கிசு கிசு - ஏகப்பட்ட பொறாமை... ஹீரோ வருத்தம்...

Tags:


Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஏகப்பட்ட பொறாமை… ஹீரோ வருத்தம்…

4/30/2011 1:53:09 PM

நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது….

மோத்வானி நடிகைக்கு கோலிவுட், டோலிவுட்ல வாய்ப்புகள் வந்து கொட்டுறதால, மற்ற நடிகைங்க காதுல கன்னபின்னான்னு புகையாம்… புகையாம்… இதுல முக்கியமா, சீனியர் நடிகைகளுக்குதான் ஏகப்பட்ட புகையாம்… ‘இந்த கண், அந்த கண்ணு’ன்னு ஏகப்பட்ட கண் பட்டதுல, மோத்வானி நடிகைக்கு ரெண்டு நாளா உடல் சரியில்லாம போச்சாம்… போச்சாம்… இதனால எல்லா புகையும் ஆறணுங்கறதுக்காக, நடிகையும் அவரோட தாய்க்குலமும் ஏழுமலையானை சந்திச்சு சிறப்பு பிரார்த்தனை பண்ணிட்டு வந்திருக்காங்களாம்… வந்திருக்காங்களாம்…

பட் பட்டுனு வளர்ந்து வந்த தமன்ன நடிகைக்கு தமிழ்ல ஒண்ணும், தெலுங்குல ஒண்ணுமாகதான் படம் இருக்குதாம்… இருக்குதாம்… எப்படியாவது சம்பளத்தை குறைச்சு, மீண்டும் வாய்ப்பு வாங்கலாம்னு நினைச்சாலும் முடியலையாம்… முடியலையாம்… அதெப்படி திடீர்னு நம்ம மார்க்கெட் குறைஞ்சதுன்னு நடிகையும் அவரது அம்மாவும் யோசிச்சுட்டு இருக்காங்களாம்… ரூம்ல யோசிச்சுட்டு இருக்காங்களாம்…

ஒளிப்பதிவாள இயக்குனரோட கோவான படத்துல, மூணெழுத்து இன்ஷியலா பேரை சுருக்கி வச்சுக்கிட்ட ஹீரோ முதல்ல நடிக்க இருந்தாரு… திடீர்னு கதை சரியில்லைன்னு நடிகரு விலகிட்டாரு… விலகிட்டாரு… இப்ப படம் ஹிட்டானதுல இன்ஷியலு அப்செட்டாயிட்டாராம்… ஆயிட்டாராம்… ‘எங்க மிஸ்டேக் நடந்ததுன்னு தெரியலை’ங்கற மாதிரி நண்பர்கள்கிட்ட ரொம்ப வருத்தமா பேசிட்டிருக்காராம்… இன்ஷியல் பேசிட்டிருக்காராம்…

 

வில்லியாக நடிக்க பியா ஓ.கே

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வில்லியாக நடிக்க பியா ஓ.கே

4/30/2011 1:51:43 PM

'பொய் சொல்லப்போறோம்', 'கோவா', 'கோ' படங்களில் நடித்துள்ள பியா கூறியதாவது: 'கோ'வில் கிளாமராக நடித்ததை கண்டு அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள். கிளாமர் என்பது சினிமாவில் ஒரு பகுதி. சிறுவன் ஒருவன் எனது உடைகள் நழுவி இருப்பதை பார்த்து ஜொள்ளுவிடுவதுபோல் வரும் காட்சியில் நடித்தது தவறு என்கிறார்கள். அதில் என்ன தவறு? இதை ஜாலியான காட்சியாக ரசிகர்கள் எடுத்துக்கொண்டு தியேட்டரில் சிரிக்கிறார்கள். முத்தக்காட்சியில் நடிப்பதிலும் எனக்கு பிரச்னை இல்லை. பிகினி டிரஸ் அணியவும் தயக்கமில்லை. ஹீரோயின் வேடம்தான் வேண்டும் என்று காத்திருக்காமல் நல்ல கேரக்டர் கிடைத்தாலும் நடிப்பேன். வில்லி வேடம் என்றாலும் மறுக்க மாட்டேன்.

 

அஞ்சலியிடம் கிளாமருக்கு இடமில்லை!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அஞ்சலியிடம் கிளாமருக்கு இடமில்லை!

4/30/2011 1:50:27 PM

'கிளாமராக எப்போதும் நடிக்க மாட்டேன்' என்று அஞ்சலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கிறேன். நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை வசந்தபாலனின் 'அங்காடி தெரு'தான் எனது அடையாளமாக இருக்கிறது. அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது. 'இந்த கேரக்டரில் செயற்கையாக நடிக்கக் கூடாது. கதாபாத்திரத்துக்கு ஏற்ப இயற்கையான பாவனைகள் செய்தால் போதும். அப்போதுதான் அந்த வேடத்தோடு ரசிகர்களால் ஒன்ற முடியும்' என்று இயக்குனர் வசந்தபாலன் கூறினார். அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று படம் ரிலீஸ் ஆன பிறகு தெரிந்துகொண்டேன். மீண்டும் அவர் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும். ஒரு படத்தில், நான் கிளாமராக நடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. என்னிடம் கிளாமருக்கு இடம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள்தான் என்னை தேடி வருகிறது. அதைத்தான் நானும் விரும்புகிறேன்.

 

பிகினி அணிய தைரியம் இல்லை!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிகினி அணிய தைரியம் இல்லை!

4/30/2011 10:54:22 AM

பிகினி உடை அணிந்து நடிக்க தைரியமில்லை என்று பூர்ணா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில் நந்தாவுடன் நடித்த 'வேலூர் மாவட்டம்' ஷூட்டிங் முடிந்து விட்டது. பார்த்திபனுடன் 'வித்தகன்' பாடல் காட்சி பாக்கி இருக்கிறது. தெலுங்கில் அல்லரி நரேஷுடன் 'சீம டப்பாகாய்' படத்தில் நடித்துள்ளேன். அடுத்த மாதம் ரிலீஸ். இதில் நான் கிளாமராக நடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. இந்த ஷூட்டிங்கில் நான் அணிந்து நடிக்க வேண்டிய உடைகள் சம்பந்தமாக சிலரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. தெலுங்கில், குறிப்பாக பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்கச் சொல்வார்கள். நானும் ஒரு வரையறைக்குள் நடித்திருக்கிறேன். பிகினி உடையில் நடிப்பீர்களா என்கிறார்கள். அதற்கு துணிச்சல் வேண்டும். அது எனக்கு இல்லை.

 

நடிகர் கார்த்திரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் : கொடுமுடி அருகே கிராமத்தில் நடந்தது

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் கார்த்திரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் : கொடுமுடி அருகே கிராமத்தில் நடந்தது

4/30/2011 10:58:23 AM

நடிகர் கார்த்தி  ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் கொடுமுடி அருகே கிராமத்தில் உள்ள மணப்பெண் வீட்டில் நேற்று நடந்தது. நடிகர் சிவகுமார்  லட்சுமி தம்பதியின் இளைய மகன் கார்த்தி. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிஇ படித்த அவர், அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றுள்ளார். கார்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி  ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனியை மணக்கிறார். ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவரது தம்பி ராம்குமார், சென்னை லயோலா கல்லூரியில் எம்பில் படித்து வருகிறார்.

கார்த்தி  ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நேற்று மதியம் மணமகள் இல்லத்தில் நடந்தது. நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, மூத்த மகன் நடிகர் சூர்யா, தங்கை பிருந்தா, அவரது கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் குமாரசாமி கவுண்டம்பாளையம் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மணப்பெண் வீட்டுக்கு வந்தனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கார்த்தி, சூர்யா வருவதை அறிந்த கிராம மக்களும் ரசிகர்களும் ஏராளமானோர் குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார்த்தி  ரஞ்சனி திருமணம் கோவை கொடீசியா வளாகத்தில் ஜூலை மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது.




 

படமாகிறது சாய்பாபா வரலாறு

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
படமாகிறது சாய்பாபா வரலாறு

4/30/2011 10:56:27 AM

ஐதராபாத்: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டவர் சத்ய சாய்பாபா. இவர், கடந்த 24ம் தேதி புட்டபர்த்தியில் மறைந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பாபா, பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமம் நடத்தினார். ஆன்மிகத்துடன் சமூக சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கினார். பின்தங்கிய கிராமமாக இருந்த புட்டபர்த்தி உலகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாக இருந்தது பாபாவின் ஆன்மிகப்பணி. இதை மையமாக வைத்து அவரது வாழ்க்கை வரலாறை சிசி மோஷன் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் நிறுவனம் படமாகத் தயாரிக்கிறது. 'இதில் நடிப்பவர்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேச்சு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.




 

பாலச்சந்தருக்கு பால்கே விருது

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலச்சந்தருக்கு பால்கே விருது

4/30/2011 10:57:15 AM

தாதா சாகேப் பால்கே விருதுக்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக திரைப்பட இயக்குனராகவும் வசன கர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் புகழ்பெற்று விளங்குபவர் கே.பாலச்சந்தர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். இதை கவுரவிக்கும் வகையில் தாதே சாகேப் பால்கே விருது பாலச்சந்தருக்கு வழங்கப்படுகிறது. இவருக்கு தங்க தாமரை விருது, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளன. கடந்த 87ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தவிர பல்வேறு மத்திய, மாநில அரசு விருதுகளையும் பாலச்சந்தர் பெற்றுள்ளார்.




 

தமிழில் பின்னணி டாப்ஸி ஆசை!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் பின்னணி டாப்ஸி ஆசை!

4/30/2011 10:55:18 AM

ஜீவாவுடன் 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்து வரும் டாப்ஸி கூறியதாவது: 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கண்ணன் இயக்கும் 'வந்தான் வென்றான்' படம் எனக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கும். நான் அதிக சம்பளம் கேட்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. என் தகுதிக்கு என்ன தேவையோ அதைதான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்துள்ள 'மிஸ்டர் பெர்பக்ட்' சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. பிரபாஸ், காஜலுடன் என் நடிப்பும் இதில் பேசப்படுகிறது. இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேசியுள்ளேன். இதே போல தமிழிலும் பின்னணி பேச ஆசை இருக்கிறது. அதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது யாராவது பேசினால் புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் தமிழில் பேசுவேன். தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'வீரா' படத்தில் இப்போது நடித்துவருகிறேன். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.




 

சைக்கோ வில்லன் ஆனார் விவேக்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சைக்கோ வில்லன் ஆனார் விவேக்

4/30/2011 10:55:52 AM

சைக்கோ வில்லன் வேடத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 25 வருடங்களில் தமிழ், மலையாளத்தில் 450 படங்களில் நடித்து விட்டேன். இப்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் சைக்கோ வில்லன் வேடத்தில் நடிக்கிறேன். காமெடி பாணியிலிருந்து விலகி, வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த கேரக்டரை தேர்வு செய்தேன். மிதுன் ஹீரோ. அன்புச்செழியன் இயக்குகிறார். மலைப்பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது. இதற்காக எனது கெட்டப்பை மாற்றுகிறேன். இதற்குமுன் நடித்த எந்த நடிகரின் சாயலும் இல்லாமல், வில்லன் வேடம் ஏற்றுள்ளேன். எனக்குள் எப்படி சைக்கோத்தனம் புகுந்தது, ஏன் வில்லன் ஆனேன் என்பதற்கான காட்சி புதுமையாக இருக்கும்.




 

நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத்

4/30/2011 10:13:16 AM

'எனது தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்' என்று அஜீத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். மே 1-ம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாள். பிறந்தநாள் அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அவர் மேலும் கூறியுள்ளதாவது: 'அமராவதி' படம் மூலம் தொடங்கிய என் திரையுலகப் பயணத்தில், 'மங்காத்தா' 50-வது படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப்பயணத்தில், எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என்று கருதி, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தியது இல்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன். கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை. சமுதாயநலப் பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக, தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல்ல உள்ளமும், எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. மே 1-ம் தேதி எனது 40-வது பிறந்தநாளில், இந்த கருத்தையே எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த 'அஜித்குமார் நற்பணி இயக்கத்தை' கலைக்கிறேன். மாறிவரும் காலகட்டத்தில், மக்கள் எல்லோரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவம் கிடைக்கும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும். இவ்வாறு அஜித்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். அஜீத்தின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத்

 

அஜீரண கோளாறு : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீரண கோளாறு : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி!

4/30/2011 9:49:57 AM

நடிகர் ரஜினிகாந்த் அஜீரண கோளாறு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்து நலம் விசாரித்தார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம், ராணா. இப்படத்தின் தொடக்க விழா, சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நேற்று காலை நடந்தது. இதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்த் சோர்வாக இருந்தார். மதியம் 12.30 மணி வரை ராணா படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், அப்போது கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டார்.

உடனே அவருக்கு கடுமையான வயிற்று வலியும், அதை தொடர்ந்து வாந்தியும் ஏற்பட்டது. மேலும் சோர்வடைந்த அவர், மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு ரஜினிகாந்தை பரிசோதித்த டாக்டர்கள், நண்பகல் 1.45 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பிறகு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா அஸ்வின் வந்தனர்.  

ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து லதா கூறியதாவது: உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்கு செல்வீர்கள் அல்லவா? அதுபோல்தான் அவரும் (ரஜினிகாந்த்) சிகிச்சை பெற வந்துள்ளார். இந்த விஷயம் இவ்வளவு பெரிய பரபரப்பாகி விட்டது என்பதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. நேற்று நடந்த ராணா படப்பிடிப்பில் அவர், அங்கு ஏதோ சாப்பிட்டு இருக்கிறார்.

அது அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஃபுட் பாய்ஷன் ஆகிவிட்டது. வாந்தியும் எடுத்திருக்கிறார். எனவே, இசபெல் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்துள்ளோம்.
இப்போது அவர் நலமாக இருக்கிறார். முன்பைவிட தெம்பாக இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் அவர் வீட்டுக்கு செல்லலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி, டாக்டர் கிஷோர் இருவரும் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தனர்.  பிறகு டாக்டர் கிஷோர், நிருபர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்துக்கு வயிற்றில் அசிடிட்டி பிரச்னை ஏற்பட்டது. வாந்தியும் எடுத்து இருக்கிறார். இதனால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது. எனவே, அவருக்கு தரமான சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அவருக்கு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, உரிய மருந்து, மாத்திரைகள் அளிக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருப்பதால், அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவரது இதய துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் சீராக உள்ளது. சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.

நலமாக இருக்கிறார்

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அறிந்த முதல்வர் கருணாநிதி, நேற்று மாலை 5.45 மணியளவில், இசபெல் மருத்துவமனையில் உள்ள தீவிர இருதய சிகிச்சைப் பிரிவுக்கு நேரில் வந்தார். அவருடன் கனிமொழியும் வந்தார். வாசலில் நின்றிருந்த ஐஸ்வர்யா தனுஷிடம், 'அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?' என்று விசாரித்த முதல்வர், பிறகு ரஜினிகாந்த் இருந்த அறைக்கு சென்று, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பிறகு வெளியே வந்த அவரிடம், ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'அவருக்கு அஜீரண கோளாறு. இப்போது நலமாக இருக்கிறார். நன்றாக பேசுகிறார்' என்றார். பிறகு அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.




 

தமிழ்ப் பெயர் வேட்டையில் உதயநிதி!

Tags: English, female baby, hero, kal, kannadi, lsquo, movie, oru, rsquo, stalin, summaryUdhayanithi, tamil, tamil name, time


Hansika and Udayanithi
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஹீரோ உதயநிதி & ’1305′ என்ற ஆங்கில மாத இதழ் ஆசிரியர் கிருத்திகா ஜோடிக்கு, தாங்கள் எதிர்பார்த்தது போன்றே பெண் குழந்தை பிறந்ததில் ஏக சந்தோஷம்.

இப்போது அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தீவிரமாக பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஆண் குழந்தை பிறந்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. குடும்ப வழக்கப்படி தமிழ்ப் பெயருடன் ‘நிதி’ சேர்த்து வேலையை சுலபமாக்கிவிடலாம். அந்த வகையில்தான் தன் மூத்த மகனுக்கு ‘இன்பநிதி’ சுருக்கமாக ‘இன்பா’ என பெயர் வைத்தனர்.

பெண் குழந்தை என்பதால் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் இருந்தும் என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை கேட்டு வாங்கியபடி இருக்கிறார்களாம். குழந்தையின் தாத்தா ஸ்டாலினும் சில பெயர்களைச் சொல்லியிருக்கிறாராம்.

அநேகமாக ஒன்றிரண்டு நாட்களில் பெயர் தேர்வு இறுதிகட்டத்தை எட்டி அந்தப் பெயர் குடும்பத் தலைவர் கருணாநிதியால் சூட்டப்படும் என்று தெரிகிறது.

English summary
Udhayanithi Stalin, the producer turned hero in Oru Kal Oru Kannadi is seriously searching for a Tamil name. But this time it is not for a movie, but for his new born female baby!
 

ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tags: avm, magnum opus, pooja


Rana
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராணா பூஜை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் தயாரிப்பு வேலைகள், ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் தீபிகாவுக்கான தோற்ற வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் நீண்டதால் ஒரு வாரம் தள்ளிப் போனதை முன்பே தெரிவித்திருந்தோம்.

இப்போது, அறிவித்தபடி ராணா படப்பிடிப்பு பூஜையுடன் நாளை ஏவிம்மில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அனாவசிய வதந்திகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது மீடியாவுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ள ரஜினி, மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பூஜை நடக்கிறது.

பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் கிஷோர் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.

தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக வெளியாகும் இருமொழிப் படம் இது!

English summary
Superstar Rajini bilingual magnum opus Rana shooting will be launched tomorrow at AVM with formal pooja.
 

கைவிடப்படுகிறது பொன்னியின் செல்வன்?

Tags: director, dream, dream project, English, Manirathnam, mood, Ponniyin, project, revel, Selvan


Manirathnam
தொடங்கிய வேகத்திலேயே முற்றுப்புள்ளி விழும் போலிருக்கிறது, மணிரத்னத்தின் மெகா பட்ஜெட் படமான கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு!

படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் முடிவாகி, ஆளாளுக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கப் புள்ளிகள் கூறுகிறார்கள்.

காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.

இதுகுறித்து எதுவும் பேசவும் மறுக்கின்றனர் தொடர்புடைய டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்கள்.

ஏற்கெனவே இந்தக் கதையை மாபெரும் படமாக எடுக்க முயன்றவர் அமரர் எம்ஜிஆர். இயக்கநர் மகேந்திரனை வைத்து திரைக்கதையை முழுமையாக அவர் உருவாக்கிய நிலையில் தமிழக முதல்வராகிவிட, பொன்னியின் செல்வன் நாவல் வடிவிலேயே தொடர்ந்தது.

அதற்குப் பிறகு இந்த முயற்சியில் இறங்குவதா அறிவித்தார் கமல்ஹாஸன். ஆனால் அதுவும் அறிவிப்புடன் நின்றுவிட்டது.

ஆனால் மணிரத்னம், ஷூட்டிங் லொகேஷன்கள் கூட முடிவு செய்து வைத்திருந்த நிலையில் இப்படி செய்தி வந்துள்ளது. இது செய்தியா வதந்தியா… பொறுத்திருந்து பார்ப்போம்!

English summary
Sources close to Manirathnam revel that the director is in the mood of dropping his dream project Ponniyin Selvan, but the reasons unknown.
 

நாவலூரில் ஏஜிஎஸ் திறக்கும் புதிய 3 டி திரையரங்குகள்!!

Tags: companies, entertainment, entertainment business, launch, Leading, leading companies, Mamallapuram, mega, mega mall, Old, road, summaryAGS, Theater, theaters


AGS Multiplex inauguration
பொழுதுபோக்கில் புதிய பரிமாணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

மணலைக் குவித்து வைத்து உட்கார்ந்து படம் பார்த்த காலம் போய், இன்று படுத்துக் கொண்டே படம் பார்க்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டது.

இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, திரையரங்குகள் 3 டிக்கு மாற ஆரம்பித்துள்ளன.

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் தமிழகம் முழுவதும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை உருவாக்கி வருகிறது. சிறிய திரையரங்குகளாக இல்லாமல், முன்புபோலவே, 500 முதல் 1000 பேர் வரை அமரும் தியேட்டர்களை, அனைத்து நவீன வசதிகளோடும் உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம்.

சென்னை வில்லிவாக்கத்தில்தான் இவர்களின் முதல் தியேட்டர் உதயமானது. இங்கே 5 ஸ்கிரீன்கள் உள்ளன.

அடுத்ததாக இரண்டாவது தியேட்டரை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலூரில் பெரிய வணிக வளாகத்துடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த மல்டி பிளக்சில் மேல்தளத்தில் நான்கு அதிநவீன தியேட்டர்கள் உள்ளன. மொத்தம் 3000 இருக்கைகள்! இந்த 4 தியேட்டர்களுமே 3 டி வசதி கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு.

செவ்வாய்க்கிழமை இந்த தியேட்டர்களை நடிகர்கள் ஜெயம்ரவி, நந்தா, சன் பிக்சர்ஸ் சக்சேனா ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

தொழில்நுட்பப் பூங்காக்கள் நிரம்பி வழியும் இந்தப் பகுதி மக்கள் நல்ல தியேட்டருக்குப் போக வேண்டுமென்றால் ஈசிஆரில் உள்ள மாயாஜாலுக்கு செல்லவேண்டியிருந்தது. அந்தக் குறையை போக்கிவிட்டார் கல்பாத்தி!

English summary
AGS entertainemt, one of the leading companies in in entertainment business is going to launch 4 new theaters at a mega mall at Old Mamallapuram road.
 

நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தார்' ரீமா!

Tags: break, Cinema, English, film, hotelier, impending marriage, long break, marriage, Reema, Sen, South, south cinema, speculations, summaryReema, suspense, telugu film


Reema Sen
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசான பிறகு காணாமல் போனவர்கள் இருவர். ஒருவர் படத்தின் நாயகி ரீமா சென்.

இன்னொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்!

இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் தெற்குப் பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகூட மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம்.

ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார். இதில் மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் ஹீரோயினாம். மலேசியாவில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

மலையாளப் படங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் ரீமா.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவுப் பார்ட்டி ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் ரீமா!

அப்போ… கல்யாணம்?!

English summary
Reema Sen, who recently engaged with a Delhi based hotelier, is returning to South cinema after a long break. Now Reema has put all speculations and suspense about her impending marriage to rest and doing a Telugu film, which will be shot in Malaysia for a month.
 

மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Tags: action, billionaire, Deepika, heroine, lip, mallya, Multi, rajini, rana, Sidhardh, son, summaryNow

Sidhard Mallaya and Deepika Padukone
ரஜினியின் அடுத்த படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.

தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக உள்ளார் தீபிகா.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தீபிகாவும் சித்தார்த்தும் கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றுவதைப் பார்க்கலாம். ஆனால் வழக்கம்போல இது வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்தார் தீபிகா.

இந்த நிலையில், பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் சமீபத்தில் மோதிய ஐபிஎல் போட்டியைக் காண விஜய் மல்லையாவும் வந்திருந்தார்.

அவரது மகன் சித்தார்த்தும் தீபிகாவும் இன்னொரு பகுதியில் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் பெங்களூர் அணி வென்றதும், இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டனர். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதையோ, அருகில் விஜய் மல்லையா இருப்பதையோ இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ரொம்ப 'ரொமான்டிக்கான நட்பு' போலிருக்கே!
English summary
Now Deepika, the main heroine of Rajini's prestigious Rana publicly caught in action when she was lip locked with Multi billionaire Vijay Mallya's son Sidhardh.
 

பிரஸ் முன்னால் வரமாட்டேன்: அனுஷ்காவின் அலம்பல்!

Tags: actress, actress anushka, anushka, controversies, English, film, giving interviews, lsquo, money, producers, promo, rsquo, summaryHot, time

Anushka
அனுஷ்காவின் அலம்பல் எல்லை மீறிப் போவதாக அவரின் மேனேஜர் உட்பட பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

அக்கட பூமியில் கவர்ச்சியை கமர்ஷியலாக்கி கோடம்பாக்கத்தாரை உஷ்ணப்பட வைத்தவர் அனுஷ்கா. அவரை தமிழுக்கு அழைத்து வரும் உற்சவத்தை தனது ‘ரெண்டு’ படம் மூலம் சுந்தர் சி துவக்கி வைக்க, அனுஷ்காவின் அலை ஆரம்பமானது.

‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’ என்று அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களுக்கு கால்ஷீட்டை அள்ளி வீச, அனுஷ்காவின் கால்ஷீட்டுக்கு இப்போது தவம் கிடக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் ‘தெய்வத் திருமகன்’, சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத படம், இதைத்தவிர தெலுஙகில் நாகார்ஜுனா, பிரபாஸ் படங்கள் என்று கால்ஷீட்டை காசாக்குவதில் கவனமாக இருக்கிறார். ஆனால் செய்தி இதுவல்ல.

பூஜை, ஆடியோ வெளியீடு, ப்ரிவ்யூ, பிரிமீயர் என்று சென்னை வரும்போது டிவி, பிரின்ட் மீடியாவை சந்தித்து சம்பிரதாயமாக ஹாய்... ஹலோ சொல்லுங்கள். மற்றபடி அந்த ஹாய்... ஹலோவையே வேதவாக்காக்கி அவர்கள் பில்டப் பேட்டி போட்டு விடுவார்கள்’ என்று அவருக்கு வேதம் ஓதி வருகிறார்கள்.

ஆனால் அம்மணியோ, ‘ரசிகர்களுக்கு திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன். பிரஸ் முன்னால் காட்சி கொடுக்க எக்ஸ்ட்ரா பைசா ஆகும் பரவாயில்லையா?’ என்று அங்கும் கரன்சி கணக்கு பேசுகிறார்களாம். அதனால் ஏக எரிச்சலிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்!
English summary
Hot actress Anushka creating more controversies in recent time. According to the producers who suffered by Anushka, the actress demand more money to attend her film's promo and giving interviews to media.
 

ராணாவாவது, கானாவாவது : வடிவேலு கிண்டல்!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராணாவாவது, கானாவாவது : வடிவேலு கிண்டல்!

4/29/2011 5:21:28 PM

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா. படத்தில் காமெடியனாக முதலில் வடிவேலு தேர்வாகியிருந்தார். ஆனால் கடைசி சமயத்தில் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு (வடிவேலுக்கு) பதிலாக கஞ்சா கருப்பை காமெடினயாக படக்குழு தேர்வு செய்தது. இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டதற்கு, ராணா படத்தில் இருந்து உங்களை நீக்கி இருக்கிறார்களே? ராணாவாவது, கானாவாவது. அதுபற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் தீர்ப்புக்கு பின் எல்லாம் மாறும். எனக் கூறினார்.


Source: Dinakaran
 

தமிழிலில் படங்கள் இல்லை : தெலுங்கில் கவனம்!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழிலில் படங்கள் இல்லை : தெலுங்கில் கவனம்!

4/29/2011 12:54:59 PM

தமிழிலும் ச‌ரி தெலுங்கிலும் ச‌ரி ப்‌ரியாமணிக்கு ச‌ரியான வாய்ப்புகளில்லை. அதிலும் தமிழ் பட வாய்ப்புகள் ப்ரியாமணிக்கு சுத்தமாக கிடைக்கவில்லை. தமிழ் முன்னணி ஹீரோக்கள் எல்லாம், தமன்னா, அமலா பால், அனுஷ்கா, சமீரா ரெட்டி போன்றவர்களை மட்டும் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜுனியர் என்டிஆ‌ரின் படத்தில் ப்ரியாமணிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஏறக்குறைய ஜாக்பாட். ஜுனியர் என்டிஆ‌ரின் அடுத்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என அனைவரும் கூறி வந்தனர். திடீரென ஸ்ருதியின் இடத்தில் நுழைந்திருக்கிறார் ப்‌ரியாமணி. இதற்குமுன் இவர்கள் இணைந்து நடித்த யமதொங்கா சுமாரான வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Dinakaran
 

பாலாவின் "அவன் இவன்" ஸ்பெஷல் ஷோ

Tags: quot quot


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலாவின் ‘அவன் இவன்’ ஸ்பெஷல் ஷோ

4/29/2011 2:00:01 PM

பாலாவுக்கு பாலுமகேந்திரா எப்போதுமே ஸ்பெஷல். குரு என்பதைத் தாண்டி அப்பா ஸ்தானம். அவரைவிட திருமதி பாலுமகேந்திரா… அகிலா அம்மா மிகப் பிரதானம். அம்மா மாதி‌ரி. தனது குழந்தைக்கும் அவரது பெயர்தான் வைத்திருக்கிறார். அவன் இவன் படம் தயாரானதும் அகிலா அம்மாவுக்குதான் முதலில் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் பாலா. அவரது முந்தையப் படங்களின் இருண்மையான உலகை செல்லமாக கண்டித்தவர்களில் இவரும் ஒருவர். ச‌ரி, அவன் இவன் எப்படி? இறுதியான சில காட்சிகள் தவிர முழுப் படத்தையும் சி‌ரித்தபடியே ரசித்தாராம். அந்தளவுக்கு நகைச்சுவை. அவருக்குப் பிடித்தால் எல்லோருக்கும் பிடித்த மாதி‌ரி என ‌ரிலாக்ஸாகியிருக்கிறார் பாலா.


Source: Dinakaran
 

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

4/29/2011 5:02:37 PM

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது.

நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சில காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பின்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.


Source: Dinakaran
 

கே.வி.ஆனந்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

Tags: Dinakaran, nbsp, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கே.வி.ஆனந்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

4/29/2011 12:42:01 PM

தாடியும் அழுக்கு பல்லுடனும் மகனை பல படங்களில் பார்த்த ‌ஜீவாவின் தாய், ‘கோ’ படத்தில் தன் மகன் ஜீவாவின் அழகை பார்த்து பூ‌ரித்துப் போனாராம். ஜீவா நடித்த ‘கோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் தான் நடித்த ‘கோ’ படத்தை தன் குடும்பத்தோடு பார்த்த ஜீவா, செய்தியாளர்களை சந்தித்த போது, பேச்சில் பாதி நேரம் கே.வி.ஆனந்துக்கு நன்றி சொன்னார். முக்கியமாக தன்னை அழகாக காண்பித்ததற்கு. தாடியும் அழுக்கு பல்லுடனும் மகனை பல படங்களில் பார்த்த ‌ஜீவாவின் தாய் இந்தப் படத்தைப் பார்த்து உண்மையிலேயே பூ‌ரித்துப் போனாராம். மேலும் கே.வி.ஆனந்துக்கு, ஜீவாவின் அம்மா ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் கூறினாராம்.    


Source: Dinakaran
 

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம்!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம்!

4/29/2011 12:23:03 PM

தெய்வத்திருமகன் படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படமும் அவரது வித்தியாசமான நடிப்புப் பசிக்கு தீனி போடும் என்கிறார்கள். இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படம் தாத்தா – பேரன் உறவை பற்றியதாம். பேரனாக விக்ரம் நடிக்கிறார். பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் தாத்தாவாக நடிக்கிறார். தெய்வத்திருமகன் வெளியான பிறகு இந்த தாத்தா – பேரன் படம் தொடங்கப்பட உள்ளது.


Source: Dinakaran
 

எல்லா ஊரிலும் நெய்வேலியை காண்கிறேன் : பிரபு சாலமன்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எல்லா ஊரிலும் நெய்வேலியை காண்கிறேன் : பிரபு சாலமன்!

4/29/2011 11:02:25 AM

ஒவ்வொரு முகம், ஒவ்வொரு ரசனை, ஒவ்வொரு ஏக்கம், ஒவ்வொரு மகிழ்ச்சி, அப்பப்ப கொண்டாட்டம், அப்பப்ப வெறுமை… இப்படி எல்லாத்தையும் குழைச்சு வச்சிருக்கிற வித்தியாசமான கூட்டாஞ்சோறுதான் ஊர். காலாற நடந்து போனா, கதை சொல்ற காற்றையும் ஏகப்பட்ட காதலர்கள் பெயரை சுமந்து நிற்கும் மரங்களையும் மக்கி மண்ணாகிப் போன, சொல்லப்படாத கதைகளையும் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊரும் தனக்குள்ள வச்சிருக்கு. 'என்னைப் பேச விடுறீங்களா…'னு ஏதாவது ஒரு ஊர், தன்னோட கதையை சொல்ல ஆரம்பிச்சா, என்னவெல்லாம் சொல்லும்னு அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன். இது கொஞ்சம் அதீத கற்பனைன்னாலும் யோசிக்கிறப்ப சந்தோஷமாவே இருக்கு.

நெய்வேலி டவுன்ஷிப்தான் சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் அங்கதான். எனக்கு ஊர்மேல இருக்கிற பாசத்தை விட, ஊருக்குதான் என்மேல அதிக பாசம்னு சொல்வேன். நான் மறந்துபோனா கூட, ஊர், என்னை அடிக்கடி நினைக்க வைக்கிறதால இந்த எண்ணம். இந்தியாவிலயே அதிகமா மரம் வளர்க்கிற ஊர்னு பேர் வாங்கினது நெய்வேலிதான். இது எப்பவும் அமைதியா இருக்கிற ஊர். அடூர் கோபாலகிருஷ்ணன் படத்துல வர்ற மாதிரி, எங்கயாவது ஒருத்தர் சைக்கிளை மிதிச்சுட்டு எப்பவும் வந்துட்டிருப்பதை அங்க அடிக்கடிப் பார்க்கலாம்.

சின்ன வயசுல அதிகமா தனியாதான் சுத்துவேன். நிலக்கரி சுரங்கத்துல இருந்து எடுக்கிற மண்கள், மேடு மாதிரி குவிஞ்சு கிடக்கும். அவ்வளவும் களிமண். கட்டியா இறுகிப் போய் இருக்கும். அதுக்குள்ள போனா, அங்கங்க மெகா சைஸ் குகைகள் போல அது போகும். மழை உருவாக்கி வச்சிருக்கிற குகைகள். உள்ள போய் எங்கேயாவது ஒரு இடத்துல உட்கார்ந்து, நேரத்தைப் போக்கிட்டு வெளிய வர்றதுதான் சனி, ஞாயிறுகள்ல என்னோட பொழுது போக்கு.

மழைக் காலங்கள்ல, இந்த மண்ணுமேல பார்த்தா மொசைக் போட்ட மாதிரி இருக்கும். அதுல ஏறி இறங்கி சறுக்கு விளையாடுறதால மாசத்துல நாலு டவுசரை கிழிச்சுடுவேன். மழை நேரத்துல இதுல ஓடுற தண்ணி பளிங்கு மாதிரி போகும். மீன்கள் போனா, அப்படியே பின்னாலயே போய் பிடிச்சு, எதிர்ல போட்டு சுட்டு சாப்பிடறது என் விளையாட்டு. இதைத்தாண்டி, வீட்டுக்கு வெளியே கொஞ்சம் தள்ளி ஒரு வேப்ப மரம் இருக்கும். மரம்னு சொல்றதை விட என்னோட இன்னொரு தோழன்னு சொல்லலாம். வெயில் கொளுத்துற கோடையில சைக்கிளை அதுக்கு கீழ ஸ்டாண்ட் போட்டுட்டு புத்தகங்கள் படிக்கிறதும் என் பொழுதுபோக்கு. படிக்கிற கதைகளின் ஹீரோவா என்னை மாற்றிக்கிட்டு அந்த கேரக்டரோட ஒன்றி கனவுல சஞ்சரிப்பேன்.

அங்க இருக்கிற, செயின்ட் பால் ஸ்கூல்லதான் படிச்சேன். நான் படிக்கும்போது இருந்த ஆசிரியர்கள்ல, என் மேல மரியாதை வச்சிருந்தவங்க நிறைய பேர். எனக்கும் அந்த ஸ்கூல் மேல இனம் தெரியாத பாசம் உண்டு. அதுக்குக் காரணம் என்னன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. அங்க, மரியதாஸ்ங்கற வரலாற்று ஆசிரியர் இருந்தார். என்னை நாடக நடிகர் ஆக்கியவர் இவர். ஏதாவது விழான்னா, ஸ்கூல்ல உடனே நாடகம் போட்டிருவாங்க. போனமுறை என்னவா நடிச்சேனோ, அதுக்கு நேர்மாறா வேற கேரக்டர் கொடுப்பார் அடுத்த நாடகத்துல. நான் சினிமாவுக்கு வர அவரும் அந்த நாடகங்களும்தான் காரணம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கற்பனை வளரும். கூட படிக்கிறவங்கள்லாம், 'நீ பெரிய நடிகனாயிடுவடா'னு ஏற்றி விடுவாங்க. ஆனா, எனக்குள்ள டைரக்டர் ஆசைதான் முழுமையா இருந்ததுங்கறதை நான் கண்டுபிடிக்கவே ரொம்ப நாளாச்சு.

சினிமாவுக்காக சென்னை வந்த பிறகு மாசக்கணக்குல ஊருக்கு போகாம இருந்தாலும் மனசுக்குள்ள ஊரும் நண்பர்களும் எப்பவும் இருந்துட்டு இருப்பாங்க. ஏதாவது ஒரு படம் பார்த்து, அதுல ஏதாவது ஒரு ஊரை காட்டினா கூட, எங்க ஊர் என்னை கிள்ளிவிட்டுட்டுப் போகும். ஒரே ஊர்ல வாழ்ந்தவங்களால அந்த ஊரை ஜென்மத்துக்கும் மறக்க முடியாதுங்கறதுதான் உண்மை. ஏன்னா, ஊர்ங்கறது ஊர்மட்டுமல்ல, அதுதான் உயிர்.

'மைனா' ஹிட்டுக்குப் பிறகு சேரனோட 'ஆட்டோகிராஃப்' மாதிரி, நான் படிச்ச பள்ளி, வசிச்ச வீடு, ஓடியாடிய மைதானம், கூட சுற்றிய நண்பர்கள்னு தேடிப்போனேன். நான் வசிச்சப்போ இருந்ததை விட இப்ப நிறைய மாற்றம். இங்க எதுவுமே அப்படியே இருந்திட போறதில்லையே… மனசுக்குள்ள அடிக்கடி வந்துபோகும் அந்த மரியதாஸ் வாத்தியாரைத் தேடி சந்திச்சேன். உடனே, நான் படிச்ச ஸ்கூல்லயே ஒரு மீட்டிங். மனசுக்கு நிறைவா பேசிட்டு வந்தேன். என்னோட சிஸ்டரும், அம்மாவும் இன்னும் ஊர்லதான் இருக்காங்க. 'சென்னையில வந்து இருங்க'னு சொன்னாலும் அம்மாவுக்கு இந்த பரபரக்கிற நகரம் பிடிக்கலை. ஒரே இடத்துல வாழ்ந்த நினைவுகளும் வாழப்போற வாழ்க்கையும் தந்த, தரப்போற சுகங்கள் ஜாஸ்தி. சிலருக்கு வாழற ஊருதான் வீடு. சிலருக்கு வாழற வீடுதான் ஊரு. எனக்கு ரெண்டும் ஊராகத்தான் இருக்குது.


Source: Dinakaran
 

கிசு கிசு - கோலிவுட்டில் புது போட்டி!

Tags:

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
கோலிவுட்டில் புது போட்டி!

4/29/2011 2:05:32 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பாலிடிக்ஸ் பக்கம் கவனம் செலுத்துறதால திவ்ய நடிகை படங்கள்ல நடிக்க¤றதை குறைச்சிட்டாராம்... குறைச்சிட்டாராம்... கதை சொல்றேன்னு இயக்குனருங்க வந்தா ஆர்வம் காட்ட மாட்டேங்க¤றாராம்... மாட்டேங்கிறாராம்... இதனால சில வாய்ப்புகளை நடிகை இழந்திருக்காராம்... இழந்திருக்காராம்...

கோலிவுட்காரங்க ரியல் எஸ்டேட்டை அடுத்து ஓட்டல் பிஸ்னஸ்ல ஆர்வம் காட்டுறாங்களாம்... காட்டுறாங்களாம்... ஐகாட் ஹீரோவை தொடர்ந்து இன்சியல் ஹீரோ ஊருக்கு ஊர் ஓட்டல் திறக்க¤றாராம். அந்த பட்டியல்ல ஜிகேவான ஆர்ட் இயக்குனரும் இப்போ சேர்ந்திருக்க¤றாராம்... சேர்ந்திருக்கிறாராம்... கூடவே ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு சாப்பாடு சப்ளை பண்றதுல இவங்களுக்குள்ள போட்டி ஏற்பட்டிருக்காம்... ஏற்பட்டிருக்காம்...

பிரமாண்ட இயக்குனரின் ஷூட்டிங் நடந்தா, யூனிட்டாரை தவிர வெளி ஆள் யாரும் நுழைய முடியாது. அந்த அளவுக்கு செக்யூரிட்டி கெடுபிடி இருக்கும். அந்த பாணியை சூப்பர் ஹீரோவின் படத்தை இயக்குற படையப்பா இயக்குனரும் ஃபாலோ பண்ண முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...





Source: Dinakaran
 

காதலில் தோல்வி : கிரண்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலில் தோல்வி : கிரண்!

4/28/2011 3:11:44 PM

ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்தேன். அவரை பிரிந்துவிட்டேன். இது எனது மனதை பெரிதும் பாதித்தது என்கிறார் கிரண். இது பற்றி அவர் கூறியதாவது: ஓரிரு ஆண்டுகளுக்கு முன் மும்பையை சேர்ந்த ஒருவரை காதலித்தேன். அவர்தான் வாழ்க்கை என இருந்தேன். திடீரென எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரிந்துவிட்டேன். இது எனது மனதை மிகவும் பாதித்தது. பல நாட்கள் சோகமாக இருந்தேன். இப்போது முழுமையாக அதிலிருந்து விடுபட்டு வந்துவிட்டேன். இப்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் மட்டும்தான். இந்நிலையில் எனக்கு திருமணம் ஆகிவிட¢டது என்றும் எனது பாய்பிரெண்டை நான் கரம் பிடித்ததாகவும் தகவல் பரப்புகிறார்கள். இதில் சற்றும் உண்மை கிடையாது. ஒரு முறைதான் காதல் வந்தது. அதுவும் தோல்வி. மீண்டும் காதலில் விழவில்லை. காதலிக்கும் எண்ணமும் கிடையாது. இந்தியில் Ôபி கேர்ஃபுல்Õ, Ôஅதா பதா லாபதாÕ படங்களில் நடிக்கிறேன். தமிழில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்.


Source: Dinakaran
 

சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத் பூரிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத் பூரிப்பு

4/28/2011 3:13:54 PM

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் தெலுங்கில் ஹிட்டான 'ரிங்கா… ரிங்கா…' பாடல், இப்போது இந்தியில் ஒலிக்கப்போகிறது. சல்மான் கான், அசின் நடித்து வரும் 'ரெடி' படத்துக்காக. சமீபத்தில் இந்த பாடலை கேட்ட சல்மான், இதன் மெட்டிலும் இசையிலும் மயங்கிப்போனாராம். உடனே இப்பாடலின் உரிமையை வாங்க தயாரிப்பாளருக்கு உத்தரவு போட்டிருக்கிறார் சல்மான். சமீபத்தில் 'ரெடி' படத்தின் விழா மும்பையில் நடந்தபோது, அதில் தேவிஸ்ரீ பிரசாத்தும் கலந்துகொண்டார்.  இது பற்றி அவர் கூறும்போது, “விழாவில் என்னை பார்த்ததும் சல்மான் கான் ஓடிவந்து, கட்டியணைத்தார். அவரது அன்பை கண்டு நெகிழ்ந்து போனேன். “சூப்பரா பாட்டு போட்டிருக்கே. இத்தனை நாள் எங்கிருந்தே? உன்னை இந்தி சினிமா பயன்படுத்திக்கணும்” என சல்மான் சொன்னது எனக்கு பெருமையா இருந்தது” என்றார்.


Source: Dinakaran
 

நடிகர் கார்த்தி திருமணம் ஈரோடு ரஞ்சனியை மணக்கிறார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் கார்த்தி திருமணம் ஈரோடு ரஞ்சனியை மணக்கிறார்!

4/28/2011 9:58:00 AM

நடிகர் கார்த்தி -  ஈரோடு ரஞ்சனி திருமணம் ஜூலை 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. நடிகர் சிவகுமார் - லட்சுமி தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள். மூத்த மகன் நடிகர் சூர்யா. அவர் நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார். அவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.சூர்யாவின் தம்பி 'பருத்தி வீரன்' கார்த்தி. சென்னை கிரசன்ட் கல்லூரியில் பி.இ முடித்தார். அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிப்பில் எம்.எஸ் பட்டம் பெற்றார். சினிமா ஆர்வம் காரணமாக மணிரத்னம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் அமீர் படத்தில் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார். கார்த்தி பெற்றோர் அவருக்கு பெண் தேடி வந்தனர். ரஞ்சனி என்பவரை தேர்வு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தனர். ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி - ஜோதி மீனாட்சி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ரஞ்சனி சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். திருமணம் ஜூலை 3ம் தேதி  சென்னையில் நடக்கிறது. வருங்கால மனைவி குறித்து தினகரன் நிருபர் கேட்டபோது கார்த்தி சொன்னார்: கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார். முதல்முறை ரஞ்சனியை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு போகலாம் என்று நினைத்திருக்கிறோம். இவ்வாறு கார்த்தி கூறினார்.





Source: Dinakaran
 

சம்பள பாக்கி நடிகர் சங்கத்தில் ஷெரீன் மீண்டும் புகார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சம்பள பாக்கி நடிகர் சங்கத்தில் ஷெரீன் மீண்டும் புகார்!

4/27/2011 10:24:45 AM

சஞ்சய்ராம் தயாரித்து இயக்கி உள்ள படம், 'பூவா தலையா'. இந்தப் படம் வரும் 29ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இதில் நாயகியாக நடித்துள்ள ஷெரீன் தனக்கு 5 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி தர வேண்டியுள்ளது. அதை வசூலித்து தரும்படி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஷெரீனின் அம்மா யசோதரா கூறியதாவது: இயக்குனர் சஞ்சய்ராம் 'பூவா தலையா' படத்தில் நடிக்க கேட்டபோது நாங்கள் 15 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டோம். அவ்வளவு பணம் தரமுடியாது என்று, 9 லட்சம் தருவதாக சொன்னார். ஒப்புக் கொண்டோம். முதல் தவணையாக 4 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஷெரீன் நடித்தார். இன்னும் 5 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது, அதை முடித்த பிறகு மீதி தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு படப்பிடிப்புக்கு அழைக்கவும் இல்லை. மீதிப் பணத்தை தரவும் இல்லை. இப்போது படம் வெளிவரப்போவதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். சம்பள பாக்கியை கேட்டால் தொலைபேசி இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். இதுபற்றி, நடிகர் சங்கத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தோம். இப்போது மீண்டும் புகார் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Source: Dinakaran
 

தமிழுக்கு வருகிறார் ரவிதேஜா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழுக்கு வருகிறார் ரவிதேஜா!

4/27/2011 11:32:54 AM

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ரவிதேஜா விரைவில் தமிழ் படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து தெலுங்கில் மெகா ஹிட் படங்ளை கொடுத்து வரும் ரவிதேஜா தனது மார்க்கெட்டை உயர்த்த தமிழில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்கு முதற்கட்டமாக தனது படங்ளை தமிழில் டப் முடிவு செய்துள்ளார். அதன் பிறகு நேரடி தமிழ் படங்களில் நடிக்க யோசிக்க திட்டமிட்டுள்ளாராம் ரவிதேஜா.


Source: Dinakaran
 

மாதவனுக்கு ""''ரன்'''' போல் எனக்கு ''''வேட்டை'''' அமையும்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மாதவனுக்கு ””ரன்”” போல் எனக்கு ””வேட்டை”” அமையும்!

4/27/2011 11:00:32 AM

லிங்குசாமி இயக்கத்தில்  ஆர்யா நடிக்கும் புது படம் வேட்டை. படத்தில் ஆர்யாவுடன் மாதவனும் நடிக்கிறார். படத்தை பற்றி நடிகர் ஆர்யா கூறுகையில், மாதவனுக்கு ‘ரன்’ படம் மூலம் கிடைத்த இமேஜ், தனக்கு ‘வேட்டை’ படத்தின் மூலம் கிடைக்கும் எனக் கூறினார். மேலும் ‘லிங்குசாமியின் ரசிகன் நான்’ என்று கூறிய ஆர்யா படத்தில் பணியாற்ற ஆவலாக இருப்பதாக கூறினார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘அவன் இவன்’ படம் நிச்சயம் அனைவரது மனத்தில் இடம் பிடிக்கும். பாலா இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்தது மிகவும் பெருமை அளிக்கிறது என்று ஆர்யா கூறினார்.


Source: Dinakaran
 

பிரபுதேவா கொடுத்த சுதந்திரம் : ஸ்ரீதர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபுதேவா கொடுத்த சுதந்திரம் : ஸ்ரீதர்

4/27/2011 10:35:32 AM

'சன் பிக்சர்ஸின் 'எங்கேயும் காதல்', மே 6ம் தேதி ரிலீஸ். இதில் 4 பாடல்களுக்கு நடனப் பயிற்சி அளித்தேன். இவ்வருடத்தின் மாபெரும் ஹிட்டாக அப்பாடல்கள் அமையும். ஹாரிஸ் ஜெயராஜின் இசையும், பிரபுதேவாவின் இயக்கமும், ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மோத்வானியின் காதல் நடிப்பும் ரசிகர்களை பரவசப்படுத்தும். எனது நடன அமைப்பில் உருவான நிறைய பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. ஆனால், 'எங்கேயும் காதல்' பாடல் காட்சிகள் ஹைலைட்டாக அமைந்தது, எங்கள் குழுவுக்கே பெருமிதமாக இருக்கிறது' என்றார், நடன இயக்குனர் ஸ்ரீதர்.

பிரபுதேவாவை இயக்கிய அனுபவம்?

அவரே சிறந்த நடன இயக்குனர் என்பதால், எனக்கான சுதந்திரத்தை கொடுத்தார். அவரை பொறுத்தவரை, எதையும் புதுமையாக செய்ய வேண்டும். அப்படி செய்தால், பாராட்டுவார். இப்படத்தில் அறிமுகப் பாடலாக வரும் 'எங்கேயும் காதல்' பாடல் காட்சியில் அவர்தான் நடித்துள்ளார். மென்மையான அவரது அசைவுகள், ஸ்டைலாக இருக்கும். ஜனரஞ்சகமான, ரம்மியான பாடல் என்பதால், மிகப் பெரிய ஹிட்டாகும். ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நிற்கும். இப்பாடல் காட்சியை பிரான்சில் 35 நாட்கள் படமாக்கினோம். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, நிஜமாகவே  மாபெரும் வித்தைகள் செய்துள்ளது. ஒரு நடன இயக்குனராக எனக்கும் நல்ல பெயர் வாங்கித் தரும்.

'நெஞ்சில் நெஞ்சில்…' பாடலின் ஹைலைட்?

இந்தப் பாடலுக்காக, ஜெயம் ரவிக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்தேன். ஹன்சிகாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன வருமோ, அதற்கேற்ப மூவ்மென்ட்ஸ் அமைத்தேன். நாளைக்கு எப்படி படமாக்கப் போகிறேன் என்பதை, பிரபுதேவாவிடம் முதல்நாள் இரவே செய்து காட்டி விடுவேன். சில திருத்தங்கள் சொல்லி, 'மூவ்மென்ட்ஸ்களை இப்படி மாற்றி வை' என்பார். அதன்படி செய்வேன். ஹன்சிகா மட்டும் பிரபுதேவா என்ன சொல்வாரோ என்று பயந்துகொண்டே இருப்பார். இந்த பாடல் காட்சியை 4 நாட்கள் படமாக்கினோம்.

கதை சொல்லும் பாடல்?

அது இல்லாமல் இருக்குமா? 'எங்கேயும் காதல்' கதையின் தன்மையையும், கேரக்டர்களின் சூழ்நிலையையும் சாதாரண ரசிகனுக்கும் புரியும் வகையில் சொல்கின்ற மான்டேஜ் பாட்டு, 'தீம் தீம்' என்று வரும். ஜெயம் ரவி தனியாகவும், ஹன்சிகா தனியாகவும் ஒருவரை ஒருவர் நினைத்து உருகுவார்கள்.

எத்தனை நாட்கள் ரிகர்சல்?

சென்னையில் 25 நாட்கள் முன்கூட்டியே நாங்கள் பயிற்சி எடுத்ததால், பிரான்சில் நடந்த ஷூட்டிங்கில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அங்கு நானும், குழுவினரும் 35 நாட்களுக்கு மேல் இருந்தோம்.


Source: Dinakaran
 

தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்

4/27/2011 10:23:13 AM

'பொய் சொல்ல போறோம்', 'கோவா', 'பலே பாண்டியா', 'கோ' படங்களில் நடித்திருப்பவர் பியா. நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்லோரையும் போல எனக்கும் காதல் வந்தது. வந்த வேகத்தில் மறைந்தும் விட்டது. எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி கேட்காதீர்கள். அது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியதல்ல. 'கோ' படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது. எல்லோரும் இரண்டாவது ஹீரோயினாக நடித்தது ஏன் என்று கேட்கிறார்கள். கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் எந்த கேரக்டரிலும் நடிக்கலாம். வில்லியாகவும் நடிப்பேன். நீச்சல் உடை அணிவதும், முத்தக் காட்சியில் நடிப்பதும் அதன் அவசியத்தை பொறுத்து முடிவு செய்வேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன். அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது சென்னையில் குடியேறுவேன். இந்தியில் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். விரைவில் ஒரு இந்திப்படத்தில் நடிக்க உள்ளேன்.


Source: Dinakaran
 

நார்வே திரைப்பட விழாவில் எந்திரன் படத்துக்கு 3 விருது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நார்வே திரைப்பட விழாவில் எந்திரன் படத்துக்கு 3 விருது!

4/27/2011 10:29:42 AM

நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா, கடந்த 20-ம் தேதி ஆஸ்லோவில் துவங்கி 25-ம் தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்பவரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் இவ்விழாவை வருடா வருடம் நடத்தி வருகிறது. இயக்குனர்கள் சேரன், ராதாமோகன், பிரபு சாலமன், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், 'எந்திரன்', 'மதராசப்பட்டினம்', 'மைனா', 'பயணம்' உட்பட 15 படங்களும் 10 குறும்படங்களும் திரையிடப்பட்டன. பின்னர் 23 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சன் பிக்சர்ஸின் 'எந்திரன்' படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த தயாரிப்பு ஆகிய 3 விருது கிடைத்தது. சிறந்த படமாக பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனராக, ராதா மோகனும் (பயணம்), நடிகராக விதார்த்தும் (மைனா), நடிகையாக அஞ்சலியும் (அங்காடி தெரு) தேர்வு செய்யப்பட்டனர்.


Source: Dinakaran
 

ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!

4/26/2011 5:06:27 PM

சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்த 'மகதீரா’, தமிழில் 'மாவீரன்’ பெயரில் டப்பிங் ஆகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியது: ராம் சரணின் கடின உழைப்பு அவரது நடிப்பில் தெரிகிறது. சிரஞ்சீவியும் நானும் ஆழ்வார்பேட்டை சாலையில் ஷூட்டிங்கில் ஒன்றாக கலந்துகொண்ட காலத்தில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் அது இன்று நடந்திருக்கிறது. மும்பையில் மட்டும் ஷூட்டிங் நடப்பதுபோல் ஹாலிவுட்காரர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும் ஷூட்டிங் நடக்கிறது. பெரிய படங்கள் வருகின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதை ஞாபகப்படுத்த தமிழ் திரையுலகும், தெலுங்கு திரையுலகும் ஒன்றாக சேர வேண்டும். உலக வர்த்தகத்தில் பங்கு பெறாமல் இருப்பது நமது தவறுதான். அதற்காகவாவது நாம் கைகோர்க்க வேண்டும். தெலுங்கிலிருந்து ஒரு படையே தமிழுக்கு வந்திருக்கிறது. வருக என்று வரவேற்கிறோம்.


Source: Dinakaran
 

வானத்துக்கு யு/ஏ சான்றிதழ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வானத்துக்கு யு/ஏ சான்றிதழ்

4/26/2011 10:43:21 AM

சிம்பு நடிப்பில் வரும் 29ஆம் தேதி வெளிவரும் வானம் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தெலுங்கில் வேதம் என்ற பெய‌ரில் ஹிட்டான படத்தையே தமிழில் வானம் என்ற பெய‌ரில் எடுத்துள்ளனர். சிம்புவுடன் பரத், அனுஷ்கா, பிரகாஷ்ரா‌ஜ், வேகா, சோனியா கேர்வால் என ஏராளமானோர் நடித்துள்ளனர். யுவன் இசை. படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் காட்சிகள் எதிலும் கை வைக்காமல் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். கிளவுட் நைன் படத்தை வெளியிடுகிறது.





Source: Dinakaran
 

ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்!

4/26/2011 10:31:28 AM

இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை அவரது பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன். விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குறித்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.





Source: Dinakaran
 

பாலக்காட்டில் நடிகர் பிருத்விராஜ் திடீர் திருமணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலக்காட்டில் நடிகர் பிருத்விராஜ் திடீர் திருமணம்!

4/26/2011 10:10:22 AM

கேரளாவில் மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ். இவர், நந்தனம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி, ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் கனாகண்டேன், மொழி, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் உருமி என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார். ராவணன் படத்தில் நடித்த போது, பிருத்விராஜிடம்  மும்பையில் உள்ள பிபிசி தொலைக்காட்சி சார்பில் பிரதிக்ஷா என்ற பெண் நிருபருக்கும், பிருத்விராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானபோது பிருத்விராஜ் மறுத்து வந்தார். ஆனாலும், பிரதிக்ஷா என்ற சுப்ரியாமேனனுடன் நெருங்கி பழகி வந்தார். மே 1ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், திடீரென நேற்று நடிகர் பிருதிவிராஜ் - சுப்ரியா மேனன் திருமணம் நடந்தது. சுப்ரியா மேனனின் சொந்த  ஊரான பாலக்காடு தேக்குறிச்சியில் நடந்த திருமணத்தில் பிருத்விராஜ் தாயார் மல்லிகா சுகுமாரன், அண்ணனும் நடிகருமான இந்திரஜித் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மே 1ம் தேதி  கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.





Source: Dinakaran
 

ரானாவில் மொத்தம் ஏழு முன்னணி நடிகைகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரானாவில் மொத்தம் ஏழு முன்னணி நடிகைகள்

4/26/2011 12:00:14 PM

ரானாவில் மொத்தம் ஏழு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். இதில் மூன்று பேர் ர‌ஜினிக்கு ஜோடி. இந்த மூவ‌ரில் முக்கியமானவர் தீபிகா படுகோன். இவரும், ர‌ஜினியும் இடம்பெற்ற போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த போட்டோ ஷூட் ர‌ஜினிக்கு அத்தனை திருப்தி அளிக்கவில்லை. ரானா ச‌ரித்திரப் படம். போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்டப் படங்களில் தீபிகாவின் தோற்றம் அதனை பிரதிபலிக்கும் வகையில் இல்லையாம். இதனால் தீபிகாவின் தோற்றத்தை ச‌ரித்திர காலத்துக்கேற்ப மாற்றி மீண்டுமொருமுறை போட்டோ ஷூட் நடத்தப்படலாம் என்கிறார்கள்.





Source: Dinakaran
 

சிம்புவை கோபப்படுத்திய கோ?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புவை கோபப்படுத்திய கோ?

4/26/2011 10:59:11 AM

சிம்பு நடித்திருக்க வேண்டிய படம் 'கோ'. ஆனால் சில காரணங்களால் கோ-விலிருந்து விலகினார் சிம்பு. சிம்புக்கு பதில் ஜீவாவை ஒப்பந்தம் செய்தார் கே.வி.ஆனந்த். இந்த மாற்றம் பலரது மனதில் கேள்வியை விதைத்தது. சிம்பு இடத்தில் ‌‌ஜீவாவா? இந்த கேள்விக்கு அடித்து பதில் சொல்லியிருக்கிறார் ‌ஜீவா. கே.வி.ஆனந்தின் கோ ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. படத்தின் ‌ரிசல்ட் நன்றாக இருக்கவே தனது மனதை அகலத் திறந்திருக்கிறார் ஆனந்த். ஆனந்தை பாராட்டும் எல்லோரும் ‌ஜீவாவையும் பாராட்டுகிறார்கள். ‌ஜீவா ஒரு நல்ல ஸ்டைலிஷான நடிகர். ராம், கற்றது தமிழ், ஈ, சிவா மனசுல சக்தி படங்களில் அவரோட நடிப்பு எனக்குப் பிடிக்கும். கோ பட கேரக்டருக்கு அப்படியே ஆப்டாகப் பொருந்தியிருக்கிறார் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த். படத்தை மிஸ் பண்ண சிம்புக்கு தற்போது படத்தின் வருத்தத்தை தந்திருக்கிறதாம். படத்தின் தான் நடித்திருந்தால் தன்னுடைய கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும்  என  தற்போது சிம்பு புலம்பி வருவதாக செய்திகள் வருகின்றன.





Source: Dinakaran
 

பவர் சோப் விளம்பரங்களில் தமன்னா வர தடை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பவர் சோப் விளம்பரங்களில் தமன்னா வர தடை

4/26/2011 12:07:09 PM

பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவனம், சென்னை தி.நகரைச் சேர்நத் ஜே அன்ட் டி கம்யூனிகேஷன் மூலமாக தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக செயல்பட அணுகியது. இதையடுத்து 2008ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் எனது அனுமதியின்றி எனது படங்களை தனது விளம்பரங்களில் அது பயன்படுத்தி வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் தமன்னா. இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், வருகிற ஜூன் 8ம் தேதி வரை பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவின் படங்கள், வீடியோ கிளிப்பிங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.





Source: Dinakaran
 

நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளத்துக்கு அமோக வரவேற்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளத்துக்கு அமோக வரவேற்பு!

4/26/2011 10:41:37 AM

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ஆடுகளம் படத்துக்கு நார்வேயில் நடந்து வரும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அமோக வரவேற்பை தந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆடுகளம் இரண்டாவது முறையும் திரையிடப்பட்டது. பொல்லாதவனுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய படம் ஆடுகளம். தனுஷ், தாப்ஸீ நடித்திருந்தனர். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பிரமாதமான கேரக்டர் ஒன்றில் வாழ்ந்திருந்தார். இந்தப் படத்தை நார்வே வாழ் தமிழர்கள் மிகவும் ரசித்தனர். முதல்முறை பார்க்க முடியாதவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இரண்டாவது முறையும் படம் திரையிடப்பட்டது.





Source: Dinakaran
 

புதிய தலைமுறையினர் நம்பிக்கை அளிக்கிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதிய தலைமுறையினர் நம்பிக்கை அளிக்கிறார்கள்

4/25/2011 12:12:33 PM

சுவாமி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'செங்காத்து பூமியிலே'. ரத்னகுமார் இயக்கி உள்ள இப் படத்தில் பவன், செந்தில், பிரியங்கா, சுனுலட்சுமி நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. பாடல்களை வெளியிட்டு இளையராஜா பேசியதாவது: ஒரு காலத்தில், பாடல் வெளியீட்டு விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் 'அண்ணக்கிளி', '16 வயதினிலே' பாடல் வெளியீட்டு விழா, இதே சேம்பர் தியேட்டரில்தான் நடந்தது. பல இனிய நினைவுகளோடு இருக்கும் இந்த தியேட்டர் இடிக்கப்பட இருக்கிறது. 908 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். சுதீந்திரன், ரத்னகுமார் போன்ற இயக்குனர்களோடு பணியாற்றுகிறேன். இளம் தலைமுறை இயக்குனர்கள் சினிமாவுக்கு நம்பிக்கை தருபவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பட கதையை ரத்னகுமார் சொன்னபோது அதில் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தது. குறைக்கச் சொன்னேன். அதை அவர் செய்துள்ளார். இவ்வாறு இளையராஜா பேசினார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், சேம்பர் செயலாளர் ரவி கொட்டாரக்கரா, பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சுசீந்திரன், பாண்டிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தயாரிப்பாளர் துரைமுருகன் வரவேற்றார். முடிவில் ரத்னகுமார் நன்றி கூறினார்.





Source: Dinakaran
 

காதல் படங்களுக்கு முக்கியத்துவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதல் படங்களுக்கு முக்கியத்துவம்

4/25/2011 12:33:18 PM

காதல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஹரிப்பிரியா கூறினார். 'முரண்' படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து வரும் அவர் கூறியதாவது: 'முரண்' படம் தமிழில் எனக்கு திருப்புமுனை தரும் படமாக இருக்கும். அந்தப் படம் வெளிவந்த பிறகே வேறு தமிழ் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். கன்னடத்தில் ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறேன். மூன்றுமே காதல் படங்கள். இளமையும், அழகும் இருக்கும்போதே நிறைய காதல் படங்களில் நடித்து விட வேண்டும். அதனால் காதல் படங்கள் என்றால் உடனே ஒப்புக் கொள்வேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க இன்னும் கொஞ்சம் வயதாக வேண்டும். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஒரு இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்தேன். காரணம் அந்த ஒரு படத்துக்காக தென்னிந்தியாவில் நான் நான்கு படங்களை இழக்க வேண்டியது இருக்கும்.





Source: Dinakaran
 

ஸ்ரீசாந்துடன் காதலா? ரியா சென் மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்ரீசாந்துடன் காதலா? ரியா சென் மறுப்பு

4/25/2011 12:34:57 PM

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை காதலிப்பதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்றார் ரியா சென். தமிழில் 'தாஜ்மஹால்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பின்னர் பிரசாந்துடன் 'குட்லக்'படத்தில் நடித்த அவர் பிறகு இந்திக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் சில விழாக்களில் கலந்துகொண்டனர். இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதை ஸ்ரீசாந்த் ஏற்கனவே மறுத்திருந்தார். இந்நிலையில் ரியா சென் தனது டிவிட்டர் இணையதளத்தில், 'கொச்சி ஐபிஎல் அணி பங்கேற்ற ஆட்டத்தில் நான் கலந்துகொண்டேன். இதற்காகவெல்லாம் காதல் வருமா என்ன? நான் ஸ்ரீசாந்தை காதலிக்கவில்லை. அது தவறான தகவல். இது தொடர்பான உங்கள் கற்பனைகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்' என்று கூறியுள்ளார்.





Source: Dinakaran
 

ஸ்டன்ட் காட்சிகள் தவிர்க்க முடியாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்டன்ட் காட்சிகள் தவிர்க்க முடியாது

4/25/2011 12:45:09 PM

விக்ரம் கூறியது: சினிமாவில் ஸ்டன்ட், மர்டர் போன்ற வன்முறை காட்சிகளை தவிர்க்காதது ஏன்? என்கிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களைத்தான் சினிமாவில் காட்சிகளாக வைக்கிறார்கள். அதை தவிர்க்க முடியாது. 'தெய்வத்திருமகன்Õ தலைப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி இயக்குனரும், தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வருகிறார்கள். சினிமாவை தாண்டி அரசியலுக்கு வருவேனா என்பது எனக்கு தெரியாது. நாளை என்ன நடக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது. ஹீரோக்கள் என்ன செய்கிறார்களோ அதை ரசிகர்களும் செய்கிறார்கள். ஒருவர் என் பெயரை பச்சை குத்தியிருந்தார். அவரிடம் மனைவி பெயரை பச்சை குத்த வேண்டியதுதானே என்றபோது அதற்கு மறுத்துவிட்டார். மொட்டை அடித்தால் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள், உடல்கட்டு ஏற்றினால் அவர்களும் அதை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நல்வழியில் அழைத்து செல்வதுதான் எனது எண்ணம். ஐ.நா சபையின் மனித குடியேற்ற திட்ட பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதன் மூலம் உலகம் வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவது உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொள்வேன். எனது ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய், அஜீத், சிம்பு உள்ளிட்ட எல்லா நடிகர்களிடமும் பேசி அவர்களின் ரசிகர்களையும் இந்த முயற்சியில் ஈடுபட வைப்பேன்.





Source: Dinakaran
 

பெயரில் காதல் வேண்டாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெயரில் காதல் வேண்டாம்

4/25/2011 12:27:38 PM

'காதல்' படம் மூலம் அறிமுகமானவர் சரண்யா. 'பேராண்மை', 'விளையாட்டு' படங்களில் நடித்தார். தற்போது 'மழைக்காலம்' உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவரை 'காதல்' சரண்யா என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்க வேண்டாம் என்கிறார் சரண்யா. இதுகுறித்து அவர் கூறியதாவது: 10ம் வகுப்பு படிக்கும்போது 'காதல்' படத்தில் நடித்தேன். இப்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டேன். இப்போதும் என்னை 'காதல்' சரண்யா என்று அழைக்கிறார்கள். இதை சிலர் கிண்டலாக குறிப்பிடுவதால் பெயரில் மாற்றம் செய்திருக்கிறேன். எங்கள் குடும்ப பெயரான நாக் என்பதை இணைத்து எனது பெயரை சரண்யா நாக் என்று மாற்றி இருக்கிறேன். 'மழைக்காலம்' படத்தில் ஓவிய கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். நான் ஓவியம் வரைவது மாதிரி நிறைய காட்சிகள் இருப்பதாக இயக்குனர் சொன்னதால் நிஜமாகவே ஓவிய ஆசிரியை ஒருவரிடம் ஓவியம் கற்றேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில், வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டேன். அவற்றில் பல பாதியிலேயே நின்று விட்டது. அதனால் இப்போது படம் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்தாலும் நல்ல இயக்குனர் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.





Source: Dinakaran
 

போட்டோகிராபரை மணந்தார் பாக்யாஞ்சலி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
போட்டோகிராபரை மணந்தார் பாக்யாஞ்சலி

4/25/2011 12:26:15 PM

தமிழில் 'உன்னையே காதலிப்பேன்', 'நெல்லு', 'கோட்டி' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை பாக்யாஞ்சலி. 'உன்னையே காதலிப்பேன்' பட வில்லன் நடிகர் வேலு மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் இவர். இவருக்கும் கேரளாவை சேர்ந்த புகைப்படக்காரர் அனிஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இவர்கள் திருமணம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நேற்று காலை நடந்தது. இதில் இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதுபற்றி பாக்யாஞ்சலியிடம் கேட்டபோது, 'திருமணம் நடந்தது உண்மைதான். நாளை (இன்று) எர்ணாகுளம் திருப்போனிக்கராவில் உள்ள நாயர் சமாஜ அரங்கில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொள்ளும் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 29-ம் தேதி கோழிக்கோடில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை' என்றார்.





Source: Dinakaran
 

நான் பிரபுதேவாவின் ரசிகை : ஹன்சிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நான் பிரபுதேவாவின் ரசிகை : ஹன்சிகா

4/25/2011 12:14:37 PM

'மாப்பிள்ளை'க்குப் பிறகு கோலிவுட்டின் டாப் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. அம்மணியின் கால்ஷீட்டுக்கு இப்போது பெரிய லைன். 'மாப்பிள்ளை' படம் பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். பட ரிலீஸ் வரை மனம் திக் திக் என்றே இருந்தது. பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் ரிலீசுக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை தங்கள் வீட்டுப் பெண் போல் ஏற்றுக்கொண்டதை நினைத்து பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து, நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது என் லட்சியம்' என்கிறார் ஹன்சிகா.

எங்கேயும் காதல்?

அழகான காதல் கதை. காதல் இல்லாம உந்த உலகத்துல எதுவும் இல்லை. காதல்தான் எல்லாத்துக்கும் முக்கியமானதா இருக்குது. இந்தப் படத்துல இந்தியாவுல இருந்து பாரிஸ் வர்ற ஜெயம் ரவி மேல, அங்கேயே இருக்கிற எனக்கு காதல் வருது. இந்த காதல் என்னாவாகுது? ஒண்ணு சேர்றோமா, இல்லையாங்கறதுதான் கதை. ஜாலியா, பரபரன்னு இருக்கும். ஜெயம் ரவி செட்ல எனக்கு நிறைய உதவி பண்ணினார். நல்ல நடிகர். அதிகமா ஜோக் சொல்லிட்டே இருப்பார். அவரோட நடிச்சது நல்ல அனுபவம்.

பிரபுதேவா இயக்கத்துல நடிச்சது எப்படியிருக்கு?

அவர் சிறந்த கோரியோகிராபர்னு எல்லாருக்கும் தெரியும். இந்தியில அவர் இயக்கிய 'வான்டட்' பெரிய ஹிட். அதுக்கு முன்னால அவரோட நடனங்களை பார்த்து பிரமிச்சிருக்கேன். நான் அவரோட ரசிகை. அவர் இயக்கத்துல நடிக்க வாய்ப்பு வந்திருப்பது எனக்கு கிடைச்ச லக்குனு சொல்வேன். 

படத்தோட மொத்த ஷூட்டிங்கும் பாரிஸ்ல நடந்திருக்கு?

ஆமா. இதுவரை படமாக்கப்படாத புது லொகேஷன்கள்ல பிரபுதேவா ஷூட் பண்ணியிருக்கார். ஒவ்வொரு இடமும் பளிச்சுனு இருக்கும். இந்தப் பட ரிலீசுக்குப் பிறகு, 'அந்த லொகேஷன் எங்க இருக்கு; இந்த லொகேஷன் எங்க இருக்கு'ன்னு கேட்டு நிறைய டைரக்டர்கள், தங்களோட படத்தை கண்டிப்பா இங்க ஷூட் பண்ணுவாங்க. அந்தளவுக்கு ரிச்.

தொடர்ந்து 15 மணிநேரம் ஷூட்டிங்ல கலந்துக்கிட்டீங்களாமே?

பாரிஸ்ல தொடர்ந்து சில நாட்களா மழை பெய்துட்டே இருந்தது. ஷூட் பண்ண முடியலை. ஏற்கனவே போட்ட ஷெட்யூல்படி எங்களுக்கு தாமதம் ஆச்சு. உடனே, மழை விட்டு லேசா மேகம் மறைஞ்சதும் தொடர்ந்து 15 மணி நேரம் ஷூட்டிங் நடத்தி 3 நாள் இடைவெளியை சரி கட்டினோம். அது வித்தியாசமான அனுபவமா இருந்தது. 

அடுத்து?

உதயநிதி ஸ்டாலின் ஜோடியா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', விஜய் ஜோடியா 'வேலாயுதம்' படங்கள்ல மதுரை கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்டிருக்கிறேன்.




Source: Dinakaran