுன்சிலிங் நடத்தியும், அவன் தனது தந்தையுடன்தான் இருப்பேன் என்று கூறி விட்டான்.

இந்த நிலையில் நேற்று ஆகாஷ் வீட்டுக்குச் சென்ற வனிதா அவரது வீட்டு முன்பு தனது 2வது கணவருக்குப் பிறந்த மகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

வனிதாவின் 2வது கணவர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக சற்று தொலைவில் நின்று கொண்டார்.

வனிதாவின் இந்தப் போராட்டத்தால் நடிகர் ஆகாஷ் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே கிளம்பிப் போய் விட்டார்.

இந்த நிலையில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி வனிதாவை கைது செய்து காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். பின்னர் அவரை அங்கு வைத்து கடுமையாக எச்சரித்தனர். இதுபோல இனிமேல் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினால் அடுத்து கைது செய்து சிறையில் தள்ளி விடுவோம் என்று கடுமையாக எச்சரித்து அவரை மாலையில் விடுவித்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் தான் சட்ட ரீதியாக தொடர்ந்து போராடப் போவதாக வனிதா கூறியுள்ளார்.
 

ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கினேனா.. ரஹ்மான் ஆவேசம்

Tags:


டெல்லி: ஆஸ்கர் விருதைப் பெற பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார் சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.

அவர் கூறுகையில், 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.

உடனே அவரிடம் நிருபர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? எதை வைத்து இந்த குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு இஸ்மாயில் தர்பாரால் ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியவில்லை. இதையடுத்து இஸ்மாயிலுக்கு பல்வேறு துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மீது தேவை இல்லாமல் புழுதி வாரி தூற்றக்கூடாது என்று இந்திப்பட உலகினர் கூறியுள்ளனர்.

இந்தியர்களுக்கு ஆஸ்கார் விருது மூலம் பெருமை தேடி தந்தவர் ரஹ்மான். அவரை பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று மற்றொரு இசை அமைப்பாளர் லலித் பண்டிட் கூறினார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. உடனடியாக அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், ஆஸ்கார் விருதுகளை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. 3 ஆயிரம் மக்களால் விருதுகள் தேர்வு நடக்கிறது. எப்படி பணம் கொடுத்து வாங்க முடியும், என்றார்
 

அம்மா ஆட்சி அமைய அணிலாக இருந்தோம் - விஜய்

Tags:

http://thatstamil.oneindia.in/img/2011/05/30-vijay-jaya300.jpg
சென்னை: அம்மா ஆட்சி அமைய நாங்கள் அணிலாக இருந்தோம் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், "நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டிய போது எனக்கு பெருமையாக இருந்தது.

மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது. இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை

மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.

இனி மேலும் சமூக நலப்பணியை தொடர்ந்து செய்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, ஜெயலலிதாவின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில்," என்றார் விஜய்.

பின்னர் வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்தார்.
 

கிம் கர்தஷியான்-கிரிஸ் ஹம்ப்ரீஸ் நிச்சயதார்த்தம் முடிந்தது!

Tags:

வாழ்க்கையில் 'செட்டிலாகிறார்' கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியான். அவருக்கும், அமெரிக்காவின் நியூஜெர்சி கூடைப்பந்து வீரர் கிரிஸ் ஹம்ப்ரீஸுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இருவரும் சில காலமாக காதலித்து வந்தனர். இதுகுறித்து கிசுகிசுக்கள் பிய்த்துக் கொண்டு வெளியாகின. இருந்தாலும் தங்களது காதலை இருவரும் கமுக்கமாக வைத்திருந்தனர். இப்போது நிச்சயதார்த்த்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

கவர்ச்சி வெடிகுண்டான கிம்முக்கும், நியூஜெர்சி கூடைப்பந்து வீரர் ஹம்ப்ரீஸுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கிம்மிடம் பீப்பிள் பத்திரிக்கை கருத்து கேட்டபோது இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார். கிம்மும், கிரிஸும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். மே 18ம் தேதியன்று என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா கிம் என்று கிரிஸ் கேட்டாராம். சந்தோஷித்துப் போன கிம் உடனே ஓ.கே சொல்லி விட்டார். இதையடுத்து நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம். இப்போது கிம் கை விரலில் கிரிஸ் மாட்டிய நிச்சயதார்த்த மோதிரம் பளிச்சென பிரகாசிக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் கிம்முக்கு வயசு 30, கிரிஸுக்கு வயசு 26.

கல்யாணம் செய்து கொள்வது குறித்து கிரிஸ் கூறியது குறித்து கிம் தொடர்ந்து கூறுகையில், அவர் அப்படிக் கேட்டதும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அதை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. எனது வீட்டின் படுக்கை அறையை ரோஜா பூக்களால் நிரப்பி வைத்திருந்தார் கிம். எனக்கு அந்த சூழலே மிக மிக ரம்மியாக இருந்தது. எனது வீட்டிலேயே வைத்து என்னைக் கல்யாணம் செய்து கொள்வது குறித்து அப்படி ஒரு அலங்காரத்துடன் அவர் கேட்டது என்னைக் கவர்ந்து விட்டது என்றார் கிம் குதூகலத்துடன்.

அப்புறம் என்ன இனி ஜம்மென்று வாழ்க்கை வண்டியை செலுத்த வேண்டியதுதானே...!
 

பேரன்களைப் பார்த்தார் ரஜினி!

Tags:


சிங்கப்பூர்: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, நேற்று தனது பேரன்களை வரவழைத்து பார்த்து மகிழ்ந்தார்.

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சைப் பெற சிங்கப்பூரில் உள்ள ஆசியாவின் மிகச் சிறந்த மருத்துவமனையான மவுன்ட் எலிசபெத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார்.

டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார்.

சென்னையிலிருந்து மனைவி லதாவுடன் வந்திருந்த பேரக் குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்காவை கொஞ்சி மகிழ்ந்தார்.

ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

'நான் ரிடையர் ஆகல... !'- லதா மங்கேஷ்கர்

Tags:


மும்பை- நான் சினிமாவில் பாடவதிலிருந்த ரிடையர் ஆகிவிட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை. நான் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறேன்... பாடுவேன், என்கிறார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

81 வயதாகும் லதா மங்கேஷ்கர், திரை இசையில் ஒரு வாழும் சகாப்தமாகத் திகழ்பவர். பல தலைமுறைகள் தாண்டி இன்று வரை பாடிக் கொண்டிருப்பவர்.

இவர் பாடுவதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக பிரபல பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டது. உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் லதா.

"நான் பாடுவதை நிறுத்திவிட்டதாக டிஎன்ஏ என்ற செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தவறான தகவல். இவ்வளவு பிரபல பத்திரிகை பொய்யான தகவலை வெளியிடலாமா... குறைந்தபட்சம் என்னை கேட்டாவது எழுதக் கூடாதா?

நான் ரிடயராவதை நான்தான் அறிவிக்க முடியும். மற்றவர்கள் சொல்லக் கூடாது.

நான் எனது கடைசி மூச்சுவரை பாடிக் கொண்டுதான் இருப்பேன். நான் பாடுவதை நிறுத்திவிட்டதாகக் கூறுவது என்னை அவமானப்படுத்துவதற்கு சமம். இதைச் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை," என்றார்.

பாரத் ரத்னா விருது பெற்றுள்ள லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில் 70 ஆண்டுகளாகப் பாடி வருகிறார்.
 

'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...': நர்த்தகி ஹீரோவுக்கு குவிந்த பாராட்டுகள்

Tags:


நர்த்தகி படத்தில் சிறு வயது திருநங்கையாக நடித்த அஸ்வினுக்கு பாராட்டுகள் குவிகிறது. அவருடன் படித்த சக தோழிகளே போனிலும் நேரிலும், ஏய் நீ எங்களை விட ரொம்ப அழகா இருக்கே என்கிறார்களாம்.

சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் நர்த்தகி படத்தில் சிறுவயது கல்கியாக நடித்தவர் அஸ்வின். ஒரு ஆண் மெல்ல மெல்ல பாலுணர்வு பிறழ்ந்து பெண்ணாக மாறுகிற வேடத்தில் நடித்திருக்கிறார் இவர். இந்த கேரக்டரில் நடித்த அஸ்வினுக்கு படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வேடத்தில் நடித்தது குறித்தும், இதற்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள் குறித்தும் அஸ்வின் கூறுகையில், "யாருமே இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க யோசிப்பார்கள். ஆனால் என் தந்தை என்னை மிகவும் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்.

நான் இப்போது ப்ளஸ் 2 படித்து வருகிறேன். சிறுவயதில் என்னை பார்த்த இயக்குநர் தங்கர்பச்சான் தனது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சத்யராஜ் சாரின் பேரனாக நடிக்க வைத்தார்.

அதன்பின் திருப்பூர் செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் பெத்தான் சாமி இயக்கத்தில் குருகுலம் என்ற படத்தில் தனி ஹீரோவாக நடித்து வருகிறேன்.

எனது போட்டோவை பார்த்த இயக்குநர் விஜயபத்மா நேரில் வரவழைத்தார்.

அழகான ஆண்மகனைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். அதற்கு நீ பொருத்தமாக இருக்கிறாய் என்று கூறி இந்த கதையை சொன்னார். அப்போதே முடிவு செய்தேன், இது சவாலான கேரக்டர் என்று. என்னுடைய அப்பாவும்,அம்மாவும் எங்கெங்கோ அலைந்து லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கை எழுதிய புத்தகத்தையும், திருநங்கைகள் உலகம் என்ற புத்தகத்தையும் வாங்கி வந்து என்னிடம் படிக்க கொடுத்தார்கள்.

அதுமட்டுமல்ல, சுமார் பத்து திருநங்கைகளை என் வீட்டிற்கே வரவழைத்து ஒரு வாரம் தங்க வைத்திருந்தார்கள்.

அவர்களின் நடை, மற்றும் குணாதிசயங்களை பார்த்துப் பார்த்து பழக சொன்னார்கள். திருநங்கைகளின் நடையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் கழுத்தை வளைத்து பார்ப்பது கூட தனி பாணியாக இருக்கும். நானும் அதை அப்படியே கற்றுக் கொண்டேன். இப்படி ஒரு செயலை செய்ய முன்வந்த என் பெற்றோர்களுக்குதான் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

நடிக்க போவதற்கு முன்பே இப்படி என்றால் படப்பிடிப்பில் கேட்கவே வேண்டாம். சுமார் பதினெட்டு திருநங்கைகளுடன் நானும் ஒரு தம்பியாக பழகினேன்.

நான் படிக்கிற பள்ளிக்கூடம் ஆண்,பெண் இருபாலரும் படிக்கக்கூடியது. எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அத்தனை பேரும் நர்த்தகி பார்த்துவிட்டு சொன்னது: "ஏய்... நீ எங்களை விட அழகா இருக்கேடா...."

 

திருமணத்துக்கு மும்பையில் உடை வாங்கும் கார்த்தி

Tags:


நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. இதற்காக தனக்கும் எதிர்கால மனைவிக்குமான உடைகளை மும்பையில் டிசைன் செய்து வாங்குகிறார் கார்த்தி.

கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப் புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுநாள் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல துணிக் கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள்.

திருமண வரவேற்புக்கும் இங்கேயே உடைகளை வாங்குகிறார் கார்த்தி.

 

சண்டை போட்டபோது கீழே விழுந்து நடிகர் ராஜசேகர் காயம்

Tags:


சென்னையில் நடந்த சினிமாப் படப்பிடிப்பின்போது தவறி கீழே விழுந்ததில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தெலுங்கில் பிரபலமான நாயகர்களில் ஒருவர் டாக்டர் ராஜசேகர். ஆரம்பத்தில் தமிழில் நடித்து வந்தார். பின்னர் தெலுங்கில் முக்கிய நடிகராக மாறினார். அதிரடிப் படங்களுக்குப் பெயர் போனவர். இதுதாண்டா போலீஸ் உள்ளிட்ட பல அதிரடிப் படங்களில் நடித்தவர்.

இவரது மனைவி நடிகை ஜீவிதா. இவர் தற்போது தனது கணவரை ஹீரோவாகப் போட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இன்று ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினர். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து விட்டார் ராஜசேகர். அதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கமலுக்கு ஜோடி ஸ்ரேயா?

Tags:


விஸ்வரூபம் படத்தில் கமலின் புதிய ஜோடி ஸ்ரேயா என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் ஜோடியாக சிவாஜியில் நடித்ததன் மூலம் டாப் இடத்துக்குப் போனவர் ஸ்ரேயா. அதன்பிறகு கமல் ஜோடியாக அவர் நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது. அந்தப் படம் மர்மயோகி. ஆனால் அது அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.

இப்போது அவர் கமல் எழுதி இயக்கும் விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் முதல் நாயகியாக மும்பையைச் சேர்ந்த சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இரண்டாவது நாயகி வேடம்தான் ஸ்ரேயாவுக்கு என்றாலும், கமலுடன் டூயட் பாடவிருப்பவர் ஸ்ரேயாதான் என்கிறார்கள்.

முதல் நாயகி, இரண்டாவது நாயகி என்ற பேதமெல்லாம் பார்க்காமல் கிடைத்த வேடத்தை ஒப்புக் கொள்ள ஸ்ரேயா தயாராகிவிட்டார். காரணம் அவர் கைவசம் தமிழில் படங்களில்லையே!!

 

அமெரிக்காவில் மாதுரி தீக்ஷித் வாங்கிய பலகோடி ரூபாய் ஷாப்பிங் மால்

Tags:


பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் அமெரிக்காவில் பல மில்லியன் டாலர் மதிப்பில் பெரிய ஷாப்பிங் மால் வாங்கியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் டாக்டர் ஸ்ரீராமை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார் மாதுரி. அவருக்கு வளர்ந்த குழந்தைகள் உள்ளனர். மாதுரி தீட்சித், வீடு அமெரிக்காவின் டென்வர் பகுதியில் உள்ளது.

புளோரிடாவில் உள்ள மியாமி பகுதியில் வணிக வளாகம் ஒன்று விலைக்கு வந்தது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வர்த்தக மையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தை விலைக்கு வாங்க மாதுரி தீட்சித் முடிவு செய்தார். அதற்கு பல கோடிகள் விலை பேசினர். வங்கியில் கடன் வாங்கியும் சொந்த பணத்தை போட்டும் அதை வாங்கி விட்டாராம் மாதிரி.

திருமணத்துக்குப் பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்காவிட்டாலும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று சம்பாதிக்கிறார் மாதுரி. எப்போதாவது தலைகாட்டும் புதிய படங்களுக்கும் பெரிய சம்பளம் பெறுகிறார். அந்த பணத்தை வட்டியும், முதலுமாய் வங்கியில் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்த முடிவு செய்துள்ளாராம்.

 

மகனுக்காக மாஜி கணவன் வீட்டு முன் சாகும்வரை வனிதா உண்ணாவிரதம்!

Tags:


சென்னை: மகன் விஜயஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி முன்னாள் கணவன் ஆகாஷ் வீட்டு முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டார் நடிகை வனிதா.

நடிகை வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகிறார் வனிதா. தற்போது விஜய் ஸ்ரீஹரி ஆகாஷ் வசம் இருக்கிறான். முதலில் அவனை வேண்டாம் என்று கூறிவிட்ட ஆகாஷ், இப்போது கொடுக்க மறுப்பதாக வனிதா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் முடிவில், "விஜய் ஸ்ரீஹரி வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்றும் மற்ற நாட்கள் ஆகாஷ் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்புப்படி மகனை ஆகாஷ் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வனிதா நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இப்பிரச்சினை மீது போலீசார் விசாரணை நடத்தினர். விஜய் ஸ்ரீஹரியிடம் போலீசார் பேசினான். அப்போது அவன் வனிதாவுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டான்.

இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தி வனிதா இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

காலை 12 மணிக்கு படுக்கையுடன் சாலிகிராமம் லோகையா வீதி 5-வது குறுக்கு தெருவில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். தனது பெண் குழந்தையையும் உடன் அழைத்து வந்தார். ஆகாஷ் வீட்டு முன் படுக்கையை விரித்தார். அதில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வனிதாவிடம் அவர்கள் சமரசம் பேசினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பது பற்றி வனிதா கூறுகையில், "எனது மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த 7 மாதங்களாக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்று வந்துவிட்டேன். ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

என் குழந்தையை என்னுடன் அனுப்ப ஆகாஷ் மறுக்கிறார். என்னைப் பற்றி தவறான தகவல்களை ஸ்ரீஹரியிடம் சொல்லி என்னுடன் சேர விடாமல் மிரட்டுகிறார். இனி என் குழந்தை இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்.

தண்ணீர், சாப்பாடு, கூட சாப்பிட மாட்டேன். இங்கிருந்து என் குழந்தையோடுதான் செல்வேன். இல்லையென்றால் இங்கேயே உயிரை விடுகிறேன். ஆகாஷ் செய்யும் தவறை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் தவறு செய்கிறார்கள்.

என் குழந்தை என்னிடம் சேராமல் இருப்பதற்கு போலீசாரும் ஒரு காரணம். இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என் குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

பெத்த குழந்தையை மீட்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்சினைக்கு பின்னால் என் தந்தை இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுபடி என் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்", என்றார்.

வலுக்கட்டாயமாக அனுப்ப முடியாது - ஆகாஷ்

வனிதா உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவுபடி விஜய் ஸ்ரீஹரி விருப்பபட்டால் வனிதாவை வாரத்தில் 3 நாட்கள் சந்திக்கலாம். அவன் தனது தாயாரை பார்க்க விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை சமாதானப்படுத்தி தாயார் வனிதாவிடம் அனுப்பலாம்.

ஆனால் அவன் போக மறுக்கிறான். தாயார் குழந்தையிடம் அன்பாக இருந்தால் பாசத்துடன் செல்லும். அவனை வனிதாவிடம் செல்ல கட்டாயப்படுத்தினால் அவரிடம் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறான்.

அதனால் மனோத்துவ டாக்டரை அணுகி குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறேன். 3 வருடம் குழந்தை ஹரி வனிதாவிடம் இருந்தது. இப்போது 3 நாள் அவருடன் அனுப்புவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. என்னிடம் இருந்து அவன் செல்ல மறுக்கிறான். ஆனால் வலுக்கட்டாயமாக வனிதா இழுப்பதால் வெறுக்கிறான். திடீரென்று அவன் எப்படி மாறுவான். கொஞ்சம் டைம் தேவை," என்றார்.

 

ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை-அமிதாப் தந்த அட்வைஸ்

Tags:


நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல், வாந்தி பிரச்சினைக்காக மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த மாதம் 29ம் தேதி சேர்ந்தார். அதில் குணம் ஏற்பட்டு வீடு திரும்பிய அவர் மீண்டும் 4ம் தேதி அதே மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல் பரிசோதனையில் ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாததால் காலில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு 5 தடவைக்கு மேல் ரத்தத்தை சுத்தம் செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க ரஜினி குடும்பத்தினர் விரும்பினர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் ரஜினிக்கு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவ அறிக்கை வெளியிட அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் என்ன மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரியவில்லை. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுவதாக மருத்துவமனையில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த முடியுமா? என்று டாக்டர் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

அமிதாப் அட்வைஸ்...

உலகின் மற்ற நாடுகளை விட சென்னையிலேயே சிறப்பாக இந்த சிகிச்சையை செய்ய முடியும். ஆனால் இங்கே சொந்தக்காரர்கள், ரத்த உறவுகள்தான் டோனர்களாக இருக்க முடியும் என்பதாலேயே வெளிநாட்டுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் இந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரஜினியை அழைத்துச் செல்லும்படி கூறியவர் அமிதாப் பச்சன்தானாம். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமிதாப்பின் நெருங்கிய நண்பருமான அமர்சிங் இங்குதான் மாற்று சிறுநீரகங்கள் பொருத்திக் கொண்டு இப்போது நலமுடன் உள்ளார்.

இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ரஜினியை சிங்கப்பூரில் அமர்சிங் நலம் பெற்ற இதே மருத்துவமனையில் சேர்க்க லதாவுக்கு அமிதாப் அறிவுரை சொன்னதாக பிரபல ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

 

நான்தான் நம்பர் 1

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நான்தான் நம்பர் 1

5/30/2011 11:45:19 AM

திவ்யா கூறியது: திரையுலகில் 9 வருடமாக இருக்கிறேன். இன்னும் கன்னட திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாகத்தான் இருக்கிறேன். இன்டஸ்ட்ரிக்கு வரும் புதுமுக நடிகைகள், 'திவ்யாவைப்போல் ஆக ஆசை' என்றுதான் கூறுகிறார்கள். அது எனக்கு சந்தோஷம் மட்டுமல்ல, முன்னணியில் நான் இருப்பதை குறிக்கிறது. 'ஒரு கன்னட படத்துக்கு 32 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?Õ என்கிறார்கள். எவ்வளவு வாங்குகிறேன் என்பதை சொல்ல விரும்பவில்லை. என்னுடைய பாப்புலாரிட்டிக்கு தக்க சம்பளம் வாங்குகிறேன். அதே நேரம் மற்ற நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதில் எனக்கு அக்கறை கிடையாது. 'ஜானி மேரா நாம்Õ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறீர்களே? என்கிறார்கள். அந்த படத்தில் நான்தான் ஹீரோயின். அப்படி இருக்கும்போது ஒரு பாடலுக்கு ஆடுகிறேன் என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. கிளாமர் உடைகள் அணிந்திருக்கிறேன். ஆனால் ஆபாசமாக இருக்காது.  'சித்லிங்குÕ என்ற படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தேன். சில குறிப்பிட்ட வசனங்களை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் மறுத்துவிட்டேன். பின்னர் வசனகர்த்தா வசனங்களை மாற்றி எழுதியதும் நடிக்க கேட்டார்கள். இதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.




 

நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இத்தாலி பல்கலைக்கழகம்

Tags:


மிலன்: 110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ளது மிலன் பல்கலைக்கழகம் (Universita Popolare Degli Studi Di Milano - UUPN). 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வி நிறுவனம் இது. மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த பல்கலைக் கழகம்.

இந்த ஆண்டு தமிழ் நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மிலன் பல்கலைக்கழகம். ஐரோப்பிய பல்கலைக் கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மிலன் பல்கலைக் கழகத்தின் தலைவர் போராசிரியர் டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை ஏற்றுக் கொண்ட விக்ரம், பின்னர் வந்திருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
 

ஹீரோ தேடுகிறார் பிரபு சாலமன்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ தேடுகிறார் பிரபு சாலமன்!

5/30/2011 10:48:39 AM

'மைனா'வுக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் படத்துக்கு பெயரிடவில்லை. இப்படத்துக்கு ஹீரோயின் கிடைக்காததால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானது. இப்போது லட்சுமி மேனன் என்ற ஹீரோயின் தேர்வாகியுள்ளார். இதுகுறித்து பிரபு சாலமன் கூறியதாவது: மலைவாழ் பெண் தோற்றத்தில் ஹீரோயின் தேடினேன். 100 புதுமுகங்களுக்கு மேல் தேடியும் அமையாத நிலையில், மலையாள நடிகை லட்சுமி மேனன் கிடைத்தார். அவருக்கு மேக்கப் மற்றும் வசன உச்சரிப்பு டெஸ்ட் நடத்தியதில் தேர்வாகியுள்ளார். ஹீரோ கிடைக்கவில்லை. 'முள்ளும் மலரும்' ரஜினி மாதிரி ஒரு புதுமுகத்தை தேடுகிறேன். முக்கிய வேடத்தில் தம்பி ராமய்யா நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை. யுகபாரதி பாடல்கள். ஜூலையில் ஷூட்டிங் தொடங்குகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி, கர்நாடகாவிலுள்ள ஜோக்பால்ஸ். இதன் தரைமட்டத்தில் இதுவரை யாரும் ஷூட்டிங் நடத்தியது இல்லை. முதல்முறையாக நான் படப்பிடிப்பு நடத்துகிறேன்.

 

குழந்தையை ஒப்படைத்தால் வனிதாவை பிரிந்து செல்ல தயார்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குழந்தையை ஒப்படைத்தால் வனிதாவை பிரிந்து செல்ல தயார்!

5/30/2011 10:51:45 AM

நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதா. இவரது முதல் கணவர் ஆகாஷ். இவர்களது மகன் ஸ்ரீஹரி (9). முதல் கணவரை பிரிந்த வனிதா, ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்தார். இதனால், குழந்தை யாரிடம் இருப்பது என்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ''வாரத்தில் 5 நாட்கள் ஆகாசுடனும், 2 நாட்கள் வனிதாவுடன் இருக்க வேண்டும்'' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உத்தரவுப்படி ஆகாஷ் நடந்து கொள்ளவில்லை என்று வனிதா புகார் கூறி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார் வனிதா. அவரிடம் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கமிஷனர். பின்னர், வெளியே வந்த வனிதா "மகன் ஸ்ரீஹரி கிடைக்கும் வரை தண்ணீர் கூட அருந்தமாட்டேன்" என்று அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இணை கமிஷனர் சங்கர் நேற்று விசாரணை நடத்தினார். முதலில் ஆகாஷிடமும் பின்னர் வனிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், இருவரையும் ஒரே அறையில் ஒன்றாக வைத்து ஆலோசனை வழங்கினார். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. குழந்தை ஸ்ரீஹரி தனது தாயான வனிதாவுடன் செல்ல விரும்பவில்லை. இதனால், குழந்தை மீண்டும் ஆகாஷிடமே ஒப்படைக்கப்பட்டது.

இது நாடகம்தான்!

விசாரணைக்கு செல்லும் முன்பு வனிதா கூறுகையில், ''ஸ்ரீஹரி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். அவனுக்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழில் கடிதம் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுவது, என்னுடன் ஸ்ரீஹரி வந்து விடக்கூடாது என்பதற்காக சிலர் ஆடும் நாடகம்தான்'' என்றார்.

ஆகாஷின் பின்னணி?

வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கூறுகையில், ''நான் பிரிந்து சென்றால்தான் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைப்பார்கள் என்றால், வனிதாவை விட்டு பிரிந்து செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க மாட்டார்கள். ஆகாஷின் பின்னணியில் இருந்து நடிகர் விஜயகுமார் செயல்படுகிறார்'' என்றார்.

வீடியோவில் பதிவு

மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை, பிற்பகல் 3 மணி வரை நீண்டது. விசாரணை நடத்தப்பட்ட விதம், அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. விசாரணை குறித்து எந்த விதமான வதந்திகளும், தவறான தகவல்களும் பரவி விடக்கூடாது என்பதற்காக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இதுபோன்று செயல்பட்டதாக கூறப்படுகிறது.

 

காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்

5/30/2011 10:45:56 AM

கபிஷேக் பிலிம்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படம், 'காட்டுப்புலி'. ஒளிப்பதிவு, ராஜேந்திர பிரசாத். இசை, விஜய் வர்மா. ஸ்டண்ட் மற்றும் இயக்கம், டினு வர்மா. படத்தின் ஹீரோ அர்ஜுன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தி ஸ்டண்ட் மாஸ்டர் டினு வர்மா என் நண்பர். அவரது இயக்கத்தில், இந்தப் படம் உருவாகியுள்ளது. ரஜனீஷ்சாயாலி பகத், அமீத்ஹனாயா, ஜஹான்ஜெனிபர் ஜோடிகள் காட்டில் பயணிக்கின்றனர். திடீரென்று ஒரு நெருக்கடியில் சிக்குகின்றனர். காட்டிலிருக்கும் அவர்களை எப்படி காப்பாற்றுகிறேன் என்பது கிளைமாக்ஸ். தலக்கோணம் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. ராட்சத பல்லி, அட்டை, விஷப்பாம்பு போன்ற மிருகங்களுக்கு மத்தியில் காட்டில் தங்கி நடித்தது திகில் அனுபவம். எனது ஆக்ஷன் வேட்டைக்கு இந்தப்படம் அதிரடி தீனியாக அமைந்தது. அண்டர் வாட்டர் ஃபயர், குதிரை மற்றும் கார் துரத்தல் காட்சிகளில் சாகஸங்கள் செய்துள்ளேன். ஆக்ஷன் பிரியர்களுக்கு இது ரசனையாக இருக்கும்.  இவ்வாறு அர்ஜுன் கூறினார். பேட்டியின்போது கலைப்புலி எஸ்.தாணு, டினு வர்மா, தமிழ்ப் பகுதி இயக்குனர் ஜெயராம் உடனிருந்தனர்.

 

ஹீரோ தேடுகிறார் பிரபு சாலமன்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ தேடுகிறார் பிரபு சாலமன்!

5/30/2011 10:48:39 AM

'மைனா'வுக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் படத்துக்கு பெயரிடவில்லை. இப்படத்துக்கு ஹீரோயின் கிடைக்காததால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானது. இப்போது லட்சுமி மேனன் என்ற ஹீரோயின் தேர்வாகியுள்ளார். இதுகுறித்து பிரபு சாலமன் கூறியதாவது: மலைவாழ் பெண் தோற்றத்தில் ஹீரோயின் தேடினேன். 100 புதுமுகங்களுக்கு மேல் தேடியும் அமையாத நிலையில், மலையாள நடிகை லட்சுமி மேனன் கிடைத்தார். அவருக்கு மேக்கப் மற்றும் வசன உச்சரிப்பு டெஸ்ட் நடத்தியதில் தேர்வாகியுள்ளார். ஹீரோ கிடைக்கவில்லை. 'முள்ளும் மலரும்' ரஜினி மாதிரி ஒரு புதுமுகத்தை தேடுகிறேன். முக்கிய வேடத்தில் தம்பி ராமய்யா நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை. யுகபாரதி பாடல்கள். ஜூலையில் ஷூட்டிங் தொடங்குகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி, கர்நாடகாவிலுள்ள ஜோக்பால்ஸ். இதன் தரைமட்டத்தில் இதுவரை யாரும் ஷூட்டிங் நடத்தியது இல்லை. முதல்முறையாக நான் படப்பிடிப்பு நடத்துகிறேன்.

 

தேனீர் விடுதி பந்தல்காரர்களின் வாழ்க்கை!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தேனீர் விடுதி பந்தல்காரர்களின் வாழ்க்கை!

5/30/2011 10:48:08 AM

இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கும் படம் 'தேனீர் விடுதி'. ஆதித், ரேஷ்மா. ரவிவர்மன் நடிக்கிறார்கள். படம் பற்றி எஸ்.எஸ்.குமரன் நிருபர்களிடம் கூறியதாவது: கிராமத்தில் பந்தல் போடும் தொழில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். கல்யாண வீடு முதல் சாவு வீடுவரை இவர்களின் பங்களிப்பு இருக்கும். ஆனால் கலை இலக்கிய வடிவங்கள் இந்த மக்களைப் பற்றி பதிவு செய்யவில்லை. அதனால் இந்தப் படத்தில் அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறேன். பந்தல் போட்டு வரும் பணத்தில் நன்றாக குடித்து, சாப்பிட்டு அடுத்த நாளைப் பற்றி சிந்திக்காமல் அன்றைய நாளை சந்தோஷமாக வாழ நினைக்கும் பந்தல்காரனுக்கும் நேர்மையான அரசு அதிகாரியின் மகளுக்கும் காதல். அதிகாரிக்கோ குடிகாரர்களை பிடிக்காது. அவர் எப்படி இவர்கள் காதலை ஏற்கிறார் என்பதுதான் படம். ஒரு காதல் வழியாக, புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை சொல்கிறேன். பொழுதுபோக்கு சினிமாவிற்குரிய அத்தனை அம்சங்களோடும் வெளிவருகிறது. வில்லனும், ஹீரோவும் கடைசிவரை சந்தித்துக் கொள்ளாத மாதிரியான திரைக்கதை அமைப்பு வித்தியாசமாக இருக்கும்.

 

சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரஜினி!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரஜினி!

5/30/2011 10:54:07 AM

சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருப்பதாக அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29ம் தேதி ÔராணாÕ படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அன்றே வீடு திரும்பினார். பின்னர், இம்மாதம் 4ம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையில் நுரையீரல் பிரச்னை மற்றும் அலர்ஜிக்காக சேர்க்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்றார்.

பின்னர், போரூர் ராமச¢சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டதால், அங்கு அவருக்கு ரத்தத்தை சுத்தம் செய்யும் 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் தனிமை வேண்டியும், மேல் சிகிச்சைக்காகவும் டாக்டர்களின் அறிவுரைப்படி, சிங்கப்பூர் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தனுஷ், அஸ்வின், ரஜினியின் உதவியாளர் சுப்பையா மற்றும் டாக்டர் ஒருவருடன் சிங்கப்பூர் சென்றார் ரஜினிகாந்த். அங்குள்ள புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், ரஜினி சேர்க்கப்பட்டார். ரஜினியின் மனைவி லதா நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார்.

மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் சிங்கப்பூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ரஜினி நலமாக இருப்பதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிகிறது.

 

வேட்டை மன்னனுக்கு ஹாலிவுட் நடிகை

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வேட்டை மன்னனுக்கு ஹாலிவுட் நடிகை

5/30/2011 10:41:07 AM

'வேட்டை மன்னன்' படத்தில் சிம்பு ஜோடியாக ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கும் படம், 'வேட்டை மன்னன்'. இதில் சிம்பு ஹீரோ. அவர் ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஒருவர் தெலுங்கு நடிகை தீக்ஷா சேத். மற்ற ஹீரோயின்கள் முடிவாகவில்லை. மற்றும் ஜெய், 'விண்ணைத்தாண்டி வருவாயா' கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தை இயக்கும் நெல்சன் கூறியதாவது:

இது ஸ்டைலான கதை. தமிழில் டெக்னிக்கலாக இப்படியொரு படம் வந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொரு காட்சியும் இருக்கும். சென்னையில் தொடங்கும் கதை பிரேசில் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் நடிக்கிறது. கதைப்படி ஒரு ஹீரோயின் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதால், ஹாலிவுட் நடிகை ஒருவரிடம் பேசி வருகிறோம். விரைவில் பேச்சுவார்த்தை முடியும். அவர் யார் என்பது இப்போது சஸ்பென்ஸ். சமீபத்தில் பின்னிமில்லில் பிரமாண்ட செட் அமைத்து காட்சிகளை ஷூட் பண்ணினோம். 200 ஜூனியர் ஆர்டிஸ்டுகள் பங்கேற்ற இந்த காட்சியும் செட்டும் படத்தின் ஹைலைட்டாக அமையும். ஜெய் இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெறுகிறது. ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு நெல்சன் கூறினார்.




 

களவாணி இயக்குனர் திருமணம்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

களவாணி இயக்குனர் திருமணம்!

5/30/2011 10:37:54 AM

விமல் நடித்த 'களவாணி' படத்தை இயக்கியவர், சற்குணம். மீண்டும் விமல் நடிக்கும் 'வாகை சூட வா' படத்தை இயக்குகிறார். அவருக்கும், பட்டுக்கோட்டை செண்டாங்காடைச் சேர்ந்த பழனிவேல், சாந்தி தம்பதியரின் மகள் சரண்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சற்குணம் கூறுகையில், 'இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம். சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. 'வாகை சூட வா' ஷூட்டிங்கில் இருந்ததால், செல்ல முடியவில்லை. சரண்யா எம்.பி.ஏ முடித்துள்ளார். ஜூன் இறுதி அல்லது ஜூலை மாத தொடக்கத்தில், ஒரத்தநாடு அருகிலுள்ள ஆம்பலாபட்டில் எங்கள் திருமணம் நடைபெறும். தேதி முடிவாகவில்லை' என்றார்.

 

கே.பிக்கு கோவையில் பாராட்டு-ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்

Tags: lsquo, rsquo


கோவை: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு கோவையில் பாராட்டு விழா நடந்தது.

தாதா சாகேப் பால்கே விருது

திரைத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு தமிழின் மூத்த இயக்குனரான பாலச்சந்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் தமிழில் இவ்விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடகத்துறையிலிருந்து சினிமாவிற்கு வந்த பாலச்சந்தர் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். நாடகம், திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, சின்னத்திரை என சினிமாவின் சகல துறைகளிலும் சாதித்த பல்துறை வித்தகரான பாலச்சந்தர் சக கலைஞர்களால் ‘இயக்குனர் இமயம்’ என்று பாராட்டப்படுகிறார்.

கோவையில் விழா

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் ‘நூறாண்டு காலம் வாழ்க’ என்ற தலைப்பில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விருது அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் பாராட்டு விழா இதுவே ஆகும். இதற்கு முன்னர் சிவாஜி கணேசனுக்கு பால்கே விருது வழங்கப்பட்ட போதும் முதல் விழா கோவையில்தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில், பாரதீய வித்யா பவன் கிருஷ்ணராஜ் வானவராயர், கங்கா மருத்துவமனை கனவல்லி சண்முகநாதன், இசைக்கவி ரமணன் ஆகியோருடன் நடிகர் சிவக்குமார், இயக்குனர் விசு, பாடலாசிரியர் வைரமுத்து ஆகிய திரைத்துறையினரும் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.

திரைப்படக்கல்லூரிக்கு பாலச்சந்தர் பெயர்

விழாவிற்கு தலைமை தாங்கிய கிருஷ்ணராஜ் வானவராயர் ‘சிவாஜி படம்; எம்.ஜி.ஆர் படம் என்று நடிகர்களின் பெயர்களினாலேயே அறியப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்கள் முதன் முதலாக இயக்குனரின் பெயரால் அறியப்பட்டது பாலச்சந்தருக்குப் பிறகுதான் என்றார்.

எழுபதுகளின் துவக்கத்திலேயே சமூகப்புரட்சிக்கு வித்திட்ட துணிச்சலான படங்களை இயக்கிய சிந்தனையாளர் அவர். அவரது படங்கள் எல்லாக் காலத்திற்குமான பாடங்கள். எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி இருப்பது போல இன்னொரு திரைப்படக் கல்லூரியை ஏற்படுத்தி அதற்கு பாலச்சந்தரது பெயரை வைக்க ஆவண செய்யவேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆறரை கோடியில் ஒருவர்

‘தாதா சாகேப் விருதினை இந்தியாவில் இதுவரை 41 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் 41 பேரில் ஒருவர். தென்னிந்தியாவில் இதுவரை 6 பேருக்கு கிடைத்துள்ளது. அவ்வகையில் அவர் அறுவரில் ஒருவர். தமிழகத்தில் இரண்டு பேருக்கு கிடைத்துள்ளது. அவ்வகையில் தமிழ்நாட்டில் இருவரில் அவர் ஒருவர். இயக்குனர் என்ற வகையில் தமிழில் அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. எனவே அவர் ஆறரை கோடி தமிழரில் முதல்வர்’ என்று புகழாரம் சூட்டினார் கவிஞர் வைரமுத்து.

புதுமை மாறாத ‘புன்னகை’

அடுத்து பேசிய சிவக்குமார், பாலச்சந்தர் இயக்கி பரவலான கவனம் பெறாமல் போன ‘புன்னகை’ என்ற படம் பல பத்தாண்டுகள் தாண்டியும் புதுமை மாறாமல் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதையும், பாலச்சந்தரின் தலைசிறந்த திரைப்படங்கள் குறித்தும், ஒரு நடிகனாக அவரது இயக்கத்தில் பெற்ற வெற்றிகளைப் பற்றியும் நீண்ட உரையாற்றினார். கம்பராமாயணம், பாரதியார் கவிதை, பாலச்சந்தர் படங்களின் உரையாடல்கள் என பலவற்றை அவர் சரளமாகப் பேச ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

தாயுமானவன் பாலச்சந்தர்

நாடகாசிரியனாக பாலச்சந்தருக்கு அறிமுகமாகி, அவர் மூலம் வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது முதல் பாலச்சந்தருடனான தனது நெருக்கம் பற்றி விசு பேசினார். வாழ்வின் பல்வேறு தருணங்களில் அண்ணனாக, தந்தையாக, தாயுமானவனாக தனக்கு இருந்தவர் பாலச்சந்தரே என்றார் அவர்.

ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்

விருது பெற்ற பின் பாலச்சந்தருக்கு நிகழும் இந்த முதல் பாராட்டு விழாவில் ஆயிரக்கணக்கில் கோவை ரசிகர்கள் குவிந்தனர். சுமார் 1500 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் நின்று கொண்டும், அரங்கிற்கு வெளியிலுமாக சுமார் 3000 ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
 

சினிமாவுக்கு ஷில்பா குட்பை

Tags:



சினிமாவுக்கு ஒரு வழியாக குட்பை சொல்லியுள்ளார் ஷில்பாஷெட்டி. இனி்மேல் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டவர் ஷில்பா. திருமணத்திற்குப் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார். சினிமாவில் நடிக்க முன்பு போல இப்போது அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஷில்பா மறுத்திருந்தார்.

இந்த நிலையில் நடிப்புக்கு குட்பை சொல்லியுள்ளார் ஷில்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், இதுதான் நடிப்புக்கு டாடா சொல்ல சரியான நேரம். திருமணத்திற்குப் பின்னர் என்னால் பல பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார் ஷில்பா.

தற்போது தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் ஷில்பா. ஷில்பாவைத் தேடி ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வருவதில்லையாம். குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கும், கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கும்தான் நிறைய வாய்ப்பு வருகிறதாம்.

இப்போது சினிமாவை விட்டு முழுமையாக விலகி விட முடிவு செய்துள்ள ஷில்பா, ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திலும், தான் மேற்கொண்டு வரும் பிற தொழில்களிலும் முழுக் கவனத்தை செலுத்தப் போகிறாராம்.

 

விருதுக்காக படமெடுக்கவில்லை, பணத்துக்காகத்தான் இயக்குகிறேன்-வெற்றி மாறன்

Tags:


நான் பணத்துக்காகத்தான் படம் எடுக்கிறேன், விருது பெற வேண்டும் என்பதற்காகவெல்லாம் படம் எடுக்கவில்லை. இனி தனுஷை வைத்துப் படம் எடுக்க மாட்டேன் என்று இயக்குநர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

ஆடுகளம் படத்தை இயக்கியவர் வெற்றி மாறன். இந்தப் படத்திற்காக ஏகப்பட்ட தேசிய விருதுகள் கிடைத்தபோது மகிழ்ச்சி அடைந்தவர்களை விட, சந்தோஷப்பட்டவர்களை விட அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தவர்கள்தான் மிக மிக அதிகம்.

இவர் ஏற்கனவே தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கிவர். பின்னர் ஆடுகளம் படத்தை இயக்கினார். அடுத்து தனுஷை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் இல்லை என்கிறார் வெற்றிமாறன்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மாற்றத்தில் நம்பிக்கை உடையவன். திரும்பத் திரும்ப ஒரே மனிதர்களுடன் பணியாற்றுவது இருதரப்பினருக்குமே போரடிக்கும். மாற்றம் அவசியம். தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், விருது வாங்க வேண்டும் என்பதற்காக நான் படம் எடுப்பதில்லை. பணம் சம்பாதிக்கத்தான் படங்களை இயக்குகிறேன் என்றார் வெற்றி்மாறன்.

ஓஹோ, ஒருவேளை இதனால்தானோ என்னவோ, நார்வே பட விழாவில் ஆடுகளம் படத்திற்குக் கொடுத்த விருதை வாங்கி தூக்கி கீழே போட்டு மிதித்து விட்டு வந்தாரோ என்னவோ வெற்றிமாறன். ஒருவேளை பணமாக கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வந்திருப்பார் போலும்!
 

இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம்

Tags:


சென்னை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இனி வரும் நாட்களில் கடும் வெப்பம் இருக்காது, சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் மிகக் கடுமையாக இருந்தது.

இந்த கத்திரி பருவக்காலத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக திருத்தணியில்தான் 111 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. ஆரம்பத்தில் சென்னையில்தான் வெயில் மண்டையைப் பிளந்தது. பின்னர் அது வேலூருக்கு ஷிப்ட் ஆகி விட்டது.

தற்போது தென் மேற்குப் பருவ மழை கேரளாவிலும், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவும் சூழல் அதிகரித்துள்ளது.
 

சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு டயாலிசிஸ்

Tags:


சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.

அவருக்கான சிகிச்சை முறைகள் குறித்து ரஜினியுடன் சென்றுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், எலிசபெத் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை காலை சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டார் ரஜினிகாந்த். அவர் சிங்கப்பூர் சிறுநீரக கழக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ரஜினிக்கு மீண்டும் டயாலிசிஸ் தரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகள் தொடங்கியுள்ளன. அவருக்கு மேற்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ரஜினிகாந்த் சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதும் சிங்கப்பூரில் வசிக்கும் ரஜினியின் ரசிகர்கள் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, ரஜினிக்கான சிகிச்சைகள் குறித்த விவரங்களை மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை வெளியிடவில்லை.
 

மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம்

Tags:


சென்னை: என் மகன் விஜய ஸ்ரீஹரியை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். இன்று முதல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதாவுக்கும், அவரது மூத்த கணவர் ஆகாஷுக்கும் தங்கள் மகன் விஜயஸ்ரீஹரி குறித்து பல மாதங்களாக தகராறு நடந்து கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை விஜயஸ்ரீஹரி ஆகாஷுடனும், வார இறுதி நாட்களில் தாய் வனிதாவுடனும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சில மாதங்களாக வனிதா சத்தம் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் மகனுக்காக போராட வந்துவிட்டார்.

இது குறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,

எனது மகன் விஜயஸ்ரீஹரியை மீட்டுத் தருமாறு கமிஷனர் திரிபாதியிடம் கடந்த வாரம் புகார் கொடுத்தேன். அவரும் இணை கமிஷனரை விசாரிக்க உத்தரவிட்டார். எனினும் விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை.

சட்டப்படி, நியாயப்படி எனது மகன் என்னுடன் தான் இருக்க வேண்டும். இதற்காகத் தான் நான் கடந்த 7 மாத காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். தற்போதைய அரசு என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் என்று நம்புகிறேன்.

எனது மகனை அழைத்துவருவதற்காக நேற்றிரவு நான் ஆகாஷ் வீட்டிற்குச் சென்றேன். ஆனால் நான் குடித்துவிட்டு தகராறு செய்ததாக சில போலீசார் கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர். மகனுக்காக ஏங்கும் என்மீது இப்படியெல்லாமா பழி சுமத்துவது.

நான் கமிஷரிடம் நடந்த எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டேன். அவரும் எனது மகனை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

விஜயஸ்ரீஹரியை அழைத்து வருவதற்காக கடந்த மாதம் விருகம்பாக்கம் சென்றேன். அப்போது ஆகாஷ் என்னை நடுத்தெருவில் வைத்து அடித்தார். இது குறித்து நான் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் வழக்கும் பதிவு செய்யவில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றியும் கமிஷனரிடம் கூறினேன்.

எனது மகனை மீட்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை நான் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைவார்-ஏ.ஆர்.ரஹ்மான்

Tags:


சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம் விரைவில் குணமடையும். அவர் மீண்டும் தனது நடிப்பைத் தொடருவார் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில்,நான் ரஜினி சாரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். திரையுலகம் குறித்து எனக்கு அவர் நிறைய சொல்லியுள்ளார். அவை எனக்கு பெரும் உதவியாக இருந்துள்ளன.

ராணா படத்திற்கும் நான் இசையமைத்து வருகிறேன். இன்னும் 2 பாடல்கள்தான் அதில் பாக்கி உள்ளன. ரஜினிகாந்த் சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் அதை முடித்துக் கொடுப்பேன் என்றார் ரஹ்மான்.
 

கலக்க வரும் சுஷ்மிதா சென் சிஷ்யை!

Tags:


சுஷ்மிதா சென்னை தனது மானசீக குருவாக வசீகரித்துள்ள ஷீனா சோஹன் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

2010ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக தேர்வானவர் ஷீனா. அப்போது ஷீனாவைத் தேர்வு செய்தவர் சுஷ்மிதா. இதனால் சுஷ்மீதா மீது ஷீனாவுக்கு அதிக பாசம் ஏற்பட்டு விட்டது. சுஷ்மிதாவை தனது குருவாகவே வசீகரித்துக் கொண்டார் ஷீனா. இன்று அவரும் சுஷ்மிதா பாணியில் ஹீரோயினாகியுள்ளார்.

சுஷ்மிதா தமிழ்ப் படம் மூலமாக ஹீரோயினானார். ஆனால் ஷீனா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் ஷீனா. படத்தின் பெயர் தி டிரெயின். ஜெயராஜ் படத்தை இயக்குகிறார்.

ஷீனாவுக்கு கவர்ச்சிகரமான, குத்துப் பாடல்களின் நாயகியாக உலா வர விருப்பம் இல்லையாம். நல்ல நடிகையாக தான் அறியப்பட வேண்டும் என்கிறார் ஷீனா. இவருக்குப் பிடித்த நடிகைகள் மாதுரிதீட்சித், ஸ்ரீதேவி, ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரசிகர்களை எனது நடிப்புதான் கவர வேண்டும். எனது உடலோ அல்லது கவர்ச்சியோ கவரக் கூடாது. எனவேதான் நான் நடிப்பில் அதிக கவனம்செலுத்துகிறேன். கவர்ச்சிக்கு நான் எப்போதும் ரெட்தான் என்கிறார் ஷீனா.

பார்ப்போம், ஷீனாவின் லட்சியம் வெல்லுமா அல்லது அவரை கவர்ச்சி அலை மூழ்கடிக்குமா என்பதை!
 

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினி!

Tags:



சிங்கப்பூர்: சென்னையில் அறிவித்தது போல, சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெறவில்லை. சிங்கப்பூரில் மிகப் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த மருத்துவமனையில் இந்தியாவின் அமர்சிங் உள்ளிட்ட பிரபல விஐபிக்கள் சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய ரஜினியை, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இப்போது சேர்த்துள்ளனர் அவரது மகள்களும் மருமகன்களும்.

இன்று இரவு விமானத்தில் செல்லும் லதா ரஜினி, மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்துக் கொள்கிறார். அவருடன் ரஜினியின் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவும் செல்கிறார்கள்.

ரஜினியை சிக்ச்சைக்காக சேர்த்திருப்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதுகுறித்த எந்த விவரமும் சொல்வதற்கில்லை என்றும், நோயாளிகளின் தனிமை மற்றும் ரகசியத்தைக் காப்பது தங்களின் முக்கிய கடமை என்றும் தெரிவித்தனர்.