இந்தியில் நயன்தாரா!

Nayanthara in hindi அறிமுகமான லீடர் தவிர்த்து ராணா நடித்த எந்தப் படமும் வெற்றிபெறவில்லை. ஒன்றிரண்டு இந்திப் படங்களில் நடித்து அதுவும் தேறவில்லை. குறிப்பாக ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட்.

நவம்பர் 30 அதாவது இன்று ராணாவின் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் வெளியாகிறது. இது நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஆந்திரா முழுவதும். காரணம் படத்தை இயக்கியிருக்கும் க்‌ரிஷ். இவ‌ரின் முந்தையப் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். இதுவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தமிழில் இந்தப் படத்தை ஓங்காரம் என்ற பெய‌ரில் வெளியிடுகின்றனர்.

இந்தியில் ராணாவுக்கு ஓரளவு அறிமுகம் இருப்பதால்.... வெயிட். இந்த கதைக்கும் நயன்தாராவுக்கு என்ன சம்பந்தம் என்று சொல்லவில்லையே. இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயின். நெருக்கமாகவும் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். படத்தில் இவர் ஒரு ஜர்னலிஸ்ட்.

பேக் டு தி பாயிண்ட். ராணாவுக்கு இந்தியில் ஓரளவு அறிமுகம் இருப்பதால் இந்தியிலும் படத்தை டப் செய்து வெளியிட உள்ளனர். இந்தியில் வெளியாகவுள்ள நயன்தாராவின் முதல் படம் இது என்பது முக்கியமானது.
 

கிசு கிசு - காமெடி பலப்பரிட்சை

Kodambakkam  Kodangi நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

சந்தன காமெடி நடிகர் சோலோவா ஜெட் வேகத்துல போய்ட்டிருந்தாராம்... இருந்தாராம்... அதுக்கு கட்டய போட்றாப்ள 'மெரினா' சிவ ஹீரோ குறுக்க வந்திருக்காராம். டோலிவுட்ல 'ஐ ஈ' படத்த இயக்குன ராஜ் இயக்கத்தோட படம் ஒண்ணு கோலிவுட்ல மரியாதையான பேர்ல ரீமேக் பண்றாங்களாம். இதுல காமெடி நடிகருக்குத்தான் மெயின்ரோலாம். சந்தன காமெடிய போடலாம்னு சொன்னப்ப சிலர் சிவ நடிகர சிபாரிசு பண்ணாங்களாம். இவரா? அவரா?னு பலப்பரிட்ச நடத்துனதுல கூடுதலா பேமென்ட் இருந்தாலும் சந்தன காமெடிக்கு மெஜாரிட்டி கெடச்சிடுச்சாம்... கெடச்சிடுச்சாம்...

ரிச்சான ஹீரோயினுக்கு இந்த வருஷம் லக்காக அமையலயாம்... அமையலயாம்.. கைக்கு வந்த வாய்ப்பெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால தட்டிப்போச்சாம். அதுமட்டுமில்லாம நட்பு நடிகரோட காதல், மோதல்னு தகவல் பரவி ஷாக் கொடுத்துச்சாம். இன்னும் ஒரு மாசத்துல புதுவருஷம் பொறக்குது. அத ஆவலா எதிர்பாத்துட்டிருக்காராம். இந்த வருஷம்   சொல்லிக்கற மாதிரில்லன்னாலும் வர்ற வருஷம் டாப் லிஸ்ட்ல பேர பதிக்கறளவுக்கு சான்ஸ் கைகூடி வந்திருக்காம். அடுத்தவருஷம் நான் யாருன்னு காட்றேனு தோழிங்ககிட்ட பந்தயம் கட்டியிருக்காராம்... இருக்காராம்...

மாதவ ஹீரோவ 'மேடி'னு செல்லமா கோலிவுட்ல கூப்பிட்றாப்பள மல்லுவுட்ல லால் நடிகர 'லாலேட்டன்'னு கூப்பிட்றாங்களாம். சமீபத்துல லால் நடிகர் மேக்னமான நடிகய கூப்பிட்டு தன்னோட புதுபடத்துல நடிக்கணும்னு சொன்னாராம். கைவசம் நெறய படங்க இருந்தாலும் லாலேட்டன் படத்துக்கு மறுப்பே சொல்லாம ஒகே சொல்லிட்டாராம். இந்த படத்த காரணம் காட்டி ஏற்கனவே ஒப்புக்கிட்ட படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்ட கேன்சல் பண்ணிட்டு அந்த கால்ஷீட்ட இவர் படத்துக்கு தர்றாராம். அதோட பாக்கறவங்க கிட்டயெல்லாம் லால்லேட்டன வாய்வலிக்க நடிகை புகழ்றாராம்... புகழ்றாராம்...
 

நீர்ப்பறவை - சிறப்பு விமர்சனம்


Rating:
2.5/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன்
இசை: என் ஆர் ரகுநந்தன்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின்
எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி

அழகிய கடல்புறம்... அங்கே கிளிஞ்சல்களாய் சிதறிக்கிடக்கும் எளிமையும் இயல்பும் நிறைந்த மீனவர் வாழ்க்கை... கடல் மணலில் கடவுளின் குழந்தைகளாய் திரியும் சின்னஞ்சிறுசுகளின் காதல்..

neerparavai review   

-கேட்கவே நல்லாருக்குல்ல... ஆனால் அதை திரையில் ரசித்துப் பார்க்கும்படி எடுத்திருக்கிறாரா சீனு ராமசாமி? பார்க்கலாம் வாங்க!

கடலலையில் அனாதையாய் வந்து மேரி - லூர்து தம்பதிக்கு மகனாகும் அருளப்பசாமியைப் பார்த்து அந்த கடல்புற கிராமமே அலறுகிறது. பயத்தினால் அல்ல... குடிக்கக் காசு கேட்டு அவன் கொடுக்கும் உபத்திரத்தால். ஊரே சேர்ந்து வெறுத்து, அடித்து, விரட்டுகிறது. ஆனால் அவன் அம்மாவைத் தவிர. அப்போதுதான் எஸ்தரைச் சந்திக்கிறான் அருளப்பசாமி. காதல் கொள்கிறான். ஆனால் குடியை விடமுடியவில்லை.

பாசத்தின் சொரூபமாக நிற்கும் அவன் தாயும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கண்டிக்கும் தந்தையும், சர்ச் பாதிரியார் உதவியுடன் மகனை குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து திருத்தி கொண்டு வருகிறார்கள். ஆனால் பாதியில் ஓடி வந்துவிடுகிறான் அருளப்பசாமி. அன்று திருவிழா. போதையில் வரும் அருளப்பசாமி, சர்ச் வாசலில் படுத்திருக்கும் சுனைனா பக்கத்தில் நிலை மறந்து படுத்துவிடுகிறான்.

ஊரே அடிக்கிறது. தந்தை தாறுமாறாக அடிக்க, இப்போது குடியை மறக்க விரும்பி தானே மறுவாழ்வு மையத்துக்குப் போகிறான்.

திருந்தி வருகிறான். ஊர் மதிக்க ஆரம்பிக்கிறது. சொந்தமாக மீன் பிடிக்க முயற்சிக்கும்போது, மீனவன் அல்லாத அருளப்பசாமி, மீன் பிடிக்கக் கூடாது என லோக்கல் புள்ளிகள் எதிர்க்கின்றனர். போட் தர மறுக்கின்றனர். சொந்தமாக போட் வாங்கி தொழில் செய்வேன் என சபதமெடுத்து, காசு சேர்த்து, சின்ன எதிர்ப்புக்கிடையில் சுனைனாவை திருமணம் செய்து... வாழ்க்கையில் செட்டிலாகிற அருளப்பசாமி.... சிங்கள கடற்படையால் சுடப்படுகிறான்!

-இதுதான் கதை. என்னடா இது முழுக் கதையும் சொல்லிவிட்டார்களே என திட்டுவதற்கு முன்... இயக்குநர்தான் ஒளித்து மறைத்து எழுத எதையும் திரையில் வைக்கவில்லையே. எந்தத் திருப்பமும் இல்லாத திரைக்கதை. அது தெரிந்ததாலோ என்னமோ, நந்திதா தாஸை வலிந்து திணித்து, ஒரு செயற்கைத்தனமான ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்.

கிறிஸ்தவ தமிழ் மக்கள் பின்னணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் படம் நீர்ப்பறவை. பின்னணியையும் கதை மாந்தர்களையும் நேர்த்தியாக தேர்வு செய்த சீனு ராமசாமி, அதை நெஞ்சைத் தொடும் அளவுக்கு சொல்லாமல் கோட்டைவிட்டதுதான் சோகம்.

படத்தின் முதல் பாதிக்கு, நான் குடித்துக் கொண்டே இருப்பேன் என தலைப்பிட்டிருக்கலாம். குடிக்கும் காட்சிகள் ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களுக்கு குமட்டலைத் தருகின்றன.

'மீனவர்களுக்கென்று ஒரு 30 தொகுதி இருந்தா, நம்ம குரலும் எடுபடும்' போன்ற அரசியல் எல்லாம் பேஸ்புக், ட்விட்டரில் ஸ்டேடஸ் போடுபவர்களுக்கு மட்டுமே உதவும். மீனவர் பிரச்சினை, ஈழப் பிரச்சினையையெல்லாம் ஏதோ சரக்குக்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் மாதிரி தமிழ் சினிமா இயக்குநர்கள் பயன்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஒரு நேர்மையான படைப்பாக அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் நெஞ்சுரமில்லாதவர்கள், தேசிய விருதுகளுக்காக இந்த உயிர்ப் பிரச்சினைகளை தடவிக் கொடுப்பவர்கள்... ப்ளீஸ் விட்டுவிடுங்கள்.

படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால்... மேரியாக வரும் அம்மா சரண்யா, அவர் கணவராக வரும் பூ ராம். இயல்பான நடிப்பைக் கொட்டும் கலைஞர்கள்.

விஷ்ணுவும் சுனைனாவும் அந்த கடற்கரையோர நிஜ காதலர்களாகவே தெரிகிறார்கள். ஆனால் சுனைனாவின் வசன உச்சரிப்பு அவரை காட்டிக் கொடுத்துவிடுகிறது. விஷ்ணுவும் அப்படித்தான். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டத்தில் கேட்ட அதே ஸ்லாங்தான் இதிலும்!

சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், தம்பி ராமையா, பிளாக் பாண்டி, சுனைனாவின் வளர்ப்புத் தாயாக வரும் பெண் என அனைவருமே கொடுத்த வேலையை மிகையின்றிச் செய்திருக்கிறார்கள்.

சாத்தானே அப்பாலே போ காட்சி செம சுவாரஸ்யம். இந்த மாதிரி சில காட்சிகள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

ஆமா... அதென்ன, 'உப்பளக்காரி' நிகு நிகுன்னு செவப்பா ஜொலிக்கிறார்.. மீனவக் குப்பத்து சுனைனா மட்டும் கறுப்பு மசியுடன் திரிகிறார்?

படத்தில் இரண்டு முக்கியமான மைனஸ்கள்... பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு மற்றும் ரகுநந்தனின் இசை.

கடல்புறத்து எளிய மனிதர்களின் சாதாரண வாழ்க்கையைச் சொல்லும் கதைக்கு எதற்கு இத்தனை வண்ணமயமான படமாக்கம்... செயற்கை கோணங்கள்? அந்த சர்ச்சை எதற்கு அத்தனை பயங்கரமாகக் காட்ட முயற்சிக்கிறார் சில காட்சிகளில்.. இதென்ன பேய்ப் படமா?

பின்னணி இசை தெரியாவிட்டால்கூட பரவாயில்லை.. ஆனால் ஏதோ 'கேப்'பை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரே கார்டை நிமிண்டிக் கொண்டிருப்பது கேட்க கஷ்டமாக இருக்கிறது. மீனவர் வாழ்க்கையை மையமாக வைத்து இதற்குமுன் வந்த படங்களில் அதிஅற்புதமான இசையைக் கேட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் என்பதை இயக்குநர்களும் புதிய இசையமைப்பாளக்களும் மறந்து போனது துரதிருஷ்டம்!

'பேச்சைக் குறை.. கலையில் நேர்த்தி செய்'... சீனு ராமசாமிகளுக்கு புதிய ஆத்திச் சூடி இது!

 

நீதானே என் பொன் வசந்தம்... பட ரிலீசுக்கு முன்பே முக்கிய காட்சிகள் வெளியீடு!

நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை யு ட்யூப் மற்றும் தொலைக்காட்சி மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

படம் குறித்து ரசிகர்கள் மனதில் பதிய வைக்க இந்த உத்தியைப் பயன்படுத்தப் போகிறார்களாம்.

goutham menon s new publicity techn
இந்தப் படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் இரண்டாவது காதலர் தினம் என்று இளைஞர்கள் கொண்டாடும் அளவுக்கு சிறப்பாக வெளியிடவிருக்கிறார்களாம்.

கொஞ்சம் புதுமையாக, படமாக்கப்பட்டு, படத்தில் இடம் பெறாத சுவாரஸ்யமான சில காட்சிகளை இணையதளம், தொலைகாட்சி மற்றும் திரையரங்குகளில் முன்கூட்டியே வெளியிடப் போகிறார்களாம்.

'இப்படத்தின் காதலர்கள் நித்யா மற்றும் வருணின் 30 வருட காதல் பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மறக்கமுடியாட தருணங்கள் உள்ளன. அவை அனைத்தையும் 2 மணி நேர படத்தில் பதிவு செய்ய முடியாது என்பதனால் இந்த முடிவு," என்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன்

தமிழ் சினிமாவில் இதற்கு முன் யாரும் முயற்சிக்காதது இது என்கிறார்கள் நீஎபொ படக்குழுவினர்.

பப்ளிசிட்டிதானே... பண்ணுங்க பண்ணுங்க.. படம் வெளியாகும்போது பாத்துக்குவோம்!

 

'விளம்பரத்'தில் ஹீரோவானார் சாவித்ரி பேரன்!

Savithri S Grand Son Makes Debut Vilambaram

மறைந்த நடிகர் ஜெமினிகணேசன்-சாவித்திரியின் மகள் வயிற்று பேரன் அபிநய், 'விளம்பரம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைகிறார்.

அபிநய், டேபிள் டென்னிஸ் வீரராக இருந்தவர். இவரை, 'யங் இண்டியா' என்ற தெலுங்கு படத்தில் டைரக்டர் தாசரி நாராயணராவ் அறிமுகம் செய்தார். தமிழில் 'விளம்பரம்' படத்தின் மூலம் அபிநய் கதாநாயகன் ஆகிறார்.

இந்த படத்தில் அவருடன் ஐரா, 'அட்டகத்தி' ஐஸ்வர்யா, தம்பி ராமய்யா, சுனில் ஷெட்டி, சோனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்பவர், சூரியநிதி. தயாரிப்பு: ஜெம் புரொடக்ஷன்ஸ்.

படம் முழுவதும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்திர ஜெயா ஆகிய இடங்களில் வளர்ந்து வருகிறது.

 

ஜல்லிகட்டு வீரர்கள் நடிக்கும் படம்

Jallikattu players starring film ஜல்லிகட்டு வீரர்கள் நடிக்கும் கதை படமாகிறது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு வீரர்கள் பற்றிய கதை 'பூர்வகுடி' என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் இப்ராகிம் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிகட்டு விளையாட்டை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தலாமா? கூடாதா? என்பதற்காக கோர்ட் வரை விவகாரம் சென்றது. தற்போது மிகுந்த பாதுகாப்புடன் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்காக தேனி பகுதியில் பிரத்யேக செட் அமைத்து நூற்றுக்கும் அதிகமான நிஜ மாடுபிடி வீரர்களை அழைத்து வந்து விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு காட்சி 7 நாட்கள் படமாக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க ஜல்லிகட்டு விளையாட்டு எவ்வளவு உன்னதமானது என்பதை 50க்கும் அதிகமான புதுமுகங்களை வைத்து தேனி வட்டார வழக்கு பேசும் மக்களோடு படப்பிடிப்பு நடந்தது. ஈஸ்வர் ஹீரோ. மதுஸ்ரீ ஹீரோயின். அருண் ஒளிப்பதிவு. புரூஸ் இசை. எம்.குமார் தயாரிப்பு.
 

மனிஷா கொய்ராலாவுக்கு கேன்சர் : மும்பை மருத்துவமனையில் அட்மிட்

Cancer to Manisha Koirala : admitted in hospital மனிஷா கொய்ராலா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தமிழில் கமலுடன் 'இந்தியன்', ரஜினியுடன் 'பாபா', அர்ஜூனுடன் 'முதல்வன்' தனுஷுடன் 'மாப்பிள்ளை' உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் கடந்த 2010ம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தலால் என்பவரை மணந்தார். திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்ததுடன் ராம் கோபால் வர்மா இயக்கிய 'பூத் ரிட்டர்ன்' என்ற இந்தி படத்தில் நடித்தார். நேபாளத்தை சேர்ந்த இவர் அங்கு புதுவீடு கட்டி வருகிறார். நவம்பர் முதல்வாரம் அவர் வீட்டு பணிகளை கவனிக்க சென்றார். கடந்த புதன்கிழமை திடீரென்று அவர் மயக்கம் அடைந்தார். புட் பாய்சன் காரணமாக அவர் மயக்கம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் சுயநினைவு இழந்தார். இதையடுத்து அவரை மும்பை அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கேன்சர் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும் மனிஷாவின் நண்பர்கள் அவரது பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்தனர். 'கேன்சர் தாக்கி இருப்பது தெரிந்ததும் அதுபற்றி மனிஷா கவலைப்படவில்லை. அதை துணிச்சலாக எதிர்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைவேன்' என்று கூறினாராம். மனிஷாவை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக நேபாளத்தில் இருக்கும் அவரது தந்தை பிரகாஷ், சகோதரர் சித்தார்த் மும்பை வருகின்றனர்.
 

கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயினாக நடிக்க கூடாதா? : சினேகா கோபம்

Why should act as heroine after marriage : Sneha angry 'கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயினாக நடிக்க கூடாதா?' என்றார் சினேகா. கிஷோர், சினேகா நடிக்கும் படம் 'ஹரிதாஸ்'. ஜிஎன்ஆர்.குமாரவேலன் எழுதி இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். வி.ராமதாஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதுபற்றி சினேகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: திருமணத்துக்கு முன்பே ஹரிதாஸ் பட கதையை என்னிடம் சொல்ல வந்தார் இயக்குனர் குமாரவேலன். அப்போதே அவரிடம், சீக்கிரமே எனக்கு திருமணம் நடக்க உள்ளது. உங்கள் பட ரிலீசுக்கு முன்பே திருமணம் ஆகிவிடும். திருமணம் ஆன நடிகை ஹீரோயினாக நடிக்ககூடாது என்ற நிலைதான் கோலிவுட்டில் இருக்கிறது.

அதனால் இப்படத்தில் நான் நடிப்பதுபற்றி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று  அவரிடம் கூறினேன். அதைக்கேட்ட அவர் அதுபோன்ற சென்டிமென்ட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கதாபாத்திரத்துக்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார். பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்று யார் சொன்ன விதியோ தெரியவில்லை. இப்பட ஹீரோ கிஷோர் தன்னைப்பற்றி  குறிப்பிடும்போது 'பேட் ஆக்டர்' என்று சொல்லிக்கொண்டார். அதை ஏற்க முடியவில்லை. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இதில் நன்றாக நடித்திருக்கிறார். தன்னை பேட் ஆக்டர் என்று அவர் குறைத்து மதிப்பிடக்கூடாது. பிருத்விராஜ்தாஸ் என்ற சிறுவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.
 

காதல் ஜோடியில் கணவன் கவுரவக் கொலை: ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்

Man Featured Aamir Khan S Show On Honour Killing Murder

புதுடெல்லி: மேற்கு உத்தரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக இளம் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமீர்கான் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

தனியார் டிவியில் நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கி வந்த 'சத்யமேவ் ஜெயதே' நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்பவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி பேசப்பட்டது. அதில் கவுரவக் கொலைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 28 வயதான அப்துல் ஹக்கீம், 26 வயதான மெவிஷ் ஆகிய திருமண தம்பதியினர் தமது பெற்றோரின் அனுமதியின்றி இரகசிய திருமணம் செய்து கொண்டதால் தமது உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறியிருந்தனர்.

இவர்கள், கடந்த மே மாதம் முதல் தனியார் தொண்டு நிறுவனம் à®'ன்றின் பாதுகாப்பின் கீழ் இருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர், உத்தரபிரதேசத்தின் புலாந்த்ஷாஹ்ர் மாவட்டத்திற்கு ஹக்கீமின் தாயை பார்ப்பதற்காக இருவரும் வந்திருந்தனர். ஹகீமின் மனைவி 9 மாத கர்ப்பமாக இருக்கிறார். ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு à®'ன்றரை வயதில் à®'ர் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காவல்நிலையத்திலிருந்து திரும்பிய போது ஹகீம் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹகீம் தாழ்ந்த ஃபகீர் சமூகத்திலிருந்து வந்தவர் எனக்கூறி அவரை மெவிஷின் குடும்பத்தினர் வெறுத்திருந்தனர். இதனால் மெவிஷின் சகோதரர்களே ஹகீமை சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் வலுப் பெற்றிருக்கிறது. முன்னதாக ஹகீமின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெட்கக்கேடானது - அமீர்கான்

ஹகீமின் கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் அமீர் கான், இந்த படுகொலைச் சம்பவம் மிக வெட்கக்கேடானதுடன், துரதிஷ்டவ சமானது என்று கூறியுள்ளார். சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே இந்த தம்பதியினர் தமக்கு உயிராபத்து இருப்பதாக அச்சம் வெளியிட்டிருந்தனர். இதனை உத்தரபிரதேச அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன்.

ஹகீமின் குடும்பத்திற்கும் மெவிஷிற்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே அந்த இளம் விதவையாகி விட்ட அந்த பெண்ணின் இருப்பிடமான மீரட் போய் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறி விட்டு வந்துள்ளேன் என்றார்.

எனது கிராம மக்களே எங்களை கொல்ல ஆயுதம் எடுத்திருக்கிறார்கள்.அநேகமாக நான் தான் அவர்களது அடுத்த இலக்காக இருக்கலாம் என்று ஐந்து மாதங்களுக்கு முன் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் மெவிஷ் கூறியிருந்தார். அந்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.

 

முனி - 3... லாரன்ஸின் ஹீரோயின் டாப்ஸி!

Tapsi Signs Muni 3 3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 3 படத்தில் அவருக்கு ஜோடியாக à®'ப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் டாப்ஸி.

முனி -1, முனி - 2 (காஞ்சனா) வெற்றிப்படங்களுக்கு பிறகு லாரன்ஸ் இயக்கும் புதிய படம் முனி-3.

முனியில் வேதிகாவும், முனி 2-ல் லட்சுமி ராயும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்போது முனி 3 படத்தின் வேலைகளில் மும்முரமாக உள்ளார் லாரன்ஸ். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை டாப்சியிடம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ரஜினி ஆல்பம் முடிந்ததும் ஜனவரி மாதம் படப்பிடிப்பைத் தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்.

இந்தப் படத்தை அவரது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸே தயாரிக்கிறது. முந்தைய இரு படங்களைவிட மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்குகிறார் லாரன்ஸ்.

 

'வில்லனை' புரமோட் பண்ணுவதில் குறியாக இருக்கும் அமலா பால்!

Amala Recommends Her Boy Friend Vijay Movie

அமலா பால் பற்றிய அடுத்த சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது. அம்மணியின் இப்போதைய வேலை தன் நெருங்கிய ஆண் நண்பர் à®'ருவருக்காக பிஆர் பண்ணுவதுதானாம்.

அந்த ஆண் நண்பரின் பெயர் ராஜீவ் பிள்ளை. மலையாள வில்லன். சொந்த ஊர்ப் பாசம் à®'ருபக்கம், மாடலிங் காலத்திலிருந்தே நெருக்கமாகிவிட்ட நட்பு மறுபக்கம்... இரண்டும் சேர்ந்து ராஜீவ் பிள்ளைக்கு வாய்ப்பு தேடித் தரும் அளவுக்கு அமலா பாலை மாற்றிவிட்டதாம்.

அதுவும் தனது இன்னொரு நண்பரான இயக்குநர் விஜய் மற்றும் நடிகர் விஜய்யிடம் அமலா பால் மாற்றி மாற்றி ரெகமண்ட் செய்ததில், சரி நம்ம அடுத்த பட வில்லனாக்கிடுவோம் என à®'ப்புக் கொண்டார்களாம்.

இப்போது 'விஜய்கள்' படத்தின் மெயின் வில்லன் ராஜீவ் பிள்ளைதான்!

தனக்கு நெருக்கமான வேறு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடமும் ராஜீவ் பிள்ளைக்காக சிபாரிசு செய்ய, உடனே à®'ர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

ஹீரோயினாச்சே!

 

திரைப்படமாகிறது வைரமுத்துவின் தண்ணீர்தேசம்!

Vairamuthu Thanneer Desam Be Made In Celluloid

வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான தண்ணீர் தேசம் விரைவில் திரைப்படமாக மலர்கிறது.

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது இந்த நாவல்.

1996 இல் புத்தகமாக வெளியிடப்பட்டு இன்று வரை 18 பதிப்புகள் கண்டு விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறது. கடற்பரப்பில் பல சாகசங்களுக்கிடையே நடக்கும் காதல் கதையினைச் சொல்லும் தண்ணீர் தேசம் அந்தத் தலைப்பிலேயே திரைப்படமாக்கப்படுகிறது.

ரெட் எர்த் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற மலேசிய நிறுவனத்தின் சார்பில் நிவாஸ் ராகவன் -யுவராஜ் செளமா ஆகியோர் தண்ணீர் தேசத்தைத் தயாரிக்கிறார்கள். நாவலை எழுதிய வைரமுத்துவே படத்திற்கு கதை- வசனம் மற்றும் பாடல்களையும் எழுதுகிறார்.

இந்தப் படத்தை ஷிவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வேறு மொழிகளில் சில வெற்றிப் படங்களை இயக்கியவர். தமிழில் இது இவருக்கு முதலாவது படம். இந்தப் படத்திற்கு பிரபல à®'ளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் இணை à®'ளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வி.தியாகராஜன் à®'ளிப்பதிவு செய்கிறார்.

எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தூத்துக்குடி, அந்தமான் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜனவரி 2013ல் முற்றிலும் புதுமுகங்களோடு தொடங்கவிருக்கும் தண்ணீர் தேசம் படத்திற்கு கதாநாயகன், கதாநாயகி தேர்வு நடக்கிறது.

 

யுவனின் நேரடி இசை நிகழ்ச்சி... கோலாலாம்பூரில் டிச 15-ல் நடக்கிறது!

Yuvan S Kl Concert On Dec 15

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 15ம் தேதி கோலாலம்பூரில் நடக்கிறது.

நூறு படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, இப்போது நேரடி இசைக் கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தனது 100வது படமான பிரியாணியின் இசையைக் கொண்டாடும் விதத்தில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்த முறை இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்கு KLIMF 2012 என்று பெயர் வைத்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான அரங்கு தயாராகி வருகிறது.

இவ்விழாவில் தனுஷ், கார்த்தி, சிம்பு, ஜீவா, விஷால், ஆர்யா, சினேகா, ஜெயம் ரவி, பிரசன்னா, ஜெய், கிருஷ்ணா உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். பல முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.

இளையராஜா

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், யுவனின் அப்பாவுமான இளையராஜா கலந்துகொள்கிறார்.

 

பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில் பல லட்சம் நகை, பணம் திருட்டு

சென்னை: பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.

இவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை:

பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.

இவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மனீஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய்

Manisha Koirala Suffering From Canc

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷ் கொய்ராலாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா அண்மை காலமாக அவரது சொந்த ஊரான காத்மாண்டுவில் தான் அதிக நேரம் செலவிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு புட் பாய்சனிங் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து தான் அவரது உறவினர்கள் அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பைக்கு அழைத்து வந்து அங்குள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது தாய் சுஷ்மா அவருக்கு துணையாக மருத்துவமனையில் உள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த மனீஷா திருமணத்திற்கு பிறகு அம்மா வேடத்திற்கு வந்துவிட்டார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனீஷா கொய்ராலாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் குடிப் பழக்கத்தை விட்டுவிட்டதாக அறிவித்தார்.

 

இந்தி மங்காத்தாவில் 'ஹீரோ' ஆவாரா அஜீத்?

Venkat Prabhu Wants Ajith Hindi Mangatha Too

சென்னை: மங்காத்தா படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. தமிழில் கலக்கிய அஜீத்தை இந்தியிலும் நடிக்க வைக்க அவர் விரும்புகிறாராம். ஆனால் அர்ஜூன் நடித்த வேடத்தில் அஜீத்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம்.

அஜீத்தின் 50வது படம் மங்காத்தா. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜீத் ஆன்டி ஹீரோ பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். திரிஷா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் படத்தில் கலாய்த்திருந்தனர். லட்சுமி ராய்க்கு கவர்ச்சிகரமான பாத்திரம்.

இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. இதிலும் அஜீத்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம். இதை அஜீத்திடமே சொல்லி விட்டாராம். அதேசமயம், இந்தி மங்காத்தாவில், தமிழில் அர்ஜூன் நடித்திருந்த அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைக்க விரும்புகிறாராம் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபுவின் விருப்பத்திற்கு அஜீத் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அடுத்து தான் நடிக்கப் போகும் புதிய படத்தை முடித்த பிறகே அஜீத் வர முடியும் என்று தெரிகிறது. வெங்கட் பிரபுவும் பிரியாணி படத்தில் அடுத்து பிசியாகவுள்ளதால் இப்போதைக்கு இந்தி மங்காத்தா வேகம் பிடிக்காது என்றே தெரிகிறது.

ஓ.கேஜி..!

 

குழந்தைகளுக்காக மீண்டும் கமலுடன்? - முதல் முறை மனம் திறக்கும் சரிகா

Sarika S Open Talk On Rejoining Wit

கமல்ஹாஸனை விட்டுப் பிரிந்த பிறகு முதல் முறையாக அவருடன் சேர்வது பற்றி பேசியுள்ளார் கமலின் இரண்டாவது மனைவியான சரிகா.

சரிகாவும் கமலும் சில ஆண்டுகளுக்கு முன் மவுனமாகப் பிரிந்தார்கள். இதில் இருவருக்கும் பிறந்த மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா கமலுடனே இருந்து கொண்டார்கள்.

சரிகா மும்பையில் செட்டிலாகிவிட்டார். சில படங்களில் மீண்டும் தலை காட்டினார்.

கமலைவிட்டுப் பிரிந்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சமீபத்தில் அவர் ஒரு பத்திரிகையில் பகிர்ந்து கொண்டார்.

எப்படி இருக்கிறது இப்போதைய வாழ்க்கை?

நன்றாக இருக்கிறது. என் வாழ்வாதாரமும் சிறப்பாகவே இருக்கிறது. கவுரவமாக வாழ்கிறேன். அதுதான் முக்கியம்.

மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவிடம் சினிமா பற்றி பேசுவீர்களா?

பேசுவேன். சினிமா பற்றிய ஆர்வம் உள்ள அத்தனை பேரிடமும் பேசுவேன். ஸ்ருதிக்கு இசையிலும், அக்ஷராவுக்கு நடனத்திலும் ஆர்வம். இருவருமே அவற்றைக் கற்றவர்கள். சினிமாவில் தங்களுக்கான இடத்தை இருவருமே பெற்றிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் பிள்ளைகளை ஒப்பிட கூடாது.

இப்போது நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். தக்க இடத்தை பெறும் வரையில் மகள்களை விட்டு தள்ளியே இருப்பதுதான் அது. அவர்கள் என் மகள்கள். அவர்கள் எங்கும் போய்விடப்போவதில்லை, நானும் எங்கும் போய்விடப் போவதில்லை. மீண்டும் அவர்களின் கரத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்வேன். அதனால்தான் என் பேட்டிகளில் அவர்களைப்பற்றி விவாதிப்பதில்லை.

அவர்களின் காதல் விவகாரங்கள் பற்றி...

அதில் நான் தலையிடுவதில்லை. அது அவர்களின் சொந்த வாழ்க்கை.

குழந்தைகளுக்காக கமலுடன் மீண்டும் வாழ்க்கையில் இணைவீர்களா?

அப்படியொரு விஷயம் நடக்க முடியாதபோது அது பற்றி ஏன் பேச வேண்டும்? யாரிடமும் நான் பேச தயாராக இல்லை. வாழ்க்கையை இருவிதங்களில் வாழலாம். எதில் தள்ளப்பட்டோமோ அதில் வாழ்வது ஒரு வகை. தினம் தினம் வாழ்க்கையை ரசித்து சந்தோஷமாக இருப்பது இன்னொரு வகை. நான் இரண்டாவது வகை!

 

'லவ் ஸ்டோரி' படத்தில் மீண்டும் நீச்சலுடையில் நயன்!

Nayanthara Appear Swimsuit

தெலுங்குப் படமான லவ் ஸ்டோரியில் மீண்டும் நீச்சலுடையில் நடிக்கிறாராம் நயன்தாரா.

பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட பிறகு நயன்தாராவுக்கு நிறைய படங்கள் குவிகின்றன.

ராணாவுடன் நடித்த 'கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்' படம் நாளை ரிலீசாகிறது. சென்னையிலும் இந்தப் படம் வெளியாகிறது.

தமிழில் அஜீத், ஆர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் தயாராகும் ‘லவ் ஸ்டோரி' படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நாகார்ஜுனா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவர் நீச்சல் உடையில் தோன்றுகிறாராம். ஏற்கெனவே பில்லா படத்தில் அஜீத்துடன் நீச்சல் உடையில் நடித்துக் கலக்கினார் நயன். அந்தப் படத்தில் கவர்ச்சி குண்டான நமீதாவுடன் போட்டி போட்டு கவர்ச்சி காட்டினார்.

இப்போது மீண்டும் கவர்ச்சிக் க(கு)ளத்தில் குதித்துள்ளார்!

 

கடல்... ரூ 2 கோடிக்கு ஆடியோவை வாங்கியது சோனி!

sony grabs kadal audio rights
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள கடல் படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது முன்னணி ஆடியோ நிறுவனமான சோனி.

மணிரத்னம் இயக்கத்தில் கவுதம், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி நடித்து வரும் படம் கடல்.

காதலும் மீனவர் பிரச்சினையும் பின்னிப் பிணைந்த கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏற்கெனவே வெளியான நெஞ்சுக்குள்ள பாடல் ரசிகர்களைக் கிறங்கடித்துவிட்டது.

இந்த நிலையில் முழுப் பாடல்களையும் விரைவில் வெளியிட உள்ளனர். படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

ரூ 2 கோடிக்கு ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சோனி நிறுவனத்தின் தெற்குப் பகுதி பொறுப்பாளர் அசோக் பர்வானி கூறுகையில், "ரஹ்மானின் அருமையான இசையில் உருவாகியுள்ள கடல் பட பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அவரது 3வது ஆல்பத்தை வளியிடுகிறோம். அடுத்த ஆண்டு ரஹ்மானின் மேலும் சில ஆல்பங்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளோம்," என்றார்.

 

50 வயது டெமி மூர் கையில் இன்னொரு 'பொம்மை'... வயது 26!

Demi Attached A 26 Year Old Toyboy

லாஸ் ஏஞ்சலெஸ்: ஜஸ்ட் 50 வயதேயாகும் ஹாலிவுட் முன்னாள் கனவுக் கன்னியிடம் 26 வயதே நிரம்பிய ஒரு இளைஞர் சிக்கியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்புதான் இதேபோல இளைஞரான அஸ்டன் கட்சரிடமிருந்து பிரிந்து வந்தார் டெமி என்பது நினைவிருக்கலாம்.

டெமி மூர் கனவுக் கன்னியாக மட்டுமல்ல, கவர்ச்சிக் கன்னியாகவும் ஜொலித்தவர். இன்றும் கூட அவருக்கு செமத்தியான கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. கடந்த ஆண்டுதான் தனது காதலர் அஷ்டன் கட்சரை விட்டு விலகினார். இப்போது 26 வயதான விடோ ஸ்னாபெல் என்பவருடன் சுற்ற ஆரம்பித்துள்ளாராம்.

இவர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜூலியன் ஸ்னாபெல்லின் மகன் ஆவார். இருவரும் சேர்ந்து நவோமி கேம்பல் தனது காதலர் விலாடிமிர் டோரோனின் 50வது பிறந்த நாளுக்கு ஜோடி போட்டுப் போயிருந்தார்களாம். இந்த பிறந்த நாள் விழா இந்தியாவின் ஜோத்பூரில் நடந்தது நினைவிருக்கலாம்.

டெமியும், அவரது புதுக் காதலரும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்களாம், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டார்ளாம், முத்தமிட்டும் கொண்டார்களாம்.

ஸ்னாபெல்லுக்கு வயசான கவர்ச்சிக் கன்னிகளைப் பிடிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காக இருந்து வருகிறதாம். இதற்கு முன்பு, அவருக்கு 21 வயதாக இருந்தபோது 44 வயதான எல்லி மெக்பெர்சன் என்ற சூப்பர் மாடல் அழகியுடன் நடை போட்டுக் கொண்டிருந்தார். அதேபோல 35 வயதான லிவ் டெய்லர் என்ற நடிகையுடனும் உலா வந்தவர்தான் ஸ்னாபெல். இப்போது 50 வயதைத் தொட்டு விட்ட டெமியுடன் டீலிங்கில் இறங்கியுள்ளார்.

டெமியை விட்டுப் பிரிந்த கட்சர் தற்போது அமெரிக்க டிவி நடிகையான 29 வயதான மிலா குனிஸுடன் புது உறவில் ஈடுபட்டுள்ளார் என்பது கொசுருச் செய்தி.

டெமியின் ஒரே கணவர் ப்ரூஸ் வில்லிஸ் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். இந்த இருவரும் 1998ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். டெமிக்கு, ப்ரூஸ் மூலம் 3 மகள்கள் உள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

 

ரஜினியின் புதுப்படம்.. இன்னுமொரு புதுப் புரளி!!

It Is Another Rumour On Rajini Ma

ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது என்றும், இந்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என்றும் வெளியான தகவல்கள் அக்மார்க் டுபாக்கூர் என ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இப்போது கோச்சடையானில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது அடுத்த படம் குறித்து கே வி ஆனந்திடம் மட்டுமே இதுவரை ஆலோசித்துள்ளார். இதனை கேவி ஆனந்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இடையில் துப்பாக்கி வெற்றி காரணமாக ஏஆர் முருகதாசுக்கு ரஜினி ஒரு வாய்ப்பு வழங்கக் கூடும் என மீடியாவே கிளப்பிவிட்டுவிட்டது. அதற்கு முன்பு, ராஜமவுலிதான் ரஜினியின் அடுத்த இயக்குநர் என்று ஒரு கோஷ்டி அம்மன் கோயிலில் சத்தியம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது.

இதெல்லாம் கப்ஸா என்று இப்போது அம்பலமாகிவிட்டது.

இந்த சூழலில், ரஜினியின் அடுத்த படத்தை மணிரத்னம்தான் இயக்கப் போகிறார் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் நாயன் படம் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடியபோது, கமலும் மணிரத்னமும் உடனடியாக புதிய படம் தொடங்குகிறார்கள்.. கதை விவாதம் ஆரம்பித்து காரசாரமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றெல்லாம் அடித்துவிட்டது நினைவிருக்கலாம்.

இப்போது தோசையை அப்படியே ரஜினி பக்கம் திருப்பிப் போட்டுள்ளனர்.

ரஜினி தரப்பில் இதுகுறித்து விசாரித்த போது, "எவ்வளவோ எழுதிவிட்டார்கள். அதில் இதுவும் ஒண்ணு. தன் அடுத்த பட இயக்குநர் யார் என்று எந்த மீடியாவுக்கும் ரஜினி சின்ன க்ளூ கூட கொடுத்ததில்லை. அதை தனது தயாரிப்பாளருடனும் நெருங்கி நண்பர்கள் சிலரிடமும் மட்டும்தான் பகிர்ந்து கொள்வார். ஆனால் இன்னும் 6 மாதங்கள் கழித்துதான் தன் புதிய படத்தை தயாரிப்பாளர் மூலம் அவர் அறிவிப்பார்," என்றார்.

 

நூறு கோடியைத் தாண்டியதா துப்பாக்கி? கோடம்பாக்க ஜோசியர்களின் தப்புக் கணக்கு!!

சமீப நாட்களாக எந்த இணையதளம் அல்லது செய்தித் தாளைத் திறந்தாலும் துப்பாக்கி படத்தின் வசூல் கணக்குதான் பக்கத்துக்குப் பக்கம் விளம்பரமாகவோ, செய்தியாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.

thuppakki box office collection some facts and figures   
இது உண்மைதானா?

கோடம்பாக்கத்தின் பிரபல வசூல் ராஜா (அதாங்க பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்!) ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

துப்பாக்கி படம் இதுவரை பிரேக் ஈவன் எனப்படும் அசலைத் தாண்டிய நிலைக்கு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதெப்படி இவங்களுக்கு மட்டும் ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என்றுதான் தெரியவில்லை என்றார்.

சென்னை நகரில் மட்டுமே இந்தப் படம் ஓரளவு சுமாரான கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பதாகவும், வெளியூர்களில் தூக்கப்படும் நிலையில்தான் இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். சென்னை விவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, சென்னை சினிமா ரசிகர்களின் நாடித் துடிப்பான காசி திரையரங்குக்கு சென்றோம். காலைக் காட்சிக்கு 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர்!

"ஏற்கெனவே நண்பன் படம் வெளியான போது, அந்தப் படம் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக குவித்து விட்டது என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் நிஜம் என்னவென்பது அடுத்த சில தினங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் துப்பாக்கி படத்துக்கு அதே வேலையை ஆரம்பித்துள்ளனர். மாற்றான் பிஸினஸை நாங்கள் முறியடித்துவிட்டோம் என்று காட்டத்தான் இந்த பில்டப்," என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு 'பண்டிட்'!

'தமிழ் சினிமாக்காரர்கள் வசூல் சாதனை என்று எதையாவது கொடுத்தால் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை. காரணம், அதற்கு கணக்கு வழக்கும் இல்லை. பதிவேடுகளும் கிடையாது. குத்து மதிப்பாகத்தான் அடித்துவிடுவார்கள். கமல்ஹாஸன் தன் உன்னைப் போல் ஒருவன் படத்தக்கு 10 கோடி நஷ்டம் என்று வங்கியில் கணக்கு காட்டினாராம். அதை நம்பிக் கொண்டதைப் போல, துப்பாக்கியின் ரூ 100 கோடி வசூலையம் நம்பிக் கொள்ள வேண்டியதுதான்', என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட்.

எதுக்கும் இந்த வம்பு.. தியேட்டர் வாரியாக வசூல் விவரங்களை தாணுவோ எஸ்ஏசியோ விளம்பரமாகக் கொடுத்துவிட்டால்... ரசிகர்கள், இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு வசதியாக இருக்குமே!

 

தூக்குக் கயிறோடு எஸ்ஏசியைத் தேடும் கே ராஜன்!

K Rajan Blasts Sa Chandrasekar

சென்னை: சின்னப்படத் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தூக்கில் தொங்குவதாகக் கூறினார் சங்கத் தலைவர் எஸ்ஏசி. தூக்குக் கயிறு இருக்கு.. எஸ் ஏ சியைத்தான் காணோம், என்கிறார் தயாரிப்பாளர் சங்க எதிரணியைச் சேர்ந்த கே ராஜன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள எஸ்ஏ சந்திரசேகர், கலைப்புலி தாணு உள்ளிட்டோரை கடுமையாக எதிர்த்து வருகிறது, கேயார் தலைமையிலான அணி.

இதனால் வாரம் à®'ரு முறை எஸ்ஏசி அணி நிருபர்களைச் சந்திப்பதும், அந்த சந்திப்புக்கு வரும் நிருபர்களை அப்படியே வழி மறித்து கேயார் அணி சந்திப்பதும் தொடர்கிறது.

நேற்று முன்தினமும் இந்த சந்திப்பும் வழி மறிப்பும் தொடர்ந்தது.

இதில் முன்னதாக நிருபர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகரன், "பொறுப்புக்கு வந்ததிலிருந்து எங்களை வேலை செய்யவே விடலா எதிர்த் தரப்பு. எப்பப் பார்த்தாலும் புகார், வழக்குன்னு தொந்தரவு கொடுத்துட்டே இருக்காங்க. அவங்கள மாதிரி கள்ள à®"ட்டுப் போட்டு ஜெயிச்சவங்க நாங்க இல்ல.." என்றார்.

பிரஸ் மீட் முடிந்ததும் வெளியே வந்த நிருபர்களை, அப்படியே அந்த ஹாலுக்கு வாங்க என்று கூட்டிச் சென்ற கேயார் மற்றும் ராஜன், "சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்தார் எஸ் ஏ சந்திரசேகரன். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாலு முழக் கயித்துல தொங்கிடறேன்னு சொன்னாரு. இப்ப தூக்குக் கயிறு இருக்கு... தொங்கறதுக்கு எஸ்ஏசியைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்," என்றார் படு காட்டமாக.

என்னது... à®'ரே கொல வெறியால்ல இருக்கு!

 

மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதி

Manisha Koirala Hospital

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா திடீர் என்று மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் வந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த மனீஷா திருமணத்திற்கு பிறகு அம்மா வேடத்திற்கு வந்துவிட்டார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Manisha Koirala is admitted at the Jaslok hospital in Mumbai on wednesday. It is told that she is doing fine now.

 

நடிகை புவனேஸ்வரிக்கு வலைவீச்சு

Actress Bhuwaneshwari range for the Web தியேட்டரில் ரகளை செய்த நடிகை புவனேஸ்வரியை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி மற்றும் தாமோதரன் ஆகியோர் வந்தனர். கார் பார்க்கிங் பகுதியில் சேலையூரை சேர்ந்த குமாருக்கும் தாமோதரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தாமோதரன் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த சிலர், குமாரை தாக்கி  தியேட்டரில் ரகளை செய்தனர்.   தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.  

இது குறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார், நடிகை புவனேஸ்வரியையும், தாமோதரனையும் தேடிவருகின்றனர்.
 

ஆயிரத்துக்கு காம்பியரிங் செய்தவருக்கு சம்பளம் ஒரு கோடியா

Siva karthikeyan ask one crore salary பீச் படத்தில் அறிமுகமான சிவமான கார்த்தி நடிகர் முழுமையான ஹிட்டை இதுவரை தரவில்லை. தற்போது பீச் பட இயக்குனரின் படத்தில் கேடி பில்லாவாக நடித்து வருகிறார்.

இவரை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளரிடம் இவர் கேட்ட சம்பளம் ஒரு கோடி. நேற்றுவரை ஆயிரத்துக்கு காம்பியரிங் செய்தவருக்கு சம்பளம் ஒரு கோடியா என்று நெஞ்சைப் பிடித்து சொந்த ஊருக்கு திரும்பியவர்தான், இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்கிறார்கள்.
 

போராட்டமாக வெடிக்கிறது ஸ்வேதா மேனன் 'லைவ் பிரசவ' விவகாரம்

திருவனந்தபுரம்: ஸ்வேதா மேனன் பிரசவ காட்சி நேரடியாக படமாக்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தக் காட்சி இடம்பெறும் படத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

swetha menon s kalimannu trouble

பிளெஸ்ஸி இயக்கும் களிமண்ணு என்ற மலையாளப் படத்துக்காக ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சியை மும்பை மருத்துவமனையில் வைத்து நேரடியாக படமாக்கினர்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து கேரளாவில் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பிரசவ காட்சியை இணைத்தால் படத்தை புறக்கணிப்போம் என்று மலையாள தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

கேரள சபாநாயகர் கார்த்திகேயனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ஸ்வேதா மேனன் தனது பிரசவத்தை கேமராவில் பதிவு செய்ய அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. வியாபாரத்துக்காக இப்படி நடந்துள்னர். பண்பாட்டுக்கு விரோதமாக இந்த செயலை அனுமதிக்க கூடாது,' என்று கூறியுள்ளார்.

பாஜக போராட்டம்

இதற்கிடையில் பாரதீய ஜனதா மகளிர் அணியும் படத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைவி ஷோபா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டஸ்வேதா மேனன் படத்தில் பணத்துக்காக தாய்மையை இழிவுபடுத்தி உள்ளனர். இது ஒரு அவமானச் செயல் ஆகும். இந்த படத்தை தடை செய்யும்படி அரசிடம் வற்புறுத்தியுள்ளோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்த செயலுக்கு எதிராக இரு பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.

 

அம்மாவின் கைப்பேசி... ஒலகத் தரம்னா... அது இதாங்க!


Rating:
2.0/5

-எஸ் ஷங்கர்

முதல் படமான அழகியிலிருந்தே அடிக்கடி தங்கர் பச்சான் அரற்றுவது 'ஒலக சினிமா'. வெறும் சினிமாக்காரராக இல்லாமல், கொஞ்சம் எழுதவும், ஏகத்துக்கும் பேசவும் தெரிந்தவர் என்பதால் இந்த அரற்றல் சமயத்தில் ஒப்பாரி ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

ammavin kaipesi review

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் போறாத காலம், அந்த ஒலக சினிமா அம்மாவின் கைப்பேசியாக வந்து தொலைத்துவிட்டது.

இனி தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சினிமா எடுக்க மாட்டேன் என பாஞ்சாலி சபதம் ரேஞ்சுக்கு சபதமெடுத்திருக்கும் பச்சான் வெளியிட்டுள்ள கடைசி தமிழ்ப் படம் என்ற சின்ன ஆறுதலோடு, படத்தின் விமர்சனத்தைப் படியுங்கள்.

பொறுப்பில்லாமல், வெட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் கடைசி மகன் சாந்தனுவை, நாலு காசு சம்பாதித்து ஊரார் மதிக்கும்படி வரவேண்டும் என்று ஒரு நாள் வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவரது அம்மா. அம்மாவின் ஆசையை சாந்தனு நிறைவேற்றினாரா? என்பது வழக்கம் போல க்ளைமாக்ஸ்.

இடையில் பிரசாத் என்ற பாத்திரத்தில், மீனாளை இறுக்கியணைச்சு உம்மா கொடுத்து பிழிந்தெடுக்கும் தங்கர் பச்சான் லூட்டிகளுக்கு தனி கட்டுரை தயார் பண்ண வேண்டும்.

படத்தின் ப்ளஸ் என்று எதையாவது சொல்ல ஆசைதான். ஆனால் தங்கரின் இந்த உலக கைப்பேசியில், அப்படி உருப்படியாக ஒரு காட்சியும் இல்லை. எதற்கெடுத்தாலும் கிராமத்தைக் காட்டுவதாகக் கூறி ஆடு, கோழி, கீரிப்பிள்ளை என கேமிராவில் சிக்கியதையெல்லாம் காட்சியாகத் திணித்து கடுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

இங்கிருப்பவர்களுக்கு இசையே தெரியவில்லை என்று கூறி மும்பையிலிருந்து தங்கர் பிடித்து வந்திருக்கும் குல்கர்னியின் பாடல்களைக் கேட்டு, வயிறு அப்செட்டாகி பின் வாசல் வழியாக ஓடுகிறார்கள், படத்துக்கு வரும் பத்துப் பதினைந்து பேரும்!

என்னது... சாந்தனு நடிப்பு பத்தி கேக்கறீங்களா...? பாவம்... அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றார்...!!

நல்லா நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு இந்த இனியா... அவரையும் லிப் டு லிப்புக்கு மட்டும் ஊறுகாயா உபயோகப்படுத்தி ஓரமா உட்கார வச்சிடறார் தங்கர்.

தங்கர் பச்சானின் தகர டப்பா பாத்திரம் மட்டும் இல்லாமலிருந்தால் கூட இந்தப் படத்தை கொஞ்சம் சகித்திருக்கலாமோ என்னமோ...

அம்மாவின் கைப்பேசிகள்தான் துப்பாக்கிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.. நியாயமாக விஜய், முருகதாஸ்கள் தங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்!

 

பரதேசிக்கு 5 லட்சம் ஹிட்ஸ்!

இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாகிறதோ இல்லையோ... அந்தப் படத்தின் ட்ரைலர் அல்லது சிங்கிள் பாட்டு யுட்யூபில் ஹிட்டானே பெரிய வெற்றியாகக் கொண்டாடும் போக்கு பிரபலமாகிவிட்டது.

பாலாவின் படம் கூட இதற்குத் தப்பவில்லை. பரதேசி படத்தின் ட்ரைலர் பெரும் வெற்றியடைந்துவிட்டதாக பப்ளிசிட்டி செய்ய வேண்டிய நிலை.

paradesi trailer hit   
அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் யு ட்யூபில் வெளியான 3 நாட்களிலேயே 5 லட்சம் பேர் பார்த்துவிட்டார்களாம். இது படத்தின் பெரிய வெற்றிக்கு முன்னோட்டம் என்று பாலா தரப்பு உற்சாகமடைந்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைச் சொல்லும் படமான பரதேசிக்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல எதிர்ப்பார்ப்பு உருவாகியிருந்தது.

ட்ரைலர் பார்த்தபோது அந்த எதிர்ப்பார்ப்பு இன்னொரு மடங்கு அதிகரித்தாலும், ஜிவி பிரகாஷின் பாடல்களும் ட்ரைலருக்கான இசையும் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்!

 

என்னால எல்லாம் ரஜினி மாதிரி முடியாது: தனுஷ்

I Can T Do Like Rajinikanth Dhanus   

சென்னை: எந்திரன் கதாபாத்திரம் போல் கிடைத்தால் நடிப்பீர்களா என்று தனுஷிடம் கேட்டதற்கு அது ரஜினிகாந்தால் மட்டும் தான் முடியும் என்றார்.

எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் வந்து கலக்கியிருந்தார். ரோபோவான எந்திரன் ஐஸ்வர்யா மீது காதல் கொள்ளும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இந்நிலையில் எந்திரன் கதாபாத்திரம் போல் அமைந்தால் அதில் நடிப்பீர்களா என்று ரஜினிகாந்தின் மருமகனான தனுஷிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

எந்திரன் போன்ற கதாபாத்திரம் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களால் தான் முடியும். ரஜினி தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். அது போன்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை என்றார்.

ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற தனுஷ் தற்போது மாரியான் மற்றும் ராஜ்னாஹா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

லட்சுமிராய் வாய்ப்பு மாடல் அழகிக்கு கைமாறியது

Lakshmi opportunity to model change லட்சுமிராய் நடிப்பதாக இருந்த வாய்ப்பு பெங்களூர் மாடல் அழகி பார்வதிக்கு கைமாறியது. சமுத்திரகனி இயக்கும் படம் 'நிமிர்ந்து நில். ஜெயம் ரவி ஹீரோ. இதே படம் தெலுங்கில் நானி நடிக்க உருவாகிறது. இதில் கவுரவ வேடம் ஒன்றில் நடிக்க லட்சுமிராய்க்கு வாய்ப்பு சென்றது. அந்த வாய்ப்பு தற்போது பெங்களூர் மாடல் அழகி பார்வதி நாயருக்கு கைமாறியது. இது பற்றி பார்வதி கூறும்போது, 'ஹீரோவின் காதலியாக நடிக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த வேடம் மட்டுமல்ல. எனக்கு பெருமையை தரக்கூடிய படமாக கருதுகிறேன். இதற்கிடையில் கன்னடத்தில் 'பரபிரம்ஹா என்ற படத்தில் நடிக்கிறேன். 2012ம் ஆண்டு எனக்கு நல்லவிதமாக அமைந்தது. டிசம்பர் மாதம் நான் நடித்த 2 மலையாள படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர சில கன்னட படங்களிலும் நடித்து வருகிறேன். விரைவில் தமிழ், இந்தியில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளேன். இதற்குமேல் வேறென்ன எனக்கு வேண்டும் என்றார்.
 

கமலுடன் மீண்டும் சேருவேனா? : சரிகா பரபரப்பு பேட்டி

Again join with Kamal? : Sarika interview கமலுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக பதில் கூறினார் சரிகா. கமல்ஹாசன் மனைவி சரிகா. அவரைவிட்டு பிரிந்து மும்பையில் வாழ்கிறார். அவர் கூறியதாவது: 'கமலை விட்டு பிரிந்தபிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் நான் நன்கு அமைத்துக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து என் கவுரவத்தை யாரும் பறிக்க முடியாது. 'மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவிடம் சினிமா பற்றி பேசுவீர்களா? என்கின்றனர். சினிமாவை யார் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லோரிடமும் அதுபற்றி பேசுவேன். மகள்களை பொறுத்தவரை ஸ்ருதி இசையில் ஆர்வம் கொண்டவர், அக்ஷரா மேற்கத்திய நடனம் கற்றவர்.

இருவருமே நடிகையாகலாம். ஆனால் அவர்கள் தங்களுக்கான இடத்தை பெற்றிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் பிள்ளைகளை ஒப்பிட கூடாது. அவர்கள் தங்களுக்கான அடையாளத்தை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். தற்போது நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். தக்க இடத்தை பெறும் வரையில் மகள்களை விட்டு தள்ளியே இருப்பதுதான் அது. அவர்கள் என் மகள்கள். அவர்கள் எங்கும் போய்விடப்போவதில்லை, நானும் எங்கும் போய்விடப்போவதில்லை. மீண்டும் அவர்களின் கரத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்வேன். அவர்கள் சுதந்திரத்தில் நான் குறுக்கிடமாட்டேன். அதனால்தான் என் பேட்டிகளில் அவர்களைப்பற்றி விவாதிப்பதில்லை.

அவர்களின் காதல் விவகாரங்களிலும் நான் தலையிடுவதில்லை. அது அவர்களின் சொந்த வாழ்க்கை. 'குழந்தைகளுக்காக கமலுடன் மீண்டும் வாழ்க்கையில் இணைவீர்களா? என்கின்றனர். அப்படியொரு விஷயம் நடக்க முடியாதபோது அது பற்றி ஏன் பேச வேண்டும்? யாரிடமும் நான் பேச தயாராக இல்லை. எனக்கும் என் மகள்களுக்கும் இடையில் என் வாழ்க்கையை போதுமான வகையில் அமைத்துக்கொண்டிருக்கிறேன். அதுபோதும். வாழ்க்கை என்பது இரண்டு வகை. ஒன்று எதில் தள்ளப்பட்டோமோ அதிலிருந்து விடுபடாமல் வாழ்வது. மற்றொன்று தினம் தினம் வாழ்க்கையை ரசித்து சந்தோஷமாக இருப்பது. இரண்டாவதை நான் தேர்வு செய்துகொண்டேன்.
 

ஜாக்கிசான் இந்தியா வருகை திடீர் ரத்து

Jackie cancels India visit ஜாக்கிசான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படத்தின் ரிலீஸ் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. 100 படங்களில் நடித்திருக்கும் ஜாக்கிசான் 101 வது படமாக 'சைனீஸ் சோடியாக் 12 (சிஇசட் 12) என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்து வெளியான 'ஆர்மர் ஆப் காட் படத்தின் 3ம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. உலகிலேயே வேறு எங்கும் கிடைக்காத 3 அபூர்வ பொருட்களை கொள்ளையடிக்க முயல்கிறார் ஜாக்கிசான். அவரை அதிரடிப்படை துரத்துகிறது. இதன் முடிவு என்ன என்பதுதான் கதை. இதுவரை எடுக்கப்பட்ட ஜாக்கி சான் படங்களிலே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இதுதான்.

ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிசம்பர் 12ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. தற்போது அது 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு நாடுகளுக்கு ஜாக்கி சான் செல்கிறார். இந்தியா வருவதாக இருந்த திட்டத்தை பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்துவிட்டார். இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் படத்தை பற்றிய புரமோஷனுக்காக ஜாக்கிசான் பாடிய பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்தியாவில் படத்தை வெளியிடும் இந்தோ ஓவர்சீஸ் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெரோஸ் இலியாஸ் தெரிவித்தார்.
 

கிசு கிசு - தலை காட்டும் டைரக்டரு

Kodambakkam kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது....

சில நாளுக்கு முன்னாடி முக்தா தயாரிப்பு மேல வேல்டு ஹீரோ புகார் சொன்னாரு. அதே மாதிரி கோவையான யங்பிரதர் தயாரிப்பு மேல மணியான இயக்கம் புகார் சொல்லியிருக்காரு... சொல்லியிருக்காரு... ஹார்ட் கோயில் பட கதையை அந்த தயாரிப்பு கொடுத்தாரு. அதை ஏன்தான் இயக்கினேனோ. மகா மட்டமான கதைன்னு இத்தனை வருஷம் கழிச்சி சொல்லியிருக்காராம். பதிலுக்கு தயாரிப்பு, இயக்கத்துக்கு ஷாட் வைக்கிற டெக்னிக் கூட தெரியாது. கேமராமேன்தான் எல்லாம் பண்ணுவாங்கன்னு பதிலடி கொடுத்திருக்காராம். இந்த திடீர் சண்டைகளால கோலிவுட்காரங்க தலையில அடிச்சிக்கிறாங்களாம்... அடிச்சிக்கிறாங்களாம்...

படத்துல நடிச்சி இயக்குற கவுதமனான இயக்கம் அணை பட பிரச்னை நடந்தப்போ ஆர்ப்பாட்டம் பண்ண¤னாரு. சமீபத்துல ஒரு பங்ஷன்ல பேசறப்ப கலாச்சாரத்தை அழிக்க¤ற எந்த படமா இருந்தாலும் அதை தடுக்க வேண்டியது நம்ம டூட்டின்னு பேசினாராம்... பேசினாராம்... இதை கேட்டு மேடைலயிருந்த விஐபிங்க ஷாக் ஆயிட்டாங்களாம். இவர் வேற மொழி படத்த சொல்றாரா? இல்ல கோலிவுட் படங்களையே அட்டாக் பண்றாரான்னு ஒருத்தர ஒருத்தரு கேட்டுக்கிட்டாங்களாம். எதைபத்தியும் கவலப்படாத இயக்கம், தன்னோட பேச்சை மறுபடியும் வலியுறுத்தி பேசினாராம்... பேசினாராம்...

ஏழு வருஷமா படம் இயக்கமா இருந்த ராஜகுமார இயக்கம் அவரே நடிச்சி ஒரு படத்தை இயக்கி இருக்காராம்... இருக்காராம்... படத்த முடிச்சிட்டு இசைய வெளியிடுறதுக்கான ஏற்பாடு செய்யறதால கோலிவுட் பக்கம் தல காட்டமா இருந்தவரு, இப்ப தலை காட்ட ஆரம்பிச்சிருக்காராம். பைனான்ஸ் பிரச்னை முடிவுக்கு வந்ததாலதான் இயக்கம் தலை காட்டுறாராம்... தலை காட்டுறாராம்...
 

கேரம் கதையில் காதல்

சென்னை : சுண்டாட்டம், கேரம் விளையாட்டின் கதையாக இருந்தாலும் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று அருந்ததி கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இது 1980,ல் வட சென்னையில் நடக்கும் கதை. கேரம் விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. கதைப்படி ஹீரோ இர்பானின் தங்கையுடன் நான் படிப்பேன்.

தோழி வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது எங்களுக்குள் காதல் ஏற்படுகிறது. வீட்டில் எதிர்ப்பு வருகிறது. இதைதாண்டி எங்கள் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பது போல கதை செல்லும். இயக்குனர் பிரம்மா.ஜி வித்தியாசமாக படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். இவ்வாறு அருந்ததி கூறினார்.

 

சென்னையில் கூத்து திருவிழா

சென்னை : டிசம்பர் 1,ம் தேதி முதல் 5,ம் தேதி வரை சென்னையில் கூத்து திருவிழா நடக்கிறது. புதுடெல்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியின் சார்பில் 'தெருக்கூத்து பயிலரங்கம்' நடந்து வருகிறது. நாற்பது நாட்கள் நடக்கும் இவ்விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் கூத்து திருவிழா நடக்கிறது. தேசிய நாடகப்பள்ளியும் சென்னை அருங்காட்சியகமும் இணைந்து இத்திருவிழாவை டிசம்பர் 1,ம் தேதி முதல் 5,ம் தேதிவரை நடத்துகிறது. சென்னை மியூசியம் வளாகத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடக்கும் இத்திருவிழாவில், 'இந்திரஜித்', 'அரவான் களப்பலி', 'அர்ஜுனன் தபசு', 'திரவுபதி வஸ்திராபரணம்', 'ராமராவணா' ஆகிய கூத்துகள் நடத்தப்படுகின்றன.
 

ஹீரோவிடம் இயக்குனர் சொன்ன ரகசியம்

சென்னை : 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறியதாவது: 'தென்மேற்குப் பருவக்காற்று' ஷூட்டிங் நடக்கும்போதே விஜய் சேதுபதியை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தேன். முதலில் அவரை தேர்வு செய்ய தயங்கினேன். பிறகு கதை சொன்னேன். அதில் சஸ்பென்ஸ் பகுதியையும் சொன்னேன். பிறகு மனம் அமைதியில்லாமல் தவித்தேன். இவர் வேறு யாரிடமாவது இதன் கதையையோ, சஸ்பென்ஸ் பற்றியோ சொல்லிவிட்டால், ரகசியம் வெளிப்பட்டு விடுமே என்று பயந்தேன். நல்லவேளை, விஜய் சேதுபதி யாரிடமும் சொல்லவில்லை. பிறகு நடிகர்களுக்கு அலுவலகத்திலேயே ஒரு மாதம் பயிற்சி நடத்தப்பட்டது.

இதனால், ஷூட்டிங்கில் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது. விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோரை தவிர அனைவரும் புதுமுகங்கள். இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கட்டிப் போடுவார்கள் என்று நம்புகிறேன். படம் நாளை ரிலீஸ் ஆகிறது. நல்ல வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன்.
 

தேவசகாயம் பிள்ளை வரலாறு படமாகிறது

சென்னை : மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு, 'அருளாளர்' பெயரில் படமாகிறது. ரெயின்போ மூவிஸ் சார்பில் கே.புவனேஸ்வரி தயாரிக்கிறார். மதுமாறன் என்பவர் தேவசகாயம் பிள்ளை வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு, வெங்கடேஷ். இசை, எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள், முத்துலிங்கம். திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.மனோகரன் இயக்குகிறார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தக்கலை, முட்டம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
 

நண்பர்கள் கவனத்திற்கு பாடல் வெளியீடு

சென்னை : கிரீன் சேனல் நிறுவனம் சார்பில் வி.சகாதேவன், சுப்ராயன் தயாரிக்கும் படம் 'நண்பர்கள் கவனத்திற்கு'. சஞ்சய், வர்ஷன், மனிஷா ஜித், டாக்டர் சூரி நடிக்கிறார்கள். கே.ஜெயகுமார் இயக்குகிறார். பிரம்மா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன் வெளியிட, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பெற்றார். விழாவில் இயக்குனர்கள் சந்தானபாரதி, பாலசேகரன், பேரரசு, வி.பிரபாகர், பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் கே.ஜெயகுமார் கூறியதாவது:

நண்பர்களுக்குள் படிப்பு எத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது என்பதுதான் கதை. இரண்டு ஹீரோக்களில் ஒருவர் படித்தவர், இன்னொருவர் படிக்காதவர். இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். அந்த பெண் யாரை தேர்வு செய்கிறார்? ஏன்? என்பதுதான் கதை. இன்றைய இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம்.
 

சட்டம் ஒரு இருட்டறை விளம்பரத்துக்கு சுற்றுப்பயணம்

சென்னை : தமன், ரீமாசென், பியா, பிந்து மாதவி நடிக்கும் படம், 'சட்டம் ஒரு இருட்டறை'.  இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் இயக்குனர் சினேஹா பிரிட்டோ கூறியதாவது: பழைய படத்தில் இருந்து கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்துள்ளோம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு பலமாக இருக்கும். ரீமாசென் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தமன், பியா, பிந்து மாதவிக்கான காட்சிகளில் இளமையும், காதலும் துள்ளும். ஈரோடு மகேஷ் காமெடி வேடத்தில் அறிமுகமாகிறார்.

 ரீமாசென் பங்கேற்ற சேஸிங் காட்சியை அதிக சிரமத்துக்கிடையே படமாக்கினோம். டைரக்ஷன் என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். முதலில் இப்படத்துக்கு 'தோழன்' என்று பெயரிட்டோம். அந்த காலகட்டத்தில் சாதனை படைத்த 'சட்டம் ஒரு இருட்டறை' பெயரே சிறப்பாக இருந்ததால், அதையே வைத்துவிட்டோம். படத்தை விளம்பரப்படுத்த திருச்சி, சேலம், மதுரை, கோவை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சினேஹா பிரிட்டோ கூறினார்.

 

நீர்ப்பறவையில் டப்பிங் பேசாதது ஏன்?

சென்னை : நாளை ரிலீஸ் ஆகிறது 'நீர்ப்பறவை'. இதில் நாயகியாக நடித்திருக்கும் சுனேனா, கூறியதாவது: ஒரு நடிகைக்கு எப்போதாவதுதான் வாழ்நாள் கேரக்டர் கிடைக்கும். நீர்ப்பறவை படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பே இயக்குனர், 'பல நாள் வெயிலில் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். மேக்,அப் இருக்காது, கடலுக்குள் படப்பிடிப்பு இருக்கும்' என்றெல்லாம் சொன்னார்.  ஒப்புக் கொண்டு நடித்தேன்.

ஆனால் கேரக்டராக மாறியபின் அந்த கஷ்டம் தெரியவில்லை. நான் நடித்த மற்ற படங்களில் நிறைய வசனம் பேசுவேன். இதில் குறைவு. சர்ச்சோடு தொடர்புடைய அமைதியான பெண். அதனால் கண்களாலும், முகபாவனையாலும் பேச வேண்டியதை உணர்த்த வேண்டும். ஆரம்பத்தில் தடுமாறினேன். பிறகு இயக்குனர் கொடுத்த பயிற்சியால் பழகிவிட்டேன். கமர்சியல் படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற படத்தில் நடிக்கும்போது மனதுக்கு திருப்தியாக இருக்கிறது. நான் டப்பிங் பேசினால் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு காரணத்துக்காக நான் டப்பிங் பேசவில்லை. அது என்ன என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
 

எழுத்தாளனின் வாழ்க்கை

சென்னை : கருணாஸ், ஹரீஷ் கல்யாண், ஸ்வேதா பாசு, இளவரசு உட்பட பலர் நடிக்கும் படம் 'சந்தமாமா'. இதை இயக்கும் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கருணாஸ் எழுத்தாளர். ஹரீஷ் கல்யாண் பாடகர். சேல்ஸ் கேர்ள் ஸ்வேதா பாசு. இவர்கள் மூவரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் பயணத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இதற்காக பல எழுத்தாளர்களை சந்தித்தேன். அவர்கள் சந்தித்த பிரச்னைகளை சொன்னார்கள். அதிலிருந்து தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டேன். இதில் மீரா ஜாஸ்மின் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் ஸ்வேதாவை ஒப்பந்தம் செய்தோம்.


 

நான்தான் சிறந்த நடிகர்

சென்னை : 'பரதேசி' படம் பற்றி நிருபர்களுக்கு பாலா அளித்த பேட்டி: 'பரதேசி' 1930,களில் நடந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கதை. பிழைப்பு தேடி உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாகவும், கொத்தடிமைகளாகவும் சென்ற மக்களின் கதை. நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம். நாமே கதை உருவாக்கி எடுப்பதை விட, நாவல்களை படமாக்குவது எளிதானது. படத்தின் ஹீரோவாக அதர்வாவை தேர்வு செய்ததற்கு காரணம்,

அவரது தோற்றம் கதைக்கு பொருத்தமாக இருந்ததோடு முரளியின் மகனுக்கு நான் செய்ய வேண்டிய கடமையாகவும் இருந்தது. என் படங்களில் நடிக்க ஹீரோக்கள் தயங்குவது தெரியும். வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்து அழுக்கு மனிதனாக காட்டுவேன் என்பதால் பயப்படக்கூடும். என் படத்தில் நடித்த ஹீரோக்களில் யார் நல்ல நடிகர் என்று கேட்டால் எல்லோரையும் விட, நான்தான் நல்ல நடிகர். உங்கள் முன் நல்லவனாக நடித்துக் கொண்டிருப்பதால். இவ்வாறு பாலா கூறினார்.
 

வில்லனாக நடிப்பது எளிது

சென்னை : டாக்டர் வி.ராம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'ஹரிதாஸ்'. கிஷோர், சினேகா, மாஸ்டர் பிருத்விராஜ்தாஸ் நடிக்கிறார்கள். ஜி.என்ஆர்.குமரவேலன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. ரத்னவேலு ஒளிப்பதிவு. படத்தில் நடித்தது பற்றி கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில்தான் எமோஷனலான கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். நான் பெரிய நட்சத்திரம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நல்ல நடிகர்கூட இல்லை. என்னைப் போன்றவர்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும்போது தொழில்நுட்ப குழு பலமாக இருக்க வேண்டும்.

இந்தப் படத்தை பொறுத்தவரை நான் பெரிய ஆள் கிடையாது. படத்தின் இயக்குனர் குமரவேலன், ஒளிபதிவாளர் ரத்னவேலு, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ராஜாமுகமது என இவர்கள்தான் இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள். நான் இயக்குனர் சொன்னதை செய்தேன். 'நடிக்கும்போது அழுதுவிட்டேன்' என்று சிலர் சொல்வதை கேட்டு கேலி செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்தபோது பல காட்சிகளில் அழுதேன். அப்போதுதான் நான் இன்னும் நடிப்பில் பாஸாகவில்லை என்று தெரிந்தது. முறைப்போடு வில்லனாக நடித்து விடலாம். அது எளிது. சென்டிமென்டாக நடிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
 

காமெடியன்கள் கருத்து சொல்லக்கூடாது: சிட்டிபாபு

சென்னை : காமெடியன்கள் கருத்துசொன்னால் அதுவும் காமெடியாகிவிடும் என்று சிட்டிபாபு கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சன் டிவியால் உருவாக்கப்பட்டு 'தூள்' படம் மூலம் வளர்ந்தவன். தற்போது மாசானி, மதனகாமராஜா, 'தீயா வேலை செய்யணும் குமாரு' படங்களில் நடித்து வருகிறேன். சின்னத்திரையில் பிசியாக இருந்ததால் அதிக படங்களில் நடிக்கவில்லை. இப்போது முழுக் கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறேன்.

நான் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவன் என்ற நம்பி வருகிறவர்கள் படத்தில் நடிக்கிறேன். எனக்கென்று தனி பாணியை உருவாக்கி இயக்குனரின் நடிகராக நடித்து வருகிறேன். சில படங்களில் என்னை ஏதாவது கருத்து சொல்லுங்கள் என்பார்கள். காமெடியன்கள் கருத்து சொன்னால் அந்த கருத்தும் காமெடியாகி விடும் என்பது என் கருத்து. நமது வேலை சிரிக்க வைப்பது மட்டும்தான். தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பது ஆசை.
 

மீண்டும் படப்பிடிப்பில் தனுஷ்

Again Dhanush start to act படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வந்த தனுஷ், இப்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்தபோது தனுஷுக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். தோள்பட்டை மற்றும் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட தனுஷுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனுஷின் உடல் நிலை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளது. இதையடுத்து 'மரியான்' படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.

பரத்பாலா இயக்கும் இப்படத்தில் பார்வதி மேனன் நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நாகர்கோவிலில் மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், "முதுகு தண்டு காயம் குணமான பிறகு மீண்டும் 'மரியான்' படத்தில் நடிக்க வந்துள்ளேன். நாகர்கோவில் கடற்கரை பகுதிகளில் நடக்கும் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்," என்றார்.
 

அஜீத்துக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை?

Ajeeth Going under Operation நடிகர் அஜீத்துக்கு மீண்டும் முதுகில் அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது. சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அவரது முதுகுத் தண்டு வடத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் இந்த அறுவைச் சிகிச்சை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஸ் வீரரான அஜீத், ஏற்கெனவே விபத்துக்களைச் சந்தித்தவர். பல முறை முதுகில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.

தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிப்படாத படத்தில் நடித்துவரும் அஜீத், கடந்த வாரம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியின் மீண்டும் விபத்துக்குள்ளானார்.

அதில் அவருக்கு காலில் அடிபட்டது. முதுகில் தண்டுவடத்தில் எலும்பு விலகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

சமீபத்தில் இயக்குநர் ஜோதிகிருஷ்ணா திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவர் காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தார்.

அவரது உடல்நிலை இயல்புக்குத் திரும்ப கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என அவரது குடும்ப டாக்டர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

டாக்டர்களின் பேச்சை மீறி, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜீத், வரும் டிசம்பர் பத்து முதல், சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் கலந்துகொள்ள இருப்பதால், அதற்கு முன்பு சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்ததாகத் தெரிகிறது.
 

நீர்ப்பறவை படப் பாடலில் மேலும் சில வரிகள் நீக்கம்!

Some More Lines Deleted From Neer Paravai Song

நீர்ப்பறவை படத்திற்காக எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலிலிருந்து மேலும் சில வரிகளை நீக்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து. இதையடுத்து படப் பாடலுக்குக் கிளம்பிய சிக்கல் தீர்ந்துள்ளது. படமும் திட்டமிட்டபடி நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா நடித்திருக்கும் படம் ‘நீர்ப்பறவை'. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் கிறித்தவர்களை அவமதிக்கும் கருத்துக்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் கிறித்தவ மதத்தவர்கள் அறிவித்தனர்.

இதனால் குறிப்பிட்டபடி நவம்பர் 30ம் தேதி திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வரிகளை பாடலாசிரியர் வைரமுத்து மாற்றியுள்ளார்.

முதலில்

உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய் என்ற வரிகளை மாற்றினர். அதற்குப் பதில்,

என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய் என்று மாற்றப்பட்டது.

தற்போது அதே பாடலில் மேலும் சில வரிகளை மாற்றி விட்டனர்.

கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா?
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமுறை வரி நினைவில்லையா?

என்ற வரிகளுக்குப் பதிலாக

கிச்சு கிச்சு பண்ணும் கிளிவண்ணப் பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா?
இரு இருதயம் நெருங்கிய
பின்னே இதழுக்கு என்ன இடைவெளியா? என்று மாற்றியுள்ளனர்.

மேலும், கன்னித்தாய் என்ற வார்த்தைக்குப் பதில், காதல்தாய் என்ற வரியை பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.

 

சனா கானின் கால்ஷீட் சொதப்பல்.. மலையாள இயக்குநர் புலம்பல்!

Improper Call Sheet Management San Khan   

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் புதிய மலையாளப் படத்தில் கால்ஷீட்படி வராமல் சனாகான் சொதப்பியதால் நஷ்டமடைந்ததாக இயக்குநர் புலம்பியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை 'கிளைமாக்ஸ்' என்ற பெயரில் மலையாளத்தில் படமாகி வருகிறது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார்.

இந்தப் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வந்தது. இதுபற்றி பெருமையாக பேட்டியல்லாம் கொடுத்து வந்தார் சனாகான்.

ஆனால் திடீரென படப்பிடிப்புக்கு போகாமல் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டாராம் சனா.

இதனால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை. சனாகானால் ஏகப்பட்ட நஷ்டமாகிவிட்டது என படத்தின் இயக்குநர் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

இன்னும் ஒரு வாரத்துக்குள் படத்தை முடித்துக் கொடுக்க சனாகான் வராவிட்டால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தர முடிவு செய்துள்ளாராம் க்ளைமாக்ஸ் இயக்குநர்.

 

நானும் ஆடியே தீருவேன்... அடம் பிடித்த அசின்.. சரண்டரான இயக்குநர்!

Asin Insists Being Part Claudia Item Song   

கவர்ச்சி நடிகைக்கு நல்ல பாடல் அமைந்ததால் பொறாமையடைந்த அசின், அந்தப் பாடலில் கவர்ச்சி நடிகையுடன் தானும் ஆடுவேன் என்று அடம்பிடித்தார்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு காட்சிகளை மாற்றி அமைத்தார் இயக்குநர்.

கில்லாடி 786 எனும் இந்திப் படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாட்டுக்கு நடிகை கிளாடியா சியல்சாவுடன் அக்ஷய் குமார் நடனம் ஆடுவது போலவும், அந்த ஆட்டத்தை அசின் பொறாமையுடன் பார்ப்பது போலவும் காட்சி அமைத்திருந்தார் இயக்குநர்.

பாடல் படமாக்கப்பட்டபோது, திடீரென எழுந்த அசின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டார்.

"என்ன இது.. இவ்ளோ நல்ல பாட்டு ஒரு கவர்ச்சி நடிகைக்கா... இதில் நானும் ஆடுவது போல காட்சியை மாற்றுங்கள். அப்போதான் நான் நடிப்பேன்," அடம் பிடித்தார்.

இயக்குநர் ராகேஷ் உபாத்யாய்க்கு வேறு வழியில்லை. ஹீரோயினாச்சே.. எதுக்கு வம்பு என்று அசின் சொன்ன மாதிரியே காட்சியை மாற்றிவிட்டாராம்.

 

ரஜினிகாந்த்தை அடுத்து இயக்கப் போவது மணிரத்தினம்?

Rajini Join Hands With Manirathnam

கோச்சடையான் படத்துக்குப் பின்னர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்தினத்துடன் கை கோர்க்கப் போவதாக à®'ரு செய்தி வெளியாகியுள்ளது.

கோச்சடையான் படத்தில் ரஜிநி நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்து யார் படத்தில் ரஜினி நடிப்பார் என்பது குறித்து வழக்கம் போல ஊகங்கள் கிளம்பின. அவர் இயக்கப் போகிறார், இவர் இயக்குவார் என்று புற்றீசல் போல செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஆனால் தற்போது ரஜினி தனது அடுத்த இயக்குநராக மணிரத்தினத்தைத் தேர்வு செய்துள்ளதாக à®'ரு புதுச் செய்தி வெளியாகியுள்ளது. இருவரும் இதுதொடர்பாக சமீபத்தில் சந்தித்துப் பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கதை குறித்துக் கூட விவாதம் நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே ரஜினியை வைத்து தளபதி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் மணிரத்தினம். ரஜினி, இளையராஜா என்ற மாயாஜாலம் காரணமாக அப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது கடல் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்தினம். அதை முடித்து விட்டு ரஜினியிடம் அவர் வரலாம் என்று தெரிகிறது.

இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.