கோச்சடையானை வாங்க ஆர்வம் காட்டும் டிடிஎச்காரர்கள்.. அமைதி காக்கும் ரஜினி!

Dth Companies Keen On Rajini S Kochadaiyaan

கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே டிடிஎச்சில் ஒளிபரப்பாவது உறுதியாகிவிட்டதால், அதே வழியில் மற்ற பெரிய படங்களையும் வெளியிடும் முயற்சி நடக்கிறது.

முதல்கட்டமாக, பொங்கலுக்கு வரவிருக்கும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனை டிடிஎச்சில் வெளியிடத் தயாராகி வருகின்றனர்.

அமீர் இயக்கத்தில் வெளியாகும் ஆதி பகவனையும் டிடிஎச்காரர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் விட முக்கியமானது, கோச்சடையான் படத்தை எப்படி வெளியிடுவார்கள் என்ற கேள்வி. இந்தப் படம் முழுக்க முழுக்க 3 டியில் தியேட்டர்களில் மட்டுமே பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டும் பெரியது. போட்ட பணத்தை உடனே டிடிஎச் சிறந்த வழி என்பதால் நாட்டின் அனைத்து டிடிஎச் நிறுவனங்கள் மூலமும் கோச்சடையானை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ரஜினி படம் என்று வரும்போது, அனைத்து குடும்பங்களுமே முதல் நாள் முதல் காட்சி பார்க்க விரும்புவார்கள் என்பதால், கூடுதல் கட்டணத்துடன் இந்தப் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப பேசி வருகின்றனர். ஆனால் ரஜினி கொஞ்சம் அமைதியாக இருங்கள், பிறகு பேசுவோம் என்று கூறியுள்ளாராம்.

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு பாதகம் இல்லாத முடிவாக இருந்தால் மட்டுமே எதையும் பரிசீலிக்க முடியும் என்று ரஜினி திட்டவட்டமாகக் கூறியுள்ளாராம்.

ஜனவரி 3-ம் தேதிக்குப் பிறகு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு பிறக்கும் என்று தெரிகிறது.

பொங்கலுக்குள் 4 படங்கள் டிடிஎச்சில் வெளியாகப் போவதை நினைத்து தியேட்டர்காரர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

 

2013-ல் சைந்தவியை திருமணம் செய்கிறேன் - ஜிவி பிரகாஷ் குமார்

Gv Prakash Confirms His Marriage The Year 2013

பாடகி சைந்தவியை 2013-ம் ஆண்டுதான் கரம்பிடிக்கப் போவதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வெயில் படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவரும் பின்னணிப் பாடகி சைந்தவியும் நீணட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக கடந்த ஆண்டே அறிவித்தனர்.

ஆனால் 2012-ல் இருவரின் திருமணமும் நடக்கவில்லை.

இந்த நிலையில், 2013-ம் வருடத்தில் சைந்தியை திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். சைந்தவியும் பிரகாஷும் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

இவரது இசையில் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்', விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஜெய், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி', பாலாவின் பரதேசி ஆகிய படங்கள் வரும் 2013-ம் ஆண்டு வெளியாக உள்ளன.

 

கமல் படத்துக்கு தியேட்டர் தருவோர் மீது கடும் நடவடிக்கை- திரையரங்க உரிமையாளர்கள்

Theater Owners Take Severe Actions Against Viswaroopam

சென்னை: கமலின் விஸ்வரூபம் உள்ளிட்ட எந்தப் படங்களுக்கும் தமிழகத்தில் தியேட்டர் தரக்கூடாது. மீறி யாராவது கொடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்க வரும் ஜனவரி 3-ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

கமல் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படம் வருகிற 11-ந்தேதி ரிலீசாகிறது. ஒரு நாள் முன்னதாக 10-ந்தேதி இரவு 9.30 மணிக்கு டி.டி.எச்.கள் மூலமாக டெலிவிஷன் களிலும் இப்படம் ஒளிபரப்பாகிறது. ரூ 1000 முன்பணமாகக் கட்டி இந்தப் படத்தை டிடிஎச் வைத்திருப்போர் பார்க்கலாம்.

ஆனால் டி.டி.எச்.சில் படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். டி.டி.எச்.களில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இனி கமலின் பழைய, புதிய படங்களைக் கூட திரையிட விட மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் கமல் டி.டி.எச்.களில் படத்தை ஒளிபரப்புவதில் தீவிரமாக உள்ளார். இன்று இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமாகக் கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் படத்தை திரையிட 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும் என்று கமல் கூறியிருந்தார்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு மிகவும் கோபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் மீண்டும் அவசர கூட்டத்தை கூட்டுகிறார்கள். வருகிற 3-ந்தேதி காலை 11 மணிக்கு திருச்சியில் இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

390 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் என்று கமல் அறிவித்துள்ளதால் அப்படிப்பட்ட தியேட்டர்கள் எவை எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

விஸ்வரூபம் படத்தை திரையிடும் தியேட்டர்களில் வெளியாகும் இதர படங்களை மற்ற தியேட்டர்களில் திரையிடுவதில்லை என்றும் இந்தக் கூட்டத்தில் அதிரடி முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது.

 

கற்பழிப்புக் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வேண்டும் - வெண்ணிற ஆடை நிர்மலா

Law Must Be Tighten Against Rapists Vennira Aadai Nilam

ஈரோடு: கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா...

பேட்டியின்போது அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

நான் நடனத்தில் சிறந்து விளங்கியதால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாதது. சுமார் 300 படங்களில் நடித்துள்ளேன்.

இன்றைய நடிகைகள்...

அன்று நடிகைகளுக்குள் போட்டி இருந்தது. ஆனால் சகஜமாக பழக மாட்டார்கள். இன்று நடிகைகளிடம் போட்டி இருந்தாலும் அவர்கள் விழாக்களுக்கு ஒன்றாக செல்கிறார்கள். நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆட்டோகிராப், ஆடுகளம், மைனா..

நான் சமீபத்தில் பார்த்து ரசித்த ஆட்டோகிராப், ஆடுகளம், மைனா.. ஆகியவை சிறந்த படங்களாகும். நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக நடித்து வருகிறார்கள்.

இப்போது நடிகைகள் சினிமாவை தொழிலாக நினைத்து நடிக்கிறார்கள். ஒரு கட்டத்துக்குப் பின்னர் பிடித்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.

புதிய இயக்குநர்கள்

அன்று சினிமாவில் சென்டிமென்ட், நடனம், கவர்ச்சி, சண்டை காட்சி இருந்தது. இப்போது அதையெல்லாம் ட்ராமா என்கிறார்கள். ஏதோ ஜாலியாக படம் சென்று கொண்டு இருக்கிறது. அதனால்தான் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியவில்லை.

புதிய இயக்குனர்கள் புதிய புதிய விஷயத்தை சொல்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

கடுமையான தண்டனை...

டெல்லி மாணவியை கற்பழித்து கொன்ற சம்பவம் கொடூரமானது. அவர்கள் மனித மிருகங்கள். அவர்கள் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்களா? என்று எனக்கு தோன்றுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

விஸ்வரூபம்...

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்புவது என்பது கமல் எடுத்த முடிவு. நல்லெண்ணத்தில்தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

சாவித்ரியுடன்...

சாவித்திரி அம்மாவோடு நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ‘‘எங்கள் தாய்‘‘ என்ற படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படமும் பாதியில் நின்று போனது.

இவ்வாறு நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கூறினார்.

 

மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு- 7-ந் தேதி திரைஉலகம் உண்ணாவிரதம்!

Film Industry Fast Against Jan 07

சென்னை: திரை உலகினருக்கான மத்திய அரசின் சேவை வரி விதிப்பைக் கண்டித்து வரும் 7-ந் தேதி ஒட்டுமொத்த திரை உலகமும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறது.

மத்திய அரசு விதித்துள்ள சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களின் அவசர கூட்டம் சென்னையில் உள்ள தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.தாணு, தென் இந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன செயலாளர் ஜி.சிவா, டைரக்டர்கள் சங்க பொருளாளர் ஜனநாதன், சின்னத்திரை சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறுகையில், 2010- ம் ஆண்டிலேயே திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நேர்முகமாகவும், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மறைமுகமாகவும் சுற்றறிக்கை மூலம் சேவை வரி விதிக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த திரையுலகின் கோரிக்கைகளை ஏற்று அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திரையுலகிற்கு சேவை வரி இருக்காது என்று அறிவித்தார். ஆனால், 2012-ல் மத்திய நிதிநிலை அறிக்கையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தவிர ஏனைய திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும், தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கும் 1.7.2012 முதல் 12.3% சேவை வரி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்களின் பொழுது போக்காக கருதப்படும் திரைப்படம், தொலைக்காட்சி தொழிலில் ஈடுபட்டுள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த வரி விதிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து உள்ளனர். எனவே, சேவை வரி விதிப்பை கண்டித்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஜனவரி 7- ந் தேதி அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரைப்பட காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றார்.

 

தமிழகத்தின் பொக்கிஷம் கமல், அவரை சீண்டாதீர்கள்.. பாரதிராஜா எச்சரிக்கை

Bharathiraja Warns Theatre Owners

சென்னை: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமல்ஹாசன் அவரை வாழ விடுங்கள், சீண்டிப் பார்க்காதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். கமல்ஹாசனை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்களையும் அவர் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷப் பரீட்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார்.

விஸ்வரூபம் படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர். இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது.

சிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். அப்போது பெரிய நடிகராக இருந்தார். ஆனாலும் கேரக்டருக்காக சொன்ன உடனேயே கோவனத்துக்கு மாறினார். அவருக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவிலேயே வாழ்கிறார்.

கமல் நடிப்பதோடு மட்டுமல்ல சினிமாவில் சிறந்த டெக்னீஷியனாகவும் மாறி உள்ளார். விஸ்வரூபம் படத்தை எனக்கு திரையிட்டு காட்டினார். பிரமிப்பாக இருந்தது. புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி இருந்தார். ஒரு தமிழன் உலக அளவிலான தொழில் நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது பெருமையாக இருந்தது. அவரை சீண்டி பார்க்காதீர்கள். வாழ விடுங்கள் என்றார் பாரதிராஜா.

இதேபோல தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், கமல் ரிஸ்க் எடுப்பார். அதில் ஜெயிக்கவும் செய்வார். டிடிஎச்சில் விஸ்வரூபம் வருவதை எல்லோரும் விரும்புகிறார்கள். திரையுலகம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

 

ரொமான்ஸுடன் கூடிய விஸ்வரூபம் பார்ட் 2 எடுக்கப்படும்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

Kamal Announced On Viswaroopam Part 2

சென்னை: விஸ்வரூபம் படம் டி.டி.ஹெச்சில் வெளியாகி சரித்திரம் படைக்க இருக்கிற நிலையில் "விஸ்வரூபம் பார்ட் -2 " எடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி 20 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் விஸ்வரூபம் நாயகி பூஜாகுமாரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விஸ்வரூபம் படம் பற்றிய பேச்சின் போது பூஜாகுமார், மேலோட்டமாக விஸ்வரூபம் பார்ட் 2 பற்றி சொல்ல, கமல்ஹாசனே மைக் வாங்கி நானே தனியாக ஒரு பிரஸ் மீட் வைத்து சொல்லலாம் என நினைத்தேன்.. இப்போது விஜய் டிவி மூலமாகவே சொல்லி விடுகிறேன்..விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன். அதில் ரொமான்ஸ் நிறையவே இருக்கும் என்றார். அப்போது தொகுப்பாளினி, அது எப்ப வரும் என்று கேட்டதற்கு, முதலில் பார்ட்-1ஐ வரவிடுங்க என்று கூறி சிரித்தார் கமல்ஹாசன்.

 

நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்

My Political Entry Will Be Different Says Rajinikanth

சென்னை: என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கேட்டார். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் என்று பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்தப் பேச்சின் மூலம் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களுக்கு மீண்டும் அவர் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற பெயரில் நூல் வெளியிடப்பட்டது. இதை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நடந்த விழாவின்போது வெளியிட்டார். ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி அம்மாள் அதைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல அனைவரும் எதிர்பார்த்தது ரஜினி என்ன பேசப் போகிறார் என்பதைத்தான். அதேபோல ரஜினியும் தனது பேச்சில் பொடி வைத்துப் பேசத் தவறவில்லை.

ரஜினியின் பேச்சிலிருந்து சில துளிகள்...

பல ஆண்டுகளுக்கு முன் இதே அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்துடன் நான் இங்கு மேடையில் ஏறினேன். அப்போது இவரை பற்றி 10 வரியில் பேச வேண்டும் என நினைத்தேன். 2 வரிதான் என்னால் பேச முடிந்தது. அப்போதே நினைத்துக் கொண்டேன். இந்த நிகழ்ச்சி இல்லை. இதே இடத்தில் இன்னொரு நிகழ்ச்சி வரும். அப்போது நிறைய பேசுவேன் என்று முடிவு எடுத்தேன். அதனால் இப்போது நிறைய பேசுகிறேன்.

ப.சிதம்பரம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். அவர் தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார். ஆங்கிலம் பேசும் போது அதில் தமிழ் கலப்பு வராது. அந்த அளவுக்கு இரு மொழிகளிலும் சிறந்த ஆற்றல் பெற்றவர். இங்கே இப்போது நான் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பேச்சில் ஆங்கிலமும் வரும், தமிழும் வரும். அவரைப் போல் என்னால் பேச இயலாது.

இன்று இவரை பற்றி வெளியிட்டுள்ள புத்தகத்தில் இவரை வாழ்த்தி தான் அதிகமாக கூறப்பட்டுள்ளது. இவரை பற்றிய விமர்சனங்கள் அடங்கிய புத்தகத்தை தொகுத்தால் ஆயிரம் கட்டுரைகளுக்கு மேல் வரும்.

இவருடன் 1996ம் ஆண்டு நட்பு தொடங்கியது. அப்போது அரசியல் ஞானிகளாக திகழ்ந்த மூப்பனார், கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான சிநேகம் ஏற்பட்டது. இவர்களின் நெருக்கத்தின் மூலம் நிறைய அரசியல் உண்மைகளை தெரிந்து கொண்டேன். அரசியலில் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

1996ல் தமாகாவை மூப்பனார் உருவாக்கினார். அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை பெற பெரும் சிரமமான சூழல் இருந்தது. அந்த பொறுப்பை ப.சிதம்பரத்திடம், மூப்பனார் ஒப்படைத்தார். கஷ்டமான அந்த பொறுப்பை ஏற்று சிறப்புடன் செய்து காட்டினார். அந்த சமயத்தில் துக்ளக் சோ என்னிடத்தில் பேசி, தமிழகத்தின் நிலமையை எனக்கு உணர வைத்தார். அந்த காலகட்டத்தில் நான் தமாகா, திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தேன்.

அதன் பின்பு டெல்லியில் எனக்கு என்டிடிவி சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் நான் பங்கேற்பதாக இருந்தால் ப.சிதம்பரமும் தவறாமல் கலந்து கொள்வதாக கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். எனக்காக ப.சிதம்பரம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த விருதை எனக்கு அளித்தார். மிகப்பெரிய பொறுப்பில் இருந்தபோதும் கூட எனக்காக ப.சிதம்பரம் வந்து விருது கொடுத்ததை நினைத்து பெருமை பட்டேன்.

வேட்டி சட்டைகளே அவருக்கு எப்போதும் விருப்பம். அவருக்கு வேட்டி சட்டை பொறுத்தமாக உள்ளது. அவர் நிதியமைச்சராக மத்தியில் இருந்தார். அதன் பின் குஜ்ரால் அமைச்சரவை மத்தியில் ஏற்பட்ட போது ப.சிதம்பரம் எனது அமைச்சரவையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று குஜ்ரால் பேசினார். அந்த அளவுக்கு திறம்பட செயல்படுபவர். இவர் நிதியமைச்சராக இருக்கும் போது ஏழைகளை பணக்காரர்களாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்காமல் இருக்கவும், பணக்காரர்களான ஏழைகளை மீண்டும் ஏழைகள் ஆக்காமல் இருக்கவும், நடுத்தர மக்களை மேலும் உயர்த்தவும் இவருக்கும் நன்கு தெரியும். அதனால் தான் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகள் இவருக்கு கிடைக்கிறது. அந்த பொறுப்பில் இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது அவருக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.

பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் ராஜாவாக இருந்தாலும் 3 வட்டத்துக்குள் இருப்பார்கள். தங்களுக்கு என்று முதல் வட்டம் அவர்களுக்கான தனிவட்டம் அந்த வட்டத்துக்குள் மனைவி பிள்ளைகள் கூட வரமுடியாது. அவர்களையும் சேர்க்க மாட்டார்கள். 2வது வட்டம் இந்த வட்டத்துக்குள் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், ரத்த சம்பந்தபட்ட பந்தங்கள் ஆகியோர் அடங்கும்.

அடுத்தது 3வது வட்டம். இந்த வட்டத்துக்குள் நண்பர்கள், நல்ல நெறியாளர்கள் எல்லோரும் இருப்பார்கள். 2ம் வட்டத்துக்குள் சொல்ல கூடாத விஷயங்களை எல்லாம் 3ம் வட்டத்தினரிடம் சொல்லி தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். டெல்லியில் உள்ள பிரதமரிடம் 3ம் வட்டத்தில் இருப்பவர் ப.சிதம்பரம். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடந்து விடாது. அரசியல் ரகசியமாக இருந்தாலும் அது சிதம்பர ரகசியத்துக்குள் அடங்கும். அவருக்கு தெரியாமல் மத்திய அரசில் எதுவும் இருக்காது.

இவருக்கு எப்போது குரல் கொடுப்பது என்பது நன்கு தெரியும். இவர் முழிக்காவிட்டால் ஆபத்து என்பது நன்கு தெரியும். இவர் விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டில் புரட்சி நடந்து விடும் என்பதும் அவருக்கு தெரியும். எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது. அதனால் தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று இருக்கிறேன். ஆனால், யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது சிதம்பரத்துக்கு தெரியும். அரசியலுக்கு ஏன் நீங்கள் வரக்கூடாது என்று சிதம்பரம் கேட்பார். அப்படி வந்தால், என் வழி தனிவழியாகத்தான் இருக்கும். அந்த வழி அவருக்கு தெரியும் என்றார் அவர்.

 

சினிமாவில் நடிக்கக் கிளம்புகிறார்கள் திருவனந்தபுரம் சிறைக் கைதிகள்!

Kerala Prisoners Set Become Actors Soon

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் கொண்டு விரைவில் ஒரு மலையாளப் படம் தயாரிக்கப்படலாம் என்று மாநில சிறைத்துறை ஐஜி அலெக்சாண்டர் ஜேக்கப் கூறியுள்ளார். இதில் சிறைக் கைதிகளே நடிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள புஜாபுராவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியின் விற்பனை கடந்தாணடு தொடங்கியது. இதை தொடர்ந்து சிக்கன் குழம்பு, சில்லி சிக்கன் விற்பனையும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஒரு சப்பாத்தி ரூ.2க்கும், சிக்கன் குழம்பு ரூ.25க்கும், சில்லி சிக்கன் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலைக்கு தரமான உணவு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சமையலுக்கு அடுத்தபடியாக இங்குள்ள கைதிகள் சினிமாவிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து கேரள சிறைத்துறை இயக்குனர் அலெக்சாண்டர் ஜேக்கப் கூறுகையில், திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, சிக்கனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் சப்பாத்தி, சிக்கன் விற்பனையாகி வருகிறது.இது தவிர பல கைதிகளுக்கு இலக்கிய ஆர்வமும் அதிகமாக உள்ளது. இதை ஊக்குவிக்க சிறை துறை தீர்மானித்துள்ளது.

சில கைதிகள் சினிமாவுக்கு கதை எழுதி வருகின்றனர். இந்த கதையில் அவர்களே நடிக்கவும் தீர்மானித்துள்ளனர். நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் கைதிகளின் நடிப்பில் விரைவில் ஒரு மலையாள சினிமா தயாராகும் என்றார் அவர்.

 

ப.சிதம்பரம் பிரதமர் பதவிக்கு உயர வேண்டும் - கமல் ஆசை

Kamal Wants See Pc As Pm

சென்னை: நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் குறித்த நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும், சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

 

ஹாரிஸா... அனிருத்தா... உதயநிதி விளக்கம்

Harris Jayaraj Is The Music Director For Udhayanidhi

உதயநிதி அடுத்து நடிக்கும் படத்துக்கு கொலவெறி புகழ் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பார் என்று வந்த செய்திகளை உதயநிதி மறுத்துள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு, உதயநிதி தயாரித்து நடிக்க, எஸ் ஆர் பிரபாகரன் ஒரு படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை உதயநிதி மறுத்துள்ளார்.

"நான் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார். என் மனைவி கிருத்திகா முதல்முறையாக இயக்கும் படத்துக்குதான் அனிருத் இசையமைக்கிறார்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கிருத்திகா இயக்கும் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

 

'வடிவேலுவுக்கும் மேல் தம்பி ராமையா...' - 'உ' பட இயக்குநர்!

Thambi Ramaiya Is Morethan Vadivelu Director Ashique

தம்பி ராமையா பிரதான வேடத்தில் நடிக்க, குறும்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்ற பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் ஆஷிக் இயக்கத்தில் உருவாகும் படம் இது.

ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தம்பி ராமையா பிரதான வேடமேற்று நடிக்கிறார். அவருடன் பல புதுமுகங்கள் நடிப்பில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது இந்தப் படம்.

படத்தின் இயக்குநர் ஆஷிக், விசுவல் கம்யூனிகேசன் மற்றும் சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்கம் பயின்றவர்.

தம்பி ராமையா தவிர, வருண், மதன் கோபால், 'ஸ்மைல்' செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சௌந்தரராஜா, காளி, ராஜசிவா, தீப்ஸ் சூப்பர் சிங்கர் ஜூனியர் டைட்டில் வின்னர் ஆஜீத், மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஆனால் இன்னும் நாயகி யார் என்பதை முடிவு செய்யவில்லையாம்.

படம் குறித்து இயக்குநர் ஆஷிக் பேசுகையில், "தலைப்புக்கு அர்த்தம் பிள்ளையார் சுழி என்பதுதான். இந்தப் படத்தின் ஹீரோ பெயர் கணேஷ். ஹீரோ வேறு யாருமல்ல, தம்பி ராமையாதான். அவர் ஒருவர்தான் இந்த வேடத்தைச் செய்ய முடியும். அதனால் அவரை ஒப்பந்தம் செய்தோம்.

தம்பி ராமையாவின் சிறப்பே, அவர் அழுதால் நாமும் அழுவோம், சிரித்தால் நாமும் சிரிப்போம். ஆனால் வடிவேலு போன்றவர்கள் சிரிப்புக்கு மட்டுமே உத்தரவாதம் தர முடியும். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து இந்தப் படத்தை இயக்குகிறேன்," என்றார்.

படத்துக்கு இசை அபிஜித் ராமசாமி, ஒளிப்பதிவு ஜெயப்பிரகாஷ். பாடல்களை எழுதி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கிறார் முருகன் மந்திரம்.

 

கமலுக்கு தயாரிப்பாளர், நடிகர், பெப்சி, இயக்குநர் சங்கங்கள் ஆதரவு- இன்று கூட்டாக பிரஸ்மீட்!!

Major Film Bodies Sopport Kamal Dth Efforts

சென்னை: கமல்ஹாஸனின் டிடிஎச் வெளியீட்டு முயற்சிக்கு தமிழ் சினிமாவின் பெரும்பாலான அமைப்புகள் முழு ஆதரவை அளித்துள்ளன. திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மட்டுமே முழுமையாக எதிர்க்கின்றனர்.

விஸ்வரூபத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு 1 நாள் முன்னதாக டிடிஎச்சில் நாடு முழுவதும் மூன்று மொழிகளில் கமல்ஹாஸன் வெளியிடுகிறார். இதில் முன்னணி டிடிஎச் நிறுவனங்கள் 5 அவருடன் இணைந்துள்ளன.

ஆனால் திரையரங்க உரிமையாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கமல் ஹாஸனுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது, அவர் படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் மாட்டோம் என அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் கமல் முயற்சிக்கு தமிழ் சினிமாவின் முக்கிய அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.

தென்னிந்திய பிலிம்சேம்பர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், அமீர் தலைமையிலான பெப்சி, பாரதிராஜா தலைமையில் இயங்கும் இயக்குநர்கள் சங்கம், சரத்குமார் தலைமை வகிக்கும் நடிகர் சங்கம் ஆகியவை அவருக்கு முழு ஆதரவு அளித்துள்ளன.

அதுமட்டுமில்லாமல், இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை ஹயாத் ஓட்டலில் இந்த அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கமலுடன் இணைந்து கூட்டாக நிருபர்களைச் சந்திக்கின்றனர்.

ஏற்கெனவே அரசின் ஆதரவையும் கமல்ஹாஸன் பெற்றுள்ளதால், தன் முயற்சியில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார்.

 

உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் புவனேஸ்வரி! - சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

Bhuvaneshwari Recieved Charge Sheet Brothel Case

சென்னை: உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன்.

கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள்.

அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை.

அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை.

இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார்.

இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர்.

அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது.

அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார்.

மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.

 

ரகசியமாக 3வது திருமணத்தை முடித்த கேத் வின்ஸ்லெட்... புது கணவருடன் விண்வெளியில் பறக்கிறார்!

Kate Winslet Weds Third Husband Ned Rocknroll

லண்டன்: டைட்டானிக் நாயகி கேத் வின்ஸ்லெட் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

37 வயதாகும் பிரிட்டிஷ் நடிகையான கேத் வின்ஸ்லெட் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

முதல் கணவர் இயக்குனர் ஜிம் தெரபில்டன் இவரை 2001 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது.இரண்டாவதாக ஷேம் மெண்டீஸ் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது தன்னை விட இளையவரான 34 வயதாகும் நெட் ராகென்ரோல் என்பவரை காதலித்து வந்தார். இவர் விண் வெளி ஆய்வு நிறுவனத்தில் பணி புரிகிறார்.

அவரைத்தான் இப்போது 3-வதாக திருமணம் செய்து கொண்டார் கேத் வின்ஸ்லெட். இவர்களது திருமணம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் முன்பே நடந்துவிட்டது. ஆனால் கொஞ்சநாள் இதை ரகசியமாக வைத்திருந்த வின்ஸ்லெட் - நெட் ராகென்ரோல் ஜோடி நேற்றுதான் உலகுக்கு வெளிப்படுத்தினர்.

ராக்கென்ரோலின் உறவினர்தான் பிரபல பிஸினஸ்மேன் சர் ரிச்சர்டு பிரான்ஸ்மேன். வர்ஜின் குழும தலைவர். 400 நிறுவனங்களுக்கு அதிபர்.

கேத் வின்ஸ்லெட் - ராக்கென் ரோல் திருமணப் பரிசாக இருவரையும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம் பிரான்ஸ்மேன்.

 

தியேட்டர்கள் எதிர்ப்பு குறித்து கவலையில்லை.. ஜனவரி 10ம் தேதி விஸ்வரூபம் டிடிஎச்சில் ரிலீஸ் - கமல் அற

Kamal Officially Announced Dth Release Of Viswaroopam

சென்னை: தியேட்டர்கள் எதிர்ப்பு குறித்து கவலையில்லை. திட்டமிட்டபடி ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாகும் என கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரூ 95 கோடி செலவில் கமல் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11-ம் தேதி வருகிறது.

இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் அறிவித்திருந்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்' படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே அணியாக உள்ளனர்.

இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.

இன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற கமல், "யார் எதிர்ப்பு குறித்தும் கவலையில்லை. எதிர்ப்பவர்கள் பின்னர் என் நிலையைப் புரிந்துகொள்வார்கள்.

5 டிடிஎச் நிறுவனங்கள்...

திட்டமிட்டபடி விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்,"என்றார்.

 

விஸ்வரூபத்துக்கு தடை கோரி வழக்கு!

Saimira Sues Case Against Viswaroopam Release

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திர ஜெயின் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

தனது மனுவில், "மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2.4.2008 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் பின்னர் படத் தயாரிப்புப் பணிகளுக்காக பெரும் தொகையை எங்கள் நிறுவனம் அளித்தது. ஒப்பந்தப்படி 18 மாதங்களுக்குள் படத் தயாரிப்புப் பணிகள் முடிவடைய வேண்டும்.

எனினும் திட்டமிட்டபடி படத்தின் தயாரிப்புப் பணிகளை ராஜ்கமல் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இதனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏற்கெனவே மர்மயோகி படத்தை தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனத்திடம் வாங்கிய தொகையை ராஜ்கமல் நிறுவனம் திருப்பித் தராத வரை, விஸ்வரூபம் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்," என்று கோரியுள்ளார் ராஜேந்திர ஜெயின்.

இந்த மனு நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

 

கவர்ச்சியில் கலக்கிய மோனிகா... தேடி வரும் வாய்ப்புகள்

Monica Thrilled Be Back Tamil Films   

தமிழில் சிலந்தி படம் மூலம் கவர்ச்சியில் கலக்கிய மோனிகா கன்னட திரை உலகில் ‘கல்லா மல்லா சுள்ளா' படத்திலும் கவர்ச்சியாக நடித்தார். இதனால் அவருக்கு தமிழ், கன்னடம், மலையாளத்திலும் கவர்ச்சி வாய்ப்புகள் குவிகிறதாம்.

தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மோனிகா, குமரியான உடன் அழகி படத்தில் நடித்தார். பின்னர் குடும்பப் பாங்கான வேடங்களில் தலை காட்டிய அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சிலந்தி படத்தில் கவர்ச்சி காட்டினார். இதனால் கன்னட வாய்ப்பு கிடைத்தது.

கன்னடத்தில் வெளியான படம் கல்லா மல்லா சுள்ளா. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் என ஏகப்பட்ட பேர் நடித்த படம். படத்தில் கவர்ச்சிக்கும், காமெடிக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். படத்தில் நம்ம ஊர் மோனிகாவும் நடித்திருந்தார். இதில் கவர்ச்சியாகவே நடித்திருந்தார். இதற்காக அவருக்கு அவர் கேட்ட கூடுதல் சம்பளத்தையும் கொடுத்தார்களாம். இப்போது கை மேல் பலனாக கன்னடத்தில் புதிய பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்துள்ளதாம்.

அதேபோல் மலையாளப் பட உலகிலும் வாய்ப்புகள் கதவை தட்டி வருகிறதாம். இதேபோல எங்களது படத்திலும் கவர்ச்சியாக நடியுங்கள் என்று அன்புக் கோரிக்கையும் விடுக்கிறார்களாம்.

 

சொன்னா புரிஞ்சிக்கங்க... டிடிஎச்-ஆல் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது - கமல் விளக்கம்

Theaters Will Not Affect Viswaroopam

சென்னை: விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுவதால் எந்த பாதிப்பும் வராது என்பதை தியேட்டர்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடும் முடிவை கமல் கைவிட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கோரி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் கோரிக்கையை கமல் ஏற்கவில்லை. டி.டி.எச்.சில் `விஸ்வரூபம்' படத்தை ஒளிபரப்புவதில் உறுதியாக இருக்கிறார். இது தொடர்பான புரமோஷனல் வேலைகளையும் அவர் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்.

இதையடுத்து தியேட்டர்களில் `விஸ்வரூபம்' படத்தை திரையிடுவது இல்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை, மதுரை, கோவையில் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆதரவு திரட்டினர். அடுத்து திருச்சியில் இக்கூட்டம் நடக்க உள்ளது.

இதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய கமல் டி.டி.எச்.சில் 'விஸ்வரூபம்' படம் ஒளிபரப்பப்படுவது உறுதி. டி.டி.எச்.களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிடுவதால் தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரூ. 95 கோடி பணத்தை போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அந்த பணத்தை திரும்ப எடுப்பதற்கு டி.டி.எச்.சில் படத்தை வெளியிடுவதுதான் எனக்குத் தெரிந்த ஒரே வழி. இந்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.

 

சமையல் அறை ரொமான்ஸ் ரகசியங்கள்…. நீயா நானா முன்னோட்டம்

Neeya Naana Discuss About Kitchen Romance

சமையல் அறை என்பது வெறும் உப்பு, புளி, மிளகாய் என்பது மட்டுமல்ல அது உயிரோட்டமுள்ள இடம். வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ அன்னையோ, மனைவியோ, மகளோ அன்பாக சமைக்கிறார்கள். பாத்திரங்கள் அவர்களுக்கு நண்பர்கள். அஞ்சரைப் பெட்டியும் கூட அவர்களின் ஸ்பரிசத்தை புரிந்து அதற்கேற்ப பொருட்களை வழங்கும்.

இந்த சமையலறை பெண்களுக்கான இடம் மட்டுமல்ல ஆண்களுக்கும் அங்கு இடமுண்டு. இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் சுவையாய், அழகாய் சமைக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனைவி வந்த பின்னர் எத்தனை ஆண்கள் பிரியமாய் சமைத்து பறிமாறுகிறார்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். மனைவியோடு சேர்ந்து ரொமான்ஸ் உணர்வுகளுடன் சமைக்கும் ஆண்கள்தான் இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் பேச இருக்கின்றனர்.

எப்பவுமோ நீயா நானா முடிஞ்ச உடனேதான் அதைப்பற்றி எழுதுவது வழக்கம். ஆனால் இந்த வாரம் நிகழ்ச்சியின் முன்னோட்டமே சுவாரஸ்யமாக இருந்தது. அதான் நாமும் முன்னோட்டம் எழுதுவோமே என்று தொடங்கிவிட்டோம்.

சாம்பார்ல உப்பு போடுவதற்காக அதை எடுக்கும் போது அப்படியே என் கை மனைவியின் கண்ணத்தை தடவும் என்கிறார் ஒருவர். சமையல் அறையில் கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்ஸ் செய்துகொண்டே சமைப்போம் என்கிறார் மற்றொருவர். அவர்கள் சொல்ல சொல்ல ஆஹா.... என்று சொல்லிவிட்டு சிரித்தார் கோபிநாத். ஒருவேளை அவர்வீட்டில் நடந் சமையலறை ரொமான்ஸ் நினைவிற்கு வந்துவிட்டதோ என்னவோ?

ஆண்கள் கூட வெட்கப்படுவார்களா என்ன இந்த நிகழ்ச்சியில் சிலர் விவரிக்கும் ரொமான்ஸ் நினைவுகளைக் கேட்டு பெரும்பாலான ஆண்கள் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர்.

சமையல் செய்யும் ஆண்களை சமையல் பற்றி தெரியாத ஆண்கள் கிண்டல் அடிப்பது வாடிக்கைதான். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச இருக்கின்றனர்.

இந்த வார ஞாயிறு இரவு ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மொத்தத்தில் களை கட்டப்போகிறது என்றே கூறலாம்.

 

மகளை களமிறக்கும் நடிகை ரூபினி… தமிழ்படத்தில் அறிமுகம்

Actress Rubini S Daughter Debut Film

மும்பையைச் சேர்ந்த முன்னாள் கதாநாயகி ரூபினியின் மகள் நடிக்க வருகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோமல் என்ற இயற்பெயர் கொண்ட ரூபினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனிதன் படம் மூலம் நடிக்க வந்தார். கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த அவர், முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் புதுமுகங்களின் பெருக்கத்தால் ஓய்வு பெற்றுப் போய் விட்டார்.

இப்போது அவரது மகள் நடிக்கும் வயதை எட்டி விட்டாராம். அம்மாவை விட படு அழகாக இருக்கிறாராம் ரூபினியின் மகள். இதனால் தனது தாயார் பாணியில் அவரும் நடிக்க வருகிறாராம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே ராதா தனது இரு மகள்களையும் நடிக்க வைத்து விட்டார். கமல், அர்ஜூன், சரத்குமார் ஆகியோர் தங்கள் மகள்களை நடிக்க வைத்துள்ளனர். இப்போது ரூபினி தனது மகளை களம் இறக்குகிறார். வாரிசு நடிகைகள் வரிசையில் இன்னொரு புதுமுகம். ஹீரோக்களுக்கு யோகம்தான்.

 

அவங்க வேலையை இவங்க செஞ்சா?... மக்கள் டிவியின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

New Year Special Program On Makkal Tv

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டும். மக்கள் தொலைக்காட்சியில் தமிழகம் தொடங்கி உலகம் முழுவமும் 2012ல் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை ஒளிபரப்புகின்றனர். மார்கழியின் சிறப்பு, பேசித்தீர்க்கலாம் வாங்க, புதியமுகம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.

2012 கடந்து வந்த பாதை

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். 2012ம் ஆண்டு தமிழகம், இந்தியா, உலகம் என பிரித்து எதிர்கொண்ட சாதனைகள், சோதனைகளை பட்டியலிட்டு கடந்த வந்த பாதை நிகழ்ச்சியை டிசம்பர் 31ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்புகின்றனர்.

மக்கள் 2012

மக்கள் தொலைக்காட்சியில் 2012ம் ஆண்டு புதிதாக மலர்ந்த நிகழ்ச்சிகளை பற்றி ஓர் பார்வை. மக்கள் தொலைக்காட்சி பற்றி மக்கள் கருத்தினை கேட்கின்றனர். இது டிசம்பர் 31 இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஊர் சுற்றலாம் வாங்க

சென்னை நகரில் டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு நிகழ்வுகள் களை கட்டும். அந்த உற்சாக கொண்டாட்டத்தினை இரவு 10.30க்கு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறது.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

புத்தாண்டு தினத்தில் காலை 6.30 மணிக்கு பாவை இசைவிழா உடன் சிறப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து புத்தாண்டு சிந்தனைகள், பிரபலங்களின் வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகிறது. உலகத் திரைப்படங்கள் குறித்து இந்திய திரைக்கலைஞர்களின் கருத்து ‘அயல்' என்ற பெயரில் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பேசும் பொம்மைகள்

புதிய சுவை நிகழ்ச்சியில் புத்தாண்டு கேக் தயாரிப்பது பற்றி 3 மணிக்கு கற்றுத் தருகின்றனர். தமிழகத்தின் மறந்து போன கலையான தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி ‘பேசும் பொம்மைகள்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக 3.30 அன்று மக்கள் தொலைக்காட்சியில் மக்கள் காண ஒளிபரப்பாகிறது. இதைத்தொடர்ந்து மேற்கத்திய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மாதம் போற்றும் மார்கழி

புத்தாண்டு தினத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி செவிக்கு விருந்தளிக்க வருகின்றனர் இசைக் கலைஞர் சிவா மற்றும் அவரது மாணவியர். இது மாலை 06.05க்கு ஒளிபரப்பாகிறது.

பேசித் தீர்க்கலாம் வாங்க

புத்தாண்டு தினத்தில் பட்டிமன்றம், விவாதநிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம் மக்கள் தொலைக்காட்சியில்' பேசித்தீர்க்கலாம் வாங்க' நிகழ்ச்சியில் காரசாரமாக கலந்துரையாடுகின்றனர் தமிழ் அறிஞர்கள். இந்த நிகழ்ச்சி இரவு 07.02க்கு ஒளிபரப்பாகிறது.

புதிய முகம்

மக்கள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்களும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இடம் மாறி தங்கள் பணியை செய்கின்றனர். அவங்க வேலையை இவங்க பார்த்த எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்கின்றனர்.

 

இது பார்த்திபனின் புத்தாண்டு வாழ்த்து!

Parthiban S New Year Wish

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!

பல காலம் நான் ஏங்கியதுண்டு,
ஒரு column/5cm அளவாவது என் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வந்து விடாதா? என்று!

உலகே மாயமென்கையில்,
உறவுகள் மட்டுமென்ன சாசுவதமா?

அதி வேகமாக சுழழும் திரையுலக பூமி பந்தில் நானும் ஒரு பூஞ்சிறகாய் ஒட்டிக்கொண்டு பயணித்த இத்துனை வருடங்களில் எனக்கு நல் துணையாய் விளங்குவது என் நன்னம்பிக்கை மற்றும் மற்றும்,
நீங்கள் மட்டும்தான்!

இருப்பதை சுவாசம் உணர்த்துவதைப்போல, என் இருப்பை உலகிற்கு உணர்த்தும் சுவாச நேசமாய் நீங்கள்!

'கவர்'ந்திழுத்ததில்லை பெரிதாய் நான் இதுவரை!
கண்ணியமாய் பழகுவேன், ரேகை இடம் பெயர கை குலுக்குவேன், இறுதிவரை நன்றியோடு உயிர் நழுவுவேன்!

வேறென்ன செய்ய?என் புகழ்வின்
வேரென விளங்கும் உங்களை வாழ்த்துவதை மீறி?
புதூ -13, வரும் வருடம் மற்றும் வாழ்நாளெல்லாம்,
ராட்சத ப்ரியங்களுடன்,

-இராதகிருஷ்ணன் பார்த்திபன்
-2013

 

நீங்க என்னோட நண்பர்களாக இருக்கக்கூடாதா?... கமலின் ஆதங்கம்

Super Singers Mesmerise Kamal Hassan

நான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் என்னோட நண்பர்களாக இருந்திருந்தால் அந்த பொறாமையில் இன்னமும் அதிக திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்று உலகநாயகன் கமல்ஹாசன் ஆதங்கப்பட்டார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி 20 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த கமல், சிறுவர் சிறுமியர்களின் பாடலை ரசித்துக் கேட்டார். இந்த நிகழ்ச்சியில் கமல் நடித்த திரைப்படங்களில் இருந்துதான் பாடல்கள் பாடப்பட்டன. ஒவ்வொரு பாடலும் பாடி முடிக்கப்பட்ட உடன் அந்த பாடல் எடுக்கப்பட்ட சூழல், எந்த அளவிற்கு இந்த பாடல் தனக்கு பெயர் பெற்றுத் தந்தது என்றும் பகிர்ந்து கொண்டார் கமல்.

இன்னும் திறமைசாலியாக வளர்ந்திருப்பேன்

ப்ளூ அணியினர் கமலின் எவர்கிரீன் ஹிட் பாடலான "இளமை இதோ.... இதோ..." பாடலை பாடினர். பாடலை பாடப் பாட கமல் முகத்தில் பெருமிதம் பொங்கியது. அவர்களைப் பாராட்டிய கமல், இவ்ளோ சின்ன வயதில் நிறைய திறமைகள் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் எனக்கு நண்பர்களாக கிடைத்திருந்தால் உங்களைப் பார்த்து பொறாமையில் நான் இன்னும் நிறைய திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்றார்.

ராஜாதான் எழுதத் தூண்டினார்...

இதைத் தொடர்ந்து கமலின் படத்தில் இருந்த தீம் மியூசிக் மட்டும் பாடினர். இந்த தீம் இசை வெற்றிக்கு ராஜாதான் காரணம் என்றார் கமல். அதுமட்டுமல்லாது விருமாண்டி படத்தில் இயக்குநராக இருந்த என்னை பாடல் எழுத வைத்தது ராஜாதான் என்றார் கமல். "ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லை..." என்ற முதல் அடியை எடுத்துக் கொடுத்து எழுத வைத்தார் இளையராஜா என்று கூறினார்.

60 வருஷம் பேச வச்சிருவார்

"சொர்க்கம் மதுவிலே"... என்ற பாடலை கவுதம் உற்சாகமாகப் பாடப் பாட கமல் உற்சாகமாகிவிட்டார். இந்தப் பாடல் இந்த அளவிற்கு இத்தனை தலைமுறை தாண்டி பேசுவதற்கு காரணம் ராஜாதான். இதை பாலு கேட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பார் என்றார் கமல். ராஜாவிடம் இதை பாடிக்காட்டு உன்னை 60 வருஷம் வரைக்கும் பிரபலமாக்கிடுவார் என்றார்.

காதல் இளவரசன் டூ உலகநாயகன்

சூப்பர் சிங்கர் டி20 சிறப்பு நிகழ்ச்சியில் கமல் காதல் இளவரசனாக இருந்தபோது நடித்த படங்கள் முதல் இன்றைக்கு உலக நாயகனாக உயர்ந்தது வரை நடித்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடுகின்றனர் குழுவினர். டிசம்பர் 25 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு இரவும் தொடர்கிறது. இதுநாள்வரை நிகழ்ச்சியைப் பார்க்காமல் தவற விட்டவர்கள் இன்றைக்குப் பார்க்கலாம்.

 

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு... சிக்கலில் வடிவேலு மனைவி

Vadilvelu S Wife Encroachment Crisis

காஞ்சிபுரம்: சிரிப்பு நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சிக்கு சிக்கல் வந்துள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிலத்தை காலி செய்யுமாறு மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடங்களை மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர மாநில விவசாயிகளுக்கு விற்றுவிட்டனர்.

அந்த இடங்களில் ஆந்திர மாநில விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். நாளடைவில் விவசாயப் பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் ஆந்திர மாநில விவசாயிகள் அந்த இடங்களை நடிகர்கள் மற்றும் தனியார்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டனர்.

தற்போது நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சி உள்பட 19-க்கும் மேற்பட்ட வெளியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் சிலர் அரசு புறம்போக்கு இடம் சுமார் 130 ஏக்கரில் தனித்தனியாக மா, தேக்கு மற்றும் தென்னை தோப்புகள் அமைத்து பண்ணை வீடுகளாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புஷ்பகிரி பகுதியில் விசாலாட்சி உள்பட 19 பேர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 60 ஹெக்டேர் பரப்புள்ள அரசு புறம்போக்கு இடங்களை வரும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என படப்பை வருவாய் துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பானது இன்று நேற்று நடந்து வருவதல்ல என்று கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள். கடந்த 50 வருடமாகவே பலரும் இந்த நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இருந்த அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கையே எடுத்ததில்லை. மிகவும் தாமதமாக இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக வடிவேலு மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு பாயுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 

கமல் மறுத்ததால் வேறு நடிகரை வைத்து மூன்றாம் பிறை 2-ம் பாகம் தயாரிக்க முடிவு!

A Sequel Moondram Pirai

கமல் நடிக்க மறுத்தாலும், மூன்றாம் இரண்டாம் பாகத்தை உருவாக்காமல் விடமாட்டோம் என்று சிலர் கிளம்பியுள்ளனர்.

கமலுக்கு பதில் வேறு ஹீரோ, அதே ஸ்ரீதேவியை வைத்து இந்தப் படத்தை உருவாக்கும் திட்டத்தில் மும்முரமாக உள்ளனர்.

கமல் - ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜா இசையில் காலத்தால் அழியாத காவியமாக மூன்றாம் பிறையை உருவாக்கியிருந்தார் பாலு மகேந்திரா. இந்தப் படத்தில் நடித்ததற்காக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

படத்தின் பெரிய பலமாக நின்றது க்ளைமாக்ஸ். இதே பாணியில் அதன் பிறகு பல படங்களின் க்ளைமாக்ஸ் அமைய காரணமாக அமைந்தது.

இந்த படத்தின் 2-ம் பாகத்தை இந்தி, தமிழில் மீண்டும் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. கிளைமாக்சில் கமலை விட்டு பிரியும் ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்கு பிறகு உண்மை தெரிந்து அவரிடமே திரும்பி வந்து சேர்வது போல் 2-ம் பாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கமலும், ஸ்ரீதேவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர்களை அணுகி பேசினர்.

ஆனால் கமல் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். முதல் பாகம் சோகமாக முடிந்ததுதான் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தது என்றும், அதை மீண்டும் எடுத்து மகிழ்ச்சியாக முடிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த வயதில் அந்த கேரக்டருக்கு தான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்றும் கமல் தெரிவித்தார்.

கமல் ஒப்புக் கொள்ளாததால், அவருக்குப் பதில் வேறு இந்தி நடிகரை வைத்து எடுக்க முயற்சிக்கிறார்கள். ஸ்ரீதேவி பாத்திரத்தில் மீண்டும் அவரையே நடிக்க வைக்கும் முயற்சியும் தொடர்கிறது.

நமக்கென்னவோ கமல் சொல்வதுதான் சரியாகப் படுகிறது!

 

சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு!

100 Plus Musicians Perform Ar Rahma

ஜெயா டிவிக்காக வரும் டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.

தாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார்.

இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முதல் கடல் வரை தமிழ் பாடல்கள் மட்டுமே இடம் பெறும் என்று ரஹ்மானே அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர்கள், 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா இது.

 

முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க கமல் சார்! - திரையரங்க உரிமையாளர்கள்

Kamal Reconsider His Dth Decision

சென்னை: விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பும் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலர் ஆர். பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது:

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழ்நாடு சினிமாவில் இப்போது புதிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பிவிட்டு அடுத்த நாள் திரையரங்குகளில் வெளியிட்டால் ரசிகர்கள் வரமாட்டார்கள். புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாலும் திருட்டு சி.டி. அதிகமாக இருப்பதாலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை.

தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள்தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்.

விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தன் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட அனுமதிக்க மாட்டோம்.

விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.ல் வெளியிட்ட பின் வெளியிடும் சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்குத் தொழில் தொடர்பாக எந்த ஒத்துழைப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் இருந்து கிடைக்காது," என்றார்.

 

தங்க மகன் தலைப்பு வேண்டாம்.. புதிய தலைப்பை யோசியுங்கள்- இயக்குநருக்கு விஜய் போட்ட உத்தரவு

Actor Vijay Stricltly Says No Old Titles

சென்னை: தனது அடுத்த படத்துக்கு எந்த பழைய படத்தின் தலைப்பும் வேண்டாம். புதிய தலைப்பை யோசித்து வையுங்கள் என்று இயக்குநர் விஜய்க்கு நடிகர் விஜய் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

இயக்குநர் விஜய்யும் நடிகர் விஜய்யும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. பொதுவாக விஜய் படங்கள் முதலில் தலைப்பு அறிவிக்கப்படும். அடுத்துதான் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்.

எனவே சீக்கிரமே தலைப்பை அறிவிக்கும் முயற்சியில், பல்வேறு தலைப்புகளை யோசித்து வந்தனர்.

முதலில் தலைவன் என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால் அதை ஜெஜெ டிவி பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்து, துப்பாக்கியுடன் போஸெல்லாம் கொடுத்திருந்தார்.

இதனால் ரஜினியின் படத்தலைப்பான தங்கமகன் என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்தனர். ஆனால் இது அறிவிப்பாக வரும் முன்னரே ஏக எதிர்ப்பு. இந்தத் தலைப்புக்கு சொந்தக்காரரான சத்யா மூவீசும் முதலில் சம்மதித்து, பின் மறுத்துவிட்டது.

ரஜினியின் வேறு படத் தலைப்புகளை வைக்கலாமா... தர்மத்தின் தலைவன் தலைப்பை எடுக்க அனுமதி கோரலாமா என்றெல்லாம் யோசித்தனராம்.

ஆனால், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பும் என்பதால், வேண்டாம் என விட்டுவிட்டார்களாம்.

'ஆனது ஆச்சு.. ஷூட்டிங் முடியறதுக்குள்ளவாவது ஒரிஜினல் தலைப்பு சொல்லுங்க, அது போதும்' என்று கூறிவிட்டாராம் விஜய்.

 

ஷங்கர் டென்ஷனானால் என்ன செய்வார்?

What Will Shankar Do While Tensed

சென்னை: இயக்குனர் ஷங்கர் டென்ஷனானால் என்ன செய்வார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஐ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்காக விக்ரம் உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளார். உடல் எடையை படத்துக்கேற்ப கூட்டுவதும், குறைப்பதும் விக்ரமுக்கு ஒன்றும் புதிதன்று. சேது படத்தில் அவர் எந்த அளவுக்கு தனது எடையைக் குறைத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர்கள் என்றால் டென்ஷன் இல்லாமல் இருக்காது. டென்ஷன் ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வார்கள். சிலர் அருகில் உள்ளவர்களை திட்டித் தீர்த்துவிடுவார்கள், சிலர் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் ஷங்கர் டென்ஷனானால் உடனே ஒரு காமெடி படத்தைப் பார்க்க சென்றுவிடுவாராம்.

நல்ல டெக்னிக் தான், சிரிப்பை வைத்து கோபத்தை விரட்டுகிறாரே ஷங்கர்.

 

பெண்ணுக்கு லிப் டு லிப் அடித்து பரபரப்பு கிளப்பிய பிரபல நடிகை!

Riya Sen Lip Lock With Girl At Night Party

பார்ட்டியில் சக பெண்ணுக்கு பிரபல நடிகை ரியா சென் லிப் டு லிப் கிஸ் அடித்த போட்டோ வெளியாகியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

நடிகை ரியா சென் தமிழில் தாஜ்மகால் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். பாலிவுட்டில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தவர்.

அதே நேரம், பலான சமாச்சாரங்களில் கொஞ்சம் ஓவராகவே அடிபட்டவர் ரியா. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் காதலியாக கொஞ்ச காலம் சுற்றிவந்தார். பின்னர் அஸ்மித் படேல் என்பவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் நெருக்கமாக இருந்த பல எம்எம்எஸ்கள் சமீப காலமாக இணையத்தில் உலா வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ரியா சென்னும் அவரது நண்பர்களும் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது ஆண் நண்பர்கள் பக்கத்திலிருக்க, கவர்ச்சியாக வந்திருந்த இன்னொரு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து லிப் டு லிப் முத்தமிட்டார் ரியா சென். நீண்ட நேரம் நீடித்த இந்த முத்தக் காட்சியை போட்டோகிராபர்களும் சுட்டுத் தள்ளிவிட்டனர்.

பாலிவுட்டில் இதுதான் இன்றைக்கு 'ஃபயர்' மேட்டர்!

 

இப்போது அமைச்சர் சசி தரூருடன் சந்திப்பு... அடுத்து சோனியாவுடனா? - த்ரிஷா ப்ளான் என்ன?

Actress Trisha Meets Minister Sashi Tharoor

மத்திய அமைச்சர் சசிதரூரைச் சந்தித்துப் பேசினார் நடிகை த்ரிஷா. நகைக் கடை திறப்பு விழா ஒன்றிற்காக திருவனந்தபுரத்துக்கு த்ரிஷா சென்றபோது இந்த சந்திப்பு நடந்தது.

இருவருமே அந்த விழாவுக்கு சிறபர்பு விருந்தினர்கள் என்பதால், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, "அமைச்சர் சசிதரூர் எல்லோரையும் வசீகரிக்ககூடிய தலைவர். நல்ல சிந்தனையாளர். அவரை திருவனந்தபுரத்தில் சந்தித்தது இனிமையாக இருந்தது. எனது நடிப்பை பாராட்டினார்," என்றார்.

த்ரிஷா நடிக்க வந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்டட 10 ஆண்டுகாலம் தொடர்ந்து முதல் நிலை நாயகியாக இருந்து வருகிறார்.

இப்போதும் அவர் கைவசம் தமிழில் மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. தெலுங்கிலும் மூன்று படங்களில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் புகழோடு உள்ள த்ரிஷாவுக்கு சமூக நலப் பணிகளில் ஆர்வம் அதிகம். இப்போதுதான் அமைச்சருடன் சந்திப்பு நடந்திருக்கிறது. அடுத்து சோனியாவுடனா? என்றால் புன்னகையோடு நழுவுகிறார்!!

 

தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே டிடிஎச்சில் ரிலீசாகிறது விஸ்வரூபம்!

Vishwaroopam Be Aired Tamil Telugu And Hindi

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே டிடிஎச்சில் வெளியாகிறது கமலின் விஸ்வரூபம்.

வரும் ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச்சில் பார்க்கலாம்.

தமிழ் மற்றும் தெலுங்கு விஸ்வரூபத்தை ஏர்டெல் டிடிஎச்சின் பணம் கட்டிப் பார்க்கலாம். தமிழுக்கு ரூ 1000 ம், தெலுங்குக்கு ரூ 500 ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கமல் அறிவிப்புப்படி, தியேட்டர்களில் வெளியாவதற்கு (வெளியாகுமா?!) 12 மணி நேரம் முன்னதாக டிடிஎச்சில் தமிழ், தெலுங்கு விஸ்வரூபத்தைக் காணலாம்.

இந்தியில் விஸ்வரூப் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரூ 500 கட்டணமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து கமல் விடுத்துள்ள அறிக்கையில், "ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தால் மேலும் பெரிய உயரங்களை அடை முடியும் என்பதற்கு உதாரணமைாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள் அவர்கள் வீடுகளிலிருந்தபடியே வசதியாக விஸ்வரூபத்தைப் பார்க்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.

ஏர்டெல்லுடன் வீடியோகானும் இணைந்து விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுகிறது. வீடியோகான்தான் அதிக டிடிஎச் சந்தாதாரர்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் எங்களுக்கு அக்கறையில்லை என்று அர்த்தமா? - ப்ரியங்கா சோப்ரா

Bollywood Also Concern On Delhi Rape Case

டெல்லி: பெண் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்காததால், பாலிவுட்காரர்களுக்கு பிரச்சினையில் அக்கறையில்லை என்று கூறுவது தவறு, என்றார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

டெல்லியில், ஐ.நா.வின் ‘யுனிசெப்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார நிகழ்ச்சியில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

அங்கு அவர் அளித்த பேட்டி:

டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், மிகக்கொடிய குற்றம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். முதல்முறையாக இளைஞர்கள் ஒன்றாக போராட முன்வந்துள்ளனர். அதே சமயத்தில், போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும்.

பெண்ணுரிமை குறித்து தேசிய அளவில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதே என விருப்பம். ஆண்களுக்கு பெண்கள் குறித்த அணுகுமுறை மாற வேண்டும். ஆணுக்கு சமமாக பெண்களை மதிக்க வேண்டும்.

குற்றம் சாட்டுவதா?

இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தி திரையுலகம் உதட்டளவில் மட்டும் குரல் கொடுப்பதாகக் கூறுவது தவறு. திரையுலகினர், இத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், எங்களுக்கும் இந்த உணர்வு உள்ளது. எங்களுக்கு பணிச்சுமை இருப்பதால், போராட்ட களத்தில் எங்களால் இருக்க இயலாது. அதற்காக எங்களுக்கு அப்பிரச்சினைகளில் அக்கறை இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

நாங்களும் விவாதத்தில் பங்கேற்றுதான் வருகிறோம். ஆனால், பிரபலமாக இருக்கும் ஒரே காரணத்துக்காக, பாலிவுட் திரையுலகம் குறி வைக்கப்படுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை," என்றார்.

 

இளையராஜாவாக பிரகாஷ்ராஜ்... ரஹ்மானாக எஸ்ஜே சூர்யா?

Sj Surya Isai Based On Ilayaraaja Rahman Clash   

பப்ளிசிட்டியை மனதில் வைத்து பிரபலங்களின் மோதல் அல்லது அவர்கள் தொடர்பான சர்ச்சையை மையப்படுத்தி படமெடுப்பது கோடம்பாக்கத்தில் அடிக்கடி நடப்பது.

இப்போது இயக்குநர் எஸ் ஜே சூர்யா அந்த வேலையைக் கையிலெடுத்துள்ளார். இளையராஜா உச்சத்திலிருந்த போது, அவரிடம் பணியாற்றி வந்த ஏ ஆர் ரஹ்மான் திரையுலகில் தனி இசையமைப்பாளராக புயலாய் நுழைந்தார்.

அன்றிலிருந்து இளையராஜா Vs ரஹ்மான் என்ற சூழல் மீடியாவில் தோன்றிவிட்டது. நிஜத்தில் இந்த இருவரும் ஒன்றாக மேடைகளைப் பகிர்ந்து கொண்ட போதும், ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த மோதலைத்தான் இசை என்ற பெயரில் படமாக எடுக்கிறாராம் எஸ் ஜே சூர்யா.
ஏ.ஆர். ரஹ்மான் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யாவும், இளையராஜாவாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்தும், கதை குறித்தும் எஸ்ஜே சூர்யா கூறுகையில், "இந்தப் படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களை பற்றியதுதான்.

ஆனால் அது இளையராஜா, ரஹ்மான் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. காரணம், புது இசையமைப்பாளர் அறிமுகமாகும்போது மூத்த இசையமைப்பாளர் தனக்கு பாதிப்பு நேரும் என கருதுவது இயல்புதான். சினிமாவில் இது பொதுவான பிரச்சினைதான். கே.வி.மகாதேவன் உச்சத்தில் இருந்தபோது எம்.எஸ்.விஸ்வநாதன் வந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் உச்சத்திலிருந்தபோது இளையராஜா அதிரடியாக சாதிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான்.

இது சினிமாவில் தொன்று தொட்டு இருந்துவரும் மாறுதல்கள். இந்த நான்கு இசையமைப்பாளர்களுக்கும் நான் ரசிகன். அதனால் பொதுவான ஒரு ட்ரெண்டை படமாக்குகிறேன். அதில் இளையராஜா - ரஹ்மான் என அர்த்தப்படுத்திப் பார்ப்பது தேவையற்றது," என்றார்.

 

விஷாலின் சமர், மத கஜ ராஜாவுக்கு சிக்கல்!

Vishal S 2 Movies Clash On The Same Day   

வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட விஷாலின் சமர் படம் தள்ளிப் போய்விட்டது.

பொங்கலுக்கு இந்தப் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் நிதிப் பிரச்சினையில் சிக்கியிருப்பதால் இந்த ஒத்தி வைப்பு என்று கூறப்படுகிறது. இரண்டு வார கெடுவுக்குள் சிக்கலைச் சமாளித்து வெளியிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்படி அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த ஒத்தி வைப்பால் விஷாலின் இன்னொரு படமான மத கஜ ராஜாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் மதகஜ ராஜாவை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார் சுந்தர் சி.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் சமரும் மத கஜ ராஜாவும் வெளியானால் இருபடங்களுமே அடிவாங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மதகஜ ராஜாவை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது.

 

டெல்லி மாஃபியா: சினிமா படமாகிறது டெல்லி பலாத்கார சம்பவம்

Hemant Madhukar Next Movie Delhi Mafia

டெல்லி: மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், திரைப்படம் ஆகிறது. பாலிவுட் இயக்குநர் ஹேமந்த் மதுகர் ‘டெல்லி மாஃபியா' என்ற பெயரில் இதனை இயக்குகிறார்.

டெல்லியில், ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் 14ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பலாத்காரம் செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையுடன் டெல்லியில், கடந்த 5 நாட்களாக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தி திரைப்படமாகிறது

நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம், ‘டெல்லி மாஃபியா' என்ற பெயரில் திரைப்படம் ஆகிறது. ‘மும்பை 125 கிலோ மீட்டர்' என்ற இந்தி படத்தை இயக்கிய ஹேமந்த் மதுகர், இந்த படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதுபற்றி கருத்து கூறியுள்ள ஹேமந்த் மதுகர்,‘‘இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம். டெல்லியில் நம் சகோதரிகளும், மகள்களும் தினமும் படும் கஷ்டங்களையும் சிரமங்களையும் படத்தில் காட்டப் போகிறேன்.

பலாத்கார சம்பவத்தில் நடந்த உண்மைகளை அப்படியே சொல்லப் போகிறேன். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன. அதையும் படத்தில் காட்ட இருக்கிறேன்.

எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும்.'' இவ்வாறு டைரக்டர் ஹேமந்த் மதுகர் கூறினார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும் போது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மகன், மகளுடன் பியூர்டாரிகோ கச்சேரியில் கலக்கிய ஜெனீபர் லோபஸ்!

Jennifer Lopez S Twins Join Her On Stage In Puerto Rico

சான் ஜூவான், பியூர்டாரிகோ: பியூர்டாரிகோவின் சான் ஜூவான் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெனீபர் லோபஸ், தனது இரட்டைக் குழந்தைகளையும் மேடையில் ஏற்றி அவர்களுடனும் நடனமாடி அனைவரையும் களிப்பில் ஆழ்த்தினார்.

ஜெனீபர் லோபஸுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 4 வயதாகிறது. மேக்ஸ் மற்றும் எம்மி என பெயரிடப்பட்ட அவர்களுடன் தற்போது பியூர்டாரிகாகோவில் முகாமிட்டுள்ளார் ஜெனீபர். அங்கு நடந்த தனது இசை நிகழ்ச்சிகளையும் தனது பிள்ளைகளையும் மேடையேற்றிய ஜெனீபர் அவர்களுடன் லேசான ஒரு டான்ஸையும் போட்டு உற்சாகப்படுத்தினார்.

கச்சேரி முடிவடையப் போகும் நேரத்தில் இரு குழந்தைகளும் மேடையேறினர். அவர்களுடன் ஜெனீபரின் லேட்டஸ்ட் காதலரான காஸ்பரும் உடன் வந்தார். கூடவே ஜெனீபரின் டான்ஸர்களும் சேர்ந்து கொண்டனர்.

ஒரு கையில் தனது மகளைப் பிடித்துக் கொண்ட ஜெனீபர் இன்னொரு கையில் மகனைப் பிடித்துக் கொண்டு மேடையை ஒரு ரவுண்டு அடித்தார்.

மகன் மேக்ஸ், தனது அம்மாவுக்கு ஒரு ஒற்றை வெள்ளை ரோஜைவை பரிசாகக் கொடுத்து கூட்டத்தினரிடமிருந்து கலகலப்பான கோஷத்தைப் பாராட்டாகப் பெற்றான்.

 

துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா!

Nayanthara Celebrates Christmas Dubai

துபாயில் கிறிஸ்துமஸ் விழாவை தனது உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் நடிகை நயன்தாரா.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் டயானா குரியன்.

நாகார்ஜுனா ஜோடியாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படப்பிடிப்பு முடிந்ததும், தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு துபாய் பறந்துவிட்டார் நயன்.

அங்கே தன் அண்ணன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

"நீண்ட நாளைக்குப் பிறகு நான் மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இந்த நாளைக் கொண்டாடுகிறேன். அதுவும் குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது," என்றார்.

இன்று இரவு குடும்பத்தினருடன் மெகா விருந்துக்குத் தயாராகிறாராம் நயன்.

இன்னும் ஐந்து தினங்களில் புத்தாண்டு பிறப்பதால், அந்த நாளையும் குடும்பத்துடன் துபாயிலேயே கொண்டாடப் போகிறாராம்.

 

இவங்க அண்ணன் தம்பிகளா? இளையராஜாவை அதிர வைத்த ஜிவி, மணிரத்தினம்!

Ilayaraja S Encounter With Gv Manirathnam

சினிமா உலகில் அண்ணன் தம்பிகளைக்கூட அடையாளம் காண முடியாமல் அசடு வழிந்த சம்பவம் உண்டு என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் பதிலளித்துள்ள இளையராஜாவிடம் வாசகர் ஒருவர் நீங்கள் அசடு வழிந்த சம்பவங்கள் ஏதாவது உண்டா என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, சினிமாவில் இரண்டு பெரிய புள்ளிகள். இருவருமே பிரபலமானவர்கள். அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது பெரிய இயக்குநராக உள்ள அவர் முதல்முதலில் கன்னடப் படம் இயக்கினார். அதற்கு நான்தான் இசைஅமைத்தேன். பின்னர் பெரிய நிறுவனம் எடுத்த சிறிய படத்தில் அந்த புதுப்பையனுக்கு வாய்ப்பு தர உள்ளதாக தயாரிப்பாளர் கூறினார். கதையை கேட்டு விட்டு சரி என்று கூறிவிட்டேன்.

அதன்பின்னர் ஒரு படத்தின் பூஜைக்காக ஒரு பெரிய பைனான்சியர் வந்திருந்தார். அவரிடம் அந்த புதிய இயக்குநரின் பெயரைச் சொல்லி வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி சிபாரிசு செய்தேன். அதற்கு அவர், நீங்கள் வேண்டுமானால் என்னிடம் அனுப்புங்கள் என்று கூறினாரே தவிர அவன் என் தம்பிதானே? என்று என்னிடம் கூறவே இல்லை.

அதேபோல் அந்த இயக்குநரிடம், பைனான்சியரின் பெயரைச் சொல்லி அவரைப்போய் பார்க்கச் சொன்னேன். அப்போது அந்த இயக்குநர், சார், அவர் என்னோட அண்ணன்தானே? என்று என்னிடம் சொல்லவேயில்லை.

சில நாட்கள் கழித்து இது பற்றி வேறொருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பிதானே உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அப்போது என் முகத்தில் அசடு வழிந்தது என்று கூறியுள்ளார் இளையராஜா.

எப்படி இவர்களால் அண்ணன் தம்பிகள் என்பதைக்கூட மறைத்து உலவி வர முடிகிறது?. அதை நினைக்கும் போதெல்லாம் என் மனம் உறைந்து போய்விடும் என்று கூறியுள்ளார் ராஜா.

ராஜா சொல்லியுள்ளஅந்த அண்ணன் தம்பி மறைந்த ஜிவி மற்றும் மணிரத்தினம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

இளையராஜாவுக்கு, விக்கு விநாயக் ராமுக்கு சங்கீத் நாடக அகாடமி விருது

Sangeet Natak Academy Award Ilayaraja

டெல்லி: இசைஞானி இளையராஜா, கடம் வித்வான் விக்கு விநாயக் ராம் உள்ளிட்ட 36 பேருக்கு சங்கீத் நாடக அகாடமி விருது கிடைத்துள்ளது.

இசை, நாட்டியம், நாடகம், பொம்மலாட்டம் ஆகிய கலைத்துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் சங்கீத் நாடக அகாடமி விருதுகள், மற்றும் சங்கீத் நாடக அகாடமி சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

2012ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இளையராஜா உள்ளிட்ட 36 பேருக்கு சங்கீத் நாடக அகாடமி விருது கிடைத்துள்ளது. இசைத் துறையில் புதுமைகளை புகுத்தி சாதனை படைத்ததற்காக இளையராஜா சங்கீத் நாடக அகாடமி விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

இளையராஜா உள்ளிட்ட விருது பெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப் பட்டயம், அங்கவஸ்திரம் ஆகியவை பரிசாக வழங்கப்படும்.

சங்கீத நாடக அகாடமி சிறப்பு விருதுக்கு பிரபல கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், வயலின் இசைக்கலைஞர் என்.ராஜம், ரத்தன் தியாம் உள்பட 40 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிரபட்டயம், அங்கவஸ்திரம் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

கோர்ட் தீர்ப்பு வரட்டும்… கல்யாணம் பண்ணிக்கிறேன்: சல்மான்கான்

Salman Khan Makes His Wedding Announcement

டெல்லி: தன் மீதான வழக்குகளில் தீர்ப்பு வெளியானபின்னரே திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க முடியும் என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.

திரைப்படமோ, டிவியோ சல்மான்கான் வருகிறார் என்றாலே அங்கே பரபரப்பு பற்றிக்கொள்கிறது. இப்போது சல்மான்கானின் தபாங் 2 திரைப்படம் வசூலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த வெற்றிக்கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் சல்மான்கான்.

கசந்த காதல்கள்

46 வயதாகி விட்டது. கடந்த 20 வருடங்களில் எத்தனையோ காதல்களை கடந்திருக்கிறார் சல்மான்கான். ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் என பல நடிகைகளுடன் காதலில் சிக்கி அது பின்னர் முறிந்து போய்விட்டது. காதல் சர்ச்சைகளைப் போலவே மான்வேட்டை, வாகனவிபத்து வழக்குகளும் அவரை விடாமல் துரத்தி வருகிறது. அதனால்தான் அவர் திருமணம் பற்றி நினைக்காமல் இருக்கிறாராம்.

நம்பிக்கை இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க வந்த சல்மான்கானிடம் அவருடைய திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கோர்ட்டுகளில் என் மீது வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் தீர்ப்பு வெளிவந்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார். இரு வழக்குகளில் இருந்தும் விடுதலையாவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சிறை செல்ல வேண்டுமே?

ஒருவேளை தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், நான் சிறை செல்ல வேண்டியது இருக்கும். சிறை சென்றால் வெளிவந்த பிறகே திருமணம் செய்வேன். தீர்ப்பு வெளிவரும் முன்பே நான் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், தீர்ப்பு எனக்கு பாதகமாக அமைந்தால் எனது மனைவி குழந்தையுடன் வந்து என்னை சிறையில் சந்திக்க வேண்டியது இருக்கும் இல்லையா? அது நன்றாக இருக்காது. எனவேதான் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.

13 ஆண்டுகால வழக்கு

1999-ம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியின்போது மான் வேட்டையாடியதாக சல்மான்கான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதேபோல மும்பையில் 2002-ம் ஆண்டு அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி ஒருவர் இறந்தார். இது குறித்த வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 13 வருடங்களாக வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற படியேறி வருகிறார் சல்மான்கான்.

தீர்ப்பிற்காக நீங்க காத்திருக்கலாம்.. ஆனால் வயதும், இளமையும் காத்திருக்குமா என்பதை சல்மான்கான் புரிந்து கொள்வாரா? என்று ஆதங்கப்படுகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

 

ஆண்டின் இறுதி வாரம்... ரிலீசுக்கு தயாராகும் அரை டஜன் படங்கள்

6 Movie Hit Screens This Week   

இந்த 2012-ம் ஆண்டின் கடைசி வாரம் இதுதான். இந்த வாரத்தில் மட்டுமே 6 படங்களுக்கு மேல் ரிலீசுக்குத் தயாராகின்றன.

வருகிற 28-ந்தேதிதான் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை. அன்றைய தினம் சமர், அகிலன், பத்தாயிரம் கோடி, பாரசீக மன்னன், மன்சூரலிகானின் லொள்ளு தாதா, அகிலன் ஆகிய 6 படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. பத்தாயிரம் கோடி என்ற படமும் இதில் சேரும் என்று தெரிகிறது.

இவற்றில் சமர் படத்தில் விஷால் - த்ரிஷா நடித்துள்ளனர். திரு இயக்கியுள்ளார். விஷால் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கும் ஆக்ஷன் - காதல் படம்.

இதைத்தவிர மற்ற படங்கள் அனைத்துமே சின்ன பட்ஜெட் படங்கள். எப்படியாவது அரசின் சலுகையைப் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சில தியேட்டர்களில் மட்டுமே வெளியாகவிருக்கின்றன.

வரும் ஜனவரி மாதம் பொங்கல் சீஸன் என்பதால், அதற்கு முன்பே சில படங்கள் ஜனவரி முதல்வாரத்தில் வெளியாகவிருக்கின்றன.

 

ஹே.... ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டாராம் பேரரசு!!

Perarasu Scripted Story Rajini   

ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டேன். அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தருவாரா ரஜினி சார்? என்று கேட்டுள்ளார் இயக்குநர் பேரரசு.

கோலிவுட்டில் ரொம்ப காலமாக இருக்கும் ட்ரெண்ட், 'ரஜினி சார் மட்டும் ரெடின்னா... அவருக்கு அசத்தலாக ஒரு கதை வச்சிருக்கேன்' அல்லது 'ரஜினி சார்கிட்ட ஒரு ஒன்லைன் சொல்லியிருக்கேன்.. பேசலாம்னு சொல்லியிருக்கார்" என்று இயக்குநர்கள் சொல்லிக் கொள்வதுதான்.

இப்படிச் சொல்லிக் கொண்டவர்கள் பட்டியல் ரொம்பப் பெரியது. ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்... இவர்களில் ஒருவருடன் கூட ரஜினி படம் பண்ணவில்லை என்பதுதான்!!

இப்போது இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் பேரரசு. சமீபத்தில் இவர் கொடுத்த திருத்தணி பார்த்த பாதிப்பில் சில ரசிகர்கள் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவே இனி பார்க்க வேணாம் மக்கா என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிட்டார்கள்.

இனி பேரரசுவின் நிலை கேள்விக்குறியாகிவிட்ட சூழலில், ஒரு பப்ளிசிட்டி பிட்டைப் போட்டுள்ளார் (விஜய்யோட ஆஸ்தான இயக்குநராச்சே!)

ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளதாகவும், அது ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்," என்றார்.

கடவுளே கடவுளே!

 

சமந்தா சம்பளம் கிர்ர்ர்.... ரூ 1.25 கோடியானது!

Samantha Now Gets Rs 1 25 Cr   

கோலிவுட், டோலிவுட் இரண்டிலுமே இப்போது அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகை என்ற 'பெருமை'... வேறு யார்.. இன்றைய கனவுக் கன்னி சமந்தாவுக்குப் போயிருக்கிறது.

சமந்தாவின் லேட்டஸ்ட் சம்பளம் ரூ 1.25 கோடி. தெலுங்கில் இப்போது அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள புதிய படத்துக்கு இந்த சம்பளம் தரப்பட்டுள்ளது.

நயன்தாரா, தமன்னா, த்ரிஷா, அனுஷ்கா போன்றவர்கள்தான் இதுவரை தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் பெற்று வந்தனர். இப்போதும் இவர்கள் ஒரு கோடி ப்ளஸ் சம்பளமாகப் பெறுகின்றனர்.

ஆனால் இந்த தொகையை எட்ட அவர்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சமந்தா நான்கைந்து படங்களில் அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார்.

இவரது சம்பளத்தை உயர்த்தியதில் இருவருக்கு முக்கியப் பங்குண்டு. ஒருவர் தில் ராஜு மற்றொருவர் பெல்லம் கொண்டா சுரேஷ். முதல் தயாரிப்பாளர் ரூ 1 கோடி வரை சமந்தாவுக்கு கொடுத்தார்.

அடுத்தவர் இப்போது 1.25 கோடி தர ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.

தமிழில் அடுத்து ஒப்பந்தமாகும் படத்துக்கு சமந்தாவின் சம்பளம் இதுதானாம்!

 

விஸ்வரூபத்திற்கு ரூ.1,000 கொடுத்து படம் பார்க்கையில் கரண்ட் போச்சுனா?

Kamal Sir Your Fans Have Doubt

சென்னை: விஸ்வரூபம் படத்தைப் பார்க்க டிடிஎச்சுக்கு ரூ.1,000 கட்டி படம் பார்க்கையில் மின்வெட்டு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தமிழக ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கமல் ஹாசனின் விஸ்ரூபம் படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் 8 மணிநேரத்திற்கு முன்பு டிடிஎச்சில் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தின் நாயகன் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்கள் விஸ்வரூபத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டியபோதும் ஏர்டெல் நிறுவனம் படத்தின் டிடிஎச் உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச் வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.விக்களில் காண முடியும். ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.

இப்பொழுது தமிழக ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மாநிலத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,000 கட்டி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டுவிட்டால் படம் அவ்வளவு தானா என்று அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2 மணிநேரத்திற்கு மேல் ஓடும் படத்தை தமிழக ரசிகர்களால் நிச்சயம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு மணிநேரம் மின்சாரம் இருந்தால் அடுத்த ஒரு மணிநேரம் இருக்காது.

கமல் சார் இந்த சந்தேகத்தை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். மின்தடையில்லா நேரத்தில் படத்தை வெளியிட நினைத்தால் அது நடக்காத காரியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!

Neeya Naana Talk Show Discussion About

கசக்கிப் பிழியும் கார்ப்பரேட் நிறுவன பணிச்சுமையால் கணவன் மனைவி இடையே இணக்கமான நிலை மறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் அமைந்திருந்தது நீயா நானாவில் பேசியவர்களின் கருத்து.

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைக்குப் பின்னர் கை நிறைய சம்பளம்... கார்... சொந்த வீடு என இளம் வயதிலேயே இன்றைக்கு பலரும் செட்டில் ஆகிவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பதனால் சமூகத்தில் என்னுடைய மதிப்பு அதிகரிக்கிறது என்பது ஒரு சிலர் கூற்று. இது வசதியாக இருக்கிறது என்று ஒரு சிலர் கருதினாலும் கார்ப்பரேட் கலாச்சாரம் சிலருக்கு புழுக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த புழுக்கம் ஏற்படுத்திய மன உளைச்சல் தாங்காமல் வேலையை விட்டவர்கள் அதிகம்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், வேலை பார்த்து அந்த சிரமம் தாங்காமல் வேலையை விட்டவர்களும் விஜய் டிவியில் இந்த வாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதியும், ஐந்து இலக்கச் சம்பவமும் ஆச்சரியமளிக்கக் கூடியதுதான். சில மாதங்களிலேயே தன்னுடைய தேவைகள் எளிதில் நிறைவேறும் என்று கூறினர் ஒரு தரப்பினர்.

ஆனால் கார்ப்பரேட் நிறுவன வேலை என்பது புழுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் குடும்பம், குழந்தைகளை கூட கவனிக்க முடியாது. பணத்தின் பின்னர் ஓடவேண்டியிருப்பதால் மனைவி குழந்தைகளைக்கூட மறக்கவேண்டியிருக்கிறது என்றனர் மற்றொரு தரப்பினர்.

நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், தனக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் தர தயாராக இருந்த கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்ப்பதாக கூறினார்.

அதேபோல் கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிய ஒரு தம்பதியினர் பேசியது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், கார்ப்பரேட் நிறுவனப் பணிச்சூழல் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக கணவரிடம் இருந்து ஒரு முத்தம் கூட பெறமுடியாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு மனைவி. இதன் காரணமாகவே அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக விவசாயத்தொழில் செய்வதாக கூறினார்.

வொய்ட் காலர் ஜாப் என்ற கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயத்தை தொட்டேன். இப்போது என்னுடைய உடைகள்தான் அழுக்காகியிருக்கிறது. ஆனால் என்னுடைய மனம் வெள்ளையாக இருக்கிறது என்றார் அவர்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் விவாகரத்துக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிச்சயமாகின்றன என்று கார்ப்பரேட் பணியினால் குடும்பங்கள் பிளவுபடுவதைக்கூறினார் ஒருவர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிறப்பு விருந்தினர் திரு சோம. வள்ளியப்பன், கார்ப்பரேட் நிறுவனங்களினால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு என்று தெரிவித்தார். நாம் எந்த அளவிற்கு நேரத்தை பிரித்து பணி புரிகிறோம். விடுமுறையை எவ்வாறு திட்டமிட்டு செலவிடுகிறோம் என்பதைப் பொருத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் மகிழ்ச்சியாக பணிபுரியும் என்றும் கூறினார் அவர்.

நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் திருமுருகன் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஜனநாயகம் என்பது கிடையாது என்று குற்றம் சாட்டினார். அதைவிட முக்கியமான விசயம் கார்ப்பரேட் நிறுவனங்களில் மனிதநேயம் என்பதை பார்க்க முடியாது. பணியாளர்களின் சத்துக்களை உறிஞ்சிவிட்டு கடைசியில் சக்கையாக துப்பிவிடும் என்று கூறினார். அடிப்படை கோட்பாடு என்பதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் திருமுருகன். நிறுவனம் கார்ப்பரேட். இங்கே மனிதநேயம் கிடையாது என்றார்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல அமைப்பு இருக்கிறது. ஆனால் அதில் பணிபுரியும் மனிதர்கள்தான் அந்த அமைப்பினை உடைக்கின்றனர். இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது என்று கூறினார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

எந்த பணியாக இருந்தாலும் அதில் சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இரண்டையும் சமாளித்து திறம்பட பணிபுரிபவர்கள் ஒருசிலர்தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதிக்காக சிலர் காலம் முழுவதும் சிலர் அங்கு பணிபுரிகின்றனர். கடைசி வரைக்கும் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை என்று நினைப்பவர்கள் அதிலிருந்து வெளியேறிவிடுகின்றனர்.

உங்க அனுபவம் எப்படி? நீங்க என்ன நினைக்கிறீங்க?

 

பேசாம கோலிவுட்டுக்கே போயிடலாமா: யோசனையில் அசின்

Asin Thinking About Returning Kollywood   

மும்பை: பாலிவுட்டில் செட்டிலான நடிகை அசின் மீண்டும் கோலிவுட்டுக்கே போய்விடலாமா என்று பலத்த யோசனையில் உள்ளாராம்.

நடிகை அசின் கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அப்போது நம்ம முருகதாஸ் சூர்யாவை வைத்து எடுத்த கஜினியை இந்தியில் ரீமேக் செய்தார். மனிதர் அசினையே இந்தி கஜினிக்கும் ஜோடியாக்கினார். அப்படி பாலிவுட் சென்ற அசின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் நான் தான், நான் தான் முதன்முதலில் ரூ.100 கோடி வசூல் படத்தில் நடித்த நடிகை என்றெல்லாம் அவர் தெரிவித்தார்.

ஆனால் பாவம் அவர் பேச்சை யாரும் கேட்ட மாதிரியே இல்லை. இந்நிலையில் அக்ஷய் குமாருடன் அவர் நடித்த கிலாடி 786 படம் ரிலீஸாகி நல்ல வசூலை அள்ளியது. அந்நேரம் பார்த்து ஆமீர் கானின் தலாஷ் ரிலீஸான உடன் கிலாடி படுத்துவிட்டது. என்ன தான் முட்டி மோதினாலும் கோலிவுட்டில் இருந்த மாதிரி இங்கு இல்லையே என்று அவர் நினைக்கிறாராம்.

பாலிவுட் வந்து பென்சில் மாதிரி குச்சியாகி இத்தனை சாதனைகள் புரிந்தும் கேட்பார் இல்லையே பேசாமல் கோலிவுட்டுக்கே திரும்பிவிட்டால் என்ன என்று அவர் பலத்த யோசனையில் உள்ளாராம். அப்போ இன்னும் சில நாட்களில் அசினை தொடர்ந்து தமிழ் படங்களில் பார்க்கலாமோ?

 

ஏ.ஆர் ரஹ்மான் என்ன பாட்டு பாடணும்… ரசிகர்கள் தேர்வு செய்கிறார்கள்.

Ar Rahman S Thai Manne Vanakkam Concert

சென்னை: சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ தாய் மண்ணே வணக்கம்' இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த பாடலை முதலில் பாடவேண்டும் என்று எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று இசை ரசிகர்களை ஜெயாடிவி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக செய்தியாளர்களை சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

எப்பவும் ஹாலிவுட், இந்தின்னு இருக்கிறீங்க. எப்ப தமிழ் படங்களுக்கு அதிகமாக இசையமைக்கப் போறீங்க?

இப்பதான் கடல் முடிஞ்சுது. அடுத்து பரத்பாலா படம் பண்றேன். கோச்சடையான் வரப்போவுது. அது தவிர இன்னும் ரெண்டு படம் இருக்கு.

இந்திக்கு போனா, ஏன் தமிழ்நாட்டை விட்டு வர மாட்டேங்கிறீங்கன்னு கேட்கிறாங்க... என்று கூறிவிட்டு சிரித்தார்.

ஆஸ்கர் விருது ஏற்கனவே வாங்கிட்டீங்க. இதுக்கு பிறகும் வாங்குற எண்ணம் இருக்கா?

வீட்ல ரெண்டு இருக்கு. அது போதும்'.

சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் உங்க மகன் கீபோர்டு வாசிச்சார். அவரும் இந்த இசை நிகழ்ச்சியில் உங்களோட மேடை ஏறுவாரா?

இல்ல... அவர் இப்பதான் பிகினிங்ல இருக்கார் என்று பெருமிதத்தோடு சொன்னார்.

என்ன பாட்டு பாடணும்

'தாய் மண்ணே வணக்கம்' நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சி நடத்தினாலும் சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இசைப்புயல் நடத்தும் கச்சேரி என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரோஜாவில் ஆரம்பித்து கடல் வரைக்கும் செலக்டிவாக முப்பது பாடல்களை பாடுகிற எண்ணம் இருக்கிறதாம். முக்கியமாக நாலைந்து பாடல்களை ரஹ்மானே பாடுகிறார். இதில் முதல் பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பாடலை பாடவேண்டும் என்று தேர்வு செய்யுமாறு ரசிகர்களுக்கு போட்டி அறிவித்துள்ளது ஜெயா டிவி. அதிக அளவில் ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாட உள்ளார்.

 

கும்கி வெற்றிக்கு பார்ட்டி கொடுத்து பரிசளித்த லிங்குசாமி

Lingusamy Gifts Gold Chain Kumki Unit

சென்னை : ‘கும்கி' படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி பார்ட்டி கொடுத்து தங்கசங்கிலி பரிசளித்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கும்கி திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கும்கி படக்குழுவினருக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது கும்கி படத்தில் நடித்த நடிகர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தங்கச் சங்கிலி பரிசளித்தார்.

இந்த நிறுவனத்தினர் தயாரித்த வழக்கு எண் 18/9 திரைப்படம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக அந்த திரைப்படக்குழுவினரும் இந்த விருந்தில் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கார்த்தி, பிரபு, ராம்குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.